GIRRANI J K SIVAN

”கிர்ர்ர்ரனி” – நங்கநல்லூர் J K SIVAN
உ.வே. சாமிநாதய்யர் . தமிழ் தாத்தா .

ஒரு பழைய சங்கீத ஆனந்த அனுபவம்.

இது பூரா பூரா நான் எழுதவில்லை. மஹா மஹோபாத்யாய தக்ஷிணாத்ய கலாநிதி தமிழ் தாத்தா உ.வே சா.வின் பழைய நினைவு. அவர் என் உறவினர் என்ற பெருமை எனக்குண்டு. நான் சொல்லப்போவது நூறு இருநூறு வருஷங்களுக்கு முன்பு உண்மையில் நடந்தவை. அப்போது நம் முன்னோர் எப்படி வாழ்ந்தார்கள் என்பது சுவாரஸ்யமான விஷயம். உவேசா கொஞ்சம் ஆங்காங்கே தொட்டு தடவி சுருக்கி சொல்கிறேன். .

வெள்ளைக்காரன் நாட்டை ஆண்டான். ஆங்காங்கே அவன் கட்டுப்பாட்டில் குறுநில மன்னர்கள். தஞ்சாவூரில் மராத்திய ராஜாக்கள் வம்சம் ஆண்டுவந்தது. ரொம்ப பக்திமான்கள். கலா ரசிகர்கள். தாராள மனத்தினர் என்பதால் அநேக வித்வான்கள், பண்டிதர்கள், சங்கீத வித்துவான்கள் தஞ்சை ஸமஸ்தானத்தின் ஆதரவு பெற்று வாழ்ந்து வந்தனர். அவர்களுள் திருவையாறு துரைசாமி ஐயர் ஒருவர். பிரபல சங்கீத வித்துவான்கள் வாழ்ந்த ஊர். சங்கீத த்ரிமூர்த்திகளில் நாதபிரம்மம் தியாகராஜ ஸ்வாமிகள் வாழ்ந்த ஊர் திருவையாறு.

திருவையாறில் பதினைந்து மண்டபத் தெரு என்று ஒரு தெரு. துரைசாமி ஐயர் அங்கே வசித்ததால் பதினைந்து மண்டபம் துரைசாமி ஐயர் என்ற பெயர் அவருக்கு. ஐயர் சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவர். பலிஷ்டர். பயில்வான் போல் இருப்பார். நல்ல சரீரமும் சாரீரமும் கொண்டவர். பிடில் வாத்தியத்திலும் வித்வான். துரைசாமி ஐயரின் சிஷ்யர்கள் அநேகர். ஒரே தேசமாக இருந்ததால் எல்லோருக்குமே தமிழ், தெலுங்கு தெரிந்தது.சிறந்த சாஹித்ய கர்த்தா. இன்றும் அவர் இயற்றிய சில கீர்த்தனைகளை கச்சேரிகளில் பாடுகிறார்கள். இவர் திறமையறிந்து தஞ்சாவூர் ஸமஸ்தான வித்துவான். நல்ல பெருமை. அவருக்கு.
தஞ்சாவூரைப் போலவே தெற்கே வடக்கே எல்லாம் நமது தேசத்தில்பல சமஸ்தானங்கள் இருந்தன. அதிலும் வித்வான்கள்
இருந்தனர். எல்லா வித்வங்களையும் வங்களையும்தஞ்சாவூர் அரண்மனையில் பார்க்கலாம். அந்த ஸமஸ்தானம்
கலைப்பொக்கிஷம். சங்கீத வித்துவான்களைப் போஷித்து வளர்க்கும் தாயகமாக தஞ்சாவூர் சமஸ்தானம் இருந்தது. அடிக்கடி எல்லா சமஸ்தான வித்வான்களும் தஞ்சாவூருக்கு வந்து சன்மானம் பெற்றுச் செல்வார்கள். மற்ற வித்வான் களோடு கலந்து தத்தம் வித்தைகளை அரசவையில் பரிமாறிக்கொள்வார்கள். தஞ்சாவூர் விதவான்களும் அதனால் அடிக்கடி திருவனந்தபுரம், மைசூர் போன்ற மற்ற சமஸ்தானங்களுக்கு சென்று பரிசுகள் பெற்று திரும்பு வார்கள். அவர்களில் ஒருவர் துரைசாமி ஐயர்.

ஒரு சமயம் ஆந்திர தேச ஸமஸ்தானம் ஒன்றிலிருந்து ஒரு வித்வான் தஞ்சை வந்தார். அவர் துரைசாமி ஐயரைப் போலவே வாய்ப் பாட்டிலும், பிடில் வாத்தியத்திலும் அவரும் சிறந்தவர்.

தஞ்சாவூர் ராஜா முன்னிலையில் ஒரு கச்சேரி நடந்தது. ஆந்திர வித்வான் றது. தம்முடைய சிறந்த ஆற்றலை அவர் காட்டினார். யாவரும் அவருடைய சங்கீதத்தைக் கேட்டு இன்புற்று கரகோஷம் செய்தவர்கள். ஆஹா ஓஹோ ஊஹூ என்று ரசித்தனர். ராஜாவும் தலையாட்டி மகிழ்ந்தார். ஆந்திர வித்வானுக்கு இதனால் கர்வம் வந்துவிட்டது.
”ராஜா, உங்க சமஸ்தானத்தில் நம்மைப்போலப் பாடுபவர் யாரும் இல்லையெனத் தோன்றுகிறது. இங்கே உள்ள வித்வான்களில் யாரேனும் என்னோடு போட்டி போட்டால் என்னுடைய திறமை இன்னும் நன்றாக வெளியாகும்” என்கிறார்.
ராஜாவும் சிரித்துக்கொண்டே “அதற்கென்ன ஆக்ஷேபம்?அப்படியே செய்ய லாம். நாளைத்தினம் நம்முடைய வித்வான்களில் ஒருவர் உங்களோடு பாடுவார்”என்று அறிவித்து விட்டார். ஆந்திரதேச‌ வித்வானுக்கு உச்சி குளிர்ந்து விட்டது.
உள்ளூர் வித்வான்கள் கூடிப் பேசினார்கள். ஆந்திர விதவானின் அகம்பாவத்தை ஒடுக்க வேண்டும். சோழ நாட்டு சங்கீதம் அவர் பாட்டுக்கு இம்மியளவும் குறைந்ததில்லை
”என்று நிரூபிக்கவேண்டும். யார் நாளைக்கு ஆந்திர வித்வானோடு போட்டிபோட சரியான வித்துவான் என்று கூடிப் பேசி எந்த வகையிலும் சிறந்த போட்டியாளராக திருவையாறு பதினைந்து மண்டபம் துரைசாமி ஐயர் தான் தகுந்த வித்துவான் என்று முடிவாயிற்று.
மறுநாள். ராஜா முன்னிலையில் பெரிய மகாசபை கூடியது. அநேக வித்வான்களும், ரஸிகர்களும் குழுமி யிருந்தனர். பில் பதினைந்து மண்டபம் துரைசாமி ஐயர் எல்லா வித்வான் களுடைய ஆசீர்வாதத்தையும் பெற்று உட்கார்ந்தார். எதிரே ஆந்திர வித்வான். அனுவமிக்க வித்துவான்கள் சிலர் இந்த போட்டிக்கு நீதிபதியாக, விதாய கர்த்தாக்களாக நியமிக்கப் பெற்று ராஜாவுக்கு அருகிலே உட்கார்ந்திருந்தனர். பிடில், வாய்ப்பாட்டு இரண்டிலும் வாதம் நடைபெறும் என ஏற்பாடு. ஒருவர் பாடுவதை மற்றவர் பிடிலில் வாசிக்கவேண்டும். முதலில் இருவரும் வாய்ப்பாட்டைப் பாடுவதென்றும், அப்பால் பிடிலில் வாசிப்ப தென்றும், பிறகு ஒருவர் பாடுவதை மற்றவர் பிடி லில் வாசிப்ப தென்றும் வரையறை செய்து கொண்டார்கள்.

முதலில் ஆந்திர வித்துவான் ஜோராக பாடினார். துரைசாமி ஐயரிடம் பொறாமை கொண்டிருந்த சில இளைஞர், ” சரி சரி; நமது ஸமஸ்தானத்தின் கௌரவம் இன்றோடு போய்விடும்” என்று எண்ணினார்கள். ஆனால் அப்படி ஒன்றும் நேரவில்லை. ஆந்திரர் பாடியவற்றை யெல்லாம் துரைசாமி ஐயர் அப்படியே பாடிக் காட்டினார். பிறகு துரைசாமி ஐயர் பாடியவற்றை வந்த வித்துவான் பாடிக் காட்டினார். இவ்வாறு அந்தச் சங்கீத வாதத்தின் ஒரு பகுதி ஒருவருக்கும் வெற்றியோ தோல்வியோ இன்றி முடிந்தது. அப்பால் வாத்திய வாதம் தொடங்கியது. ஆந்திர சமஸ்தானத்து வித்துவான் பிடில் வாத்தியத்தலே சிறந்தவர். அவருடைய வாசிப்புக்கு முன் மற்ற சமஸ்தானங்களில் உள்ளோர் யாவரும் தலைவணங்கும் நிலையினரே யாவர். அப்புறம் பிடில் வாத்ய வாசிப்பு. துரைசாமி அய்யர் வாசித்தார். அப்புறம் தெலுங்கு வித்துவான் வாசித்ததை துரைசாமி ஐயர் அற்புதமாக சுலபமாக வாசித்துக் காட்டினார். தெலுங்கு காரர் ஆச்சர்யம் அடைந்தார். ரியமடைந்தார். ரெண்டு போட்டிகள் முடிந்தது. அடுத்த மூன்றாம் போட்டியில் ஒருவர் வாசிப்பதை இன்னொருவர் பாடிக்காட்ட வேண்டும். ஆந்திர வித்வான் பாடினார்; துரைசாமி ஐயர் அப்படியே அதை பிடிலில் வாசித்தார். அந்தப் போட்டியில் சபையிலுள்ள அத்தனை பேரும் ஒன்றியிருந்தனர். பொழுது போவதே தெரியவில்லை. அரசரும் தம்மை மறந்து அதில் ஈடுபட்டனர். தாம் நெடுநாளாக அப்பியாசம் செய்து கைவரப்பெற்ற அரிய வித்தியா சாமர்த்தியதையெல்லாம் தெலுங்கு தேச வித்வான் எடுத்துக் காட்டினார். அவருடைய குரல் போனவழியே துரைசாமி ஐயருடைய கை சென்றது. அந்த வித்வானது சாரீர வீணையில் உண்டாகிய சங்கீதத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் துரைசாமி ஐயர் தம்முடைய பிடில் தந்தியிலே எழுப்பிக் காட்டினார். தஞ்சாவூர் வித்வான்களுக்கே அவருடைய வாசிப்பு அளவற்ற ஆச்சரியத்தை உண்டாக்கியது. நீதிபதிகள் துரைசாமி அய்யரின் சாதுரியத்தை பாராட்டினார்கள். ! ஆந்திரதேச வித்வானுடைய மனத்திலோ வர வர உத்ஸாகம் குன்றியது. ‘இனிமேல் இந்த ஸமஸ்தானத்தில் நம் ஜபம் பலியாது’ என்றே அவர் உறுதி செய்து கொண்டார்; ஆனாலும் அவருடைய மானம் இறுதி வரையில் போராட வேண்டுமென்று அவரை ஊக்கியது. அவர் பாடிக்கொண்டே வந்தார். அடுத்தது துரைசாமி ஐயர் பாட, ஆந்திர வித்வான் பிடில் வாசிக்க வேண்டியது ஒன்றுதான் பாக்கி. ஆந்திரர் முகம் ஒளியிழப்பதை ராஜா கண்டார். “இதோடு நிறுத்திக் கொள்ளலாமே; உங்களுக்கு மிகுந்த சிரமம். துரைசாமி ஐயர் பாடுவதை நீங்கள் வாசிக்க வேண்டியது இப்பொழுது அவ்வளவு அவசியமாகத் தோன்றவில்லை” என்றார். அவர் அதற்கு இணங்கவில்லை; “இல்லை இல்லை” நாம் செய்து கொண்ட நிபந்தனையிற் பிறழக் கூடாது. அவர் பாடட்டும்; நான் வாசிக்கிறேன். இவ்வளவு அருமையான வித்வானோடு வாசிக்க நான் எவ்வளவு புண்ணிய செய்திருக்க வேண்டும்” என்றார். அவருடைய குரலிலே பழைய மிடுக்கு இல்லை; பணிவின் சாயை புலப்பட்டது.

நிபந்தனையின்படியே துரைசாமி ஐயர் பாட ஆரம்பித்தார். அவருக்கு ஒவ்வொரு விநாடியும் உத்ஸாகம் ஏறிக்கொண்டே வந்தது. ஆந்திர வித்வான் துரைசாமி ஐயருடைய வாய்ப்பாட்டைப் பிடிலில் வாசித்துக் கொண்டு வந்தார். ஒரு கீர்த்தனம் முடிந்தது. “இன்னும் ஒரு கீர்த்தனம் ஆகட்டுமே” என்றார் ஆந்திரா. துரைசாமி ஐயர் ஒரு சிறு கனைப்புக் கனைத்துக் கொண்டார். சிம்ம கர்ஜனை மாதிரி துரைசாமி ஐயர் தொடர்ந்தார். தன்னுடைய சாஹித்ய திறமையைக் காட்ட நல்ல சந்தர்ப்பம் என்ற சந்தோஷம். ஆந்திராகாரருக்கு தெலுங்கிலேயே ஒரு புது கீர்த்தனம் பாடிக் காட்ட யோசித்தார். பிடிலில் அதை வாசிக்க தெலுங்கர் தடுமாற,கலங்க வைக்க முடிவெடுத்தார். யோசித்த பாட்டை ஆரம்பித்தார்.
ஆடினம்ம ஹருடு த்ருகுடுத தையனி” அற்புதமாக பல்லவி எடுப்பு. கணீரென்று ஆரம்பித்தார். சிவபெருமானது திருநடனத்தை வர்ணிக்கும் அர்த்தம் கொண்ட கீர்த்தனம். சிவபெருமான் ஹரன் த்ரு குடுத தை யென்று ஆடினார் ‘ என்பது அதன்பொருள். அனு பல்லவி அந்தப் பொருளைச் சிறப்பித்து நின்றது. ‘அவனுடைய நடனத்தைக் கண்ட கிரிகன்யையாகிய உமாதேவி சபாஷென்று சொல்ல, அதனைக் கேட்டுக் கொண்டும் அப்பிராட்டியைப் பார்த்துக் கொண்டும் வர வர வேகமாக நடனமாடினான்’ என்பது அதன் கருத்து.
சரணம் பாடினார்.
‘சிவபெருமான் திருச்செவியில் குழையும் தோடும் ஆடின; கங்கையணிந்த திருமுடி குலுங்கியது; சடை விரிந்தாடியது; சிறு நகை முத்துப்போலத் தோன்றியது; திரிபுரஹரனாகிய சிவபெருமான் கிர்ர்ர்ரென்று சுழன்று ஆடினான்’ என்பது சரணப் பொருள். ‘சுழன்று நடன மாடினான்’ என்னும் கருத்துள்ள “கிர்ர்ர்ரனி திருகி யாடினம்மா” என்ற பகுதியைத் துரைசாமி ஐயர் பாடினபோது ஆந்திர வித்துவானது கை தளர்ந்து விட்டது. அதுகாறும் துரைசாமி ஐயருடைய உத்ஸாகமும் அவருடைய சாஹித்தியமும் அந்தச் சாஹித்தியப் பொருளும் ஆந்திர வித்துவானது கருத்தும் கையும் ஒன்றி யாவரையும் பிரமிக்க வைத்தன. ‘கிர்ர்ர்ரனி’ என்ற சப்தம் உண்டானவுடன் அதைப் பிடிலில் பிடிக்க மார்க்கமில்லாமல் ஆந்திர வித்வான் தவித்தார். உயிருள்ள சாரீர வீணையோடு உயிரற்ற நரம்பு போராட முடியுமா?

சந்தோஷ ஆரவாரம் ஒன்று அப்பொழுது சபையில் எழும்பியது. ‘கிர்ர்ர்ரனி’ என்ற சாஹித்தியத்தைத் தொடர்ந்து எழுந்த அந்த ஆரவாரம் பரமேசுவரனது பரமானந்த தாண்டவத்தில் திசை முழுதும் எழுந்த முழக்கத்தையொத்தது.

ஆந்திர வித்வான் வாத்தியத்தைக் கீழே வைத்தார்; துரைசாமி ஐயருக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்; “நான் தோற்றேன்; என் கர்வம் ஒழிந்தது” என்று தழுதழுத்த குரலில் கண்ணீர் துளிக்க அவர் கூறினார்.

அரசர் புன்னகை பூத்து அவரை இருக்கச் செய்து, “நீங்கள் மகாவித்வான். பல இடங்களுக்குச் செல்லுபவர்கள். இந்தப் பால்ய வித்வான் உங்கள் வாழ்த்தைப் பெறவேண்டியவர். உங்கள் காதிலே படும்படி இவருடைய சங்கீதம் உபயோகமானது இவருடைய பாக்கியம். உங்களுடைய வித்தையைப் பூர்ணமாக அனுபவிக்கும்படியான சந்தர்ப்பம் இன்று நேர்ந்தது நமக்கு மிகவும் சந்தோஷம்” என்று சமாதான வார்த்தைகள் கூறிப் பலவகையான சம்மானங்களைச் செய்தார்.

துரைசாமி ஐயருக்கு அன்று உண்டான கீர்த்தியும், அவர் அன்று இயற்றிய சுவை மிக்க அக் கீர்த்தன மும் சங்கீத உலகத்தில் இன்றும் நிலவி வருகின்றன.

[துரைசாமி ஐயருடைய பேரர் சாம்பசிவையரென்பவர் ஸ்ரீ மகா வைத்தியநாதையருடன் இருந்து பிடில் வாசித்துக் கொண்டு வந்தார். இந்த வரலாற்றை உ.வே சா.வுக்கு கூறியவர்கள் அவரும் லால்குடியிலிருந்த பிடில் ராஜூவையருமாவர்.)
—

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;