
தபோவனம் ஞானானந்த கிரி ஸ்வாமிகள் – நங்கநல்லூர் J K SIVAN
பாரத தேசம் அவ்வப் போது நிறைய மகான்களை நமக்கு அளித்துக்கொண்டு வருகிறது. அவர்களில் ஒருவரை ஞாபகப் படுத்தவே இந்த பதிவு.
சென்னையிலிருந்து 200 கி. மீ.தூரத்தில் திருக்கோவலூர் த்ரிவிக்ரம பெருமாள் ஆலயம் தாண்டி ஒரு சிறிய கிராமத்தில் தபோவனம் ஆஸ்ரமம் இருக்கிறது.
நான் தபோவனம் செல்லும்போது திருக்கோயிலூர்-திருவண்ணாமலை பெரிய சாலையில் மனம் பூண்டி என்ற கிராமம் வழியாக போகும்போது ரகோத்தம தீர்த்தர் என்ற மஹான் ஒருவரின் அதிஷ்டானம் ஒன்றை தரிசித்தேன். 500 வருஷத்துக்கு முன்பு வாழ்ந்த ஒரு மஹான். (1548 – 1596) . த்வைத வேதாந்தி, எட்டு வயதில் சன்யாசியானவர். உத்தராதி மட 14வது பீடாதிபதி. அவருடைய பிருந்தாவனம் தான் அது. தக்ஷிண பிநாகினி எனும் தென்பெண்ணை நதிக்கரையில் உள்ளது.
இந்த ரகோத்தம தீர்த்தர் பிரிந்தாவனத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் ஞானானந்த ஸ்வாமிகளின் ஆஸ்ரமம் உள்ளது. தபோவனம் என்று பெயர். ஹிமாசலத்திலிருந்து தெற்கே வந்த யோகி அவர். காலத்தை வென்றவர். 350 வருஷங்கள் வாழ்ந்தவர் என்று சொல்வார்கள். அவரைப் பார்த்தால் சாதாரணமாக ஐம்பது அறுபதுக்குள் தான் மதிப்பிடலாம். மார்புக்கு மேல் காஷாய வேஷ்டி. .சிரித்த உருண்டையான கல்மஷமில்லாத குழந்தை முகம். அவர் தன்னைப் பற்றி யாரிடமும் எதுவும் சொன்னதில்லை என்பதால் அவரைப்பற்றிய விவரங்கள் எல்லாமே ரஹஸ்யமாக இருக்கிறது.
‘உடம்பைப் பற்றி பேசாதே. உள்ளே இருக்கும் ஆத்மாவைப் பற்றி வா பேசலாம்’ என்பார். கடந்த, எதிர் காலங்களை மறந்து நிகழ்காலத்திலேயே வாழ்ந்தவர். கர்நாடகாவில் மங்களூர் பக்கத்தில் எங்கோ பிறந்தவர் என்பார்கள். சிறுவயதில் பண்டரிபுரம் சென்றவர். அங்கே குருவை சந்தித்து அவரோடு காஷ்மீரம் ஸ்ரீநகர், பத்ரிநாத், நேபாளம், பர்மா ஸ்ரீலங்கா என்று பல இடங்களுக்கு 1860ல் சிதம்பரம் வந்தார் என்பார்கள்.
எல்லாம் நடந்தே தான். 20ம் நூற்றாண்டில் சம்பத் கிரி எனும் போளூர் அருகே இருக்கும் குன்றில் இடம் பெயர்ந்தார். புதுச்சேரியில் அரவிந்தரை சந்தித்தார். திருவண்ணாமலையில் ரமணரை விருபாக்ஷ குகையில் சந்தித்தவர். உண்மையான சந்நியாசியாக கடைசிவரை வாழ்ந்தவர். 1969ல் ஏற்காடு மலையில் ஸ்ரீ ஞானந்தா ப்ரணவ நிலையம் ஸ்தாபித்து அங்கே ஆத்மா, ஓம், பற்றிய தியானங்கள் கற்பிக்கப்பட்டன.
பிரான்ஸ் தேச சாமியார் ஒருவர் ஹென்றி லீ சௌக்ஸ் என்பவர் ஸ்வாமிகளின் சீடராகி 1955ல் சுவாமி அபிஷிக்தானந்தாவாகி விட்டார்.
ஸ்வாமிகள் பேசியதெல்லாம் உபநிஷத் விஷயங்கள் மட்டுமே. எளியவர். தானும் ப்ரம்மஞானியாக வாழ்ந்து சர்வமும் ப்ரம்ம மயமாகவே கண்டு ஆனந்த்தித்தவர். அவருடைய ஒரே மொழி அன்பு.
ஒரு யூத பாதிரியார் தமிழகம் வந்தவர் ஸ்வாமிகளை தபோவனத்தில் சென்று பார்த்தார். ”வேதாந்த சாதனைகளை பின்பற்ற நான் ஹிந்து மதத்துக்கு மாறவேண்டுமா சுவாமி?” என்று கேட்டார்.
”மதமாற்றம் அவசியமே இல்லை. எல்லாமதத்திலும் உயர்ந்த தத்வமாக வேதாந்தம் காணப்படுகிறது. உங்கள் மத கோட்பாடுகளையே உன்னிப்பாக கவனித்து அதில் உள்ள உயர்ந்த தத்வங்களை அறிந்து கொண்டாலே போதும். அத்வைதம் அங்கேயே உங்களுக்கு புலப்படுமே . அத்வைதம் ஒரு கிருஸ்துவரை உண்மையான கிருஸ்துவராக மாற்றிவிடும்.” என்கிறார் வாமிகள். பிற்காலத்தில் அந்த யூத பாதிரியார் ஜென் சித்தாந்த தியானத்தில் சிறந்த போதகராக புகழ் பெற்றார்.
ஸ்வாமிகள் ஒவ்வொருவரும் ஆத்ம ஞான விசாரத்தில் ஈடுபடவேண்டும் என்று அடிக்கடி சொல்வார். அது எல்லா மதத்துக்கும் பொதுவானது என்பார்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



