MAHARISHI STORY – J K SIVAN

மஹரிஷி சரித்திரம்.  – நங்கநல்லூர்  J K  SIVAN
பகவான் ரமண மஹரிஷியின் வாழ்க்கையை  ஒரு கட்டுரையாக எழுதுவது ஒரு தினுசு. அதையே  ஒரு கால அட்டவணையாக கொடுப்பது இன்னொரு மாடல்.  அது இன்னும் சுவாரஸ்யமாக இருக்க காரணம் அதில் முதலில் வருஷம் மாதம் தேதி கொடுப்பதால் எதற்கு பின் எது, எது எப்போது நடந்தது என்று விவரமாக புரியும். நிறைய பேருக்கு இப்படி படிப்பது பிடிக்கிறது.
1879 டிசம்பர்  30, திங்கட்கிழமை . மார்கழி 16ம் நாள். பிரமாதி  தமிழ் வருஷம். புனர்பூசம் நக்ஷத்ரம். அன்று விசேஷமாக எல்லோரும் ஆருத்ரா தரிசனம் செய்ய சிவன் கோவில்களுக்கு செல்லும் நாள். சிதம்பரம்  ஓஹோ என்று  கோலாகல வைபவத்தோடு இருக்கும். அப்போது விடிகாலை ஒருமணிக்கு  திருச்சுழியில்  ஸ்ரீ சுந்தர மந்திரம் என்கிற பேர் கொண்ட ஒரு வீட்டில்  சிவபெருமானே  ஒரு பையனாக  பிறந்தான். .
1891  திருச்சுழியில்  ஆரம்ப பள்ளி முடிந்து திண்டுக்கல்லுக்கு  குடும்பம் இடம் பெயர்ந்தது.
1892  பெப்ரவரி 18 – வெங்கட்ராமன் அப்பா  சுந்தரம் ஐயர் கைலாசவாசி ஆனார். குடும்பம் மதுரைக்கு திரும்பியது.  ஸ்காட் நடுநிலைப்பள்ளி , அமெரிக்கன் மிஷன் ஹை ஸ்கூல்  ஆகிய பள்ளிகளில் வெங்கட்ராமன் படித்தான். 1895 நவம்பர் – யாரோ ஒரு வயதான சொந்தக்கார மாமா  வீட்டுக்கு வந்தபோது   அடிக்கடி ”அருணாசலா” என்கிறாரே  என்ன அது? எங்கே இருக்கிறது?
1896 ஜூலை மாதம் நடுவில்.  –  தனியே  மாடியில் வெங்கட்ராமன் படுத்து கொண்டிருந்த  போது மரண பயம் வந்தது. உடம்பு  கட்டையானது. சில்லிட்டது. மூச்சு நின்றது.  ஆனால் வெங்கட்ராமன்   சாகவில்லை.மரண அனுபவம் கிட்டியது. ஆஹா  என்ன இது. இந்த உடம்பு இப்படி மாறிவிட்டது நான் சாகவில்லையே.  என் உள்ளே யார் இருப்பது? 1896  ஆகஸ்ட்  29.  சனிக்கிழமை.   வெங்கட்ராமன் முற்றிலும் இப்போது மாறிவிட்டவன். யாருக்கும் சொல்லாமல்  மதுரையை விட்டு  அருணாசலம் எங்கிருக்கிறது என்று தேடி ரயில் ஏறி  கிளம்பிவிட்டான். 1896 செப்டம்பர் 1  செவ்வாய்.  தட்டுத்தடுமாறி எப்படியோ அருணாசலம் வந்து சேர்ந்துவிட்டான். பெரிய  அண்ணா மலையார் கோவில்  பிரமிக்க வைத்தது.  உள்ளே  நுழைந்தவன் ஆயிரம்கால் மண்டபத்தில் போய் அமர்ந்தான்.  இலுப்பை மரத்தின் அடியில் குளுகுளுவென்று காற்று வீசியது. மண்டபம் மூலையில்  கீழே படிப்படியாக பாதாள லிங்கம் சந்நிதி. அங்கே போய் தனியாக அமைதியாக   உட்கார்ந்து கொண்டான். தியானத்தில் ஈடுபட்டான். நேரம் காலம், பசி தூக்கம் தாகம் எல்லாம் மறந்தது. மனம் ஆனந்தமாக சிவன் மேல் லயித்தது. ஆத்மஞானம் ஒளிவீசியது.
1897 திருவண்ணாமலை நகர வெளிப்புறம்  குருமூர்த்தத்துக்கு  நடந்து  மாந்தோப்பு அருகே ஒரு குட்டி கோவிலில் போய் உட்கார்ந்து கொண்டான்
1898  மே  மாதம்.  நெல்லையப்ப மாமா வெங்கட்ராமனைத் தேடி அலைந்தவர்  அவனை மாந்தோப்பில் பார்த்துவிட்டார்.வீதி திரும்பும் எண்ணம் இல்லை என்று அவரை திருப்பி  அனுப்பினான்.
செப்டம்பர்.  வெங்கட்ராமன்  பவழக்குன்றுக்கு சென்றான். டிசம்பர்  மாதம்  அம்மா அழகம்மாள் அழுதுகொண்டே  அவனைத் தேடி பவழக்குன்றுக்கு  வந்தவள் எவ்வளவோ மன்றாடி அவனை வீட்டுக்கு  அழைத்தாள். அவளையே மாற்றிவிட்டான் வெங்கட்ராமன்.
1899 பிப்ரவரி.  அருணாச்சல மலை யில் குடியேறி  அங்கே பல குகைகளில்  எல்லாம் வசிக்க ஆரம்பித்தான்.  ரொம்ப  பிடித்தது விருபாக்ஷ குகை. அங்கேயே வாசம். மாமரத்தின் அடியே உள்ள குகை அது. வெயிலுக்கு நல்ல சுகமாக இருந்தது. காற்றும் ஆனந்தம் தந்தது.
1900 –    நிறைய  பேர் இந்த   இளைய பிராம்மண சந்நியாசியை தரிசிக்க வந்தார்கள்.    கம்பீரம் சேஷய்யா என்பவர் நிறைய கேள்விகள் கேட்டு திருப்தியாக பதில் பெற்றார்.
1902ல்    இந்த கேள்விபதில்  ஆத்ம விசாரம் என்ற புத்தகமாக வெளிவந்தது.
1902   சிவப்பிரகாசம் பிள்ளையின் கேள்விகளுக்கு பதில் தான்  ”நான் யார்”  புத்தகமாகியது. .
1905  திருவண்ணாமலையில்  கொடிய பிளேக் நோய் பரவி பலர் மாண்ட சமயம். ஆறு மாத காலம் மலைமேல்   பச்சையம்மன் கோவிலுக்கு வெங்கட்ராமன்  சென்று விட்டான்
1907  நவம்பர்  18 அன்று  மிகப்பெரிய  பண்டிதர், நிறைய படித்த யோகி  காவ்ய காந்தா கணபதி முனி வந்து வெங்கட்ராமனை சந்தித்தார். உபதேசம் பெற்றார். அவரால் மகரிஷி பட்டம் பெற்றார்  வெங்கட்ராமன். இனி நமக்கு  அவர் பகவான்  ரமண மஹரிஷி.
1908  ஜனவரி – மார்ச்.  மூன்று மாத  காலம் கணபதி முனி மற்றும் சிலரோடு பச்சையம்மன் கோவிலில் வாசம். பிறகு விருபாக்ஷ குகைக்கு  திரும்ப சென்றுவிட்டார்.  ஆதி சங்கரரின் விவேக சூடாமணி,  த ருக் திருஷ்ய விவேகம்   போன்ற புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்தார்.
1911 நவம்பர்   ஹம்ப்ரிஸ் என்கிற வெளிநாட்டு  பாதிரியார்  ரமணரை சந்திக்கிறார்.
1912  ஆமைப் பாறையில் ரெண்டாவது தடவையாக  மரணாநுபவம்.  வாசுதேவ சாஸ்திரி மற்றும் சிலர் இதற்கு சாக்ஷி.
1914  தாய் அழகம்மை உடல் நோய்வாய் பட்டு அவள்  நிவாரணம் பெற அருணாச்சல சிவன் மேல் ஒரு ஸ்தோத்ரம் இயற்றுகிறார்.
1915  தாய் அழகம்மைக்காக  அப்பளம்,  பப்படம் இடும் பாட்டு. விருபாக்ஷ குகையில் இருந்த போது இயற்றிய மற்ற நூல்கள். அருணாசல அக்ஷரமணமாலை.   அருணாசல பதிகம்.  அருணாச்சல அஷ்டகம், தேவி காலோத்ரா,  ஆதிசங்கரரின்  தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்,  குரு ஸ்துதி, ஹஸ்தாமலக ஸ்தோத்ரம் மொழி பெயர்ப்பு.
1916  மஹரிஷி  ஸ்கந்தாஸ்ரமம் வந்து சேர்ந்தார்
1917  சமஸ்க்ரிதத்தில்  அருணாச்சல பஞ்சரத்னம் வெளிவந்தது.   அம்மா ஸ்கந்தாஸ்ரமத்திலேயே  தங்கிவிட்டாள் .  கணபதி முனியின்  ரமண கீதை புத்தம்  வெளியானது. .
1922  மே   19, வெள்ளி.  அம்மா  அழகம்மை ஸமாதியானாள்.   மகரிஷி  ரமணாஸ்ரமத்தில் தங்கிவிட்டார்.1927  மஹ ரிஷியின்   உபதேச சாரம்  தமிழ், தெலுங்கு, சமஸ்க்ரிதம், மலையாளம் மொழிகளில் வெளி வந்தது. .
ஏப்ரல்  24 அன்று  ஆத்ம வித்யா  என்கிற நூல் வெளியானது. தமிழில்  உள்ளது நாற்பது நமக்கு கிடைத்தது.  மலையாளத்தில் சத் தர்சனம் என்று பெயர் பெற்றது.
1930   சத் தர்சனம்  சமஸ்க்ரிதத்தில் கணபதி முனியால்    எழுதப்பட்டு வெளியானது.
1933   தமிழில்  ஆகமம்.  சர்வஞானோத்ரம்,  ஆத்ம சாக்ஷாத்காரம்  புத்தகங்கள் வெளிவந்தன.
1939    செப்டம்பர் 1   வியாழன்.   மஹரிஷி  மாத்ருபூதேஸ்வரர்  ஆலயம்  அடிக்கல் நாட்டினார்.
1940    பகவத் கீதையில் 42 ஸ்லோகங்களை  தேர்வு செய்து தமிழ், மலையாளம் மொழிகளில்  விளக்கம் கிடைத்தது.  1947  பிப்ரவரி. ‘ஏகாத்ம பஞ்சகம்’  தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளி வந்தது. 1948   ஜூன்  18.  அவருக்கு பிடித்த பசு லக்ஷ்மி  நிர்வாணம் அடைந்தாள். ஆதி சங்கரரின் ஆத்ம போதம் தமிழில் நமக்கு கிடைத்தது.
1949   மார்ச் 17. வியாழன். மாத்ருபூதேஸ்வரர் ஆலயம் கும்பாபிஷேகம்  மஹரிஷி முன்னிலையில் நடைபெற்றது.
1950    ஏப்ரல் 14  வெள்ளி இரவு  8.47.  வானில் தெற்கே இருந்து ஒரு நக்ஷத்ரம் சுடர் வீசி மின்னி வடக்கு நோக்கி விரைந்து அருணாலசலமலையில்  மறைந்தது.   பகவான் ரமண மகரிஷியின்  ப்ரம்ம நிர்வாணம் . நமக்கு என்றும்  மகரிஷி அருணாசலத்தில்  அமைதியாக ஞானம் போதிக்கிறார்.  போய் அமைதியாக  சில நிமிஷங்களாவது உட்கார்ந்து விட்டு வாருங்கள்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;