SOOR SAGARAM – J K SIVAN

ஸூர் ஸாகரம்  –   நங்கநல்லூர்  J K   SIVAN
விடை பெறுகிறேன்…
வாசலில் ஒரே கூட்டம். பிருந்தாவனம் அதை ஒட்டிய  பல  ஊர்களிலிருந்து எல்லோருமே  இங்கே வந்து கூடி இருக்கிறார்கள். எல்லோருடைய கண்களிலும் யமுனா ப்ரவாஹம். அவ்வளவு பேர்  இருந்தும்  மயான அமைதி.  ஒருவராலும் பேசமுடியவில்லை, துக்கம் தொண்டையை அடைத்துவிட்டது.  எல்லோரும்  ஆயிரம்  மைல்  ஓடியது போல், பல நாட்கள் அன்ன ஆகாரம் இல்லாதவர்கள் போல்  வாடி  வதங்கி நிற்கிறார்கள். பசுக்கள் கன்றுகளோடு அம்மா என்று ஈனஸ்வரத்தில்  முனகுகிறது. பறவைகள்  சோக கீதங்கள் மட்டுமே  பாடுகின்றன. மரங்களும் செடிகளும் இருக்கும் பூவெல்லாம் தரையில் உதிர்த்து விட்டன. எங்களுக்கு இனி பூவே  வேண்டாம். யாருக்கு இனிமேல் கொடுக்க போகிறோம்? என்ற விரக்தி.
அக்ரூரர்  ஏற்கனவே  தேரில் ஏறி உட்கார்ந்து விட்டார்.  தேர்ப்பாகன் குதிரைகளை  ஓட  தயார் பண்ணி விட்டான்.  சூரியன் இந்த சோகத்தை பார்க்க முடியாமல் மேகங்களுக்குள் மறைந்து கொண்டான்.
பலராமன் மூட்டை முடிச்சுகளோடு, தேரில்  ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.  அவனுக்கு மதுரா  போக  சந்தோஷம். அதுவும் கிருஷ்ணனோடு.  கிருஷ்ணன் எல்லோரையும்  பார்க்கிறான்.  வீட்டில் இருந்து மெதுவாக  நகர்கிறான். வாசலில் அம்மா யசோதை கண்ணீரும் கம்பலையுமாக, அப்பா நந்தகோபன் ஊமையாக   கீழே விழாமல் இருக்க தூணைப்  பிடித்துக் கொண்டு நிற்கிறார். கண்கள் வெறுமையை காட்டுகிறது.
அம்மா  நீ உன்னை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்.  நானும்  அண்ணா  பலராமனும் ரொம்ப சீக்கிரம் திரும்பி வந்துடுவோம்.இன்னும்  கொஞ்ச நாள்  தான்.  நாங்க  இல்லையே என்று  துக்கம் வேண்டாம்.  அப்பா ஏன்  இப்படி  விட்டேத்தியாக  சோகமாக  இருக்கார்?. ஒண்ணுமே  பேசவில்லையே.  நாங்க  இருந்தா என்ன போனா என்ன என்ற  பற்றத்த  நிலைக்கு இப்பவே  போய்ட்டாரா?  இனிமே  ஆசையா  கண்ணையா  என்று கூப்பிட யார்  இருக்கா எனக்கு சொல்லு?இன்னிக்கு  காலையிலிருந்தே  இன்னும் உன் கையால சாப்பிடலே . பசுக்களிடமிருந்து நேரடியாக  பால் குடிக்கவில்லை.
அட  இதை பார்த்தியா, மறந்தே போய்ட்டேன்.  இந்தா  என்னுடைய  புல்லாங்குழல், ஜாக்கிரதை ஜாக்கிரதை,ஜாக்கிரதை. அந்த ராதை வருவா, என் பொம்மைகள், விளையாட்டு பொருள்கள் எல்லாம் எங்கிருக்கு என்று தேடுவாள். கண்லே  காட்டாதே இந்த புல்லாங்குழலையும் மறைத்து வை. அப்பாவை  அடிக்கடி சேதி அனுப்ப சொல்லு. நான் இப்போ இங்கிருந்து மதுராவுக்கு போன உடனே என்னையும் மறந்துட போறார். ஞாபகப்படுத்து…  நான்  வரேன்…இல்லே  மதுரா போறேன்…..  கண்ணன்  வரேன்  என்று சொன்னதை போறேன் என்று திருத்திக் கொண்டான். ஆம்  அவன் இனி பிருந்தாவனம் திரும்ப வரப்போவதில்லை.நாம் தான் அடிக்கடி அவன் வாழ்ந்த பிருந்தாவனம் போய்  அவன் வாழ்ந்த விளையாடிய  இடங்கள், குளித்த யமுனை எல்லாவற்றையும் தரிசிக்க வேண்டும்..

Mother Yashoda, look after yourself.
We, both brothers shall return
very soon, in just a few days.
Since the day I left you.
Nobody has called me Kanhaiya,
I haven’t had kalcva in the morning
nor have drunk milk straight from the cow.
Keep a watchful eye on my flute, mother
Don’t let Radhika steal any of my toys.
And tell father Nanda,
Why has he become so indifferent ?
Sur says, having brought Shyam to Mathura,
He sent no message.  

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2567

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;