
அடையபலம் தந்த அபூர்வர் – நங்கநல்லூர் J K SIVAN
அப்பைய தீக்ஷிதர்
அப்பைய தீக்ஷிதரை இதுவரை அறியாதவர்கள் ஒரு அற்புத மஹானை இதுவரை தெரிந்து கொள்ளவில்லை என்றால் இப்போது தெரிந்து கொள்வதற்காக சொல்கிறேன்.
நமது தொண்டைமண்டலம் தான் துண்டீர மண்டலம். அதில் தான் காஞ்சிபுரம் அடக்கம். அங்கே ஸ்ரீ ஏகாம்ரநாதரும், ஸ்ரீ காமாக்ஷியும் நமக்கு அருள் புரிய கோயில் கொண்டிருக்கிறார்கள். அருகே இன்னொரு ஊர். ஆரணி. பட்டுக்கு பெயர் போனது. அங்கே ஒரு சின்ன கிராமம் தான் அடையபலம். சில பிராமணர்கள் ஆசாரம், அனுஷ்டானம்,அக்னிஹோத்ரம், இஷ்டி, யாகம், அதிதி ஸத்காரம் என்று பல புண்ணிய காரியங்களைச் சிரத்தையுடன் செய்துவருபவர்கள் பல நூறு வருஷங்களுக்கு முன் வாழ்ந்தார்கள். வேத, சாஸ்த்ர, புராண ,ஸமஸ்க்ரித ஞானம் உள்ள பண்டிதர்கள் வித்வான்கள் அவர்களில் உண்டு.
கிட்டத்தட்ட ஐநூறு வருஷங்களுக்கு முன் அப்பைய தீக்ஷிதர் எனும் ஒரு மஹான் அங்கே வாழ்ந்திருந்தார். ( 1520–1593) . அத்வைதி. யாக யஞங்கள் பண்ணுபவர். mini மினி வசிஷ்டர், விஸ்வாமித்ரர் பிருஹஸ்பதி என்றால் அது அடையபலம் அப்பைய தீக்ஷிதர் தான். இயற் பெயர் விநாயக சுப்ரமணியன். அப்பா பெயர் ரங்கராஜாத்வரி .
ராமகவி என்ற குரு அவருக்கு சாஸ்திரங்கள் வேதங்கள் எல்லாம் கற்பித்தார். சிறு வயதிலேயே சகல வித்யைகளும் பாடமாகியது.
அங்கே உள்ள விநாயகர் வக்ஷஸ்தல கணபதியை உபாசிக்கும் பாரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்த ஆச்சார்ய தீக்ஷீதர் என்பவர் விஜயநகர ராஜா கிருஷ்ணதேவராயரின் ஆஸ்தான வித்வான். அவருக்கு எட்டு பிள்ளைகள். மூத்த பையன் ரங்கராஜாத்வரி. ‘அத்வைத வித்யா முகுர விவரணப்ரகாசம்’ தவிர இன்னும் பல கிரந்தங்கள் இயற்றியவர். அம்மா வழி தாத்தா ஸ்ரீ வைகுண்டாசார்யர். அப்போது பிராமணர்களுக்குள் ஸ்மார்த்த-வைஷ்ணவ பேதமில்லை .
தொண்டைநாட்டுக்கு அப்போது ராஜா சின்னவீரப்ப நாயகரின் புத்ரர் சின்னபொம்ம ராஜா. சிற்றரசர்களான ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீவேங்கடகிரி, கார்வேடி முதலிய தேசத்து ராஜாக்கள் வித்வான்களை ஆதரித்து வந்தததால் ரங்க ராஜாத்வரியையும் ஆதரித்தனர். ஸ்ரீரங்கராஜாத்வரிக்கு கல்யாணமாகி குழந்தை இல்லை. விசனத்தோடு தம்பதிகள் தமது குல தெய்வமான விரிஞ்சிபுரம் ஆலயத்தில் ஸ்ரீ மரகதவல்லி ஸமேத ஸ்ரீமார்க்க ஸஹாய சிவ பெருமானை வேண்டிக் கொண் டார்கள்.
”குழந்தாய், சிதம்பரத்தில் உனக்கு அருள்புரிவேன் .நீ அங்கு வா ” என்று மார்க்க ஸஹாயன் அருளியதால் உடனே மனைவியுடன் ஸ்ரீரங்கராஜாத்வரி சிதம்பரம் போகிறார். தினமும் சிவகங்கையில் ஸ்நானம், மூன்று வேளையும் நடராஜ சிவதரிசனம். ஐந்து வருஷம் ஓடியது.“ஹே மஹேஸ்வரா, நடராஜ மஹா ப்ரபோ! எங்களிடம் எப்போது கருணைவைப்பீர்கள்?” தம்பதிகள் மனமுருகி வேண்டினார்கள்.
ஒருநாள் இப்படி வேண்டியபிறகு ஆகாசத்தில் ஒரு அசரீரி பேசியது அவர்களுக்கு மட்டும் கேட்டது.
“ஹே பக்த சிகாமணி, உன் தவத்தை மெச்சினேன். உனக்கு ரெண்டு பிள்ளைகள், ஒரு பெண் பிறப்பார்கள்” நடராஜ பெருமான் அருளிய சில நிமிஷங்களில் சிதம்பரம் ஸ்ரீநடராஜரின் அர்ச்சகர் உருவில், நடராஜரின் அபிஷேக தீர்த்தம், பழரசம் பெற்று நடராஜப்பிரசாதம் உண்கிறார்கள்.
பிரமாதீச வருஷத்தில், (கி.பி 1554) புரட்டாசி மாதம், சோமவாரம், கிருஷ்ணபக்ஷம் பிரதமை உத்திரட்டாதி நக்ஷ்த்
ரத்தில் ஸாத்விக வேளையில் கன்யா லக்னத்தில் அப்பைய தீக்ஷிதரின் அவதாரம் இப்படி நிகழ்ந்தது. அற்புதமான
ஜாதகம். கன்யா லக்னத்தில், சூரியனும்-புதனும் இருக்க, மகரத்தில் மாந்தியும், மீனத்தில் சந்திரனும், விருஷபத்தில் சனியும்-ராஹுவும், தனுஸில் குருவும், மிதுனத்தில் செவ்வாயும், துலாவில், சுக்கிரனும், விருச்சிகத்தில் கேதுவும் கூடிய ஜாதகம். நடராஜ பிரசாதமாக இப்படி புத்ர ஜனனத்தை கொண்டாட ஸ்ரீரங்கராஜாத்வரி கோதானம், பூதானம் செய்து, ஜாதகர்மா வைதிக முறையில் பண்ணி, பதினொன்றாம் நாளில் ‘விநாயக சுப்ரமணியன்’ என்று நாமகரணம் செய்தாலும் அம்மையப்பன் அருளால் பிறந்தால் ‘ அப்பையன் ‘ என்று அழைத்தார்கள். ரெண்டு வருஷம் கழித்து ஆச்சார்ய தீக்ஷிதர் என்ற ரெண்டாவது குழந்தை பிறந்தது. அப்புறம் இரண்டு வருடங்கள் கழித்து நடராஜன் அருளியபடி ஒரு பெண் குழந்தை. ஞானாம்பிகை.
ஸ்ரீரங்கராஜாத்வரி தானே அப்பைய தீக்ஷிதருக்கு அக்ஷராப்யாஸம் செய்து, காவ்யம்-நாடகம்-அலங்காரம்-ஸாஹித்யம் எல்லாம் கற்க குரு ராமகவி என்ற கவிச்ரேஷ்டரை நியமித்தார். ஐந்து வயதிலேயே அப்பையர் ஸகல எழுத்து பாஷா ஞானமும், ஸாஹித்யம் செய்யும் திறமையும் பெற்றார். ஏழாவது வயதில் உபநயனம், வேதாத்தியயனம்.
ரங்கராஜாத்வரி அடையபலம் கிராமத்தில் சோம இத்யாதி யாகங்களைச் செய்து ஒரு நாள் தனது ரெண்டு புத்ரர்களையும் அழைத்து, ‘குழந்தைகளே! நீங்கள் வித்யா சம்பத்துடன் அஹங்காரமற்றவர்களாய் என்றும் சந்திரசேகரக் கடவுளைப் பூஜித்து வாருங்கள். அனவரதமும் நீங்கள் விபூதி ருத்ராக்ஷ தாரணம் செய்தும், விபூதி ருத்ராக்ஷதாரணம் செய்பவர்களை சிவபிரானாகவே எண்ணி அவர்களை வணங்குங்கள். யக்ஞபதியான பரமேச்வரனை யாகங்களால் ஆராதியுங்கள்” என்று உபதேசம் செய்து சிவசாயுஜ்யம் அடைந்தார். அப்போது அப்பையதீக்ஷிதருக்கு பதினாறு வயது. தந்தையாரின் கட்டளைப் படி நடந்து கொண்டு அடைய பலத்தில் வசித்து வந்தார்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



