
மறந்து விட்டாயா? ஏன் லேட்?
நாராயணா, உன்னைத் தவிர எந்த தெய்வம் கையில் சக்ரம் வைத்துக்கொண்டிருக்கிறது?. ஹுஹும். நீ ஒருவனே சுதர்சன தாரி. ஒருவேளை, யாரோ வேறு ஒருவர் சக்கரம் வைத்துக்கொண்டு பெரிய கருடன் மீது சௌகரியமாக பறப்பவர் எங்காவது இருந்து விட்டாரென்றால்? அப்போது இந்த பிரம்மாஸ்திரம் அவசியமாகிறது.
அப்படிப்பட்டவர் நந்தகோபன் யசோதை தம்பதியின் செல்ல மகனா? கிருஷ்ணா? நீதானே அதுவும்?
”ஆம், நான் தான் அது என்று நீ ஒருவன் மட்டுமே பதில் சொல்லமுடியும். கிருஷ்ணா, நீயே அந்த ”உலகெலாமுணர்ந்து ஓதுதற்கரியவர், நிலஉலாவிய நீர் மலி மேனியர், அலகிலா விளையாட்டுடையார், எமது ஈடற்ற தலைவர்” . என் மனக்கலத்தை நீக்கி, சிந்தை தெளியவைத்து, ஆனந்தனுபவம் பெற வைப்பவர் அந்த கிருஷ்ணன் ஒருவனே.
கிருஷ்ணா எத்தனை பேர் துன்பம், துயரம், கஷ்டம் எல்லாம் இதுவரை தீர்த்திருக்கிறாய்? கணக்கிலடங்காதே!
உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நந்தகோபன் அரண்மனை தோட்டத்தில் …..யம்லாக், அர்ஜுன் என்ற இருமரங்கள்…… மரங்களா அவை? பல யுகங்கள் சாபம் அடைந்து காத்திருந்து, உன்னால் சாப விமோசன விடுதலை பெற்று விண்ணுலகம் திரும்பக் காத்திருந்த குபேரனின் புதல்வர்கள் . அதற்காக தானே நீ நாடகமாடினவன்? வெண்ணை திருடி அகப்பட்டு, , உரலில் உன்னை கட்ட வைத்துக் கொண்டு, அந்த உரலாலேயே குபேரன் புதல்வர்களுக்கு விடுதலை அளித்தாய். கபட நாடக சூத்ரதாரி….
இது மட்டுமா..இன்னும் நீ செய்ததெல்லாம் நான் அறிவேன். எனக்கு நினைவிருக்கிறது சொல்கிறேன் கேள். கஜேந்திரன் நீர் அருந்தி தாமரை பறித்து உனக்கு சாற்றுவதற்கு நீரில் இறங்கப்போய் அவன் உயிரே போகும் நிலை….கஜேந்திரன் நீர் குடிக்கும் முன்பு அவன் அவனது உயிரைக் குடிக்கக் காத்திருந்த பெரிய முதலை ஒன்று….எவ்வளவோ போராடி தோற்று, முடியாமல், தான் முடியு முன்பு, உன்னை ஆதிமூலமே என்று கதறி அந்த யானை கண்ணீர் மல்க அழைக்க அந்த குரலுக் காகவே காத்திருந்தவன் போல் நீ உடனே உன் கருடன் மீதேறி உன் சுதர்சன சக்கரத்தால் முதலையை முடித்து கஜேந்திரனை காப்பாற்றினாயே..
இன்னொன்றும் கூட சொல்ல ட்டுமா?. யமுனை நதி அழகாக ஓடுகிறது.. அதன் நீர் அனைவரையும் ”வா வந்து குளி , எனது குளிர்ந்த நீரில் விளையாடு” என்று அழைத்தும் நெருங்க முடியாமல் ஒரு கொடிய ராக்ஷஸன் காளீயன் கடும் விஷத் தோடு யமுனையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போது ஆயர்பாடி சிறுவர்களுக்கு யமுனையில் மூழ்கி ஆட கொள்ளை ஆசை. ஆனால் முடியவில்லையே. சிறுவனாக இருந்தும் கிருஷ்ணா, அப்போது உன்னால் எப்படியப்பா யமுனையில் பாய்ந்து குதித்து காளீயன் சிரத்திலேறி, நர்த்தனமாடி யே அவனை அடி பணியச் செய்து உயிர்ப் பிச்சை அளித்து அங்கிருந்து அகற்ற முடிந்தது? என்ன கருணை உனக்கு? கொல்ல முடிந்த போதும் , கொல்லாமல் உயிர்ப்பிிச்சை அளிப்பதில் வல்லவன் நீ ஒருவனே! உன்னை இகழ்வார்க்கும் அருள்பவன்.
‘அடாடா, அந்த வானவர் தலைவன் இந்திரன் இருக்கிறானே, ஒரு சமயம் அவன் உன் மீதும், உன் மக்கள் பிருந்தாவன வாசிகள் மீதும் கோபம் கொண்டு வருணனை அனுப்பி ஒரு சுனாமி காட்சி நடத்ததே, அப்போது நீ என்ன செய்தாய்? உனக்கு ஞாபகம் இல்லை யென் றால் நான் சொல்கிறேன் கேள்.
இந்திரனின் சீற்றம், வருணனின் விடாத ஆக்கிரமிப்பு… கோப கோபியர்கள் கலங்கி உன்னிடம் ஓடிவந்து தங்களது கஷ்டத்தை சொல்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் பிரிந்தாவனமே யமுனைக்குள்ளே போய்விடும் போல் இருக்கிறது. காப்பிட்டு காப்பாற்று என்று எல்லோரும் பயந்து வேண்டுகிறார்கள்.
” ஓஹோ, அப்படியா சேதி, இதோ பார் என்று எந்த விதமான பரபரப்பும் இன்றி இடது சுண்டுவிரலால் உங்கள் ஊர் கோவர்தன மலையை தூக்கி குடையாக பிடித்து , ஓர் நிமிஷமா, மணியா, ஒரு நாளா, அப்பப்பா, ஏழு நாட்கள் தாங்கி, மக்கள்,மாக்கள், பசு, கன்றுகள் அனைத்துமே இந்திரனின் சீற்றத்திலிருந்து காத்து அவனை அடிபணிய செய்தவனாயி
ற்றே…
அடடா, இதைச் சொல்ல மறந்துவிட்டேன் பார். ஹஸ்தினாபுரத்தில், அனைவரும் இருந்த சபையில், அபலை திரௌபதியை மான பங்கப்படுத்த துரியோதனன் ஆணையிட, கர்ணன் மற்றோர் அதை ஆதரிக்க, பீஷ்மர் முதலானோர் எவ்வளவு கெஞ்சியும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க, துச்சாதனன் துகிலுரிய அந்த நேரத்தில், அல்ல, தக்க , சரியான நேரத்தில் அவள் மானம் காத்தது யார்?, முடிவில்லாத, நீளளளளள…. .. ‘ஸாரி SARI ‘ புடவை, வஸ்திரம், எங்கிருந்து அவளது உடலைச் சுற்றி வந்துகொண்டே இருந்தது. இடுப்பிலிருந்து புடவையை உருவிக் கொண்டிருந்த துச்சாதனன் கை வலிக்க, துவண்டு விழுந்தானே தவிர திரௌபதி வஸ்திரத்தோடு தானே நின்றாள்… ”ஹரே கிருஷ்ணா, ஆபத்பாந்தவா” என்ற ஒரே குரல் போதுமே உனக்கு…யாருக்கு வேண்டுமானாலும் அபயமளிக்க .
உண்மையிலேயே நீ ஒருவன் தான் காக்கும் கடவுள். கிருஷ்ணா. எல்லோருக்கும் ஓடி ஓடி வந்து கருணை காட்டும் நீ, நாளெல்லாம் உன்னையே பாடி நினைத்து வாடிக் கொண்டிருக்கும் இந்த ஸூர்தாஸ் மேல் மட்டும் இன்னும் கருணை காட்டாதது எதனாலப்பா ? என்ன காரணம் கிருஷ்ணா? சொல் , நானும் உன் பக்தன் தானே. ஏன் லேட்??
चक्र के धरनहार गरुड़ के सवार नंद के कुमार मेरौ संकट निवारौ। यमलार्जुन तारे गज ग्राह ते उबारे नाग के नथनहार मेरे तेरौ ही सहारौ। कर पर गिरि धारौ ब्रज डूबत ते उबारौ इंद्र हू कौ गर्व गार्यौ जल वृष्टि निवारी। द्रुपदसुता की बेर नेंक ना करी अबेर अब कहां अबेर सूर सेवक तिहारौ।।
Chakra ke dharanhaar Garun ke aswaar
nand kumar mero sankat niwaro
Yamlaak arjun taryo gaj ke ubaryo
naag naathanhaar mero to sambharo
girivar kar pe dharyo indra garv daryo
vraj ke rakshanhaar deenan vicharo
drupad suta ki ber nikana ki aber
ab kyun aber sur sevak tiharo
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



