
இவர் ஒரு சிம்ஹாசனாதிபதி 4 – நங்கநல்லூர் J K SIVAN
நடாதூர் அம்மாள்
நடாதூர் அம்மாள் காஞ்சி திரும்பியபோது அவருடைய சகோதரி மகன் வேங்கடநாதனுக்கு ஐந்து வயது .அழகிய சிறு குழந்தை. வேங்கட நாதன் பார்ப்பதற்கு அழகாக இருப்பான்.
அம்மாள் ஸ்ரீ பாஷ்யத்தில் விஷ்ணு புராண மகிமையை பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அதை இயற்றிய ஆசிரியர் பரா சரரைப் பற்றி ஸ்லாகித்துஉரையாற்றிக்
கொண்டிருந்தார். ”பாடய பராசரசதம் ”என்ற இடம். அப்போது அப்புள்ளாரும் வேங்கட நாதனும் அவர் எதிரே வந்து நமஸ்கரித்தார் கள். அதி உன்னதமான ஸ்ரீ பாஷ்யத்தை பிரசங்கம் செய்து கொண்டிருந்த நடாதூர் அம்மாள் பார்வை எதிரே வந்து அமர்ந்த வேங்கடநாதன்மீது பதிந்தது வேங்கட நாதன் பார்ப்பதற்கு அழகாக இருப்பான் என்று தான் சொன்னேனே. அவன் உன்னிப்பாக ஸ்ரீ பாஷ்ய விளக் கத்தை கேட்டுக் கொண்டி ருந்தது நடாதூர் அம்மாளுக்கு பரவசம் அளித்தது. செக்கச் சிவந்த உடல்,நெற்றியிலே ஸ்ரீ சூர்ணம். தலையில் அழகிய அளவான சிறு குடுமி..அதில் அழகாக ஒரு ராக் கொடி (சிகையில் சூடும் ஆபரணம்)..தெய்வீக களை பொருந்திய பாலகன். வேங்கடனாதனுடைய பிரம்ம தேஜஸ் காந்த சக்தியென நடாதூர் அம்மாளைக் கவர்ந்ததால் பிரசங்கத்தைநிறுத்தி விட்டு அந்த குழந்தைப் பையனை அழைத்தார். உச்சி முகர்ந்து ஆசி அளித்தார். குழந்தையைப் பற்றி அப்புள்ளாரிடம் விசாரித்தபோது அவர் சகோதரி திருமலை யாத்ரை சென்றபோது பிறந்த குழந்தை இவன் என்று அறிந்தார். அவள் கனவில் திருமலை வெங்கடேச பெருமாளின் ஆலய பெரிய கண்டாமணியை அவள் விழுங்குவது போலவும் அதுவே குழந்தையாக பிறப்பது போலவும் கனவும் கண்டாள்” என்கிறார்.
”ஆஹா இப்போது தான் இந்த பாலகன் இவ்வளவு தேஜசுடன் இருக்கும் காரணம் புரிகிறது” என்கிறார் அம்மாள் சுவாமிகள். அதற்கப்பறம் அவரால் ஸ்ரீ பாஷ்யம் பிரசங்கம் தொடர முடியவில்லை.
”அடடா,மறந்து போய் விட்டதே. கடைசியாக பிரசங்கத்தில் என்ன சொல்லிக் கொண்டி ரு ந்தேன், எங்கு நிறுத்தினேன்?? நடாதூர் ஸ்வாமிக ளுக்கு ஞாபகம் இல்லை. அவரது திகைப்பை குழதை வேங்கட நாதன் கவனித்துவிட்டு எந்த ஸ்லோ கத்தில் அவர் நிறுத்தினாரோ அந்த ஸ்லோகத்தைச் சொன்னான்.
”பாடய பராசரசதம்” மழலை மொழியில் கணீரென்று வேங்கடநாதன் எடுத்துச் சொல்கிறான். ”பகவானே” என்ன அதிசயம் இது’. நடாதூர் அம்மாள் சுவாமிகள் அதிசயித்து மகிழ்கிறார். ”இவன் ஒரு அவதாரம்.. இவனால் வைஷ்ணவ சித்தாந்தம் பரிமளிக்கப் போகிறது. இவன் வேதாந்தத்தைநிலை நாட்டப் போகிறான். எனக்கு வயதாகிவிட்டது. இனி நீயே இந்த பிள்ளையின் குருவாகி அவனை ஜாக்ரதையாக போஷித்து ஸ்ரீ பாஷ்யம் கற்பிக்கவேண்டும்” நடாதூர் ஸ்வாமிகள் மயிர்சிலிர்க்க அப்புள்ளாரிடம் சொல்லியவாறு பொறுப்பை அளிக்கிறார். வேங்கட நாதன் பிற்காலத்தில் ஸ்ரீமத் வேதாந்த தேசிகரா னது நாம் அறிந்த சரித்திரம். நடாதூர் அம்மாள் தன்னை எந்த ஸ்லோகத்தால் வாழ்த்தினாரோ அந்த ச்லோகத்தையே தனது சங்கல்ப சூர்யோதயம் என்ற நூலில் சுவாமி தேசிகர் குறிப்பிடுகிறார். அம்மாள் சுவாமிகளின்அனுக்ரஹத்தாலேயே வேங்கடநாதன் வேதாந்த தேசிகனானான் என்பதை தன்னுடைய நூல்களான, அதிகாரண சரவளி, தத்வ முக்த கலாபம், நியாய சித்தாஞ்ஜனம், தத்வதிகா ஆகியவற்றில் தேசிகர் ப்ரஸ்தாபிக்கிறார். சுவாமி தேசிகனின் திருக் குமாரரும் தனது தந்தையாரின் மங்களா சாசனத்தில் நடாதூர் அம்மாள் சுவாமிகளின் மேற் சொன்ன ஆசிர்வா தத்தையும் அனுக்ரஹத்தையும் எடுத்துக் காட்டுகிறார். வேதாந்த தேசிகரைக் கண்டால் ஸ்ரீ நடாதூர் அம்மாளுக்கு ரொம்ப பிரேமை. ஸ்ரீ தேசிகரை குழந்தைப் பருவத்தில் இருந்தே பார்த்து நேசித்தவர்அல்லவா?
”ஹே, வரதராஜா, என்னே உன் அருள் என்று அவர் கண்களில் ஆனந்த பாஷ்பம் வழிய ஒரு ஸ்லோகம் கடல் மடியாக ஸ்ரீ நடதூர் அம்மாளின் திரு இதழ்களிலி ருந்து பிறந்தது. வேங்கட நாதனை மெச்சி அவர் சொன்ன ஸ்லோகம்:
‘பிரதிஷ்டாபிதா வேதாந்தா ! பிரதிக்ஷிப்த பாஹிர்மதா! ப்ஹூயாஸ் த்ரை வித்யா மான்யஸ்த்வம்! பூரி கல்யாண பஜனம்!
நாளாக நாளாக வேங்கடநாதனின் தெய்வீக சக்தியை உணர்ந்த ஸ்ரீ நடாதூர் அம்மாள் சுவாமி தேசிகனை (இது தான் பின்னர் வேங்கட நாதனின் பெயர்) வேதாந்தத்தை ஸ்திரமாக நிலை நாட்ட கோரினார் எதிர் வாதங்களை நிலைக்காமல் செய்தார். நடாதூர் அம்மாளுக்கு நான்கு பிள்ளைகள். ஸ்ரீ வரத விஷ்ணு, ஸ்ரீ தேவராஜன், ஸ்ரீ சுதர்சனன், ஸ்ரீ யதீசன் என்று அவர்கள் பெயர். மீமாம்ச வல்லபர் என்கிற பௌராணிகர் நடாதூர் அம்மாளின் வாழ்க்கை வரலாற்றை எழுதியி ருக்கிறார். வரத தேசிகாப்யுதாயம், வரத தேசிக வைபவ பிரகாசிகா என்று அந்த நூல்களின் பெயர் . முதலில் சொன்ன நூல், சார்ய தீபம் என்ற காவியத்தின் எட்டு சர்கங்களை அடிப்படையாக கொண்டது. இந்த சாரிய தீபம் ஹேமமாலி தேசிகரால் இயற்றப் பெற்றது. இந்த இரண்டு ஆசிரியர்களுமே நடாதூர் அம்மாளின் சந்ததியினர்.
எப்போதும் அநேக பண்டிதர்கள் ஜடாவல்லபர் எனும் மீமாம்ச வல்லபர் இல்லத்துக்குவருவார்கள், வேதாந் தம்,தாரக மீமாம்ச , வியாகரண வேத கருத்துகள் கூட்டங்கள் நடைபெறும், அவரவர் நூல்கள் குறிப்பு கள், கணிப்புகள் பரிமாறப் படும். பிரசங்கங்கள் தொடர்ந்து நடக்கும் . அந்த மீமாம்ச வல்லபர் 9 நூல்களில் நடாதூர் அம்மாள் சுவாமிகள் பற்றி எழுதியிருக்கிறார். அவை:
1) வரத தேசிக சுப்ரபாதம்
2) வரத தேசிக தண்டகம்
3) வரத தேசிக கத்யம்
4) வரத தேசிக பஞ்சஷத்
5) வரத தேசிக அஷ்டோத்திர சதா நாம ஸ்தோத்ரம்
6) வரத தேசிக வைபவ பிரகாசிகா
7) வரத தேசிக சம்பாவன கிரமம்
8) வரததேசிக பிரபாவ தீபம்
9) வரததேசிகாப்யுதயம்
நடாதூர் அம்மாள் ஸ்ரீ பாஷ்யத்தை ப்ரசங்கிக்கும் போது சில வைஷ்ணவர்கள் ”சுவாமிகளே,ஒரு ஜீவாத்மாவிற்குபக்தியோகம் பண்ணுவது ஸ்ரமம் ஏனென்றால், அதற்கு அநேக அதிகாரங்கள் தேவையாக இருக்கிறதே, ஜீவாத்மா ஆணாக இருக்கவேண்டும், திரிவர்கத்தை சேர்ந்திருக்க வேண்டும், (பிராமண,க்ஷத்ரிய, வைஸ்ய ), இடை விடாமல் த்யானம், எம்பெருமானுக்கு சேவை, போன்று இத்யாதி இத்யாதிகள். இப்படி இருக்கும்போது பிரபத்தி பண்ண முடியாமல் இருக்கிறதே.
(ஜீவாத்மா எம்பெருமானையல்லவோமுற்றிலும் சார்ந்திருக்கிறதுஎனும்போது தனக்கென்றோ ஏதோ ஒரு லக்ஷியத்திற்காகவோ ஈடுபடுவது எம்பெருமா னையே சார்ந்திருப்பதற்கு விரோதமல் லவா?’) இந்த நிலையில் ஜீவாத்மா எவ்வாறு ஸ்வதந்திரமாகபிரபத்தி பண்ண முடியும்?. இந்த கேள்விக்கு நடாதூர் அம்மாள் கூறியதாவது ”எம்பெருமானாரின் அபிமானம் ஒன்றே இதற்கு வழி. வேறெதுவும் இல்லையே. எம்பெரு
மா னாரே, தங்கள் திருவடித்தாமரை ஒன்றே சரணம் என்று அவரை அடிபணிந்தால் நாம் காப்பாற்றப் படுவோம்.” நடாதூர் அம்மாளின் கீழ்க் கண்ட ஸ்லோகம் இதை எடுத்துரைக்கிறது. ப்ரயாண காலே சதுரஸ் ச்வஸிஷ்யாந் பதாதிகஸ்தாந் வரதோ ஹி வீக்ஷ்ய பக்தி ப்ரபத்தி யதி துஷ்கரேவ: ராமாநுஜா ர்யம்நமதேத்யவாதீத்அவரது அந்திம காலத்தில் ”எங்களுக்கு எது இனி அடைக்கலம்?” என்று வினவினார்கள். “ பக்தியும் பிரபத்தியும் உங்கள் ஸ்வரூபத்துக்கு ஒவ்வாதது. எம்பெருமானார் திருவடி நிழலே சரணம் என்று அவர் தாள் பணியுங்கள் அது ஒன்றே உங்களை உய்விக்கும் ” நடாதூர் ஆழ்வான் தனியன்: வந்தேஹம் வரதார்யம் தம் வத்ஸாபி ஜநபூஷணம் பாஷ்யாம்ருத ப்ரதாநாத்ய ஸஞ்ஜீ
வயதி மாமபி நடாதூர் அம்மாள் 100 வயதிலும்
ஸ்ரீ பாஷ்ய ப்ரவசனம் செய்தார். ஸ்ரீ நடாதூர் அம்மாள் காஞ்சியிலே பிறந்து 110 வயது வரை வாழ்ந்து கிபி. 1275 ல் மாசி சுக்ல பக்ஷ பஞ்சமி அன்று காஞ்சி க்ஷேத்ரத்திலேயே திருநாடு அடைந்தார்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



