PESUM DEIVAM – MADHURAI MEENAKSHI 4 – J K SIVAN

பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN

அங்கயற்கண்ணி  மீனாக்ஷி  4

மஹா பெரியவா மதுரை மீனாட்சி அம்பாளை பற்றி சொல்வது இந்த நவராத்ரி புண்ய காலத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்:

 ”ஸ்ரீ லலிதா  சஹஸ்ரநாமத்தில் அம்பாளை வர்ணனை  பண்ணும்போது  ஒரு அற்புதமான  நாமம்  வரும்  ”वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना” ‘வக்த்ர லக்ஷ்மீ பரீவாஹ சலன் மீநாபலோசநா” என்று  அவள் நாமம் வர்ணிக்கப்படும்.  “வக்த்ர லக்ஷ்மீ” என்றால் (அம்பாளுடைய) முக காந்தி.  முகத்தின் அழகு. அது ஒரு பெரிய ப்ரவாஹமாக, வெள்ளமாக,  இருக்கிறது, ‘பரீவாஹம்’ என்றால் பிரவாஹம். இப்படி முக தேஜஸ் பெருக்கெ டுத்து ஓடுகிறது என்றால் நீர் பெருக்கில் மீன் இருக்க வேண்டுமே! இந்த காந்தி ஸமுத்திரத்தில் எங்கே மீன்?
என்று பார்த்தால்  நீண்டு விசாலமாக  பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN

அங்கயற்கண்ணி  மீனாக்ஷி  4
 விளங்கும் அம்பாளுடைய நேத்திரம், அழகான கண்,  இருக்கிறதே அதுதான் மீன். லோசனம் என்றால் கண். (லோகனம் என்றால் பார்ப்பது. பார்க்கப்படுவதால் தான் ‘லோகம்’ என்றே பேர். தமிழிலும் ‘பார்’ என்றால் நோக்குவது, உலகம் என்ற இரண்டு அர்த்தமும் ஏற்படுகிறது. இங்கிலீஷ் look என்பதும் ‘லோக’ ஸம்பந்தமுள்ளதுதான்.)
மீன் மாதிரி வடிவத்தில் இருக்கிற லோசனம் – மீநாப லோசநம். ரூபத்தில் மீன் மாதிரி இருப்பது மட்டுமின்றி, நீர்  வெள்ளத்தில், ப்ரவாஹத்தில்,  மீன் இருக்க வேண்டும் என்ற நியாயத்தின்படியும் ஸெளந்தர்ய ப்ரவாஹ மான அம்பாள் இப்படிப்பட்ட கண்ணை உடையவளாயிருக்கிறாள். ‘மீனாக்ஷி’ என்று அப்பட்டமாகச் சொல்லா மல் ‘மீநாப லோசநா’ என்று சொல்லியிருக்கிறது.

‘ஸெளந்தர்யலஹரி’யில் என்ன வருகிறது? அதில் அம்பாளின் கண்களை வர்ணிக்கும் அநேக ஸ்லோகங் களில் ஒன்றில்  முதலிரண்டு வரிகள்: 56வது ஸ்லோகம்:
तवापर्णे कर्णेजपनयनपैशुन्यचकिताः  निलीयन्ते तोये नियतमनिमेषाः शफरिकाः।
தவாபர்ணே கர்ணே ஜபநயன பைசுன்ய சகிதா: நிலீயந்தே தோயே நியதம் அநிமேஷா: சபரிகா:

”அம்மா  உனக்கு அபர்ணா என்ற பெயர்,  உன் காதில், அதாவது காதோடு, பேசுவது போன்ற  நீளமான கண்கள்; தங்களைப் பற்றி  அவை கோள் சொல்கின்றன என்று பயமடைந்த   பெண் மீன்கள்  கண்ணை  மூடாமல், கவனமாக, (வைகை) ஆற்றுக்குள் முழுகி விடுகின்றன   என்பது நிச்சயம்.
மீன் ஏன் எப்போதும் ஆற்றின் மேல் மட்டத்தில் நீந்தாமல்  நீரில் அடியில், உள்ளுக்குள்ளேயே நீந்திக் கொண்டிருக்கிறது? இதற்கு இங்கே ஆசார்யாள் ஒரு காரணம் கல்பிக்கிறார். காதளவோடும் அம்பாளின் கண்களை மீன்கள் பார்த்தன. லோகத்தில் ஒரு புல் பூண்டு புழு பூச்சி  கூட விட்டுப் போகாமல் ஜகன்மாதா விழிகளை ஸகல திக்குகளிலும் திருப்பிக்  கொண்டிருக்கிறாள். அப்போது ஒவ்வொரு சமயம் அவை கண்கோடிக்கு, விழி ஓரத்துக்கு,  வரும் போது காதைத் தொட்டுவிடும் போலிருக்கிறது. அப்போது அவை காதிடம் ரஹஸ்யம் பேசுகிற தோ , தங்களை பற்றி கோள் சொல்கிறதோ?  என்கிற மாதிரி மீன்களுக்குத் தோன்றுகிறது.   என்ன ரஹஸ்யம்? உருவத்தில் இந்த மீன்கள் அம்பாளுடைய அந்தக் கண் மாதிரித்தான் இருக்கின்றன. ஸமஸ்த லோகாநுக்ரஹத்துக்காக எந்த ஜீவனும் விட்டுப் போய் விடக் கூடாது என்று, அந்தக் கண்கள் ஓயாமல் சஞ்சரிப்பதைப் பார்த்துக் ‘காப்பி’ அடிக்கிறது போலத்தான் இந்த மீன்களும் ஓயாமல் ஒழியாமல் சஞ்சரித்துக் கொண்டேயிருக்கின்றன. இதனால்தான் மீன்களுக்கு பயம் வந்து விடுகிறது. அம்பாளுடைய கண்கள் அவளுடைய காதிடம், “மீன்கள் என்னோடு போட்டி போடுகின்றன” என்று ரஹஸ்யமாகக் கோள் சொல் கின்றனவோ என்று பயம்! கண்களுடைய பெடிஷனைக்,கம்ப்ளெயிண்ட்டைக்  கேட்டு மஹா பராசக்தி மீனாக்ஷி அம்பாள், இந்த அல்ப ஜந்துவான மீன்கள் மேல் ஆக்ஷன் எடுக்க வந்து விட்டால் என்ன  ஆகும் ? இந்த பயத்தில்தான் நீர் மட்டத்தின் மேல் பரப்பில் நீந்தாமல் அவை உள்ளுக்குள் மறைவாக,தலை தப்ப, முழுகி விடுகின்றன!  எவ்வளவு அற்புதமான வர்ணனை பார்த்தீர்களா. அது தான்  ஆதி சங்கரரின் ஸமஸ்க்ரித ஞானம். பக்தி கலந்த வாக் சாதுர்யம்.

தோற்றுப்போன துரியோதனன் மடுவுக்குள் போய் ஒளிந்து கொண்ட மாதிரி, அம்பாளின் கண்ணழகுக்குத் தோற்றுப் போன மீன்கள் ஜலத்தின் உள்மட்டத்துக்குப் போய்விடுகின்றன!

‘சபரிகா:’ என்றால் பெண் மீன்கள் என்று அர்த்தம். ‘பைசுன்ய’ என்றால் கோள் சொல்லுவது;’ கோழி மூட்டுவது’ என்கிறோமே அது! ‘சகிதா:’ என்றால் பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறவை என்று அர்த்தம். ‘பைசுன்ய’ என்பதற்கு அஸுயை என்று பொருள்கொண்டால், காதளவோடும் கண்களைப் பார்த்து மீன்களே அஸுயை, பயம் இரண்டும் அடைந்தன என்றாகும். அம்பாளின் கண்ணோடு யுத்தம் செய்தால் வடிவழகு, சஞ்சரிக்கும் ஸாமர்த்தியம் இரண்டிலுமே தோற்றுப் போய் விடுவோம் என்றே மத்ஸ்யங்கள் ஜலத்துக்குள் அஜ்ஞாத வாஸம் ஆகி விடுகின்றன. மதுரையில் மீநாக்ஷி ஆலயப் பொற்றாமரைக் குளத்தில் மீனே இருப்பதில்லை. காரணம் ‘அவளுடைய கண்ணழகில் வெட்கி அது அங்கே தலைகாட்டுவதே இல்லை’ என்று வழக்கு ஏற்பட்டிருக்கிறது.
தொடரும் 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;