
சித்தர்கள் – நங்கநல்லூர் J.K. SIVAN
குதம்பை சித்தர்
சினிமா பாட்டுகளில் குதம்பாய் குதம்பாய் என்று பாடுகிறோம் அது கண்ணதாசன் இல்லை. அவருடைய எத்தனையோ குருக்களில் ஒருவர். தமிழகத்தில் எத்தனையோ சித்தர்கள் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று பலர் பிறக்கிறார்கள். சித்தர்கள் சித்தி படைத்தவர்கள், மண்ணை பொன்னாக்குவார்கள், பார்ப்பார்கள் தண்ணீருக்கடியில் பல வருஷம் வாழ்வார்கள். பற்றற்றவர்கள். எதிர்காலத்தை நாம் வாட்ஸாப் செய்திகள் படிப்பதுபோல் நன்றாக தெரிந்து சொல்பவர்கள். சிலருக்கு விநோதமான எண்ணங்கள் தோன்றும். ஒருவர் என்னை கேட்டார். சார் நீங்கள் குதம்பை சித்தர் பாடல்கள் பற்றி எழுதுகிறீர்கள் ஏன் அவர் குதம்பாய் என்று ஒரு பெண்ணை பார்த்து இதெல்லாம் சொல்கிறார். ஆணுக்கு சொன்னால் என்ன ?. அவனுக்கு தேவை இல்லையா? கேட்கமாட்டானா? பெண்ணுக்கு தான் இந்த அறிவுரை அவசியமா? என்று கேட்டார்.
”ரொம்ப நியாயமான கேள்வி. கட்டாயம் குதம்பை சித்தரை சந்தித்தால் இந்த கேள்வியை கேட்டு பதிலைப் பெறுகிறேன்”என்று சொல்லி நழுவினேன்.
கவிஞர்கள் பெண்ணே, தோழி, என்று பாரதியார் போல் சிலர் விஷயங்களை கூறுவது ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலத்திலிருந்தே இருக்கிறது. ஆண் பெண்ணை விட மன உறுதி குறைந்தவன் என்று சொல்வதை விட, அவன் தனக்கு தேவையானதை மட்டுமே யோசிப்பவன். நல்ல விஷயம் தேட ஆரம்பித் தானானால் அவனுடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது. பெண்ணை விட ஆண் சுதந்திரமானவன். கட்டுப்பாட்டுக்குள் அவனை கொண்டு வருவது கஷ்டம்.
ஒரு பெண்ணுக்கு நல்ல விஷயம் ஒன்று சொன்னால் ஒரு வம்சத்துக்கே சொன்ன மாதிரி. குதம்பை சித்தருக்கு இது தெரிந்திருக்கலாம். அல்லது வேறொருவரும் கிடைக்காமல் குதம்பை என்கிற பெண் ஓட வழியில்லாமல் அவரிடம் மாட்டிக் கொண்டிருப்பாளோ என்னவோ ?
ஒரு உண்மை என்னவென்றால், ‘குதம்பை’ என்பது ஒரு காதணி, கம்மல், தோடு மாதிரி. குதம்பை சித்தரின் அம்மா அவருக்கு சிறு வயது முதல் அதை அணிவித்து அழகு பார்த்தவள். அவர் காதோடு குதம்பை எப்போதும் இருந்ததால் அவரையே குதம்பை என்று அழைத்து பின்னர் சித்தரானபோதிலும் அந்த பெயர் நிலைத்து விட்டது. அவரும் தனக்கே உபதேசித்துக் கொள்ளும் தத்துவங்களாக பாடல்கள் அமைந்துள்ளது. அதுவும் வழக்கத்தில் உள்ளது தான். வேமனா சதகத்தில் வேமனா தனக்கே சொல்லிக் கொள்வது போல் தான் நீதி அறிவுரைகள் சொல்வார். ஏற்கனவே வேமனா பற்றி சொல்லி இருக்கிறேனே.
எந்த உயிர்க்கும் இரைதரும் ஈசனைச்
சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய்
சந்ததம் வாழ்த்தடியோ.”
கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் புல்லுணவாவது தருபவன் ஈசன். அவனை என்றும் மறவாதே. வாழையடி வாழையாக வணங்கப் பட வேண்டியவன்.
காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை
நாணாமல் ஏத்தடியே குதம்பாய்
நாணமற் ஏத்தடியே.
என்றும் இறுதி, முடிவு இல்லாத அற்புதமான அந்த இறைவனை முடிவற்ற கல்ப காலத்திற்கு அப்பால் பட்ட அழிவற்ற உண்மையை போற்றிப் பாடு குதம்பாய் .
அணுவாய் பல்அண்டமாய் ஆனசிற்சோதியைத்
துணிவாய்நீ போற்றடியோ குதம்பாய்
துணிவாய்நீ போற்றடியோ.19
அவன் அணுவுக்குள் அணு. பெரிதிலும் பெரிதானவன். அண்ட பகிரண்ட ஞான தீபம். அவனை மனம் விரும்பி போற்றிப்பாடு குதம்பாய்.
மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக்
காணிக்கை நன்மனமே குதம்பாய்
காணிக்கை நன்மனமே.20
இப்படிப்பட்ட அந்த பரமேஸ்வரன் நமக்கு கேட்காமலேயே எல்லாம் அருள்கிறானே, அவனுக்கு என்ன காணிக்கை தருவது என்றா கேட்கிறாய், குதம்பாய், வேறொன்றும் வேண்டாம், அந்த சுத்த ஜாதிக்கு நம்மால் கொடுக்க முடிந்த காணிக்கை, அவன் விரும்பும், நமது நல்ல மனம் ஒன்றே.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


