
ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN
தோடகாஷ்டகம்
பக்திக்கு வித்து.
தனியார் பள்ளிகளில் இப்போதெல்லாம் ஐந்து வயது குழந்தையை பள்ளியில் சேர்க்க ப்ரம்ம பிரயத்தனம் பண்ண வேண்டி இருக்கிறது. பெரிய இடத்து சிபாரிசு. பணம். அதைத் தவிர ஏற்கனவே படித்ததில் கிடைத்த மதிப்பெண். அதெல்லாம் விட முக்கியம் மதம், ஜாதி. இந்த நிலை மாறவேண்டும். அரசினர் பள்ளிகள் சிறந்த ஆசிரியர்கள் உதவிடியோடு தரமான கல்வி யறிவு குழந்தைகளுக்கு புகட்டவேண்டும். கல்வி அரசினர் ஏற்று சிறப்பாக நடத்தவேண்டிய ஒரு துறை. அதில் எதற்கு பாரபக்ஷம்.
இந்த இழி நிலை நமக்கு எப்போது ஏற்பட்டது? வெள்ளைக்காரன் இருக்கும்போது இந்த கஷ்டம் இல்லை. நம்மை நாமே ஆளும்போது இதெல்லாம் எங்கிருந்தோ வந்து சேர்ந்து விட்டது. இதை நம்மால் திருத்த முடியும் நல்லவர்கள் மக்கள் நலனை மனதில் உணர்ந்து கொண்டு அரசில் பணியாற்ற பொறுப்பேற்கவேண்டும். அதை வியாபாரமாக, சம்பாதிக்கும் குறுக்கு வழியாக பயன்படுத்தி ஊழல் மலிய இடம் கொடுத்தால், சுயநலம் தலையெடுத்தால் இதைவிட சிறந்த நரகத்தை மக்களுக்கு தர முடியாது. .
ஆயிர ஆண்டுகள் முன்பு, ஆதி சங்கரர் அப்போது ச்ரிங்கேரியில் இருந்த சமயம். கிரி என்பவன் பவ்யமாக அவரிடம் சிஷ்யனாக சேர்ந்து கொண்டான். ஆதி சங்கரரின் சிஷ்யர்களில் சுரேஸ்வரரைப் போலவோ, ஹஸ்தாமலகர் போலவோ ஞானம் இல்லை கிரிக்கு. ஆனால் கிரியைப் போல குருவிடம் தேவதா விஸ்வாசம்,பக்தி ஸ்ரத்தை, கைங்கர்ய சேவை யாருக்குமே கிடையாது. மற்றவர்கள் போல் தனக்கு ஞானம் இல்லை என்று தெரிந்தோ தெரியாமலோ அவர் குருவிற்கு சிஸ்ருஷை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
கிரி ரொம்ப சாது. மற்ற சிஷ்யர்கள் அவரை மதிக்கவில்லை. இளக்காரம் கேலி செய்வார்கள். மக்கு பிளாஸ்திரி என் பார்கள் அவனை. இது உலகத்தில் நடப்பது தானே. கிரி சிரித்துகொண்டே அங்கிருந்து நழுவி விடுவார். கோபமே வராது. சங்கரருக்கு அவரிடம் ஒரு அலாதி ப்ரீதி. கிரி மாங்கு மாங்கு என்று எல்லா வேலையும் இழுத்துப் போட்டுக்கொண்டு குருவுக்கு உழைப்பவர். குரு சேவா ரத்னம்.
ஒருநாள் கிரி, குரு ஆதி சங்கரரின் வஸ்த்ரங்களை மூட்டை கட்டிக்கொண்டு ஆற்றின் மறுகரைக்கு போய் அங்கே இருந்த கல்லில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் ஆற்றுக்கு இந்த பக்கம், மற்ற சிஷ்யர்கள் குருவைச் சுற்றி அமர்ந்து கொண்டு அவரிடம் பாடம் கேட்க தயாராயினர். குரு பாடம் ஆரம்பிக்கவில்லை. குரு எல்லோரையும் நோக்கினார். சங்கரரின் கண்கள் கிரியைத் தேடின. கிரியும் வரட்டும் என்று காத்திருந்தார். சிஷ்யர்கள் எதற்கு குரு கிரிக்காக காத்திருக்க வேண்டும் என்று எண்ணினார்கள். பொறுமை இழந்தனர். குருவுக்கோ அவனும் வரட்டுமே என தோன்றியது.
பத்மபாதர் குருவிடம் மெதுவாக ”சுவாமி எதற்காக கிரியின் வருகைக்காக காத்திருக்க வேண்டும். அவனுக்கு வந்தாலும் நீங்கள் உபதேசிப்பது எதுவும் புரியப்போவதில்லை. உபதேச பலன் கிடைக்க போவதில்லை இன்று நீங்கள் சொல்லித் தரப் போகும் ‘தோடக மந்த்ரம்’ உயர்ந்த தத்வார்த்தம் கொண்டது. கடினமானது. கிரி ஒரு மண்ணாங்கட்டி. அவனுக்கு எங்கே இதெல்லாம் புரியப்போகிறது?”
ஆதி சங்கரருக்கு இந்த வார்த்தைகள் மனக் கசப்பைத் தந்தது. கண்ணை மூடினார். அந்தக்கணமே அவருடைய சகல ஞானமும் அப்படியே எங்கோ இருந்த கிரியின் மனதில் புகுந்தது. சற்று நேரத்திற்கு முன் அழுக்கு மூட்டையோடு சென்ற கிரி அதி உன்னத ஞானத்தோடு திரும்பி வந்தான். அவன் துவைத்த துணியில் அழுக்கு இல்லை. அவன் மனத்திலும் இல்லை. குருவைச் சுற்றி வணங்கினான். தங்கு தடை இன்றி தோடகம் எனும் கடின உச்சாடன ஸ்ருதியில் (TODAKA METRE) குருவை வணங்கி ஒரு ஸ்லோகம் பிரார்த்தித்தான். அவனை ஆச்சர்யத்தோடு பார்த்தனர் மற்ற சிஷ்யர்கள். அவனை வணங்கினர். அன்று முதல் கிரி தோடகம் பாடிய ”தோடகாசார்யர்” ஆனார். தோடகர் சங்கரரின் ஒரு பிரதம சிஷ்யரானார். உபநிஷத சாரத்தை ”சுருதி சார சமுத்தரணம்” எனறு தோடக ஸ்ருதியில் (TODAKA METRE )ல் அமைத்தார்.
இது குருவந்தனமாக தொடக்கத்தில் பாடும் தோடக ஸ்தோத்ரம். தோடகாஷ்டகம் எட்டு ஸ்லோகங்கள் கொண்டது. அருமையாக இருக்கும் கேட்பதற்கு. நிறைய பேர் கேட்டிருப்பீர்கள். கேட்காதவர்கள் முயற்சித்து கேளுங்கள். இணைத்திருக்கிறேன்.
1. विदिताखिलशास्त्रसुधाजलधे महितोपनिषत् कथितार्थनिधे । हृदये कलये विमलं चरणं भव शंकर देशिक मे शरणम् ॥ १॥
viditákhilashastrasudhájaladhe mahitopanisatkathitárthanidhe hrudaye kalaye vimalam charanam bhava Shañkara deshika me sharanam.(1)
விதி³தாகி²லஶாஸ்த்ரஸுதா⁴ஜலதே⁴ மஹிதோபனிஷத் கதி²தார்த²னிதே⁴ ।ஹ்ருʼத³யே கலயே விமலம் சரணம் ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் ॥ 1॥
‘என் குருநாதா, ஓ சங்கரா, வேதம் சாஸ்திர உபநிஷத் சாகரத்தில் விளைந்த அமிர்தமே, உன்னை த்யாநித்தேன். உன் தாமரை திருவடிகளில் சரணடைந்தேன். என் இதயத்தை புதைத்தேன். என்னை ரக்ஷிப்பாயாக ”.
2. करुणावरुणालय पालय मांभवसागरदुःखविदूनहृदम् । रचयाखिलदर्शनतत्त्वविदं भव शंकर देशिक मे शरणम् ॥ २॥
karunávarunalaya pálaya mám bhavaságaradukhavidünahrudam rachayákhiladarshanattattvavidam bhava Shañkara deshika me Sharaïam.(2)
கருணாவருணாலய பாலய மாம் ப⁴வஸாக³ரது:³க²விதூ³னஹ்ருʼத³ம் । ரசயாகி²லத³ர்ஶனதத்த்வவித³ம் ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் ॥ 2॥
”கருணைக் கடலே, அடுத்து அடுத்து வரும் பிறவித் துன்பத்திலிருந்து என்னை மீட்டு உன் அருளால் உன்னையே சரணடைந்த என் மனத்தில் ஞானம் பெற அருள்வாயாக. ஒன்றுமறியாத இந்த ஞானசூன்யத்தில் மேல் கருணை கொண்ட கருணாசாகரமே, என் குருநாதா, போதும் இந்த பிறவித்துயர். பிறப்பு இறப்பற்று விடுபட்டு, உன் தாள் சரணடைந்து பணிந்து ஞானம் பெற அருள்வாய்.
3 भवता जनता सुहिता भविता निजबोधविचारण चारुमते । कलयेश्वरजीवविवेकविदं भव शंकर देशिक मे शरणम् ॥ ३॥
bhavatá janatá suhitá bhavitá nijabodhavichárana chárumate kalayeshvarajivavivekavidam bhava Shañkara deshika me sharanam.(3)
ப⁴வதா ஜனதா ஸுஹிதா ப⁴விதா நிஜபோ³த⁴விசாரண சாருமதே ।கலயேஶ்வரஜீவவிவேகவித³ம் ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் ॥ 3॥
”என் குருநாதா, எண்ணற்றோர் பயன்பெறும் எப்படிப்பட்ட ஞானகுரு நீ எனக்கு. இந்த முட்டாளுக்கு. ஆத்ம விசாரத்தில் தேர்ந்த ஆத்ம ஞானி உன் நிழல், காற்று என் மேல் சிறிதளவு பட்டால் கூட நான் ஞானம் பெற முடியுமே. உன் திருவடிகளை பற்றிக்கொண்டு சரணடைந்துவிட்டேன்.
4. भव एव भवानिति मे नितरां समजायत चेतसि कौतुकिता । मम वारय मोहमहाजलधिं भव शंकर देशिक मे शरणम् ॥ ४॥
bhava eva bhavániti me nitarám samajáyata chetasi kautukitá mama váraya mohamahájaladhim bhava shankara deshika me sharanam.(4)
ப⁴வ ஏவ ப⁴வானிதி மே நிதராம் ஸமஜாயத சேதஸி கௌதுகிதா ।மம வாரய மோஹமஹாஜலதி⁴ம் ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் ॥ 4॥
”என் தெய்வமே, சங்கர ஞானகுருவே, நீதான் சாக்ஷாத் பரம சிவன் என்று என் நெஞ்சம் உணர்த்துகிறதே. பரமானந்தத்தில் திளைக்கிறதே. என்னை சூழ்ந்துள்ள மாயத்திரை விலக அருள்புரிவாய் கருணைக்கடலே.
5. सुकृतेऽधिकृते बहुधा भवतो भविता समदर्शनलालसता ।अतिदीनमिमं परिपालय मा ंभव शंकर देशिक मे शरणम् ॥ ५॥
sukrute dhikrute bahudhá bhavato bhavitá samadarsanalalasata atidinamimam paripálaya mám bhava Shañkara deshika me sharanam.(5)
ஸுக்ருʼதே । அதி⁴க்ருʼதே ப³ஹுதா⁴ ப⁴வதோ ப⁴விதா ஸமத³ர்ஶனலாலஸதா । அதிதீ³னமிமம் பரிபாலய மாம் ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் ॥ 5॥
”எனக்குத் தெரியும் என் ஞானகுருவே, நிறைய, எங்கும் நல்ல எண்ணங்களையே பரப்பவேண்டும், நல்ல செயல்களே விளையவேண்டும், நல்லதே புரியவேண்டும், அதன் பரிசாக மனதில் உன் அருளால் ப்ரம்மஞானம் தோன்றும். எப்பாடு பட்டேனும் உன் திருவடி பற்றி அதை அடைய முயற்சிப்பேன். நீதான் கருணை கொண்டு அருள் புரியவேண்டும்.
6.जगतीमवितुं कलिताकृतयो विचरन्ति महामहसश्छलतः । अहिमांशुरिवात्र विभासि गुरो भ शंकर देशिक मे शरणम् ॥ ६॥
jagatimavitum kalitákrutayo vicharanti mahamahasashchalatah abhimámsurivatra vibhási guro bhava Shañkara deshika me sharanam.(6)
ஜக³தீமவிதும் கலிதாக்ருʼதயோ விசரந்தி மஹாமஹஸஶ்ச²லத: ।அஹிமாம்ஶுரிவாத்ர விபா⁴ஸி கு³ரோ ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் ॥ 6॥
‘ லோக சம்ரக்ஷண கார்யமாக ஆசார்யர்கள் அவ்வப்போது தோன்றுகிறார்கள். அவருள் உன்னதமான என் சங்கர குருவே, ஒளிவீசும் சூர்யனே, எனை ரக்ஷி. என் குருவான தெய்வமே, நீ யார் என்று அறிவேன். லோக சம்ரக்ஷணத்துக்கு அவ்வப்போது தோன்றும் பகவான் ஒரு ஆசார்யனாக எனக்கு காட்சி தந்தாய். ஞான சூரியனே, உன் திருவடி பற்றினேன். என்னை ரக்ஷி சங்கர குருவே.
7. गुरुपुंगव पुंगवकेतन ते समतामयतां नहि कोऽपि सुधीः । शरणागतवत्सल तत्त्वनिधे भव शंकर देशिक मे शरणम् ॥ ७॥
gurupuñgava puñgava ketana te samatámayatám nahi ko pi sudhi: Sharanágatavatsala tattvanidhe bhava Shañkara deshika me sharanam.(7)
கு³ருபுங்க³வ புங்க³வகேதன தே ஸமதாமயதாம் நஹி கோ । அபி ஸுதீ:⁴ ।ஶரணாக³தவத்ஸல தத்த்வனிதே⁴ ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் ॥ 7॥
‘ஓ, குரு திலகமே, சரணமடைந்தோர்களின் பக்த வத்ஸலா , ரிஷப த்வஜம் (காளைக்கொடி) கொண்ட ஈடிணையற்ற ஞானியே, சத்ய நிதியே. என் சங்கர குருவே, உன் தாள் பணிந்தேன் ரக்ஷிப்பாயாக ‘
8. विदिता न मया विशदैककला न च किंचन काञ्चनमस्ति गुरो ।द्रुतमेव विधेहि कृपां सहजां भव शंकर देशिक मे शरणम् ॥ 8॥
viditá na mayá vishadaikakalá na cha kimchana kánchanamasti guro drutameva vidhehi krupám sahajám bhava Shañkara deshika me sharanam.
விதி³தா ந மயா விஶதை³ககலா ந ச கிஞ்சன காஞ்சனமஸ்தி கு³ரோ ।த்³ருதமேவ விதே⁴ஹி க்ருʼபாம் ஸஹஜாம் ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் ॥ 8॥
”ஓ என் தெய்வமே, சங்கர ஞான தேசிகா, சொல்லியா உனக்கு தெரியவேண்டும்?. நான் மூடன். அஞ்ஞானி, என்னையும் தேர்ச்சி பெற செய்து ரட்சிக்கவேண்டும். நின் திருவடிகளே சரணம்.
நண்பர்களே, நாம் எல்லோரும் கூட இப்போதும் ஒன்று மறியாத சாதாரண ”கிரி ” யாக இருந்தாலும் ஒருநாள் ”தோடக” ராக மாற வழி உண்டு. அவருடைய தோடகாஷ்டகம் படித்து மனப்பாடம் செய்தாலே வழி எதிரே தெரியும்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



