SIVAAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM 9 – J K SIVAN

சிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம் 9 – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

9. नग्नो निःसङ्गशुद्धस्त्रिगुणविरहितो ध्वस्तमोहान्धकारो नासाग्रे न्यस्तदृष्टिर्विदितभवगुणो नैव दृष्टः कदाचित् ।
उन्मन्याऽवस्थया त्वां विगतकलिमलं शङ्करं न स्मरामि क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो ॥ ९॥

Nagno nihsanga-shuddhas, trigunavirahito, dhvasta-moha-andhakaaro, Naasaagre nyastadrishhtir, viditabhavaguno, naiva drishhtah kadaachith,
Unmanyaa-avasthayaa, tvaam vigata-kalimalam, shankaram na smaraami, Kshantavyo me aparaadhah, Shiva Shiva Shiva bho Shrii Mahaadeva Shambho.,9

நக்னோ நி:ஸங்கசுத்த:த்ரிகுணவிரஹிதோ த்வஸ்தமோஹாந்தகாரோ: நாஸாக்ரந்யஸ்தத்ருஷ்டி:விதிதபவகுண:நைவ த்ருஷ்ட:கதாசித் !
உன்மன்யாவஸ்தயா த்வாம் வித கதிமதி:சங்கரம் நஸ்மராமி க்ஷந்தவ்யோமேsபராத:சவ சிவ சிவ போ: ஸ்ரீமஹாதேவ சம்போ!!

மனிதன் மனதை ஒருமைப்படுத்தி தியானம் பண்ணுவதற்கு அவன் எப்படி உட்காரவேண்டும், எப்படி சுவாசிக்க வேண்டும், எப்படிப்பட்ட இடத்தில் அவன் தியானம் செய்ய வேண்டும் என்றெல்லாம் சில விதி முறைகள் இருக்கிறது.
பத்மாசனத்தில் முதுகை நிமிர்த்தி, மூச்சை நன்றாக உள்ளிழுத்து, அடக்கி, பிறகு மெதுவாக ஒவ்வொரு நாசித்வாரம் மூலமாக நிதானமாக வெளிவிட வேண்டும். அப்போது மனது இறைவனைத் தவிர வேறெதிலும் அலைபாயக்கூடாது, காற்றோட்டமான சத்தமில்லாத இடத்தில் தனிமையில் உள்ளும் புறமும் சுத்தமாக தியானத்தில் ஈடுபடவேண்டும். இரு கண்களும் மூக்கு முனையை பார்க்கவேண்டும், அல்லது இரு புருவ மத்தியை நோக்கவேண்டும்,குண்டலினி சக்தியை மேலே சஹஸ்ராரத்துக்கு எழுப்பவேண்டும்…. என்று எல்லாம் சொல்லி கேட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். அப்படி செய்வது யோக பயிற்சி பெற்ற நிலை. சன்யாசிகள் வழக்கமாக செய்வது. சுருக்கமாக சொன்னால் நம்மால் முடியாதது.

ஆதி சங்கரர் இதைத்தான் இந்த ஸ்லோகத்தில் கெட்ட சேர்க்கையும் முக்குணமும் ஒழித்து, மோஹ இருள் நீங்கி, மூக்கு நுனியில் பார்வை பதித்து சிவனை கண்டேனில்லை, கவலை கொண்டு அறிவு மழுங்கி, மங்களகரனான உம்மை மனதால் கூட எண்ணிப் பார்க்கவில்லை. இந்தப் பிழையைப் பொருத்து அருள் புரிய வேணுமே என்கிறார். இது அவருக்காக சொல்லப்பட்டதில்லை, தன்னை நாமாக பாவித்து நாம் எப்படி பரமேஸ்வரனை வேண்டவேண்டும் என்று எடுத்துச் சொல்கிறார்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *