
ஸ்ரீ மத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN
”கலி காலம்,கலியுகம், எப்படி இருக்கும்?- சுக ரிஷி கணிப்பு”
ஏழு நாட்களில் சாகப்போகும் பரீக்ஷித் மகாராஜாவுக்கு சுக ப்ரம்ம ரிஷி கலிகாலம் எப்படி இருக்கும், அதில் மனிதர்களின் நடத்தை எவ்வாறு இருக்கும் என்று தனது ஞான திருஷ்டியால் கணித்து சொல்கிறார். ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது அவர் கணிப்பு. அப்பட்டமான உண்மை என்று நாம் இப்போது நாம் தெரிந்து கொள்கிறோம்.
दूरे वार्ययनं तीर्थं लावण्यं केशधारणम् । उदरंभरता स्वार्थ: सत्यत्वे धार्ष्ट्यमेव हि । दाक्ष्यं कुटुम्बभरणं यशोऽर्थे धर्मसेवनम् ॥ ६ ॥ 12.2.6
dūre vāry-ayanaṁ tīrthaṁ lāvaṇyaṁ keśa-dhāraṇam udaraṁ-bharatā svārthaḥ satyatve dhārṣṭyam eva hi dākṣyaṁ kuṭumba-bharaṇaṁ
yaśo ’rthe dharma-sevanam
எங்கேயாவது ஒரு குட்டையில் தண்ணீர் தேங்கி நின்றாலே போதும். அது ஒரு புண்ய க்ஷேத்ரம் என்பார்கள். தலையை கன்னா பின்னா என்று மனம் போனபடி சிரைத்துக் கொள்வது தான் அழகு, நாகரீகம் என்று கருதப்படும். வயிற்றை நிரப்புவது ஒன்று தான் வாழ்வின் லக்ஷ்யமாகும். அடாவடித்தனம் தான் தலைவனாவதற்கு தகுதி. அதை யே அவசியம் நியாயம் என நம்புவார்கள். குடும்பம் நடத்துவதே ரொம்ப கெட்டிக்காரத்தனம் ஆகிவிடும். ஊருக்காகவும் பேருக்காகவும் தான் ஆன்மிகம், தெய்வீகம் என்று ஆகிவிடும்.. இது தான் கலிகால பண்பு, என்று இன்று நடப்பதை, அன்றே, சுகர் சொல்லியிருக்கிறார்.
एवं प्रजाभिर्दुष्टाभिराकीर्णे क्षितिमण्डले । ब्रह्मविट्क्षत्रशूद्राणां यो बली भविता नृप: ॥ ७ ॥12. 2.7
evaṁ prajābhir duṣṭābhir ākīrṇe kṣiti-maṇḍale brahma-viṭ-kṣatra-śūdrāṇāṁ yo balī bhavitā nṛpaḥ
லஞ்சம், ஊழல், கொள்ளை, களவு, இதெல்லாம் மலிந்த சமூகம், ஜனங்கள், தான் எங்கும் இருப்பார்கள். இதில் அதிக திறமை படைத்தவன் தான் மற்றவர்களை அரசியலில் வெற்றிபெற்றவனாக மற்றவர்களை ஆள்வான். அடக்கடவுளே, சுகர் நிச்சயம் இப்போது எங்கோ மறைந்து வாழ்கிறார். இல்லாவிட்டால் இப்போதைய நிலைமை எப்படி 5000 வருஷங்களுக்கு முன்பே தெரியும்? எனக்கென்னவோ நம்மைப்போல் வாட்ஸாப்ப் யூட்யூப் ”சற்று முன் கிடைத்த செய்தி” கேட்கிறார், படிக்கிறார் என்று தோன்றுகிறது.
प्रजा हि लुब्धै राजन्यैर्निर्घृणैर्दस्युधर्मभि: । आच्छिन्नदारद्रविणा यास्यन्ति गिरिकाननम् ॥ ८ ॥12.2.8
prajā hi lubdhai rājanyair nirghṛṇair dasyu-dharmabhiḥ ācchinna-dāra-draviṇā yāsyanti giri-kānanam
நல்லவர்கள் இந்த மாதிரி ராஜ்யத்தில் வாழமாட்டார்கள். மனைவி மக்களை சொத்தை எல்லாம் இழக்க நேரிடும். கொடுமையான பேராசை பிடித்த, மனசாட்சியற்ற கொடியவர்களிடமிருந்து தப்பி வேறெங்கோ ஓடிவிடுவார்கள். அடேயப்பா அமெரிக்கா ஐரோப்பா என்று நம்மவர்கள் ஓடுவது பற்றி சுகர் தெரிந்து வைத்திருக்கிறாரே .
शाकमूलामिषक्षौद्रफलपुष्पाष्टिभोजना: । अनावृष्टया विनङ्क्ष्यन्ति दुर्भिक्षकरपीडिता: ॥ 12.2.9
śāka-mūlāmiṣa-kṣaudra- phala-puṣpāṣṭi-bhojanāḥ anāvṛṣṭyā vinaṅkṣyanti durbhikṣa-kara-pīḍitāḥ
மக்கள் பஞ்சத்தாலும், அதிக வரி சுமையாலும் துடிப்பார்கள். கிழங்கு, இலை காய் பூ, பட்டை, விதை என்று எதையாவது சாப்பிட்டு உயிர்வாழ்வார்கள்.
शीतवातातपप्रावृड्हिमैरन्योन्यत: प्रजा: ।क्षुत्तृड्भ्यां व्याधिभिश्चैव सन्तप्स्यन्ते च चिन्तया ॥ १० ॥ 12.2.10
śīta-vātātapa-prāvṛḍ- himair anyonyataḥ prajāḥ kṣut-tṛḍbhyāṁ vyādhibhiś caiva santapsyante ca cintayā
எங்கும் வியாதி பரவி அவதிப்படுவார்கள், அநேகமாக எல்லோருமே குளிர், பனி, வாயு, உஷ்ணம், மழை, ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். சண்டைகள், பசி, தாகம், வியாதி, மனதில் சங்கடம், பயம் என்று பலவித துன்பங்களில் தவிப்பார்கள்.
त्रिंशद्विंशतिवर्षाणि परमायु: कलौ नृणाम् ॥ ११ ॥ 12.2.11
triṁśad viṁśati varṣāṇi paramāyuḥ kalau nṛṇām
நாம் ஒருவரை ஒருவர் ”நூறாண்டு வாழ்க” என்று வாழ்த்துகிறோம். ரொம்ப சரி.இப்போதைக்கு இது முடியலாம். இன்னும் காலம் செல்லச் செல்ல, கலியுகத்தில் அதிக பக்ஷம் ஒவ்வொருவருக்கும் வயது ஐம்பது தானாம் . ரொம்ப போனால் நாம் ஐம்பது வயது வாழ்வதே பேப்பரில் நம் படம் வரும் அளவுக்கு ஒரு அதிசயமாகிவிடும். சுகர் சொன்னால் அது பொய்யாகாது. நாளுக்கு நாள் மோசமாக தான் கலிகாலம் செல்லும். அப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. நாமே அனுபவிக்கிறோம்.
क्षीयमाणेषु देहेषु देहिनां कलिदोषत: । वर्णाश्रमवतां धर्मे नष्टे वेदपथे नृणाम् ॥ १२ ॥
पाषण्डप्रचुरे धर्मे दस्युप्रायेषु राजसु । चौर्यानृतवृथाहिंसानानावृत्तिषु वै नृषु ॥ १३ ॥
शूद्रप्रायेषु वर्णेषुच्छागप्रायासु धेनुषु । गृहप्रायेष्वाश्रमेषु यौनप्रायेषु बन्धुषु ॥ १४ ॥
अणुप्रायास्वोषधीषु शमीप्रायेषु स्थास्नुषु । विद्युत्प्रायेषु मेघेषु शून्यप्रायेषु सद्मसु ॥ १५ ॥
इत्थं कलौ गतप्राये जनेषु खरधर्मिषु । धर्मत्राणाय सत्त्वेन भगवानवतरिष्यति ॥ १६ ॥ 12.2.12-2.16.
चराचरगुरोर्विष्णोरीश्वरस्याखिलात्मन: । धर्मत्राणाय साधूनां जन्म कर्मापनुत्तये ॥ 12.2.17 ॥
kṣīyamāṇeṣu deheṣu dehināṁ kali-doṣataḥ varṇāśramavatāṁ dharme naṣṭe veda-pathe nṛṇām pāṣaṇḍa-pracure dharme dasyu-prāyeṣu rājasu
cauryānṛta-vṛthā-hiṁsā-nānā-vṛttiṣu vai nṛṣu śūdra-prāyeṣu varṇeṣu cchāga-prāyāsu dhenuṣu gṛha-prāyeṣv āśrameṣu yauna-prāyeṣu bandhuṣu aṇu-prāyāsv oṣadhīṣu śamī-prāyeṣu sthāsnuṣu vidyut-prāyeṣu megheṣu śūnya-prāyeṣu sadmasu itthaṁ kalau gata-prāye
janeṣu khara-dharmiṣu dharma-trāṇāya sattvena avatariṣyati
carācara-guror viṣṇor īśvarasyākhilātmanaḥ dharma-trāṇāya sādhūnāṁ janma karmāpanuttaye
”பரீக்ஷித், சொல்கிறேன் கேள். தக்க நேரம் வந்தால்,கலி முற்றினால், துஷ்டர்களை அழிக்க, சிஷ்டர்களை பராமரிக்க தாவர ஜங்கம ஜீவன்கள் அனைத்தையும் பாதுகாக்கும் பரந்தாமன், கலிகாலத்தில் அவதரிப்பார்.. ஒவ்வொரு யுகத்திலும் நிகழ்வது இது”
शम्भलग्राममुख्यस्य ब्राह्मणस्य महात्मन: । भवने विष्णुयशस: कल्कि: प्रादुर्भविष्यति ॥ १८ ॥ 12.2.18
śambhala-grāma-mukhyasya brāhmaṇasya mahātmanaḥ bhavane viṣṇuyaśasaḥ kalkiḥ prādurbhaviṣyati
ஸம்பள எனும் கிராமத்தில் (இது எங்கே இருக்கிறதோ, நமக்கு தெரியவில்லை ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு சுகர் துல்லியமாக கணிக்கிறார்.) ஒரு முக்கிய வைஷ்ணவ ப்ராமண குடும்பத்தில் கல்கி என்ற நாமதேயத்தோடு நாம் எதிர்பார்க்கும் மஹா விஷ்ணு இதோ வருகிறார் கலியுகத்தில் கல்கி பகவானாக. இது தசாவதாரத்தில் 10வது அவதாரம். லோக சம்ரக்ஷணத்துக்காக மஹா விஷ்ணுவின் இந்த அவதாரம் விநோதமானானது. அவர் பிறக்கப்போவது எங்கே என்று கூட ஏற்கனவே ஸ்ரீமத் பாகவத்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே. ஒரு பிராமணர் . அவர் பெயர் விஷ்ணுயாஸர் , அவர் வசிக்குமிடம் சம்பாலா கிராமம். அது எங்கே என்று என்னை கேட்காதீர்கள். தெரிந்தால் சொல்லி இருப்பேனே.
19-20: अश्वमाशुगमारुह्य देवदत्तं जगत्पति: । असिनासाधुदमनमष्टैश्वर्यगुणान्वित: ॥ 12.2.19 ॥
विचरन्नाशुना क्षौण्यां हयेनाप्रतिमद्युति: । नृपलिङ्गच्छदो दस्यून्कोटिशो निहनिष्यति ॥ 12.2.20 ॥
aśvam āśu-gam āruhya devadattaṁ jagat-patiḥ asināsādhu-damanam aṣṭaiśvarya-guṇānvitaḥ
vicarann āśunā kṣauṇyāṁ hayenāpratima-dyutiḥ nṛpa-liṅga-cchado dasyūn koṭiśo nihaniṣyathi
கலியுகம் முடியும் சமயம், எல்லா ஜீவராசிகளின் உடம்பும் ரொம்பவே குறுகி, சிறுத்து காணப்படும். பாரம்பரிய தெய்வ, மதநம்பிக்கை, கோட்பாடுகள், எல்லாம் சிதறிவிடும். வேதங்கள் புறக்கணிக்கப்படும். வேதம் காட்டும் வழி காற்றில் பறக்கும். நாஸ்திகம் தலை தூக்கி எங்கும் நாஸ்திகர்கள் தான் காணப்படுவார்கள். ராஜாக்கள், அரசாங்க தலைவர்கள் எல்லாம் திருடர்களாக மாறலாம். எங்கும் அராஜகம் தலை தூக்கும். பணமில்லாதவன் தான் தாழ் குலத்தான். பசுக்கள் ஆடு அளவுக்கு சுருங்கிவிடும். வேத ஆசிரமங்கள் வெறும் வீடுகளாகும். குடும்பம் சுருங்கி ரெண்டு பேர் தான் அதிகம் என்று ஆகிவிடும். தாவரங்களும் அளவில் சிறிதாகிவிடும். மேகங்கள் வெறுமே பளிச்பளிச் எனும் மின்னலாக மாறும். பக்தி காணாமல் போகும். மக்கள் கழுதைகளாவார்கள் என்று சொல்கிறார் சுக ப்ரம்ம ரிஷி. இப்படி நிலை ரொம்ப மோசமாக புகும் சமயம் தான் மீண்டும் விஷ்ணு அவதரிப்பார். கல்கி பகவான் தேவதத்தம் எனும் வேகமாக ஓடும் குதிரை மேல் ஏறிக்கொண்டு வருவார். கையி கூரிய வாள் . ராஜாவென்று வேஷத்தை போட்டுக்கொண்டு மக்களை கொள்ளையடிப்பவர்கள் அத்தனைபேரையும் காலி பண்ணி விடுவார்.ராஜா தான் இல்லையே என்று கவலைப்படவேண்டாம். அதிகாரத்தில் இருப்பவர்கள் என்று எடுத்துகொள்வோம். கலியுகத்தின் முடிவில் தான் வருவாரோ? கலியுகத்தில் முதல் பாதத்தில் தான் இப்போது இவ்வளவு அக்கிரமங்களை சகித்துக்கொண்டு வாழ்கிறோம். இன்னும் மூன்று பாகங்கள் இருக்கிறது. அதுபற்றி நமக்கு கவலை வேண்டாம். நிச்சயம் அத்தனை லக்ஷம் வருஷங்கள் நாம் இருக்கப்போவதில்லையே.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


