PESUM DHEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்.  –  நங்கநல்லூர் J K  SIVAN
”ஆரம்ப ஸம்ஸ்காரங்கள்‌”
மஹா பெரியவா கும்பகோணத்திலிருந்த போது  ஆரம்ப  காலங்களில்  அவரது  உபதேசங்களை அற்புதமாக சில  ஓரணா  புஸ்தகங்களாக ”வேத  தர்ம சாஸ்த்ர  பரிபாலன சபை”  என்ற  நிறுவனம் மூலம்  வெளியிடச் செய்தார்.  அதில்  ஒரு பொக்கிஷம் இது. மஹா பெரியவாவின் ”ஆரம்ப ஸம்ஸ்காரங்கள்;”  என்ற  உபதேசம்   எழுத்தாக  நமக்கு என்றும்  சாஸ்வதமாக இருக்கிறது.    அந்த ஓரணா புஸ்தகத்தை முழுசாக தருகிறேன்.  பொறுமையாக படித்து புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் அனுப்புங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். எல்லோரும் பயன் பெறவேண்டாமா?
”ஸ்ரீ சந்தரமெளளீச்வராய நம:    ”ஆரம்ப ஸம்ஸ்காரங்கள்‌”  (ப்ரசுரம்‌ 5) ஆவணிபஃமீ 20௨, வெள்ளிக்கிழமை    5-9-1947
வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸ்பை, (Regd.)  கும்பகோணம்‌ (விலை அணா ஓன்று)

”ஜீவாத்மாவுக்குப்‌ பரிசுத்தி ஏற்படுவதற்காக 40 ஸம்ஸ்காரங்கள்‌ இதில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை கர்ப்பாதானம்‌, பும்ஸவனம்‌, ஸீமந்தம்‌,  ஜாதகர்மா, நாமகரணம்‌, அன்னப்பிராசனம்‌, செளளம்‌, உபநயனம்‌, பிராஜாபத்தியம்‌
முதலிய வேதவிரதம்‌ 4, ஸ்நானம்‌, விவாஹம்‌ அல்லது   ஸஹதர்மசாரிணீ  ஸம்பிரயோகம்‌, பஞ்சமஹா   யக்ஞங்கள்‌ ஆகப்‌ பத்தொன்பதும்‌, பாக  யக்ஞங்கள்‌ ஏமு, ஹவிர்யக்ஞங்கள்‌ ஏழு, ஸோம யக்ஞங்கள்‌ ஏழு ஆக  இருபத்தொன்றும்‌ மொத்தம்‌ 40 ஆகின்றன. அஷ்டகை, அன்வஷ்டகை, பார்வணம்‌,  சிராவணி, ஆகீரஹாயணி, சைதரி, ஆச்வயுஜீ என்ற ஏழும்‌ பாக யக்ஞங்கள்‌,
அக்கினியாதானம்‌, அக்கினிஹோத்திரம்‌, தர்சபூர்ணமாஸம்‌, ஆக்ரயணம்‌,  சாதுர்மாஸ்யம்‌, நிரூட பசுபந்தம்‌, ஸெளத்திராமணி என்ற ஏழும்‌ ஹவிர்‌ யக்ஞங்கள்‌.  அக்கினிஷ்டோமம்‌, அத்யக்னிஷ்டோமம்‌, உக்த்யம்‌ ஷோடசி, வாஜபேயம்‌,  அதிராத்திரம்‌, அப்தோர்யாமம்‌ என்னும்‌ ஏழும்‌ ஸோம யக்ஞங்கள்‌, இவ்வளவும்‌ சேர்ந்து 40 ஸம்ஸ்காரங்கள்‌ ஆகின்றன, இந்த ஸம்ஸ்காரங்களில்‌ தினந்தோறும்‌  பண்ணவேண்டியவை சில இருக்கின்றன. சிலசில காலங்களில்‌
பண்ணவேண்டியவை சில, ஆயுளில்‌ ஒரு தரம்‌ பண்ணவேண்டியவை சில,  இவைகளுக்குள்‌ நன்றாகத்‌ தெரிந்துக்கொண்டு செய்யவேண்டிய முக்யமான ஸம்ஸ்காரங்கள்‌ பஞ்ச மகா யக்ஞங்கள்‌, அவை தினந்தோறும்‌ செய்யவேண்டியவை.
பஞ்ச மஹா யக்ஞங்கள்‌: பிரம்ம யக்ஞம்‌, தேவ யக்ஞம்‌, பித்ரு யக்ஞம்‌, மனுஷ்ய யக்ஞம்‌, பூத யக்ஞம்‌ என்பவை, மற்றவைகவில்‌ அநேகம்‌, ஜன்மத்தில்‌ ஒரு தரம்‌ பண்ணவேண்‌ டியவைகளாக இருக்கும்‌, ஒளபாசனம்‌, அக்னிஹோத்திரம்‌ ஒவ்வொரு நாளும்‌ பண்ணவேண்டும்‌. தர்ச பூர்ண மாஸம்‌ பதினைந்து நாளைக்கு ஒரு தரம்‌ பண்ணவேண்டும்‌. இவைகவில்‌ ஒளபாசனம்‌ பாக யகீஞங்களைச்‌ சேர்ந்தது; மற்ற  இரண்டும்‌ ஹவிர்‌ யக்ஞங்களைச்‌ சேர்ந்தவை. பாக யக்ஞங்கள்‌ எல்லாம்‌  வருஷத்திற்கு ஒரு தரம்‌ செய்ய வேண்டும்‌. ஏழு ஸோம யஞங்களும்‌ மற்ற ஸம்ஸ்காரங்களும்‌ ஜன்மத்தில்‌ ஒரு தரம்‌ பண்ணினால்‌ போதும்‌. இவைகளை வேறு  விதமாயும்‌ வகுத்துச்சொல்லலாம்‌.

நித்தியம்‌ செய்யவேண்டியவை ஏழு; அவை பஞ்ச மகாயஞங்கள்‌, அக்னிஹோத்திரம்‌, ஒளபாசனம்‌ என்பவை. ஒரு போகம்‌ விளையும்‌ நிலங்கவில்‌  அறுப்பறுக்கிறது வருஷத்திற்கு ஒரு தரம்‌. ஜலம்‌ தினந்தோறும்‌ பாய்ச்சவேண்டும்‌.  இவைகள்‌ எல்லாம்‌ ஸம்ஸ்காரங்கள்‌ ஆனாலும்‌ அவைகளுக்குள்‌ வித்தியாஸம்‌  இருக்கிறது. அவைகளைப்‌ போன்றவைதான்‌ இந்த ஸம்ஸ்காரங்களும்‌ ,

கர்ப்பாதானம்‌ முதற்கொண்டு ஸம்ஸ்காரங்கள்‌ சொல்லப்பட்டிருக்கின்றன.  தாயார்‌ வயிற்றில்‌ தேஹம்‌ ஏற்படுகிற க்ஷணம்‌ முதல்‌ ஸமீஸ்காரங்கள்‌  ஆரம்பமாகின்றன. சரீர பிண்டமானது மந்திரபூர்வமாக உற்பத்தியாகவேண்டும்‌.   கர்ப்பாதானம்‌, பும்ஸவனம்‌, ஸீமந்தம்‌, என்பவை தாயார்‌ தேஹத்திற்கு ஏற்பட்ட  ஸமீஸ்காரமென்று நினைக்கிறார்கள்‌. அது தவறு. அவை உள்ளே இருக்கும்‌   ஜீவனை குறித்தவை. அந்த ஜீவனுடைய பரிசுத்திக்காக ஏற்பட்டவை.  கர்பத்திலுள்ள வேறொரு ஜீவனை உத்தேசித்துப்‌ பண்ணப்  படுபவைக  ளாதலினால்‌  அந்த ஸம்ஸ்கார விஷயத்தில்‌ தாயார்‌ முதலியவர்களுக்குப்‌ பொறுப்பு அதிகம்‌,   தங்களுக்காக என்றால்‌ வேண்டாமென்று எண்ணலாம்‌. வேறொரு ஜீவனுக்காக   இருப்பதால்‌ அனாதரவு பண்ணக் கூடாது.

தேஹம்‌ வெளியில்‌ வருவதற்கு முன்பு பண்ணப்படுபவை கர்ப்பாதானம்‌, பும்ஸவனம்‌, ஸீமந்தம்‌ என்ற மூன்று ஸம் ஸ்காரங்கள்‌ . பும்ஸவனம்‌ மூன்றாவது  மாத கர்ப்பத்தில்‌ செய்யவேண்டும்‌. ஆறு அல்லது எட்டாவது மாதத்தில்‌ ஸீமந்தம்‌ பண்ண வேண்டும்‌. இவ்வளவு ஸம்ஸ்காரங்களையும்‌ பரமேசுவரப்‌ பிரீதிக்காகப்‌ பண்ணுகிறேன்‌ என்று ஸங்கல்பம்‌ செய்துகொண்டு பண்ணவேண்டும்‌. இவ்வளவும்‌  அவருடைய கிருபையைப்‌ பெறுவதற்காகத்தான்‌ பண்ணுவது.

 ஆதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்‌ கைலாஸத்திற்குப்‌ போகும்‌ பொழுது  சிஷ்யர்கள்‌ எல்லாம்‌ பரமேஸ்வரனுடைய கிருபை யைப்‌ பெற ஸுலபமான வழி  ஒன்று  சொல்லுங்கோ என்று பிரார்த்தித்தார்கள்‌, இதுவரையிலும்‌ சொன்ன வேதாந்த விஷயங்களில்‌ ஒன்றும்‌ புரியவில்லை,   சுலபமாக ஒன்று சொல்லணும் னு வேண்டிக்கொண்டார்கள்‌. அப்பொழுது ஸ்ரீ ஆசார்யாள்‌  ஐந்து சுலோகங்களைச்‌ சொன்னார்கள்‌.

”வேதோ நித்யமதீயதாம்‌ ததுதிதம்‌ கர்ம ஸ்வநூஷ்டயதாம்‌ தேநேஸ்ய விதயதாம்பசிதி: காம்யே மதிஸ்த்யஜ்யதாம்‌ |
பாபெளக:பரிதூயதாம்‌ பவஸுகே தோஷோனுஸந்தயதாம்‌ ஆத்மேச்சா வ்யவஸுயதாம்‌ நிஜக்ருஷாத்‌ தூர்ணம்‌ விறிர்கம்யதாம்‌”|

‘நித்தியம்‌ வேதாத்தியயனம்‌ செய்யவேண்டும்‌.  கர்மாவைத்‌ தவறாமல்‌ அனுஷ்டானம்‌ பண்ணு. அந்தக்‌ கர்மாதான்‌ ஈச்வர பூஜை.  அவர்‌ எந்தெந்தக்‌ காரியத்தை, எப்பொழுது பண்ணச்‌ சொல்லியிருக்கிறாரோ  அப்படிச்‌ செய்துவருவதுதான்‌ பூஜை! . சில பேர்‌  உத்ஸவம்‌, பூஜை, பஜனம்‌ முதலியவை பண்ணிக்  கொண்டிருக்கிறார்கள்‌. வேறு சில  பேர்‌ ஒளபாஸனம்‌, அக்னி ஹோத்திரம்‌ செய்கிறார்கள். அவர்களைப்‌ பார்த்து பூஜை பண்ணுபவர்கள்  “இவர்கள்‌ என்ன பண்ணி என்ன பிரயோஜனம்‌? கொஞ்சங்  கூடப்‌ பக்தி கிடை யாது! என்று  தூஷிக்கிறார்கள்‌. அவர்கள்‌ இவர்களைப்‌ பார்த்து, “கொஞ்சங்கூட ஆசார அனுஷ் டானங்கள்‌ இல்லை, தாளம்‌ போட்டுக் கொண்டிருக்கிறார்கள்‌.  அஹங்காரந்தான்‌ இருக்கிறது! என்று சொல்லுகிறார்கள்‌. நியாயமாகவும்‌  மத்யஸ்தமாகவும்‌ பார்த்தால்‌ கர்மானுஷ்டானம்‌ பண்ணுவதுதான்‌ பெரிய பக்தி  என்று தெரியவரும்‌. அது தான்‌ பஜனை.
ஒரு பிரபுவிடம்‌ இரண்டு வேலைக்காரர்கள்‌ இருக்கிறார்கள்‌. ஒருவன்‌  எப்பொழுதும்‌ எதிரில்‌ நின்றுக்கொண்டு பிரபுவை ஸ்தோத்திரம்‌ பண்ணுபவன்.  மற்றொருவன்‌ பேசவே மாட்டான்‌; எதிரில்‌  வரமாட்டான்‌. பிரபு எந்த காரியத்தைச்‌ செய்ய வேண்டுமென்று மனதில்‌ நினைக்கிறானோ அந்த காரியத்தைச்‌ செய்வான்‌. பொது ஜனங்கள்‌ ஸமீபத்தில்‌ இருக்கிற வனிடத்தில்  தான்‌ பிரபுவுக்கு பிரியம்‌ என்று  நினைத்துக்கொண்டிருப்பார்கள்‌, ஆனால்‌  பிரபுவுக்கு வேலை செய்கிறவனிடம்தான்‌ பிரியம்‌ இருக்கும்‌. அசடாக இருந்தால்தான்‌ ஸ்தோத்திரம்‌ செய்கிறவனிடத்தில்‌ அதிகப்‌ பிரியமா  யிருப் பார்‌. அவனைப்போல்‌ ஈச்வரன்‌ அசட்டு ப்ரபுவாக இருந்தால்‌  வெறும்‌ ஸ்தோத்திரம்‌ செய்கிறவனிடத்தில்‌ அதிகப்‌ பிரியமாய்‌ இருப்பான்‌. அவன்‌  விதித்த கர்மானுஷ்டங்களைச்‌ செய்வதுதான்‌ பூஜை. அதனால்தான்‌ ‘ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்‌! என்று ஸங்கல்பம்‌ செய்துகொண்டு கர்மாக்களைச்‌ செய்யவேண்டும்‌.  வாஸ்தவமான கர்மானுஷ்டானம்‌, பக்தியும்‌ கர்மாவும்‌ கலந்ததுதான்‌. அதனால்தான்‌  நம்முடைய ஸ்ரீ ஆசார்யள்‌ கர்மானுஷ்டானம்‌ செய்வதுதான்‌ பரமேஸ்வர பூஜைஎன்று சொல்லியிருக்கிறார்‌.
இவ்வளவுக்கும்‌ அஸ்திவாரம்‌ பரமேஸ்வரனுக்கு அர்ப்பணம்‌ செய்யவேண்டுவது. எல்லா ஸம்ஸ்காரத்திற்கும்‌ தனித் தனியாக மந்திரங்களையும்‌  அர்த்தத்தையும்‌ சொல்வது என்பது முடியாத காரியம்‌. எல்லாவற்றிற்கும்‌ முதலில்‌
ஸங்கல் பமும்‌ கடைசியில்‌ அர்ப்பணமும்‌ செய்கிறோம்‌. இந்த இரண்டும்‌ இன்னவை, இன்ன அர்த்தம்‌ உடையவை என்று தெரிந்தால்‌ நல்லது.
லெளகிகர்களுக்கு ஸங்கல்பம்‌ முதலியவை களில்  நிரம்ப அசிரத்தை இருக்கிறது. ஏதோ  வாத்தியார்‌  காசு வாங்கியதற்கு என்னவோ சொல்கிறார்   என்று  நினைக்கிறார்கள்‌: அசட்டை செய்கிறார்கள்‌.  அவற்றின்‌ அர்த்தம்‌ தெரிந்துகொள்வது கஷ்டமான காரியம்‌ அல்ல,  ஸ்ரத்தையிருந்தால்‌ தெரிந்துகொள்ளலாம்‌. அமேரிக்காவில்‌ நடக்கிற பரீக்ஷைக்கு  என்ன பாடம்‌ (Syllabus) என்பதைத்‌ தெரிந்துகொள்ளுகிறார்கள்‌. எதையும்‌ ஸ்ரத்தை  இருந்தால்‌ தெரிந்துகொள்ளலாம்‌.

‘ யாதேவ வித்யயா கரோதி ததேவ ஸ்ரத்தயா உபறிஷதா வீர்யவத்தரம்‌ பவதி'[சாந்தோக்யோபநிஷத்‌]
யதேவ வித்யயேதி ஹி  [ப்ரும்மஸூத்ரம்‌]

ஒரு கர்மாவை அர்த்தம்‌ அறிந்து கொண்டு பண்ணினால்‌ அது வீர்ய வத் தரம்‌ஆகிறது. தரம்‌ என்பதனால்‌ அறிவில்லாமல்‌ பண்ணினால்‌ வீர்யவத்‌ ஆகிறதென்று தெரிகிறது என்று ஸ்ரீ ஆசாரியர்கள்‌ சொல்லியிருக்கிறார்கள்‌. தெரிந்துகொள்ளாமல்‌
பண்ணினால்‌ அதிகப்‌ பிரயோஜனம்‌ உண்டு ; தெரிந்தால்‌ அவ்வளவு இல்லை என்று தோன்றுகிறது. அது எப்படி?
ஒரு கலெக்டர்‌ இருக்கிறார்‌. அவருக்கு ஒருவர்‌ வக்கீலை வைத்து, மனு   எழுதுகிறார்‌. ஒரு குடியானவன்‌ யாராவது ஒருவரிடம்‌ எழுதி, கலெக்டரிடம்‌ நேரில்‌ கொடுக்கிறான்‌, அவனுக்கு ஓரெழுத்துக்கூட தெரியாது. ‘எப்படியாவது நல்லது  பண்ண வேண்டும்‌! என்று மனுவைக்‌ கொடுக்கிறான்‌. கலெக்டர்‌ பார்த்தால்‌ ‘பாவம்‌!  ஒன்றும்‌ தெரியாது! நம்பிக்கை மாத்திரம்‌ இருக்கி றது என்று எண்ணி நல்லது  பண்ணுவார்‌.

அதைப்‌ போன்றதுதான்‌ மந்த்ரமும்‌. மந்த்ரத்துக்கு அர்த்தம்‌  ஈஸ்வரனுக்குத்தான்‌ தெரியும்‌. நாம்‌ போக்கிரித்தனமாக இருக்கக்கூடாது. வக்கீல்‌  வைத்து தவறுதலாய்‌ பேசினால்‌ கலெக்டர்‌ கோபித்துக்கொள்வார்‌. தெரிந்து  தப்பாகப்‌ பண்ணினால்‌ அதிக கோபம்‌ உண்டாகும்‌. தெரியாமல்‌ தப்பாக இருந்தால்‌  தெரியாமல்‌ பண்ணுகிறான்‌ என்று மன்னிப்பு கிடைக்கும்.  ‘ஏன்‌ ஸார்‌! அர்த்தம்‌  தெரியவில்லை, அதைப்பண்ணி என்ன பிரயோஜனம்‌? ! என்று சொல்வது தப்பு.
அர்த்தம்‌ தெரியாமல்‌ பண்ணுவதுதான்‌ வீர்யவத்தரமாகத்‌ தோன்றுகிறது.  எல்லா ஸம்ஸ்காரங்களுக்கும்‌ ஆரம்பத்தில்‌ பரமேஸ்வரப்‌ பிரீதிக்காக என்ற  ஸங்கல்பமும்‌, கடைசியில்‌ ‘ஜனார்த்தன பிரீயதாம்‌! என்றும் சொல்லவேண்டும்‌.
அந்த இரண்டினுடைய அர்த்தங்களையும்‌ தெரிந்துகொள்ளலாம்‌. ஸங்கல்பத்தில்‌  முதலில்‌ தேச காலக்‌ கணக்கு சொல்லப் படும்‌.
“மமோ பாக்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வரப்‌ ப்ரீத்யர்த்தம்‌! என்று சொல்கிறோம்‌.  ‘என்னால்‌ ஸம்பாதிக்கப்பட்ட எல்லா பாபங்களையும்‌ போக்கிப்‌ பரமேஸ்வரனுடைய பிரீதி உண்டாகும்பொருட்டு! என்று அர்த்தம்‌. இன்று வரையில்‌ நாம்‌ நிறைய பாபத்தை ஸம்பாதித்திருக்கிறோம்‌. அந்த ஸாமான்‌ கஷ்டமானது. அதைப்‌ போக்க வேண்டும்‌; அலம்பவேண்டும்‌. அதனால்‌ என்ன  பிரயோஜனம்‌? நம்முடைய ஹ்ருதயம்‌ பரமேஸ்வரனுடைய ஸ்தானம்‌, அதில்‌ குப்பை நிறைய இருக்கிறது. நாம்‌ இங்கே பூஜை செய்கிறோம்‌. அப்பொழுது அங்கே குப்பை நிறைய   இருந்தால்‌ மிகவும்‌ வருத்தமாக இருக்கும்‌, குப்பையை எடுக்கிறோம்.    நம்முடைய ஹ்ருதயத்திலுள்ள குப்பையை  அப்படி போக்கவேண்டும்‌. அப்பொழுதுதான்‌ ஸ்வருபம்‌ தெரியும்‌. இப்பொழுது பிரகாசம்‌ தெரியாமல்‌ ஆபாஸமாய்‌ இருக்கிறது.வந்து உட்கார வேண்டுமானாலும்‌ குப்பையை போக்கவேண்டும்‌. எந்த விதத்திலும்‌  குப்பைகள்‌ போகவேண்டும்‌. நமக்கோ குப்பையைச்‌ சேர்க்கிறதே தொழிலாக இருக்கிறது. துரித க்ஷயத்வாரா, அதாவது பாபம்‌ போன வழியாகப்‌ பரமேஸ்வரனுடைய பிரீதி உண்டாகும்‌. எல்லாவிதக்‌ கர்மாக்களும்‌ அதற்காகத்தான்‌ ஏற்படுகின்றன. மற்ற மந்த்ரங்களுக்கு எவ்வளவு அர்த்தம்‌ இருந்தாலும்‌ இந்த மந்த்ர அர்த்தம்‌ தெரிந்து பரமேச்வரப்‌ பிரீதியை உத்தேசித்துச்‌ சொன்னால்தான்‌ பிரயோஜனம், ஒரு காரியத்தில்‌ தவறிப்போனால்‌ பிராயச்சித்தம்‌ பண்ணுகிறோம்‌. அகால ஸந்தியாவந்தனத்திற்காக பிராயச்சித்த அர்க்கியம்‌ இருக்கு.. அந்த  பிராயச்சித்தத்திலும்‌ தப்பு வந்தால்‌ என்ன செய்கிறது? அதற்காக எல்லாவற்றிற்கும்‌
சேர்த்து ஒரு பிராயச் சித்தம்‌ இருக்கிறது. ஹேமாத்ரி என்று ஒரு புஸ்தகம்‌  இருக்கிறது. அது பிராயச்சித்தங்களைப்பற்றிச்‌ சொல்லுகிறது.   எல்லாப்‌ பிராயச்சித்தங்கவிலும்‌ மேலான பிராயச்சித்தம்‌ ஸ்ரீ கிருஷ்ண ஸ்மரணம்‌. முதலில்‌ பரமேஸ்வர ஸ்மரணம்‌; கடைசியில்‌ கிருஷ்ண ஸ்மரணம்‌  செய்யவேண்டும்‌. இவை சிவ விஷ்ணு அபேதத்தையும்‌ காட்டுகின்றன, இப்படி  நினைத்து உற்பத்தி முதல்‌ முடிவு வரையில்‌ பரமேஸ்வரனுடைய ஞாபகத்தோடு கர்மாக்களைச்‌ செய்யவேண்டும்‌.

ஒவ்வொரு மந்த்ரமும்‌ ஒவ்வொரு தேவதையின்‌ த்வாரா அர்ப்பணம்‌ பண்ணப்படுகிறது. நாம்‌ வரி செலுத்துகிறோம்‌. அவைகள்‌ எல்லாம்‌ ஒரே ராஜாங்கத்திற்குப்‌ போகின்றன. தொழில்‌ வரி, மோட்டார்‌ வரி, நிலவரி முதலிய பல வரிகள்‌.  ஒவ்வொன்றுக்கும்‌ ஒவ்வோரிடம்‌ உண்டு, ஒவ்வொரு முத்திரைக்‌ கடுதாசு உண்டு. அதுபோல்‌ ஒவ்வொரு கர்மாவுக்கும்‌ காலம்‌, மந்த்ரம்‌, தேவதை, திரவியம்‌ என்று தனித்தனியே பிரிவுண்டு. ஒவ்வொன்றுக்கும்‌ கிரமம்‌ வேறாக இருந்தாலும்‌ எல்லாவற்றிற்கும்‌ பரம தாத்பர்யம்‌ பரமேஸ்வரனுக்கு அர்ப்பணம்‌ பண்ணுவதுதான்‌. நாம்‌ செலுத்துகிற வரிகளைப் பற்றியும்‌, வரி செலுத்துகிற நம்மைப்பற்றியும்‌ ராஜாவுக்கு  நன்றாய்‌ தெரியாது.  ஆனால்‌ பரமேஸ்வரனாகிய ராஜாவுக்கு நம்  ஒவ்வொருவருடைய விஷயமும்‌ நன்றாகத்‌  தெரியும்.    ஒவ்வொரு கர்மாவுக்கும்‌ மந்த்ரம்‌, தேவதை, திரவியம்‌ என்று மூன்று  கிரமங்கள்‌ உண்டு. பிறப்பதற்கு முன்பு செய்யவேண்டிய மூன்று கர்மாக்களை  முதலில் சொன்னோம்.  பிறந்தவுடன்‌ ஜாதகர்மா செய்யவேண்டும்‌. அப்புறம்‌  பதினோறாவது நாள்‌ நாமகரணம்‌ செய்யவேண்டும்‌. ஆறாவது மாசம்‌ அன்னப் பிராசனம்‌ செய்யவேண்டும்‌. முதலில்‌ அன்னத்தை ஊட்டுகிற கர்மா அது.  அதுவும்‌ பரமேஸ்வரப்‌ பிரீதியாகச்‌ செய்ய வேண்டும்‌,   கர்ப்பாதானம்‌ முதல்‌ நாமகரணம்‌ பரியந்தம்‌ உள்ளவை குழந்தைக்காக பெற்றோர்கள்‌ பண்ணுபவை. தாயார்‌ மருந்து சாப்பிட்டால்‌ குழைந்தைக்கு தேஹ பரிசுத்தி ஏற்படுகிறது. அதைப்‌ போலவே தாயார்‌ தகப்பனார்‌ சத் விருத்தி எப்படி இருக்கிறதோ, அப்படியே உள்ளே இருக்கும்‌ ஜீவனுக்கும்‌ ஸாத்வீக ஸ்வபாவமோ, பாப அபிவிருத்தியோ உண்டாகும்‌. மனது சாந்தமாக இருந்து ஒரு ஸமாசாரம்‌  எழுதி அதைப்‌ படித்துப்‌ பார்த்தால்‌ நன்றாயிருக்கும்‌, கோபமாக இருக்கும் பொழுது எழுதி அப்புறம்‌ படித்துப் பார்த்தால்‌ நன்றாக  இருக்காது. சரீரத்திலும்‌ அப்படியே  குணதோஷங்கள்‌ ஏற்படுகின் றன. அவயவ ஸந்நிவேசம்‌ உண்டாகும்பொழுது தாய்‌ தகப்பனுக்கு எந்த குணம்‌ ஏற்படுகிறதோ அது உள்ளே இருக்கும்‌ ஜீவனுக்கும்‌ உண்டாகும்‌. மனோபாவனையை அனுஸரித்துக்‌ குணங்கள்‌ ஏற்படுகின்றன.    இத்தகைய கர்மாக்களைப்‌ பணக்காரர்கள்‌ உரிய காலத்தில்‌ பண்ணாமல்‌ சேர்த்துப்‌ பண்ணிவிடுகிறார்கள்‌. வைதிகர்கள்‌ கிரமமாகப்‌ பண்ணு கிறார்கள்‌;  ஆனால்‌ அவர்கள்‌ அதையே ஜீவனமாக வைத்துக்கொள்கிறார்கள்‌, மற்றவர்கள்‌ எதையும்‌ கவனிப்பதில்லை, அந்தந்தக்‌ காலத்தில்‌, அந்தந்த மந்த்ரத்தைச்‌ சொல்லி, அந்தந்த திரவியங்களைக்கொண்டு, அந்தந்த ஸம்ஸ்காரங்ககளைச்‌ செய்யவேண்டும்‌. எல்லாவற்றிற்கும்‌ பெரிய காரியம்‌ பரமேஸ்வரார்ப்பணம்‌ பண்ணிச்‌ செய்வது.  அன்னப் பிராசனத் திற்கப்புறம்‌ செளளம்‌ செய்யவேண்டும்‌. அது சிகை  வைக்கிறது. அந்தக கர்மாவும்‌ பகவானுக்கு அர்ப்பணம்‌ பண்ணப் படவேண்டும்‌,  ஸத்கர்மாவுக்கு உபயோகமாக இருக்க அது பண்ணவேண்டும்‌. சிகை எடுப்பது மந்த்ரபூர்வமாக எடுக்க வேண்டும்‌. ஸந்யாஸிகள்‌ மந்த்ரபூர்வமாகத்தான்‌  எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்‌ , மந்திர பூர்வமாக வைத்துக்கொண்ட சிகையைப்‌ பரமேஸ்வரனுக்கு முன்பு  பண்ணின பிரதிக்ஞைக்கு விரோதமாக இஷ்டப்படி எடுத்துவிடுவது தப்பு. சிகையை எடுப்பது ஒரு பெரிதா என்று கேட்கலாம்‌. பொய்‌ சொல்லுகிறது தப்பு அல்லவா? அது எவ்வளவு தப்போ அவ்வளவு தப்பு இதுவும்‌. பரமேஸ்வரப்‌ பிரீதியாக ஸங்கல்பம்‌ பண்ணிக்கொண்டு ஸம்ஸ்காரம்‌ பண்ணி வைத்துக்கொண்டதைக்‌ கிள்ளுக் கீரையாக எண்ணி மனம்‌ போனபடி  எடுக்கக்கூடாது. சிவலிங்கப்‌ பிரதிஷ்டை செய்கிறார்கள்‌. வேல்‌, ஸாளக்கிராமம்‌
வைத்துப்‌ பூஜை செய்கிறார்கள்‌. பிறகு கோபித்துக்கொண்டு எடுத்து எறிந்துவிடலாமா ? அகஸ்மாத்தாகப்‌ போனால்‌ – திருடன்‌ கொண்டுபோனால்‌ பாதகம்‌ இல்லை. நாமாக வைத்ததை, நாமாக வேண்டுமென்று மாற்றுவது பெரிய தப்பு. செளளத்தை மட்டும்‌ ஸங்கல்பத்தோடு பண்ணிக்கொண்டு அப்புறம்‌  இஷ்டப்படி பண்ணுவது தப்பு. இப்படிப்‌ பண்ணுகிற வர்கள்‌ முதலில்‌ அதைப்‌ பண்ணாமல்‌ இருக்கவேண்டும்‌. மந்திரபூர்வமாக வைத்த சிகையை இஷ்டப்படி எடுப்பது தப்புத்தான்‌. அதற்காகத்தான்‌ ஸன்னியாஸாசிரமத்தில்‌ அதை  எடுக்கும்பொழுது மந்திர பூர்வமாக எடுக்கிறார்கள்‌.

ஜாதகர்மா முதலியவற்றை இனிமேல்‌ பண்ணமுடியாது. புனர்‌ உபநயனம்‌ பண்ணலாம்‌. அதற்குக்‌ கீழே இருப்பவற்றைச்‌ செய்ய முடியாது. உபநயனம்‌ அறிவு வந்தபோது செய்வது. ‘பிக்ஷாசர்யம்‌ சர! – அதாவது ‘பிக்ஷை  எடு! என்று ஆசாரியன்‌
சொன்னால்‌ ‘பாடம்‌’ என்று அவன்‌ பதில்‌ சொல்லுகிறான்‌, உபநயன காலத்திற்கு  முன்பே ஸம்ஸ்கிருத ஞானம்‌ இருக்க வேண்டும்‌. அப்பொழுது உபநயன மந்திரம்‌ சொன்னால்‌ அர்த்தம்‌ தெரியும்‌. குழந்தைக்குத்‌ தெரிந்தால்‌ நிரம்ப பக்தி உண்டாகும்‌.   குழந்தை பருவத்திலேயே நமது மனதில்‌ நாஸ்திக்யம்‌ வந்துவிட்டது. அதனால்‌ அது பலமாக இருக்கிறது. ஆஸ்திகத்தை அப்படியே போதித்தால்‌ அதுவும்‌ பலமாக நிற்கும்‌.
உபநயனம்‌ முதல்‌ பண்ணப்படும்‌ ஸம்ஸ்காரங்கள்‌ அறிவு வந்த பிறகு ஏற்படுபவை. எந்த ஸம்ஸ்காரத்தையும்‌ உரிய காலத்தில்‌ பண்ணவேண்டும்‌.  அதனால்‌ பாப பரிஹாரம்‌ ஏற்படுகிறது. வேறொரு காரியம்‌ பண்ணிப்‌ பாபம்‌  சம்பாதிக் கிறோம்‌. அதை நீக்க மனோ வாக் காயங்களால்‌ ஸம்ஸ்காரம்‌ பண்ணவேண்டும்‌. நாம்‌ பாபம்‌ அந்த மூன்றினாலேயும்‌ பண்ணியிருக்கிறோம்‌.  மனதால்‌ கெட்ட எண்ணம்‌ நினைத்திருக்கிறோம்‌., வாக்கால்‌ பொய்‌ பேசியிருக்கிறோம்‌. தேகத்தால்‌ பொய்‌ பண்ணியிருக்கிறோம்‌. பொய்‌ பண்ணுவது  என்ன? பாசாங்கு பண்ணுவதுதான்‌ பொய்‌ பண்ணுவது. மனோ வாக் காயங்களால்‌ பண்ணிய பாபங்களை அவைகளாலே காரியங்களைப்‌ பண்ணிப்‌  போக்கிக்கொள்ளவேண்டும்‌,
மனதினால்‌ பரமேஸ்வரத்‌ தியானம்பண்ணி அர்ப்பணம்‌ பண்ண வேண்டும்‌. வாக்கினால்‌ மந்திரம்‌ சொல்லவேண்டும்‌. காயத்தால்‌ காரியம்‌ பண்ணவேண்டும்‌.  இந்த மூன்றினாலும்‌ ஸம்ஸ்காரம்‌ பண்ணி, மூன்றினாலும்‌ பண்ணின பாபத்தைத்‌
தீர்த்துக்கொள்ள வேண்டும்‌. எல்லாம்‌ பரமேசுவரப்‌ பிரீதிக்காக என்று எண்ணிச்‌ செய்யவேண்டும்‌. எல்லாவற்றையும்‌ பரமேஸ்வரார்ப்பணம்‌ பண்ண வேண்டும்‌. எதையும்‌ காலத்தில்‌ பண்ணவேண்டும்‌.
ஸம்ஸ்காரங்களைச்‌ செய்து வந்தால்‌ நல்ல சந்ததி உண்டாகும்‌. வைதிக  சந்ததியார்‌ சிஷ்டர்களாய்‌ அநேகர்‌ இருக்கி றார்கள்‌. புத்தி அவர்களுக்கு அதிகமாயிருக்கிறது. அது ஸம்ஸ்காரப்‌ பிரயோஜனந்தான்‌. முன்பு இருந்தவர்கள்‌ செய்தது இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு அஸ்திவாரமாயிருக்கிறது. அந்த  எல்லைத்‌ தாண்டிப்‌ போனால்‌ அப்புறம்‌ கஷ்டந்தான்‌. வைதிக சந்ததியிற்‌ பிறந்த  குழந்தைகள்‌ லெளகிகத்தில்‌ பிரவேசித்தால்‌ அதிகமாகக்‌ கீழே போகிறார்கள்‌. மடை  அடைத்து வைத்ததைத்‌ திறந்துவிட்டால்‌ வெகு வேகமாக ஜலம்‌ போகிறமாதிரி  அவர்கள்தாம்‌ லெளகிகத்தில்‌ இறங்கிவிடுகிறார்கள்‌, நம்முடைய முன்னோர்கள்‌  ஸம்ஸ்காரங்கள்‌ பண்ணவில்லை, அதனால்‌ நமக்கு நன்மை உண்டாகவில்லை என்ற  குறை இருக்கலாம்‌. அதைப்போல்‌ நம்முடைய குழந்தைகள்‌ குறை கூறாமல்‌ நாம்‌ நல்ல  ஸம்ஸ்காரங்களைப்‌ பண்ணிவைக்க வேண்டும்‌.”
இப்படிக்கு,
வேத தர்மசாஸ்த்ர பரிபாலன ஸபையோம்‌-  கும்பகோணம். 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;