SRIMAD BHAGAVATHAM 10TH CANTO – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம்  – 10வது காண்டம்  –
நங்கநல்லூர்  J K  SIVAN

குருவின் வருகை 

கிருஷ்ணன் பிறந்து இன்னும் முழுக்க  ஆறு மாதம் கூட  ஆகவில்லை. அதற்குள்  அவன் தன்னுடைய  வேலையை ஆரம்பித்து விட்டான். சுறுசுறுப்பான ஆள் கிருஷ்ணன்.  பிறந்த நிமிஷத்திலேயே  யோகமாயாவை  இடம் மாற்றி கம்சனுக்கு  வார்னிங் கொடுத்தான்.  வசுதேவரை  ரோபோவாக  இயக்கி  தான்  கோகுலத்துக்கு இடம் மாறினான்.   பிறந்த  பத்து  நாளில் பூதனை எனும் ராக்ஷஸியை கொன்றான். மூன்று மாதங்களுக்குள்  ரெண்டு  ராக்ஷஸர்கள் காலி.  சகடாசுரன் த்ரி ணாவர்த்தன் ரெண்டு பேருமே  பெரிய  பலம் கொண்ட ராக்ஷஸர்கள்.   க்ரிஷ்ணனைக் கொல்லப் போய் தங்கள் உயிரை இழந்தார்கள். கிருஷ்ணன்  மனித குழந்தை அல்ல என்று  அப்பா  நந்தகோபருக்கும்  அம்மா  யசோதைக்கும், ஏன் எவருக்குமே  தெரியாத  போது அவன் உயிர் பிழைத்தது  ஏதோ தெய்வ சங்கல்பத்தால் என்று தான்  இரவு பகல் தூக்கமில்லாமல் வாடினார்கள்.   இன்னும்  என்னென்ன ஆபத்துகள் வருமோ என்று தவித்தார்கள்  எல்லோரும்.
குழந்தை கிருஷ்ணன்  தீக்காயுளுக்காக  நந்தகோபன் ஆயிரக்கணக்கான  பசுக்களை தானம் செய்தார். யாகங்கள் ஹோமங்கள் ஏற்பாடு செய்தார். கிணறுகள் வெட்டி  நீர் வசதி செய்துக்கொடுத்தார். சாலைகள் அமைத்து நிழல் தரும்  மரங்களை வளர்த்தார்.

நான் இதுவரை அறியாத, கேள்விப்படாத ஒரு சம்பவத்தை  ஸ்ரீமத் பாகவதத்தில் 10வது காண்டத்தில், தசமஸ்கந்தத்தில்,  எட்டாவது  அத்யாயத்தில் படித்தேன்.  உங்களுக்கு இது தெரியுமா?
ஒருநாள்  யசோதை  குழந்தை கிருஷ்ணனை மடியில் வைத்துக்கொண்டு,  அவனுக்கு  தாய்ப்பால் ஊட்டினாள்.  அவளுக்கு தான் எவ்வளவு பெருமிதம். அவளுக்கு  கிடைத்த  இந்த  பேரதிர்ஷ்டம், பாக்யம் உலகத்தில் வேறு எந்த தாய்க்கு கிடைக்கும். அவள் உடலில்  சந்தோஷத்தில் பால் அளவுகடந்து ஊறி வழிந்தது. கிருஷ்ணன் ரொம்ப சுகமாக குடித்துக் கொண்டி ருந்தான்.  அவனை தடவிக் கொடுத்துக்  கொண்டிருந்தாள்  தாய்.   குடித்து முடித்துவிட்டான் திருட்டுப்பயல்.   அவன் முகத்தில் களைப்பு தெரிந்தது.   அவனைப் பார்த்துக்கொண்டே  அவன் அழகை ரசித்தாள்  அன்னை யசோதா.  அடாடா, என்ன  அழகு  என்ன அழகு இந்த முகத்தில்.  இணையற்ற, ஈடற்ற அழகு சிரிப்பு.  அரைத்  தூக்கம்  அவனுக்கு.  கைகால்கள் சோம்பல் குறித்துக்கொண்டான்.  மடியில் படுத்துக் கொண்டிருந்த மாதவனுக்கு  கொட்டாவி வந்தது.  கண் சொக்கியது. தூக்கம் அளவுகடந்து வந்துவிட்டது..  சொப்பு வாயை ஆ வென்று திறந்து சின்ன வாயில் கொட்டாவி விட்டதை பார்த்தாள்.  அட, இதென்ன  ஆச்சர்யம்.  இந்த  குழந்தை வாயில் வானம், பூமி,  மேலே சூரிய சந்திர மண்டலங்கள் தெரிகிறதே. அக்னி, வாயு,  சமுத்திரம்,  காற்று மண்டலம்  தீவுகள், மலைகள்,  ஆறுகள், காடுகள்  அடேயப்பா  என்ன இது?  நான் ஏதாவது கனவு காண்கிறேனா?  எல்லாம்  அசைகிறதே.   சிலது அசையாமல் நிற்கிறதே.   யோகமாயையால்  கிருஷ்ணன் ஒரு கணம் அம்மாவோடு விளையாடி இருக்கிறான்.  தான் யார் என்று ஜாடை காட்டி இருக்கிறான்.  இவ்வளவு சின்ன உடம்பை வைத்துக்கொண்டே  விஸ்வரூப  தர்சனம்  கொடுக்கிறானா ?

யசோதைக்கு ஒன்றுமே புரியவில்லை. மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது.  முகம் உடம்பு பூரா வியர்த்தது.  அவள் அறியாமலேயே  கை  கால்கள் நடுங்கியது. பேச்சு வரவில்லை அவளுக்கு.  ஆச்சர்யமா அதிர்ச்சியா, இல்லை ரெண்டும் சேர்ந்தேயா?   கண்கள் இருண்டன .

குழந்தைக்கு ஏதோ வியாதியா? என்ற மூடத்தனம் அவள் அறியாமையால் பயத்தை தந்தது. ஐயோ  இந்த குழந்தைக்கு இன்னொரு புதுவித  ஆபத்தா?  இதுவரை வந்த கண்டங்களிலிருந்து எப்படியோ தப்பிவிட்டானே. பகவானே இது என்ன சோதனை?  மனித தாயோடு மஹா விஷ்ணு சேய்  விளையாடுகிறானா?    நந்தகோபரை அழைத்து  தனது பயத்தை வெளிப்படுத்துகிறாள்.  நந்தகோபன் என்ன செய்வது என்று திக்கித் திணறிக்  கொண்டிருந்த வேளையில் என்ன நடந்தது தெரியுமா?

”சொல்லுங்கள் மகரிஷி, கேட்க கேட்க  ஆச்சர்யங்கள் வளர்ந்து கொண்டே போகிறது. அப்புறம் என்ன ஆயிற்று?  ”  ரொம்ப ஆர்வமாக  பரிக்ஷித் மஹாராஜா கேட்க  சுகப்பிரம்ம மகரிஷி தொடர்கிறார்.

”நந்தகோபன் யசோதை இவ்வாறு கலங்கி நிற்கும் வேளையில்  எங்கோ  வனத்தில் தவம் செய்து  கொண்டிருந்த  யது  குலத்துக்கே  குருவான  கர்க முனிவர்  எப்போதோ  வசுதேவர் தன்னைகி  கேட்டுக்கொண்டதற்கு  இணங்கி  ஏதோ ஒரு சக்தி  இயந்திரம் போல் அவரை இயக்க,   விடுவிடுவென்று  கோகுலத்துக்கு சென்று  நந்த கோபன் அரண்மனையை நோக்கி நடந்து  கொண்டிருந்தார்.  

எதிர்பாராத நேரத்தில் வாசலில் கர்க முனிவர்  வந்து நிற்பதை பார்த்த நந்தகோபன் ஓடிச் சென்று அவரை  கை கூப்பி  வணங்கி  உபசரித்து உள்ளே அழைத்து வந்தான்.   கர்க முனிவர்  சிறந்த தவயோகி. முக்காலமும்  உணர்ந்த ஞானி.

”ஸ்வாமி  உங்கள் வரவால் நாங்கள் மிக்க பாக்கியசாலி யாக, புண்யம் பண்ணினவர் களாகி விட்டோம். எந்தவித உபச்சாரம் செய்து தங்களை மகிழ்விக்கலாம் என்று புரியாத நிலையில் இருக்கிறேன். கட்டளையிடுங்கள் ஸ்வாமி ”

”அப்பா  நந்தகோபா, எனக்கு எதுவும்  வேண்டாம். ஆனந்தமாக எப்போதும் இருக்கிறேன்.”

”ஸ்வாமி,   நீங்கள் ஜோதிடம், ஆரூடம், வான சாஸ்திரம் மற்ற பல சாஸ்திரங்களில்  நிபுணர்.. உங்களுக்கு தெரியாதது எதுவுமில்லை.  தேவையும் எதுவும் இல்லை.  நான் கிரஹஸ்தன். உங்களை சௌகர்யமாக கவனித்துக்கொள்ள வேண்டிய  பொறுப்பினால் வேண்டினேன். மன்னிக்கவும். தங்கள் சித்தம் என் பாக்யம்.  நான் என்ன செய்யவேண்டும்  என்று  கட்டளையிடுங்கள் சுவாமி”

”நந்தகோபா,  நான் உங்கள் யதுகுல  குரு. எல்லோரும் அறிந்த உண்மை அது.  உன் குழந்தைகள்   பலராமன் கிருஷ்ணன்  ஆகியோர்   நலனுக்காக  நான் சில  யாகங்கள் செய்து புண்யாஹவாசனம்  நாமகரணம்  செய்ய வேண்டியது  என் கடமை. கம்சன் அவர்கள் தேவகியின் புத்திரர்கள் என்று நினைத்துக் கொண்டி ருக்கிறான். அவர்களை தேடிக் கொண்டி ருக்கிறான். நான்  உனக்கு யதுகுல  குருவாக இங்கே  வந்து ஹோமங்கள் யாகங்கள் நடத்தினால் நீ   ஆயர்பாடியில் வைசியன் இல்லை, க்ஷத்திரியன் .ஆகவே  தேவகி புத்ரன் இங்கே தான் இருக்கிறான் என்று ஊர்ஜிதம் செய்து விடுவான். யோகமாயா உணர்த்தியபடி  தனது  எதிரி எங்கோ பிறந்துவிட்டான். யார் அவன், எங்கே இருக்கிறான்  என்று  எப்போது தேடி  அலைகிறான்.  ஆகவே நான் உன்  யது  குலகுருவாக இங்கே  வரவில்லை. ஒரு  பிரம்மச்சாரியாக வந்திருக்கிறேன்”

”குருநாதா,  நான் உங்கள் வாக்கை மதிக்கிறேன்.  யதுகுல குருவாக  நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். ஒரு ரிஷியாக  யாருக்குமே தெரியாமல்  ரஹஸ்யமாக  என் கோ சாலையில் நீங்கள் எந்த  யாக காரியம்  வேண்டு மானாலும் செய்து கொள்ளுங்களேன். அதற்கான  ஏற்பாடுகள் செயகிறேன்”

”பரிக்ஷீத்.  அப்புறம்  என்ன நடந்தது தெரியுமா? ””சொல்லுங்கள்  மகரிஷி. என் காதுகள் செய்த புண்யத்தை அனுபவிக்கிறேன்” என்றான் பரிக்ஷீத் .
 கர்க முனிவர்  கிருஷ்ணனுக்கு   ”நாம கரணம்’, ‘  பேர்  வைக்கும்  சடங்கு,   நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னார்.  யாரும்  அறியாமல் ரஹஸ்யமாக  கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும்   நாமகரண ஹோமம் செய்தார்.

”நந்தகோபா, ரோஹி ணி  புத்ரன்  பலராமன் உனக்கும், உன் குடும்பத்தாருக்கும்  நண்பர்களுக்கும்  சகலவித  நன்மைகளும் புரிவான்.  மிகுந்த சக்தி கொண்டவனாக திகழ்வான். ஆகவே  ”ராமன்”   என்று பெயர் இடுகிறேன். பலம் மிக்கவனாக இருப்பான் என்பதால்  ”பல ராமன்” என்றும்  அவனுக்கு இனி  பெயர்.   நந்தகோபன்   வசுதேவர்   ரெண்டு பேர்  குடும்பத்துக்கும்  அவன்  பாலமாக இருப்பதால்  ஸங்கர்ஷணன்  என்ற பெயரும் அவனுக்கு இனி பொருந்தும்.

”இன்னொருத்தன் இருக்கிறானே,   இதோ இந்த  சின்னப்பயல்.   இவன்  ஒவ்வொரு யுகத்திலும் பகவான் அவதரிப்பது போல்  பிறந்தவன்.  இதற்கு  முன்னால்  அவன் மூன்று நிறங்களில் இருந்தவன். வெண்மை,  சிவப்பு மஞ்சள். இப்போது பார்த்தால் அவன் கரு வர்ணன்.   இவன் பேரழகன். நினைத்தால் தனது வண்ணத்தை   ரூபத்தை  மாற்றிக் கொள்ளக்கூடியவன்.   அவன் சாக்ஷாத்  ஸ்ரீமந்  நாராயணனின் அம்சம். நீங்கள் அவனைப்பற்றி துளியும் கவலையே பட வேண்டாம்.  எத்தனையோ காரணங்களுக்காக  அவன்  வசுதேவன் மகனாக  பிறந்திருக்கலாம். ஆகவே அவனை வசுதேவன்  மகன் வாசுதேவன் என்று தான் உலகம் அறியும்.   உன் மகனாக  தோன்றினாலும் அவன் பல சமயங்களில்  வாசுதேவன் என்றே வணங்கப்படுபவன். அவன் ஆயிர நாம ரூபன்.  ஆயிரமாயிரம் உருவங்கள் கொண்டவன்.  அவனால் உனக்கு வரும் எத்தனையோ ஆபத்துகள் நீங்கும். இந்திராதி தேவர்களையும் அடக்கி ஆள்பவன். தேவாதி தேவன். கம்ஸன் போன்ற ராக்ஷஸர்கள் அவன் முன் கொசு. கவலையே படாதே. 

முடிவாக சொல்கிறேன் கேள் நந்தகோபா.  இந்த கிருஷ்ணன் உன் மகனாக இருந்தாலும்  இவன் உண்மையில் ஸ்ரீமந்  நாராயணன். நீ  விஷ்ணு பக்தன்.  உன் மேல்  கருணையாக உன் மகனாக  தானே உவந்து வந்து  பிறந்திருக்கிறார்.  நீ  ரொம்ப ரொம்ப பாக்யவான் .

ஆசிர்வதித்து விட்டு  கர்க முனிவர் சென்றுவிட்டார்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;