
சிவவாக்கியர் – நங்கநல்லூர் J K SIVAN
ப்ரம்மம் சிவமே
அவருக்கு ஏன் சிவ வாக்கியர் என்று பெயர்? அவர் மூச்சும் பேச்சும் சிவனைப் பற்றியேவோ, சிவம் எனும் மங்கலத்தைப் பற்றியோ, ஆத்மா எனும் ப்ரம்மத்தைப் பற்றியோ, சதா இருந்ததால் என சமாதானம் கொள்ளலாம். ”அரியதோர் நம சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறு தேவர் அன்றுரைத்த மந்திரம்
கரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவ வாக்கியம்
தோஷ தோஷ பாவ மாயை தூர தூர ஓடவே.
நமசிவாய எனும் பஞ்சாக்ஷரம், என்ற அஞ்செழுத்தே ஆதியும் அந்தமும் ஆகும். பிறவிகளியிலே உயர்ந்த மனிதப் பிறவி பெற்ற எண் சான் தேகமுடைய நாமும், விண்ணிலுள்ள முப்பத்து முக்கோடி தேவர்களும் என்றுமே ஓதி வரும் மந்திரம் ‘ஓம் நமசிவாய’ அதுதான். ஓம் எனும் பிரணவ மந்த்ரமும் ஆகும். ஒவ்வொரு ஜீவனிலும் ஆத்மாவாக, உயிராக விளங்குவது. ஆகவே தான் அதற்கு அத்தனை உயரிய மதிப்பு. ஒவ்வொ ருவரும் நம் முள்ளே உறைந்துள்ள ஆத்மா எனும் சிவனை அறிந்து கொள்ள தான் இந்த முனிவர், சிவ வாக்கியம் நமக்கு அளித்திருக்கிறார். ஈசனை தியானித்து தானே இந்த சிவ வாக்கியம் என்ற மந்திரத்தை சொல்கிறேன் என்கிறார். ஓம் நமசிவாய என்று தினமும் உச்சரிப்பவர்களுக்கு ஒரு தோஷ மும் பாபமும் மாயையின் துன்பமும் நெருங்கவே நெருங்காது என்கிறார்.
கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.
“கரியதோர் முகத்தையுற்ற கற்பகம்” அற்புதமான வாக்கியம் இது. ஏதோ ஒரு கருப்பாக உள்ள முகம் என்று அர்த்தம் கொண்டால் நாம் தேற மாட்டோம். கரி என்றால் யானை. யானை முகம். இந்த ஒரு பொருளை உலகோர் உணர்வதற்கே இந்த சிவவாக்கியம் முழுவதும் சொல்லி இருக்கின்றார் சிவவாக்கியர். கரிமுகன் விநாயகன் நாம் கேட்ட வரங்கள் யாவையும் கற்பக விருக்ஷம் போல் வாரி வழங்கும் கருணை உடையவன். கணபதியை கைகள் தொழுது வேண்டுகின்றேன். ஆய கலைகள் அறுபத்தி நான்கும், வேத ஆகம புராண சாஸ்திர நூல்களில் உள்ள உண்மைகளும், முக்கண் ஞான அறிவும் என் கருத்தில் தோன்றி இந்நூலில் உதிக்க வேண்டும். அறிஞர் பெருமக்களும், வயதில் சிறியவராயினும் ஞானம் பெற்றவர்களும், யோக ஞானம் அனைத்தையும் கற்று உணர்ந்தவர்களும் மற்றும் யாவரும் பேயனாகிய நான் சொல்லுகின்ற இந்த சிவ வாக்கியத்தில் உள்ள தவறுகளை பொறுத்து அருள வேண்டும் என்கிறார் சிவ வாக்கியர்.எவ்வளவு அடக்கம்!!
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அநாதி முன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்கு மாற தெங்கனே
நான் தியானத்திலிருக்கும்போது நினைக்கும் ஒரே மெய்ப் பொருள் நீயே தான். வேறு ஒன்றையும் நான் கண்டது இல்லை. நான் தியானத்தில் அமர்ந்து என் நினைவை புருவ மத்தியில் நிறுத்தி பார்க்கும்போது அங்கு உன் நினைவைத் தவிர வேறு ஒரு நினைவும் இல்லை. நான் நினைப்பதாகவும், மறப்பதாகவும், என் மனம் காணும் மாயையோ, எதுவோ, இவ்வுலகில் உள்ள அனைத்தும் நீயே. சகலமும் அடங்கும் ஆகாயமும் நீ தான்.. ஆரம்பமே அறியமுடியாத அனாதி நீ தான். எனக்குள் நீ இருப்பதுவும் உனக்குள் நான் இருந்ததையும் உணர்ந்த பிறகு எல்லாம் உன்செயல் என்று அறிந்த பிறகு உன்னை எப்படி நினைப்பேன் என் ஈசனே, உன்னை மறந்தால் தானே நினைக்க முடியும். உன்னை எப்படி எப்போது மறக்கமுடியும் ஈஸ்வரா?
மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் “.
சர்வேஸ்வரா, நீ தான் பூமி, ஆகாயம், ஏழு கடல்கள் , காற்று, நெருப்பு என பஞ்ச பூதங்களாக இருப்பவன். எட்டிரண்டு என்ற எண்ணாகவும், அகார உகார எழுத்தாகவும் ஆகி இசையுடன் கூடிய தேவாரப் பண்ணாகவும், ஏழு ஸ்வரங்களான சரிகமபதநி என்ற ராக எழுத்தாகவும் உள்ளவன் நீயே. கண்ணாகவும், கண்மணி யாகவும், கண்ணுள் ஆடும் பாப்பாவாகவும் ஆனவனும் நீயே. . இப்படி அனைத்துமாய் உள்ள உண்மையான பிரம்ம ஞானத்தை எனக்கு வழங்கி என்னுள் நீராகி நின்ற நினது திருவடி பாதத்தை என்றும் என் தியானத்தில் வைக்க அருள்செய் ஈசா!
அரியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்து நின்ற தூர தூர தூரமே
சத்யம் ப்ரம்மம் எனும் மெய்ப் பொருள் விஷ்ணுவுமல்ல, பிரம்மாவும் அல்ல. விஷ்ணுவாலும், பிரம்மாவாலும்
அடி முடி காண முடியாமல் அப்பாலுக்கப்பாலாய் நின்றவன் ஈசன். அவன் அதுவாகி அப்புறத்தில் அப்புறமாய் கருமை செம்மை வெண்மை நிறங்களைக் கடந்து நின்ற சோதியாகி காரணப் பொருளாய் நமக்குள்ளேயே இருக்கிறான். அச் சிவனே சீவனாக கருமையிலும் சிகப்பு வெள்ளை அணுக்களிலும் கலந்து நின்று உயிரும் உடலும் இயங்க காரணமாக இருக்கின்றான். அவனுடைய திருவடி நமக்குள் இருப்பதை எல்லோரும் உணருங்கள். . அது பெரியதும் இல்லை,சிறியதும் இல்லை, யாவிலும் நடுவாய் இருப்பது. அப்பாதத்தையே பற்றி நின்று தியானியுங்கள். அது துரியமாகிய ஆஞ்ஞா கமலத்தில் ஆகாயத் தத்துவத்தையும் கடந்து நிற்பதால் வெகு தூரத்தில் எங்கோ இருப்பதாக தோன்றுகின்றது.ஆனால் நமக்குள்ளேயே இருக்கிறது. இந்த உண்மையை உணர்ந்து தியானியுங்கள் என்கிறார் சிவ வாக்கியர்..
சிவவாக்கியர் – நங்கநல்லூர் J K SIVAN
ஆறிரண்டு நூறு தேவர் அன்றுரைத்த மந்திரம்
கரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவ வாக்கியம்
தோஷ தோஷ பாவ மாயை தூர தூர ஓடவே.நமசிவாய எனும் பஞ்சாக்ஷரம், என்ற அஞ்செழுத்தே ஆதியும் அந்தமும் ஆகும். பிறவிகளியிலே உயர்ந்த மனிதப் பிறவி பெற்ற எண் சான் தேகமுடைய நாமும், விண்ணிலுள்ள முப்பத்து முக்கோடி தேவர்களும் என்றுமே ஓதி வரும் மந்திரம் ‘ஓம் நமசிவாய’ அதுதான். ஓம் எனும் பிரணவ மந்த்ரமும் ஆகும். ஒவ்வொரு ஜீவனிலும் ஆத்மாவாக, உயிராக விளங்குவது. ஆகவே தான் அதற்கு அத்தனை உயரிய மதிப்பு. ஒவ்வொ ருவரும் நம் முள்ளே உறைந்துள்ள ஆத்மா எனும் சிவனை அறிந்து கொள்ள தான் இந்த முனிவர், சிவ வாக்கியம் நமக்கு அளித்திருக்கிறார். ஈசனை தியானித்து தானே இந்த சிவ வாக்கியம் என்ற மந்திரத்தை சொல்கிறேன் என்கிறார். ஓம் நமசிவாய என்று தினமும் உச்சரிப்பவர்களுக்கு
ஒரு தோஷ
கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அநாதி முன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்கு மாற தெங்கனேநான் தியானத்திலிருக்கும்போது நினைக்கும் ஒரே மெய்ப் பொருள் நீயே தான். வேறு ஒன்றையும் நான் கண்டது இல்லை. நான் தியானத்தில் அமர்ந்து என் நினைவை புருவ மத்தியில் நிறுத்தி பார்க்கும்போது அங்கு உன் நினைவைத் தவிர வேறு ஒரு நினைவும் இல்லை. நான் நினைப்பதாகவும், மறப்பதாகவும், என் மனம் காணும் மாயையோ, எதுவோ, இவ்வுலகில் உள்ள அனைத்தும் நீயே. சகலமும் அடங்கும் ஆகாயமும் நீ தான்.. ஆரம்பமே அறியமுடியாத அனாதி நீ தான். எனக்குள் நீ இருப்பதுவும் உனக்குள் நான் இருந்ததையும் உணர்ந்த பிறகு எல்லாம் உன்செயல் என்று அறிந்த பிறகு உன்னை எப்படி நினைப்பேன் என் ஈசனே, உன்னை மறந்தால் தானே நினைக்க முடியும். உன்னை எப்படி எப்போது மறக்கமுடியும் ஈஸ்வரா?
மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் “.
சர்வேஸ்வரா, நீ தான் பூமி, ஆகாயம், ஏழு கடல்கள் , காற்று, நெருப்பு என பஞ்ச பூதங்களாக இருப்பவன். எட்டிரண்டு என்ற எண்ணாகவும், அகார உகார எழுத்தாகவும் ஆகி இசையுடன் கூடிய தேவாரப் பண்ணாகவும், ஏழு ஸ்வரங்களான சரிகமபதநி என்ற ராக எழுத்தாகவும் உள்ளவன் நீயே. கண்ணாகவும், கண்மணி யாகவும், கண்ணுள் ஆடும் பாப்பாவாகவும் ஆனவனும் நீயே. . இப்படி அனைத்துமாய் உள்ள உண்மையான பிரம்ம ஞானத்தை எனக்கு வழங்கி என்னுள் நீராகி நின்ற நினது திருவடி பாதத்தை என்றும் என் தியானத்தில் வைக்க அருள்செய் ஈசா!
அரியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்து நின்ற தூர தூர தூரமே
அடி முடி காண முடியாமல் அப்பாலுக்கப்பாலாய் நின்றவன் ஈசன். அவன் அதுவாகி அப்புறத்தில் அப்புறமாய் கருமை செம்மை வெண்மை நிறங்களைக் கடந்து நின்ற சோதியாகி காரணப் பொருளாய் நமக்குள்ளேயே இருக்கிறான். அச் சிவனே சீவனாக கருமையிலும் சிகப்பு வெள்ளை அணுக்களிலும் கலந்து நின்று உயிரும் உடலும் இயங்க காரணமாக இருக்கின்றான். அவனுடைய திருவடி நமக்குள் இருப்பதை எல்லோரும் உணருங்கள். . அது பெரியதும் இல்லை,சிறியதும் இல்லை, யாவிலும் நடுவாய் இருப்பது. அப்பாதத்தையே பற்றி நின்று தியானியுங்கள். அது துரியமாகிய ஆஞ்ஞா கமலத்தில் ஆகாயத் தத்துவத்தையும் கடந்து நிற்பதால் வெகு தூரத்தில் எங்கோ இருப்பதாக தோன்றுகின்றது.ஆனால் நமக்குள்ளேயே இருக்கிறது. இந்த உண்மையை உணர்ந்து தியானியுங்கள் என்கிறார் சிவ வாக்கியர்..
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



