RAMAKRISHNA PARAMAHAMSAR – J K SIVAN

பார்  போற்றும்  பரம ஹம்ஸர்  –   நங்கநல்லூர்   J K  SIVAN 

  சிஷ்யனைத்தேடி குருவே வருவார்

சரியான  நேரத்தில், குருவே  தனது சிஷ்யன்  எங்கிருக்கிறான் என்று உணர்ந்து தேடி  அவனை அடைந்து ஏற்றுக்கொள்வார். இதில்ஒரு முக்கியமான விஷயம்.  அப்படித்தான்  ராமகிருஷ்ண  பரமஹம்ஸர்  விவேகானந்தருக்காக  காத்திருந்து  தக்க சமயத்தில்  இருவரும் சந்தித்தனர்.
நரேந்திரன் ராமகிருஷ்ணரை சந்தித்த போது அவன்வாழ்வில் ஒரு   திருப்பம் நிகழ்வதை மெதுவாக உணர்ந்தான். அவன் கால்கள் அவனைஅறியாமலேயே தக்ஷிணேஸ்வரத்துக்கு இழுத்துச் சென்றது. அவரைப் பார்க்கும்போதெல்லாம் தனக்குள் இனம்புரியாத ஒரு பெரிய புயல் உருவாவதை உணர்ந்தான். ராமகிருஷ்ணரும்  அவ்வாறே தனக்குள் ஒரு புது உற்சா கம் வளர்வதை  அனுபவித்தார்.
”ஓஹோ என் எதிரே பரம்பொருளேநிற்கிறதே” என்று நரேந்திரனும்,
”அடடா இதென்னஅற்புதம் ப்ரம்ம ஞானமே மனிதவுருவில் வந்துவிட்டதே”
என்று ராமக்ரிஷ்ணரும் சந்தோஷப்பட்டார்களோ! 

முதலில் ‘ இவரெல்லாம் ஒரு குருவா?  கல்வி அறிவில் லாத கிராமத்து ஆள்”  என்று தான்  முதன் முதலாக  ராமகிருஷ்ணரை பார்க்கும்போது  நரேந்திரன் மனதில் தோன்றியது. அவரை அவன் குருவாக  அப்போது அவன் மனம் ஏற்கவில்லை.    அவரைச்சோதித்து பார்த்தான். அவரும் அதை அனுமதித்தார்.

”நரேந்திரா, லேவாதேவிக்காரர்கள் ஒரு தங்கக் காசை கொடுத்தால், ”இதுசெல்லுமா என்று உறை த்துப் பார்ப்
பார்களே  அது போல் என்னை நன்றாக பரிசோதித்து விடு”
காசுஎன்றாலே ஒரே ஓட்டம் ஓடுபவர்  ராமகிருஷ்ணர்   என்று நரேந்திரனுக்கு தெரியும்.

அதை ஒருநாள் சோதிக்க தோன்றியது. ராமகிருஷ் ணர்இல்லாதபோது அவர் படுக்கையில் துணிக்கு  அடியில்  ஒருவெள்ளிக் காசை வைத்து வேடிக்கை பார்த்தான் நரேந்திரன். காத்திருந்தான்.   ராமகிருஷ்ணர் வந்தார். 

 ”உஸ் அப்பாடா, என்றுகளைப்பாக படுக்கையில் அமர்ந்தார். அடுத்த கணமே ஏதோ கருவேலம் முள் நறுக்கென்று உடலில் குத்தியது போல் ”ஆ” வென்றுக த்திக்கொண்டு குதித்து எழுந்தார்.

”என்ன என்ன?” திகைத்துகேட்டான் நரேந்திரன்.
”ஏதோ கடித்தது போல், தேள்கொட்டியது போல் இருக்கிறதே. என் படுக்கையை நன்றாக எடுத்துஉதறி என்ன என்று பார்”
”ணங்” என்றுசப்தத்தோடு தரையில் உருண்டோடியது ஒரு வெள்ளிக்காசு.

‘நரேந்திரன் காளி உபாசகனோபக்தனோ அல்ல. ஒருநாள் ராமகிருஷ்ணர் கேட்டார்: ” நரேந்திரா, காளிமாதாவை, அம்மாவை நம்பாதவன்   நீ இங்கு எதற்கு வருகிறாய்?
”உங்களைப் பார்க்கவேமட்டும். உங்களை எனக்கு பிடிக்கிறது.”
நாளாகநாளாக ராமக்ரிஷ்ணரோடு ஒட்டிக்கொண்டான் நரேந்திரன். அவரே குரு. 1886ல் அவர்உயிர் பிரியும் வரை அவன்அவரைப் பிரியவே இல்லை. கடைசி ஐந்து வருஷங்கள் அவரது ஆத்ம போதனை முச்சூடும் அவன்மனதில் நிறைந்துவிட்டது.

”நரேந்திரா, நீ ஒருதியான சித்தன். உனக்கு தியானம் தெரிந்தவரைசொல்லிக்கொடுக்கிறேன்” என்பார் குரு.

”குருநாதா, எனக்கு நிர்விகல்பசமாதி அனுபவம் வேண்டும் ”

”ஆஹா இவன்லோக சம்ரக்ஷக புருஷன். இவனால் இந்து தர்ம கலாச்சாரம் உலகெங்கும்பெருகப்போகிறது. இவன் ஒரு ஞானப் புயல். இவனை சமாதியில் ஆழ்த்தி தனியாக எங்கோ ஒருமூலையில் உட்காரவைக்க கூடாது”
என்று  ராமகிருஷ்ணர் மனதில்  தோன்றியது.

”இவன்நாராயணனின் அம்சம்”   என அனுமானித்த குரு ஒருநாள் ‘

‘நரேந்திரா, காளிமாதாஎன்ன சொல்கிறாள் தெரியுமா என்னிடம். உன்னில் நாராயணனை நான் பார்க்கிறே னாம்.அப்படி இல்லாதபோது ஒரு கணம் கூட உன்னை நான் திரும்பிக்கூட பார்க்கமாட்டேன். நீ ஆயிரம்இதழ் தாமரை. நிறைகுடம். செங்கண்மால்.பெரிய கடல் நீ.”
என்கிறார்.

மற்றவர்களிடம்ராமகிருஷ்ணர் ” நரேந்திரனை சாதாரணமாக எடை போடாதீர்கள்.அவன் ஒரு உயர பறக்கும் பெரும் புறா” அதற்குப்பிறகு பல வாரங்கள் நரேந்திரன் தக்ஷிணேஸ்வரம் போகவில்லை. 

”ஏன் அவனைக் காணோம்?”
 குருவேஒருமுறை அவன் பங்கேற்கும் ப்ரம்ம சமாஜ கூட்டங்களுக்கு சென்றார். வடக்குகல்கத்தாவில் அவன் வீடு தேடி சென்றார். அவனது தியானப் பாடல்களை கேட்டுஅதிசயித்தார். என்ன குரல் !!

அவன்வசிக்கும் ராம்தானு சந்து வீட்டுக்கு ராம்லால் என்பவரோடு சென்றார். வெகுநாள்காணாத குருவை வீட்டில் கண்டதில் நரேந்திரன் உணர்ச்சி வசப்பட்டான். அவரை விழுந்துவணங்கினான். முகம் மலர்ந்தது. பெருமிதம். தான்கொண்டுவந்த இனிப்பு ”சந்தேஷ் ”தின்பண்டத்தை ராமக்ரிஷ்ணரே  நரேந்திரன்  வாயில் ஊட்டினார்.

”நரேந்திரா ஒரு பாட்டு பாடுப்பா”

 அற்புதமான மாலைப் பொழுது, ஜன்னல் கதவு வழியாக வேப்ப மரகாற்று வாசனையாக உள்ளே பரவியது. கீழே தரையில்ஒரு விளக்கேற்றி தான் கொண்டுவந்த காளி படத்தை  வைத்தார்குரு. தன்னிடமிருந்த தம்புராவை வைத்து மீட்டிகண் மூடி நரேந்திரன் பாடினான்
”ஜகோ மாகுல குண்டலினி ”….. நாதவெள்ளம் எங்கும் நிரம்ப, ராமகிருஷ்ணர்அதில் தன்னை இழந்து மயங்கி, மரக்கட்டையாகி பாவசமாதி (ஸவிகல்ப சமாதி)யில் ஆழ்ந்தார். நேரம்போனதே தெரியவில்லை. எப்போது நாத வெள்ளம் நின்றது?

”முடிந்தபோதெல்லாம் என்னிடம் வா”
குருவின்வார்த்தை காதில் ஒலித்தது. அவனை மீண்டும் தக்ஷிணேஸ்வரம் வரவழைத்தது.
நரேந்திரன்  விவேகானந்தர்  ஆகும் நேரம் நெருங்கு கிறது . 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;