sri lakshminarasimha karavalambam j k sivan

நரசிம்ம தரிசனம் — நங்கநல்லூர் J K SIVAN
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம கராவலம்பம்
ஸ்ரீசைலம் ஒரு பெரிய காடாக இருந்த காலம்.அதில் ஹடகேஸவனம் என்று ஒரு பகுதி, ஒருவரும் புக முடியாத அடர்ந்த காட்டுப்பகுதி. அங்கு ஒருநாள் அதிகாலையில் காசியில் ஆதி சங்கரர் ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டி ருந் தார். சிஷ்யர்கள் சற்று தூரத்தில் கண் பார்வையில் இருந்தார்கள்.
அப்போது சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே அவரை நோக்கி ஒரு காபாலிகன் வந்தான். போதையில் மயங்கிய சிவந்த கண்கள், கூரான சூலம், இடையில் வாள், மண்டையோட்டு மாலைகள். உடலெல்லாம் பிணத்தை எரித்த சாம்பல் பூசியவாறு ஜடாமுடியோடு சங்கரர் எதிரே வந்தான். அவனுக்கு பரம சந்தோஷம். ஒரு துறவியை பைரவருக்கு நரபலி இன்று கொடுக்க சங்கரர் கிடைத்துவிட்டார் என்று மகிழ்ச்சி. சங்கரரை வணங்கினான்.
எதிரே வந்து நின்றவனை சாந்தமாக நோக்கிய ஆதி சங்கரர்
”என்ன வேண்டும் உனக்கு?” என கேட்டார்.
”பைரவர் உபாசகன் நான். பைரவ பூஜைக்கு உங்கள் உதவி கேட்க வந்தேன்.”
”ஆஹா, பைரவ பூஜை நன்றாக நடக்கட்டும். நான் என்ன உதவி செய்யவேண்டும்?”
” ஒரு துறவியின் தலையை காணிக்கையாக சண்டி தேவிக்கு அர்பணிக்கவேண்டும்”
” நான் ஒரு துறவி. என் சிரம் வேண்டுமா ?”
”ஆமாம் நீங்கள் ஒப்புக்கொண்டால் உங்கள் சிரத்தை வெட்டி எடுத்துக் கொண்டு போகிறேன்”
‘எப்போது வேண்டும்?”
”நாளை விடி காலையில்..
”சரி, ஒரு விஷயம். என் சிஷ்யர்கள் யாரும் இல்லாத சமயம் பார்த்து நீ வா. அவர்கள் இருந்தால் உன்னைத் தடுப்பார்கள்”
ஆதி சங்கரருக்கு ரொம்ப சந்தோஷம். ‘ஆஹா, என் சிரத்தை பைரவனுக்கும் சண்டிக்கும் அர்ப்பணிக்க நான் பாக்கியசாலி’
சிவனுக்கு கபாலி என்று தானே பெயர். மைலாப்பூர் என்றாலே கபாலீஸ்வரர் தான் நினைவுக்கு வருகிறார்.
மறுநாள் அதிகாலையிலேயே காபாலிகன் வந்து விட்டான். அருகே ஒரு குகையில் சங்கரர் முன்னேற் பாட்டின் படி காபலிகனுக்காக காத்திருந்து சிவ தியானத்தில் இருந்தார். உருவிய வாளோடு காபாலிகன் அவரை நெருங்கினான்.
எங்கோ கங்கைக்கரையில் சற்று தூரத்தில் ஜபம் பண்ணிக்கொண்டிருந்த பத்மபாதருக்கு திடீரென்று உடல் நடுங்கியது. அவர் எப்போதும் உபாசிக்கும் நரசிம்மம் அவரை ஆட்கொண்டது போல் தோன்றியது. என்னவோ போல் ஆகி விட்டது அவருக்கு. உடலில் ஒரு குலுக்கல், படபப்பு, கண்களில் ஜ்வாலை, நறநறவென்று பல்லைக்கடித்தார். உடல் உஷ்ணமானது. அளவற்ற அடக்கமுடியாத கோப, உக்ரத்தோடு நரசிம்மனாகவே மாறிவிட்டார் பத்மபாதர். குரலில் சிம்மம் கர்ஜிக்க, தாவித் தாவி ஓடி குகையின் பக்கம் வந்தவர் உள்ளே பாய்ந்தார். அந்த நேரத்தில் கொடிய காபாலிகன் கையில் வாளை உயர்த்தி ஆதி சங்கரரின் தலையை வெட்டப்போகும் நேரம். அவன் சௌகர்யமாக வெட்டுவ தற்காக தனது தலையைச் சாய்த்து வாகாக காட்டிக் கொண்டிருந்தார் சங்கரர்.
சிம்ம பலத்தோடு, ஆக்ரோஷமாக கர்ஜனை செவிடுபட தாவிய நரசிம்மர் காபாலிகனை கூறிய நகங்களால் கிழித்து வீசி எறிந்தார். கடித்து துண்டாக்கினார். அவன் உடம்பை கூறிய நகங்களால் நாராக்கினார்.
காபாலிகன் ”ஹா ” என்று கத்தியவாறு உயிரிழந் தான். அந்த குகையில் மீண்டும் இரணியனை நரசிம்மன் வதம் செய்த காட்சி அரங்கேறியது. re play. வினாடி நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது.
சங்கரர் சிம்ம கர்ஜனையும் காபாலிகன் அலறலையும் ஒரே சமயத்தில் கேட்டு தியானம் கலைந்தார். எதிரே பத்மபாதரை நரசிம்மராக கண்டார். பத்ம பாதர் உடலெல்லாம் காபாலிகன் ரத்தம். பல கோடி சூரியனா க அவர் முகம் திகழ்ந்தது. நடந்ததை புரிந்துகொண்டு நரசிம்ம த்யானம் செய்தார். பத்ம பாதர் வெகுநாளாக வேண்டிய நரசிம்ம தரிசனம் தக்க நேரத்தில் அன்று சித்தி ஆயிற்று. அந்த நேரத்தில் ஆதி சங்கரர் நரசிம்மனை துதித்து இயற்றிய ஸ்தோத்ரம் தான் லக்ஷ்மி நரசிம்ம கராவலம்பம். இதோ ஆரம்பிக்கிறேன்.
लक्ष्मीनृसिंह करावलम्बम् – Lakshmi Nrisimha Karavalambam:
1.श्रीमत्पयोनिधिनिकेतन चक्रपाणे भोगीन्द्रभोगमणिरञ्जितपुण्यमूर्ते । योगीश शाश्वत शरण्य भवाब्धिपोत लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥१॥
Shriimat-Payo-Nidhi-Niketana Cakra-Paane Bhogiindra-Bhoga-Manni-Ran.jita-Punnya-Muurte | Yogiisha Shaashvata Sharannya Bhava-Abdhi-Pota Lakssmii-Nrsimha Mama Dehi Kara-Avalambam |
ஆஹா அழகும் புனிதமும் சேர்ந்த பாற்கடலில் கையில் சுதர்சன சக்ரமேந்தி, ஆதிசேஷனின் சிரத்திலிருந்து மாணிக்கம் ஒளிவீச, அதன் ஒளியில் ப்ரகாசத்தோடு பள்ளிகொண்ட ரங்கநாதா, யோக அதிபதியே , கடலில் தத்தளிக்கும் உயிர்களுக்கு காத்தருளும் கப்பல் போன்று , ஸம்ஸார சாகரத்தை கடக்க உதவு லக்ஷ்மி சமேத நரசிம்மா, என்னை உன் தெய்வீக கரங்களால் பாதுகாத்துஅருள்வாய்.
कमलामलकान्तिकान्त । लक्ष्मीलसत्कुचसरोरुहराजहंस लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥२॥
Brahmendra-Rudra-Marud-Arka-Kiriitta-Kotti Sangghattttita-Angghri-Kamala-Amala-Kaanti-Kaanta | Lakssmii-Lasat-Kuca-Saro-Ruha-Raajahamsa Lakssmii-Nrsimha Mama Dehi Kara-Avalambam ||2||
ஹே , பிரம்மா, இந்திரன் சிவன் சூர்யன் போன்ற சகல தேவதைகளும் தமது கிரீடம் உனது பாதத்தில் தொட்டு பணியும் போது அவர்கள் க்ரீடங்களில் உள்ள ஒளிவீசும் நவமணிகளால் உன் பாதம் திவ்ய சௌந்தர்ய ரூபம் பெருகிறதே, ராஜ ஹம்சமே , லக்ஷ்மி சமேத நரசிம்மா, என்னை உன் தெய்வீக கரங்களால் பாதுகாத்துஅருள்வாய்.
3. संसारघोरगहने चरतो मुरारे मारोग्रभीकरमृगप्रवरार्दितस्य । आर्तस्य मत्सरनिदाघनिपीडितस्य लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥३॥
Samsaara-Ghora-Gahane Carato Muraare Maaro[a-U]gra-Bhiikara-Mrga-Pravara-Arditasya | Aartasya Matsara-Nidaagha-Nipiidditasya
Lakssmii-Nrsimha Mama Dehi Kara-Avalambam ||3||
கொடிய அசுரன் முரனை வதம் செய்த முராரி. இருண்ட ஸம்ஸார வனத்தில் திக்கற்று நிற்கிறேன், ஆசை பாசம், போன்ற சிங்கங்கள் என்னை துரத்துகிறதே, போட்டி பொறாமை போன்ற அக்னி என்னை வாட்டி வதைக்கிறதே, ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மா, என்னை உன் தெய்வீக கரங்களால் பாதுகாத்துஅருள்வாய்.
4. संसारकूपमतिघोरमगाधमूलं सम्प्राप्य दुःखशतसर्पसमाकुलस्य । दीनस्य देव कृपणापदमागतस्य लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥४॥
Samsaara-Kuupam-Ati-Ghoram-Agaadha-Muulam Sampraapya Duhkha-Shata-Sarpa-Samaakulasya |
Diinasya Deva Krpanna-[A]apadam-Aagatasya Lakssmii-Nrsimha Mama Dehi Kara-Avalambam ||4||
4. அன்றாட வாழ்க்கை எனும் ஆழமான, ஆபத்தான, கிணற்றின் அடியிலே விழுந்து தவிக்கிறேன். லக்ஷ்மி சமேத நரசிம்மா, என்னை உன் தெய்வீக கரங்களால் பாதுகாத்துஅருள்வாய்.
5. संसारसागरविशालकरालकाल_नक्रग्रहग्रसननिग्रहविग्रहस्य । व्यग्रस्य रागरसनोर्मिनिपीडितस्य लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥५॥
Samsaara-Saagara-Vishaala-Karaala-Kaala_ Nakra-Graha-Grasana-Nigraha-Vigrahasya | Vyagrasya Raaga-Rasano[a-U]rmi-Nipiidditasya
Lakssmii-Nrsimha Mama Dehi Kara-Avalambam ||5||
அன்றாட வாழ்க்கை, எனும் சம்சார சாகரத்தில், ஆழம் காணமுடியாத சமுத்திரத்தில் விழுந்ததோடு இல்லாமல் காலம் எனும் கரிய , பெரிய முதலைகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறேன், உணர்ச்சிகள் எனும் அலைகள் மோதுகிறது. பந்தம் பாசம், நேசம் எனும் பிடிப்புகள் என்னை சுற்றி வளைக்கிறது. இதிலிருந்து மீள, லக்ஷ்மி சமேத நரசிம்மா, என்னை உன் தெய்வீக கரங்களால் பாதுகாத்துஅருள்வாய்.
6. संसारवृक्षमघबीजमनन्तकर्म_शाखाशतं करणपत्रमनङ्गपुष्पम् । आरुह्य दुःखफलितं पततो दयालो लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥६॥
Samsaara-Vrkssam-Agha-Biijam-Ananta-Karma_ Shaakhaa-Shatam Karanna-Patram-Anangga-Pusspam |
Aaruhya Duhkha-Phalitam Patato Dayaalo Lakssmii-Nrsimha Mama Dehi Kara-Avalambam ||6||
6.வாழ்க்கை எனும் விருக்ஷத்தில் உச்சாணிக்கிளையில் இருக்கிறேனே. பாபம் எனும் விதையிலிருந்து வளர்ந்த மரம். அதன் பரந்து விரிந்த கிளைகள் தான் கர்மாக்கள். அந்த விருக்ஷத்தின் எண்ணற்ற இலைகள் தான் மனித தேஹங்களின் அங்கங்கள். கவர்ச்சியான புஷ்பங்கள் தான் அழகு தேவதைகள். பழங்கள் தான் துயரங்களும் துன்பமும். இந்த மரத்திலிருந்து கீழே வேகமாக விழுகி றேன். இதிலிருந்து மீள, லக்ஷ்மி சமேத நரசிம்மா, என்னை உன் தெய்வீக கரங்களால் பாதுகாத்து அருள்வாய்.
7. संसारसर्पघनवक्त्रभयोग्रतीव्र_दंष्ट्राकरालविषदग्धविनष्टमूर्तेः । नागारिवाहन सुधाब्धिनिवास शौरे लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥७॥
Samsaara-Sarpa-Ghana-Vaktra-Bhayo[a-U]gra-Tiivra_Damssttraa-Karaala-Vissa-Dagdha-Vinasstta-Muurteh |
Naagaari-Vaahana Sudhaa-[A]bdhi-Nivaasa Shaure Lakssmii-Nrsimha Mama Dehi Kara-Avalambam ||7||
சம்சாரம் உலக வாழ்க்கை எனும் கொடிய விஷ நாகம் என்னை தீண்ட தனது கோரமான வாயை திறந்து நெருங்கி வருகிறதே, அபாயகரமான அதன் நச்சுப்பை யிலிருந்து என்னுள் நுழைய தயாராக இருக்கும் விஷத்திலிருந்து காப்பாற்ற, சர்ப்பங்களுக்கெல்லாம் ராஜாவான ஆதிசேஷன் மேல் சயனிக்கும் லக்ஷ்மி சமேத நரசிம்மா, என்னை உன் தெய்வீக கரங்களால் பாதுகாத்துஅருள்வாய்.
8. संसारदावदहनातुरभीकरोरु_ज्वालावलीभिरतिदग्धतनूरुहस्य । त्वत्पादपद्मसरसीशरणागतस्य लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥८॥
Samsaara-Daava-Dahana-[A]atura-Bhiikaro-Ru_Jvaalaa-Valiibhir-Ati-Dagdha-Tanuuruhasya |
Tvat-Paada-Padma-Sarasii-Sharannaagatasya Lakssmii-Nrsimha Mama Dehi Kara-Avalambam ||8||
அன்றாட உலக வாழ்வு எனும் தீ ஜ்வாலையிலிருந்து, தீப்புண்ணிலிருந்து, அக்னி நாக்குகளிலிருந்து தப்பிக்க, உன் தண் தாமரைத் திருவடிகளில் அடைக்கலம் புக தவிக்கிறேன். ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மா, என்னை உன் தெய்வீக கரங்களால் பாதுகாத்துஅ ருள்வாய்.
9. संसारजालपतितस्य जगन्निवास सर्वेन्द्रियार्तवडिशार्थझषोपमस्य । प्रोत्खण्डितप्रचुरतालुकमस्तकस्य लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥९॥
Samsaara-Jaala-Patitasya Jagan-Nivaasa Sarve[a-I]ndriya-[A]arta-Vaddisha-[A]artha-Jhasso[a-U]pamasya |
Protkhannddita-Pracura-Taaluka-Mastakasya Lakssmii-Nrsimha Mama Dehi Kara-Avalambam ||9||
தூண்டிலில் இருக்கும் புழுவுக்கு ஆசைப்பட்டு மண்டை, நாக்கு, தொண்டை கிழிபட மாட்டிக்கொண்டு தவிக்கும் மீனைப்போல, உலக மாயைகளில் , ஐம்புலன்களில் வசம் அகப்பட்டு, ஸம்ஸார வலையில் சிக்கி தவிக்கும் என்னை மீட்க ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மா, என்னை உன் தெய்வீக கரங்களால் பாதுகாத்து அருள்வாய்.
10. संसारभीकरकरीन्द्रकराभिघात निष्पिष्टमर्मवपुषः सकलार्तिनाश । प्राणप्रयाणभवभीतिसमाकुलस्य लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥१०॥
Samsaara-Bhiikara-Kariindra-Kara-Abhighaata_Nisspisstta-Marma-Vapussah Sakala-[A]arti-Naasha |
Praanna-Prayaanna-Bhava-Bhiiti-Samaakulasya Lakssmii-Nrsimha Mama Dehi Kara-Avalambam ||10||
மதம் பிடித்த காட்டு யானையின் தும்பிக்கையால் அடிபட்டு அங்கங்கள் நொறுங்கியது போல் பலம் கண்ட கால்களால் மிதித்தது போல் இந்த ஸம்ஸார பந்தத்தில், மரண பயத்தில், வாடுகிறேன். சகல வலிகளையும், துன்பங்களையும் போக்கும் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மா, என்னை உன் தெய்வீக கரங்களால் பாதுகாத்து அருள்வாய்.
11. अन्धस्य मे हृतविवेकमहाधनस्य चोरैः प्रभो बलिभिरिन्द्रियनामधेयैः । मोहान्धकूपकुहरे विनिपातितस्य लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥११॥
Andhasya Me Hrta-Viveka-Mahaa-Dhanasya Coraih Prabho Balibhir-Indriyanaam-Adheyaih |
Moha-Andha-Kuupa-Kuhare Vinipaatitasya Lakssmii-Nrsimha Mama Dehi Kara-Avalambam ||11||
நான் எது நல்லது கேட்டது என பகுத்தறியும் சக்தி இழந்து, புலன்களின் வசம் சிக்கி குருடானேன். என் சிந்திக்கும் சக்தியை புலன்கள் திருடிவிட்டது. புலன்களின் உணர்ச்சி வசம் எனும் பாதாளத்தில் விழுந்து விட்டேன். ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மா, என்னை உன் தெய்வீக கரங்களால் பாதுகாத்து அருள்வாய்.
12. लक्ष्मीपते कमलनाभ सुरेश विष्णो वैकुण्ठ कृष्ण मधुसूदन पुष्कराक्ष । ब्रह्मण्य केशव जनार्दन वासुदेव देवेश देहि कृपणस्य करावलम्बम् ॥१२॥
Lakssmii-Pate Kamala-Naabha Suresha Vissnno Vaikunnttha Krssnna Madhusuudana Pusskara-Akssa |
Brahmannya Keshava Janaardana Vaasudeva Devesha Dehi Krpannasya Kara-Avalambam ||12||
மாயா உலகத்தின் ஈர்ப்புகளுக்கு அடிமையாகி பந்தா பாசத்தில் தடுமாறும் என்னை பத்மநாபா, வாசுதேவ, ஜனார்தனா, கேசவா, கருணாநிதே, ஸ்ரீ லக்ஷ்மிநரசிம் மா, என்னை உன் தெய்வீக கரங்களால் பாதுகாத்து அருள்வாய்.
13. यन्माययोर्जितवपुःप्रचुरप्रवाह_ मग्नार्थमत्र निवहोरुकरावलम्बम् । लक्ष्मीनृसिंहचरणाब्जमधुव्रतेन स्तोत्रं कृतं सुखकरं भुवि शङ्करेण ॥१३॥
Yan-Maayayo[a-U]rjita-Vapuh-Pracura-Pravaaha_Magna-Artham-Atra Nivaho[a-U]ru-Kara-Avalambam |
Lakssmii-Nrsimha-Caranna-Abja-Madhuvratena Stotram Krtam Sukha-Karam Bhuvi Shangkarenna ||13||
மாயை யின் சக்தி யிலிருந்து மீட்டு, உனது தெய்வீக சௌந்தர்ய தாமரைத் திருவடிஎனும் அமிர்தத்தை ருசிக்க,ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மா, என்னை உன் தெய்வீக கரங்களால் பாதுகாத்து அருள்வாய்” என சங்கரர் நரசிம்ம தரிசனம் பெற்று பாடியது இந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;