
விவேக சூடாமணி 11-15- நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்
चित्तस्य शुद्धये कर्म न तु वस्तूपलब्धये।वस्तुसिद्धिर्विचारेण न किंचित्कर्मकोटिभिः॥ 11 ॥
cittasya śuddhaye karma na tu vastūpalabdhaye | vastusiddhirvicāreṇa na kiṃcitkarmakoṭibhiḥ || 11 ||
சித்தஸ்ய ஶுத்³த⁴யே கர்ம ந து வஸ்தூபலப்³த⁴யே । வஸ்துஸித்³தி⁴ர்விசாரேண ந கிஞ்சித்கர்மகோடிபி:⁴ ॥ 11॥
தன்னலமின்றி செய்யும் செயல் பலன் எதிர் நோக்காமல் செய்யும் கர்மம் சித்த சுத்தி தரும். ஆனால் ஜீவன் முக்தனாக வேண்டும் என்றால் த்யானம், நித்யாநித்ய ஞானம், மாயப் பிரபஞ்சம் வசம் அகப்படாமல் ஒதுங்கும் பழக்கம் வரவேண்டுமே.நாம் ஜீவன் முக்தனாக முயற்சிக்க வேண்டாம் சார். கொஞ்சம் கொஞ்சமாக பலன் எதிர்நோக்காது பிறர்க்கு உதவுவோம். படிப்படியாகத்தானே முன்னேறவேண்டும். இருக்கவே இருக்கிறது இன்னும் எத்தனை பிறவி.!!
12. सम्यग्विचारतः सिद्धा रज्जुतत्त्वावधारणा । भ्रान्तोदितमहासर्पभयदुःखविनाशिनी ॥ 12 ॥
samyagvicārataḥ siddhā rajjutattvāvadhāraṇā | bhrāntoditamahāsarpabhayaduḥkhavināśinī || 12 ||
ஸம்யக்³விசாரத: ஸித்³தா⁴ ரஜ்ஜுதத்த்வாவதா⁴ரணா । ப்⁴ராந்தோதி³தமஹாஸர்பப⁴யது:³க²விநாஶிநீ ॥ 12॥
புலியைக் காட்டிலும் கிலி தான் மனிதனை கொன்றுவிடும். இந்த உடலின் மேல் அளவற்ற பற்று கொண்டவர்கள் நாம். இந்த உலகத்தில் நாம் மட்டுமே சகல சௌகர்யங்களோடு சுகமாக வெகுகாலம் அழிவின்றி வாழவேண்டும் என்ற ஆசை தாம் நம்மை வாட்டுகிறது. பயத்தில் ‘ஐயோ பாம்பு என்று ஐந்தடி உயரம் குதித் பிறகு தானே தெரிந்தது யாரோ கட்சிக்காரன் கட்டிய தோரண பிளாஸ்டிக் தான் பளபள வென மின்னிய அந்த பாம்பு என்று! உடலைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வளவு பற்று. இதே பற்று ஆத்மாவின் மேல் அல்லவோ இருக்கவேண்டும். அதற்கு தான் ஆத்ம விசாரம், த்யானம் அவசியம். அது ஞானம் எது உண்மை எது மாயை எது என்று நன்றாக சொல்லிக்கொடுக்கும். பழகிக் கொள்ள வேண்டாமா?
13. अर्थस्य निश्चयो दृष्टो विचारेण हितोक्तितः । न स्नानेन न दानेन प्राणायमशतेन वा ॥ 13 ॥
arthasya niścayo dṛṣṭo vicāreṇa hitoktitaḥ | na snānena na dānena prāṇāyamaśatena vā || 13 ||
அர்த²ஸ்ய நிஶ்சயோ த்³ரு’ஷ்டோ விசாரேண ஹிதோக்தித: । ந ஸ்நாநேந ந தா³நேந ப்ராணாயாமஶதேந வா ॥ 13॥
ஆன்மாவைப் புரிந்துகொள்ள, மூன்று வேளை குளித்தாலோ, ஏழைகளுக்கு கொஞ்சூண்டு தானமோ, விடாமல் மணி பார்த்துக்கொண்டு மூக்கைப் பிடித்துக்கொண்டு காயத்ரி ஜபமோ போதாது. அதை ஞானிகளின் வழிகாட்டல், உபதேசம், சுயசிந்தனை, மனம் குவிந்த த்யானம், ஆத்ம விசாரம் மூலம் தான் பெற முடியும். எளிமை தனிமை இதற்கு அவசியம் தேவை.
14. अधिकारिणमाशास्तेफलसिद्धिर्विशेषतः । उपाया देशकालाद्याः सन्त्यस्मिन्सहकारिणः ॥ १४॥
adhikāriṇamāśāstē phalasiddhirviśēṣataḥ । upāyā dēśakālādyāḥ santyasminsahakāriṇaḥ ॥ 14॥
அதிகாரிண மாஸாஸ்தே பலசித்திர் விசேஷசதா . உபாயா தேசகாலாத்யா ஸந்த்யாஸ்மின் ஸஹகாரிணா.
ஆத்ம விசாரத்தில் வெற்றி பெற சாதகனின் ஈடுபாடு, திட சித்தம், ஒன்றே முக்கியமானது. அது தான் வெற்றி தரும். உட்கார்ந்து ஜெபிக்கும் இடமோ, ஜெபிக்கும் நேரமோ, மற்ற விஷயங்களோ அவன் வெற்றிக்கு உதவும் என்பதைத் தவிர அது அதி முக்கியமானதல்ல. ரெண்டாம் பக்ஷம் தான்.
15. सन्त्यस्यां अतो विचारः कर्तव्यो जिज्ञासोरात्मवस्तुनः ॥ समासाद्य दयासिन्धुंगुरुं ब्रह्मविदुत्तमम् ॥ १५॥
samāsādya atho vichaara : karthavyo jignaaso raathma vasthuna ; samasaadhya dayāsindhuṃ guruṃ brahmaviduttamam ॥ 15॥
சந்த்யஸ்யாம் அதோ விசார: கர்த்தவ்யோ ஜிக்னாஸோ ஆத்ம வஸ்துன: ஸமாசாத்ய தயாசிந்து குரும் ப்ரம்மவித்துத்தமம்
ஆத்ம விசாரம் பண்ணுகிறேன் என்று எதெதையோ நினைத்துக்கொண்டு கண் மூடிக்கொண்டு இருப்பதில் பயனில்லை. மூளையை கசக்கிக்கொண்டு வேறெதிலும் மனம் ஓடாமல் அதை நிறுத்தி உள்நோக்கி செலுத்தி ஆதி காரணம் எது என்று தேடுவது அதற்கு நல்ல குருநாதன் ஒருவன் கிடைக்க வேண்டும். அவர் மூலம் பிரம்மத்தை அறியலாம். ஆத்மநாதன் கருணாசாகரன். நிச்சயம் தயை புரிவான்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




Every day I read the messages you send. They are so precious and inspire me. I thank you for the same. 🙏🙏🙏💐🙏🙏🙏