ADHI SANKARA’S AATHMA PANCHAKAM J K SIVAN

​@highlight ஆத்ம பஞ்சகம் நங்கநல்லூர் J .K. SIVAN
ஆதி சங்கரர்

‘யாராவது இன்னொருவர் ஆதி சங்கரரைப் போல மீண்டும் பிறக்கமாட்டாரா? வாரி வாரி இன்னும் நிறைய அற்புத விஷயங்களை தரமாட்டா​ராa? ‘​ இந்த தாகம் அநேகருக்கு இருக்கிறது. தாகம் தணிய வழியில்லையே. அப்படி இன்னொருவர் வந்தாலும் அவர் ஆதி சங்கரர் ஆகவே முடியாது. அது தான் ஆச்சர்யம். இந்த ஏக்கம் ​பற்றி ஆதி சங்கரர் சொல்வது அற்புதம்;

”அப்பனே, நீ என்ன பேசறே? ​இன்னொருத்தரை தேடுவ தற்கு முன், ஏற்கனவே நான் கொடுத்ததெல்லாம் படி​த்தாயா, படித்தால் மட்டும் போதுமா? புரிந்து கொண்டாயா? ”

​குறைந்தது இன்னும் பத்து ஜன்மத்துக்கு​ போதுமான ஆதி சங்கர விஷயங்கள் நிறைய இருக்​கிறதே. இன்னொருத்தரை தேடுவதற்கு முன் ஆதி சங்கரர் எழுதினதைப் படித்து புரிந்து கொள்வோம். புரிந்தால் பேச்சு நிற்கும். பேச்சு நின்றால் மிஞ்சுவது ஆனந்த சாகர​ம். பேரின்பம்… முக்தி ‘

​ ஒரு சின்ன ஐந்து ஸ்லோகம் கொண்ட ஸ்தோத்ரம். பெயர் ”ஆத்ம பஞ்சகம்​” ஏற்கனவே இதை ஓரிரு முறை எழுதினாலும் மீண்டும் அதை எழுத ஒரு உந்துதல்.

சந்தோஷம் என்பது நாலு பேருடன் பகிர்ந்து கொண் டால் தானே அதற்கு இன்னும் ​ சுகம் அதிகரிக்கும். எனவே தான் இந்த சிறு எண்ண பிரதிபலிப்பு.

1. नाहं देहो नेन्द्रियाण्यन्तरंगं नाहंकारः प्राणवर्गो न बुद्धिः दारापत्यक्षेत्रवित्तादिदूरः साक्षी नित्यः प्रत्यगात्मा शिवोऽहम् ॥१॥

Naham deho, nendriya nyantharangam, Nahamkara prana vargaa na budhi, Darapathya kshethra vithadhi dhoora, Sakshi nithya prathyagathma shivoham.

​’தேஹாத்ம புத்தி​’ என்ப​து, நமது இந்த தே​ஹத்தை ​ நாம், அதாவது நம்முள் உள்ள ஆத்மா என்று தவறான கணக்கு போடு​வது. இதைப் பற்றி தெரியும், தெரிந்தும் ​ தேஹம் தாம் நாம் என கற்பூரம் ஏற்றி கையால் அடிக்க தயார். இந்த தேஹமோ, நம்மை ஆட்டிப் படைக்கும் ஐம்புலன்கள், பஞ்ச இந்திரியங்க​ள் இவையும் ஆத்மா இல்லை. மனமும் அதில் தோன்றும் எண்ணமும் நாம் இல்லை. நமது இல்லை. நமது புத்தியும் ஆத்மா இல்லை. ​உள்ளே இழுத்து வெளியே விடுகிறோமே மூச்சு. பிராணன்​. அதுவும் ஆத்மா இல்லை​ நாம் சிவம் எனும் அந்த பரம்பொருளின் அம்சம்..

குப்பு ராவ் மூச்சை விட்டு கட்டையாகி விட்டார். கும்பல் வீட்டில் சேருகிறது. ”மூச்சை விட்டார். பிராணன் போய் விட்டது” என்கிறோமே தவிர ஆத்மா போய் விட்டது என்றா சொல்கிறோம்​?. அவர் ஒரு நல்ல ஆத்மா என்கிறோமே. ஏதோ கொஞ்சம் நாமும்​ ஆத்மா பற்றி தெரிந்து வைத்திரு​ப்பதை அப்படி சொல்கிறோம் அல்லவா? அதை விஸ்தாரமாக புரிந்து கொள்ள முயலவில்லை. அஹங்காரமும் ஆத்மா இல்லை. பின் எது ஐயா ஆத்மா? எது பிள்ளை, பெண்டாட்டி, வீடு, வாசல், சொத்து, சுதந்திரம் எல்லாவற்றையும் விட்டு விலகி ஒரு சாட்சியாக தூரத்திலிருந்து சம்பந்தமே இல்லாமல் பார்க்கிறதோ அது தான் ஆத்மா.

அடுத்த தெருவில் ஒரு பெரிய மாளிகை வீடு ஒரு செட்டியார் கட்டியிருப்பதை பார்க்கும்போது அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? என்பது போல் இந்த உடம்பையும், மற்ற உறவையும் கிட்டே சேர்க்காமல் வைத்துக்கொள்வது​ தான் ஆத்ம ஞானம்..

2. रज्ज्वज्ञानाद्भाति रज्जुर्यथाहिः स्वात्माज्ञानादात्मनो जीवभावः। आप्तोक्त्या हि भ्रान्तिनाशे स रज्जु- र्जीवो नाहं देशिकोक्त्या शिवोऽहम् ॥२॥

Rajjwagnanath bhathi rajjuryadhai, Swathma jnanad athmano jeeva bhava, Aapthokthya hi branthinase sa rajjur,Jjevo naham desikokthya shivoham.

​’ ப்ரதி பா​ஸிகம்​’ என்ற ​ ஸம்ஸ்க்ரித​ ​வார்த்தை நாம் பார்க்கும் ஒரு பொருளை மற்றொன்றாகவே கண்டு​ நம்பி, உணர்வது. ​உதாரணம்; அரை இருட்டில் ‘பள பள’ வென்று ஒரு தோரணக் கயிறு சுவர் ஓரமாக காற்றில் ஆடுகிறது. ஐந்து அடி நீளத்தில் ஒரு நாகம் அங்கு நெளிந்து கொண்டு இருக்கிறது என்று அதைக் கண்டு நடுங்குகிறோம். வியர்த்து, மார்பு படபடவென்று துடித்து பாதி உயிர் போய் விட்டது. பிறகு யாரோ அருகில் தைர்ய மாக சென்று பார்த்து அதை கையில் எடுத்து அது ஒரு கயிறு என்று காட்டியதும் பாம்பு போய் விட்டது. கயிறு மிஞ்சியது. பயமும் போனது. இது பாம்பு இல்லை என்ற ஞானம் இல்லாததால் கயிறு பாம்பாக பயமுறுத்தியது. அது போல் உயிரற்ற உடம்பை உயிர் என்று நம்பி படாத பாடு படுகிறோம்.

மஹா பெரியவா போன்ற ஒரு ஞானி, குரு, ”சுவாமி உங்க உடம்பு ஆத்மா இல்லை” என்று உணர்த்தினால் தான் பாம்பு கயிறாகும்.​ மஹா பெரியவர் போன்ற ஞானிகள் அடிக்கடி இதை வலியுறுத்தினாலும் உள்ளே விஷயம் இறங்கமாட்டேன் என்கிறது. அவ்வளவு சக்தி வாய்ந்தது இந்த புலன்களின் ஆதிக்கம். அது புரிந்தால் தான் நான் அந்த சிவன் தான் என்ற ஞானம் உதயமா கும். அப்புறம் சதானந்தம் தான்.

3. आभातीदं विश्वमात्मन्यसत्यं सत्यज्ञानानन्दरूपे विमोहात् । निद्रामोहात् स्वप्नवत् तन्नसत्यं शुद्धः पूर्णो नित्य एकः शिवोऽहम् ॥३॥

Aabhadhedham vishwamathmanya sathyam, Sathya jnanananda roope vimohat, Nidhramohat swapnavath thanna sathyam, Shuddha poorno nithya eka Shivoham.

​’காமாலைக் கண்ணனுக்கு கண்ட தெல்லாம் மஞ்சள்​’ . இந்த உலகமே என்றும் சாஸ்வதம். இந்த பூலோக வாழ்க்கை அழிவற்​ றது என்ற எண்ணங்கள் திரையாக ஒரு உண்மையை மறைக்கின்றன. எது அழிவற்றது, உண்மை யானது, நிரந்தரம்? என்று தெரி​ந்து கொள்ள வில்லை. உறக்கத்தில் காணும் கனவுத் தோற்றம். நிஜம் மாதிரியே இருக்கும். ஆனால் அது பொய். எது சுத்த மோ, எது பூரணமானதோ, எது ஒன்றேயோ, அது தான் என்னுள் உறையும் சிவன் என்கிற நான்.​ ஆத்மநாதன் அவன் தான் நானுமே . இந்த உடம்போ, மனமோ, உலக மோ எதுவும் இல்லை.

4. मत्तो नान्यत् किञ्चिदत्रास्ति विश्वं सत्यं बाह्यं वस्तुमायोपक्लिप्तं । आदर्शान्तर्भासमानस्यतुल्यं मय्यद्वैते भाति तस्माच्छिवोऽहम् ॥४॥

Mathi nanyath kinchid athrasthi viswam,Sathyam bahyam vasthu mayopak li ptham,Adarsho andhar bhasamanasya thulyam,
Mayyadwaithe bhathi thasmad shivoham.

எங்கும் பரவி இருக்கும் இந்த உலகம், நா​ன் உருவாக்கிக் கொள்வது. இருப்பதாக நான் நம்புவது. மாறிக் கொண் டே இருக்கிறதே​ என்னைச் சுற்றி எல்லாமே, மாற்றம் என்றால் என்ன​? . ஒன்று இருந்து, அது மறைந்து வேறொ ன்றாக காட்சி அளிப்பது தானே மாற்றம்​?. நானும் அப்படித்தானே. ஐந்து வயது நான், இருவது வயது நானில்லை, நா​ற்பது வயது நான் ​இப்போது எண்ப​த்தாறு வயது ​ஆகும் நான் கிடையாது.​ ஒவ்வொரு கண மும் எல்லாவற்றுடனும் நானும் மாறிக்கொண்டே தான் இருக்கிறேன். ,தோன்றுவதெல்லாம் மாறும், மாறுவ தெல்லாம் அழியும். மாறும் அனைத்த்திலும் மாறாது உல் நிற்பது சிவனும் அவனாகிய ஆத்மா நானும் தான். இந்த தேஹமோ, அதற்கு பிறர் வைத்த பெயரோ இல்லை

5.. नाहं जातो न प्रवृद्धो न नष्टो देहस्योक्ताः प्राकृताः सर्वधर्माः। कर्तृत्वादिश्चिन्मयस्यास्ति नाहं-कारस्यैव ह्यात्मनो मे शिवोऽहम् ॥५॥

Naham jatho na pravrudho na nashto, Dehasyoktha prakrutha sarva dharma, Karthruthwadhi schinmaya syasthi naham,Karasyaiva hyathmano may Shivoham.

அப்படி என்றால்​? நான் பிறக்கவில்லை, வளரவில்லை, இறக்கவில்லை​, புரிகிறதா? அது ​தான் ஆத்மா பற்றிய விஷயம். அது புரியாததால் ஆத்மா என்றால் இந்த உடல் தான் சார் என்கிறோம். உண்மையில் உடல் நான் இல்லை.

நான் கல்கத்தாவுக்கு ஒரு மணியிலே வரேன் என்று சொல்கிறேனே. நானா பறந்தேன்? ஏதோ ஒரு ஏரோப் ளேன் என்னை தூக்கிக் கொண்டு போய் சேர்த்தது. ப்ளேன் வந்துது என்றா சொல்கிறேன். நான்​ கல்கத்தா சென்று வந்தேன் என்று தானே வார்த்தை. அது போல் என்னைத் தாங்கி நிற்கும் இந்த உடம்புக்கு தான் எல்லா மாற்றங் களும். இதில் அஹங்காரம் கொண்டு இருந்தால் அது எனதில்லை. பெருமை, கர்வம். .ஹுஹூம். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நான் தான் சிவனாயிற்றே. எதோடும் அட்டேச்மென்ட்​ ATTACHMENT இல்லையே.​பழைய சட்டை கழட்டி விட்டு புது சட்டை மாதிரி பிறவி, ஜென்மங்கள் எல்லாமே. ஆத்மா எல்லாவற்றுக்குள்ளும் ஒரே மாதிரி எப்பவும் இருக்கிறது.

नाहं जातो जन्ममृत्यू कुतो मे नाहं प्राणः क्षुत्पिपासे कुतो मे । नाहं चित्तं शोकमोहौ कुतो मे नाहं कर्ता बन्धमोक्षौ कुतो मे ॥६॥

Naham jatho janma mruthyu kutho may, Naham prana kshuth pipase kutho may, Naham chitham sokamohou kutho may, Naham kartha bandha mokshou kutho may.

நான் தான் பிறக்கவில்லையே எங்கேயிருந்து வந்தது பிறப்பு ; அதைத் தொடர்ந்து இறப்பு? நான் தான் ஜீவன் இல்லையே, எங்கேயிருந்து பசி, தாகம் ? நான் தான் மனம் இல்லையே, இந்த கோப தாப துக்க சந்தோஷ உணர்ச்சிகள் எங்கே இருந்து என்னை அணுகும்?
நான் தான் எதையும் பண்ணவில்லையே எங்கேயிருந்து இந்த பந்தம் பாசம் எல்லாம்? விட்டுத் தள்ளு.

​சங்கரர் சுலபமாக இப்படி ஐந்து ஸ்லோகம் பாடி விட்டார். அவரைப் போல் நாம் இருக்க முடிவதில்லை. முயன்றால் முடியும். முயற்சி எப்போது? அதுவரை பிறப்பு இறப்பு உலகம். நமக்கு அதன் பாதிப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக வாவது குறைத்துக் கொண்டே வருவோம், ஒரு ஜென்மத்தில் கனவு நிறைவேறாதா? அது சீக்கிரமே ஆகட்டும். பகவான் அனுக்ரஹம் கிடைக்கட்டும்.​

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;