
சங்கராபரணம் நரசய்யர் – நங்கநல்லூர் J K SIVAN
(உவே.சா. நினைவு கூர்ந்த ஒரு விஷயம்)
தஞ்சாவூரை மராத்தி ராஜாக்கள் ஆண்ட காலம் கலைக் கும் கலைஞர்களுக்கும் பொற்காலம். கலைகளை, கலைஞர்களை சமஸ்தானத்தில் கௌரவித்து ஆதரித்து பரிசுகள், விருதுகள், பட்டங்கள், பொன் பொருள் வழங்கி வாழ வைத்தவர்கள் மராத்திய ராஜாக்கள். அவர்கள் தலைமுறை இப்படி சீரும் சிறப்புமாக தஞ்சாவூரை ஆண்டது.
என் முன்னோர்கள் அப்படி சந்தோஷமாக பரிசு பெற்று வாழ்ந்தவர்கள்.
அதுவும் சங்கீத வித்வான்கள் என்றால் கொள்ளை மகிழ்ச்சி மராத்தி ராஜாக்களுக்கு. அதனால் வித்வான்கள் பெரிதும் ஊக்குவிக்கப்பட்டு சிறந்த வகையில் கலைகளும் சங்கீதமும் வளர்ந்தது. சில உன்னத வித்வான்கள் பெயர்கள் சொல்கிறேன்.
வீணை பெருமாளையர், பல்லவி கோபாலய்யர், ரெட்டைப்பல்லவி சிவ ராமய்யர், தோடி சீதாராமய்யர், (இவர் தான் என் தாய் வழி எள்ளு தாத்தா), கனம் கிருஷ்ணய்யர், பச்சை மிரியன் ஆதிப்பையர்.
இதோ ஒரு வித்வான் வாழ்வில் நடந்த அதிசயம் சொல்கிறேன்;
சரபோஜி மஹாராஜா காலத்தில் நரசய்யர் என்ற வித்வான். சங்கராபரண ராகத்தை மிகவும் விஸ்தா ரமாக மணிக்கணக்காக மனோ தர்ம கற்பனையில் ஸ்வர ராக ஆலாபனை பண்ணி அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியவர். ராஜா சபையோர் அனைவரும் அவர் இசையில் மகுடியில் கட்டுண்ட நாகங்கள்.
‘ஆஹா, இப்படி ஒரு சங்கராபரணம் இதுவரை கேட்டதே யில்லையே ” என்று அனுபவித்தனர். சரபோஜி அவருக்கு நிறைய பரிசுகள் வழங்கி ”சங்கராபரணம் நரசய்யர்” என்ற விருதும் அளித்தார். அதற்கப்பறம் நரசய்யரை சங்கராபரணம் என்றே எல்லோரும் அழைத்து முதலில் சங்கராபரணம் பாட வைத்தார்கள்.
ஒரு சமயம் நரசய்யருக்கு பணமுடை ஏற்பட்டு எவரிடமும் கடன் கேட்க வெட்கப்பட்டு, கபிஸ்தலம் ராமபத்ர மூப்பனாரிடம் சென்று தனது கஷ்டத்தை சொல்லி ”கடனாக” பணம் கேட்டார்
”உமக்கு எவ்வளவு பணம் வேண்டும்?”
”எண்பது பொன்”
”கடன் கேட்கிறீர்களே எதையாவது அடகு வைப்பீர்களா?”
”ஒரு ஆபரணத்தை அடகு வைக்கிறேன்”
”என்ன ஆபரணம், எங்கே எடுங்கள், காட்டுங்கள் பார்ப்போம் ?”
”அதைக் கண்ணால் பார்க்க முடியாது, காதால் கேட்கலாம். எவராலும் திருடமுடியாதது, அழியா தது.அதன் பெயர் சங்கராபரணம். அதை உங்களிடம் அடகு வைக்கிறேன். கடன் திருப்பித் தந்து அதை மீட்கிற வரை அதை எங்கும் எப்போதும் பாடமாட்டேன்” என்கிறார் நரசய்யர்.
மூப்பனார் அவரிடம் ஒரு கடன் பத்ரம் எழுதி வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தார். காலம் ஓடியது. கும்ப கோணத்தில் அப்புராய ரென்ற ஒரு தனவந்தர் வீட்டில் கல்யாணம். வெள்ளைக்கார கலெக்டர் வாலீஸ் துரை யோடு நட்பு. அதனால் எல்லோரும் அவரை வாலீஸ் அப்புராயர் என்பார்கள். ராயருக்கு கும்பகோணம் ரெட்டிராயர் அக்கிரகாரத்தில் குளத்தின் வடகரையில் பல வீடுகள்.
கல்யாணத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக சங்கீத விழா ஒன்றை நடத்த எண்ணி அக்கால சிறந்த வித்வான் களை அழைத்தார். அதில் சங்கராபரணம் நரசையரும் ஒருவர். கலெக்டர் வாலீஸ் முன்பு அற்புதமாக நீங்கள் சங்கராபரணம் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண் டார் ராயர்.
”மன்னிக்க வேண்டும். சங்கராபரணம் இப்போது பாடமுடியாத நிலையில் இருக்கிறேன்’
. ஏன் ?
”அதை ஒருவரிடம் அடகுவைத்து நான் கடன் வாங்கியிருக்கிறேன். கடனைத் திருப் பிக்கொடுத்த பிறகுதான் அதைப் பாடவேண்டும்.”
”ஆச்சரியமாக இருக்கிறதே ? ராகத்தை அடகுவைத்த தாக எங்கும் கேட்டதில்லை. யாரிடம் எவ்வளவு கடன் வாங்கினீர்கள்? சொன்னால் நாம் உடனே அதனைத் தீர்த்துவிடுவோம்.
நரசய்யர் மூப்பனாரிடம் பெற்ற கடன் பற்றி சொன் னார். ராயர் உடனே எண்பது பொன்னையும் அதற்கு ரிய வட்டியையும் ஒருவர் மூலம் அனுப்பி மூப்பனாரி டம் செலுத்தி விட்டு கடன் பத்திரத்தைச் செல்லெழுதி வாங்கி வர அனுப்பினார்.
ராமபத்திர மூப்பனாரிடம் ராயரின் ஆள் பணத்தைக் கொடுத்துச் செய்தியைக் கூறியபோது மூப்பனார் மிக மகிழ்ந்து அதைப் பெற மறுத்து, அந்தத் தொகையோடு பின்னும் சில அதிகமான தொகையை எடுத்துக் கொண்டு தானே கும்பகோணம் வந்து அப்பு ராயரை யும் நரசையரையும் கண்டார்.
அப்புராயர், ‘மூப்பனாரே பணம் வந்து சேர்ந்ததா? விடுதலை பத்ரம் கொண்டுவந்திருக்கிறீர்களா ”என்று கேட்டார்.
”ராயர்வாள், இந்த சங்கீத சிகாமணியாகிய நரசையர் என்னிடம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கேட்டுப் பெறும் உரிமையுடையவர். இப்படிப்பட்ட மகான்க ளுக்கு உதவாமல் என்னிடம் செல்வம் இருந்து என்ன பிரயோஜனம்? நரசய்யர் என்னிடம் பணம் வேண்டு மென் றால் உடனே கொடுத்திருப்பேன். ‘கடனாக” கொடுங்கள் என்று கேட்டது எனக்குள் சிறிது வருத்தத் தை உண்டாக்கியது. விளையாட்டாக ” என்ன அடகு வைப்பீர்கள்?” என்று கேட்டேன். அவர் சங்கரா பரணத் தை அடகுவைத்தார். நான் இதை மறந்தே போய் விட்டேன். அன்று முதல் இன்றுவரை அதை அவர் எங்கும் பாடவில்லை என்று கேட்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருடைய நாணயம், உயர்ந்த குணமும் உண்மையும் பிரமிக்க வைத்தது. தொகை எனக்குரி யதன்று. அவர்களுக்கே உரியது. தாங்களே அவர்களி டம் கொடுத்து விடுங்கள்.
”இதோ நான் கொண்டு வந்த பண மூட்டை இவ்வளவு நாள் அவருடைய அருமையான தெய்வீக சங்கரா பரணத் தை நான் சிறை செய்ததற்கு அபராதமாக அவர் ஏற்க வேண்டுகிறேன்”
இதோ விடுதலை ஓலையும் தந்து விட்டேன்.
மறுநாள் அப்புராயர் வீட்டு கலியாணப் பந்தலில் நரசைய ருடைய சங்கராபரணம் அமுத தாரையைப் போல, மணிக்கணக்காக பொழிந்தது. அதெல்லாம் நாம் இப்போது கேட்க விஞ்ஞான வளர்ச்சி இல்லாது போய் விட்டது.
இன்னொரு முக்கிய விஷயம்.
இதே மாதிரி சம்பவம் என் எள்ளு தாத்தா தோடி சீதாராமய்யர் வாழ்விலும் நடந்து அவர் உடையார் பாளையம் ரங்க பூபதி ஜமீன்தாரிடம் வாங்கிய வராக கடனை தஞ்சாவூர் ராஜா மீட்டுக் கொடுத்து தோடியை மீண்டும் அவர் பாடிய சம்பவம் முன்பே எழுதி இருக்கிறேன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



