

ப்ராரப்தம்….. நங்கநல்லூர் J K SIVAN
ஸார் , அடிக்கடி ஒரு வார்த்தை காதிலே வுழுந்துகிட்டே இருக்குது. புஸ்தகத்திலேயும் கண்ணிலே படுது . ஆனா அது என்னானு சரியா விளங்கலேயே, சொல்றீங்களா?
”பிராப்தம்..னு. அது நம்ம செஞ்ச கர்மம் னு சொல்றாங்க ””நீங்க என்ன சொல்ல வரீரங்கன்னு புரியுது. அது பிராப்தம் இல்லை. ப்ராப்தம் னா முன் ஜென்மாக்களில் நாம் செய்த நல்ல காரியங்களின் பலனை இப்போ அனுபவிக்கிறது. என் பொண்ணுக்கு ரொம்ப நல்ல இடத்திலே கல்யாணம் எதிர்பார்க்காமலேயே நடந்து முடிஞ்சுடுச்சு. அவள் செய்த பிராப்தம்..அப்படி ன்னு சொல்றோம்.. நீங்கள் சொல்லவரது வேறே. அது பேர் ப்ராரப்தம். அதை பற்றி சொல்றேன்.
ஒவ்வொரு ஜென்மத்திலேயும் நாம நிறைய பாபம் புண்யம் எல்லாம் பண்றோம். நிச்சயம் பாபம் நிறைய, புண்யம் கொஞ்சமா, அதெல்லாம் ஒண்ணா ஒரு பெரிய மலை போல் சேர்ந்திருக்கு. அதற்கு சஞ்சித கர்மா என்று பெயர். அதற்கான பலனை நாம் அநுபவிச்சே ஆகணும். தப்ப முடியாது. ஒரே ஜென்மத்தில்,ஒரே பிறவியிலேயே அத்தனை கர்மத்துக்கும் பலனை எவனாலேயும் அனுபவிக்க இயலாதே,முடியாதே. ஆகவே ஒவ்வொரு பிறவிக்கும் அதிலிருந்து கொஞ்சம் நமது வயது, வாழ்க்கை, ஜீவிதத்துக்கு ஏற்றாப்போல் நாம் புறக்கும்போதே கட்டுசோறு மூட்டை மாதிரி நம்மோடு வருது. அது தான் ப்ராரப்தம். நாம் பொறக்கறதே அதை அனுபவிக்க தான். அதனாலே தான் நிறைய பிறவி எடுக்க வேண்டி இருக்கு. கடனை தீர்க்க வேண்டாமா? அதை எப்படி குறைக்கிறது? அதுக்கு வழி கீதையிலே சொல்லி இருக்கு.
ஆத்மா, ப்ரம்மம் என்று ஏதோ ஒண்ணு நமக்குள்ளே இருக்கு. அதை தான் தெய்வம் என்கிறோம். அதை தேடறது தான் ஆத்ம ஞான விசாரம். அது தான் எது நல்லது, எதை செய்ய கூடாது எதை விரும்பக்கூடாது, எது சாஸ்வதம் னு நமக்கு புரிய வைக்கும். ஒரு வைராக்யம் மனசிலே பிறக்கும். நிற்கும். அதனாலே பாப கார்யம் பண்ணுவது குறையும். கண்ணுக்கு எதிரே தெரிகிற சஞ்சித மலை அளவு கொஞ்சமா கொஞ்சமா பனிமலை கரையரது மாதிரி குறையும். பழைய பாவங்களுக்கு பரிகாரமாக நல்ல புண்ய காரியம் ஒவ்வொரு பிறவியிலும் பண்ணிக்கொண்டே வந்தா அப்புறம் பாபம் பாக்கி இல்லை, பிறவியும் கிடையாது… அட இவ்வளவு சிம்பிளா கிருஷ்ணன் வழி சொல்லிக்கொடுத்திருக்காரே. நாம பின் பற்ற வேண்டாமா?
நான், எனது, எனக்கு, அப்படிங்கிற சுயநல, அஹம்பாவத்தை விட்டு எல்லாம் ஈஸ்வரார்ப்பணம் னு அவன் மேலே போட்டுட்டு நல்ல கார்யங்களை செய்யும்போது பாபம் எங்கிருந்து வரும்.? இருக்கிறதும் குறையும். இதை விட்டுட்டு ஏழரை நாட்டான், யாரோ கண்ணு போட்டுட்டான், ன்னு காரணத்தை இதிலேயே தேடுவது தப்பு. ப்ராரப்தம் என்கிறது தினை விதைத்தவன் தினை அறுப்பது, வினை விதைத்தவன் வினை அறுப்பது. ரொம்ப சிம்பிள். ப்ரா என்றால் முன்பு, PRE என்று ஆங்கிலத்தில் சொல்லும் வார்த்தை. அப்தம் என்றால் முடிந்து போன வருஷங்கள்… இப்போ புரியுதா? முன் பிறவியிலே, பல வருஷங்களுக்கு முன்னாலே நாம் செய்த காரியங்களின் பலன் அப்போப்போ இன்ஸ்டால்மெண்ட்லே நாம் அனுபவிக்கிற கர்ம வினை.
கடவுள் தனக்காக எதையும் செய்யலே. நமக்காக செய்றார்.அதனாலே அவருக்கு கர்மா கிடையாது. இந்த பாவ மூட்டை எதுவும் சுமக்க வேண்டாம். நாம ஒவ்வொரு பிறவியிலும் நல்லதே செஞ்சா, நாமும் கடவுள் மாதிரி ஆயிடுவோம். அதனாலே நமக்கும் இந்த மூட்டையெல்லாம் சுமக்க வேண்டாம் என்று எல்லா நீதி நூல்களும் திரும்ப திரும்ப பழமொழிகளில், பல வார்த்தைகளில் சொல்லிக்கிட்டே இருக்கு. யார் கேக்கறா? யார் படிக்கறா? அப்புறம் அழுது புலம்பி என்ன பிரயோஜனம்.?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



