KUZHAITHTHA PATHTHU MAANIKKA VACHAKAR J K SIVAN

திருவாசகம் எனும் தேன் :  நங்கநல்லூர்  J K  SIVAN

குழைத்த பத்து.
நாம்  எல்லோரும் சிவாலயங்களில் பாடும்   சிவபுராணத்தோடு துவங்குவது திருவாசகம். செவிக்கினிய பக்தி ரசம் சொட்டும் தேன்.
”நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
 கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்கஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
 ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க….”
”நம சிவாய” என்று  சிவனை வணங்க  முதல் வார்த்தையாக பஞ்சாக்ஷரத்தை மணிவாசகர் போட்டிருக்கிறார்.  பரமேஸ்வரன்  ஒரு  வினாடி கூட  நம்மை விட்டு நீங்காமல் நம்  ஹ்ரிதயத்தில் வசிப்பவன் “நெஞ்சில் நீங்காதான்”. என்றும் நம்முள் இருப்பவன்  என்கிறார்.
 “கோகழியாண்ட குருமணி” எனும்போது  தன்னை அகத்திலிருந்து மட்டுமல்ல, புறத்தில் திருப்பெருந் துறை யிலும்  ஆட்கொண்டருளியதை  நன்றியோடு பாடுகிறார்.  பரமசிவன் வேதாகமங்களில்  அக்ஷரங்களாக இருக்கிறான்.
”ஏகன்”  ஒருவன்.  அவனே ”அநேகன்’. ஒவ்வொரு உயிரிலும்  பல வடிவங்களில் காண்பவன்.சிவபுராணம் சிவனை அற்புதமாக  வாழ்த்தி திருவாசகத்தேன் சொட்டுகிறது.
அற்ப  மனிதன் தான் சிற்றின்ப  இயல்புகளில்  அதிக விருப்பத்துடன் ஈடுபட்டு இறைவனை தன்னுள் காணும் பேரின்பத்தை இழப்பவன். திருவாசகம் மனம் பூரா  அவன் மேலேயே தங்கி நிற்க காந்த சக்திபோல் ஈர்க்கும் தேன் கிண்ணம்.   ராமலிங்க ஸ்வாமிகள், வள்ளலார் சொல்கிறார்: ”வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்: நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்து ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே ‘ என்கிறார். அவ்வளவு இனிப்பு திருவாசகம் என்கிறார்.

மணிவாசகர்   9ம் நூற்றாண்டுக்காரர்.  அவர் பிறந்த   திருவாதவூர்  மதுரையிலிருந்து 7 கி.மீ. தூரம் தான். அங்கே கோவிலில் சிவன் பெயர்  வாதபூரிசுவரர்  மணிவாசகருக்கு அப்பா  சம்புநாத சரிந்தார், அம்மா சிவஞானவதி  இட்ட பெயர் திருவாதவூரன்.  பாண்டிய ராஜா அரிமர்த்தன பாண்டின், வாதவூரரரை  பிரதம மந்திரியாக்கின போதும் வாதவூரர் சித்தம் சிவன் பாலே சென்றது.
அவருக்கு பல பெயர்கள் உண்டு:  அருள் வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன். மணிவாசகன் என்ற பெயர் சிவபெருமானே வைத்தது என்பார்கள்.  அற்புதமான  இந்த தெய்வ மனிதர்  ஏனோ விவேகானந்தர், ஆதிசங்கரர் போல் 32 வயதிலேயே சிதம்பரத்தில்  முக்தியடைந்தவர்.
பக்தன்  பகவானிடம் மனமுருகி வேண்டுவது  திருவாசகம். பகவான் பக்தனுக்கு மனமுவந்து உபதேசிப்பது கீதை.  பன்னிரு திருமுறைகளில் கிரீடம் போன்றது திருவாசகம். தமிழ் வேதம்.
திருப்பெருந்துறையில்  ஆத்மநாதரை வேண்டி மணிவாசகர் இயற்றிய பத்து பாடல்கள் அற்புதமான ”குழைத்த பத்து” இது தான்:

1.”குழைத்தால் பண்டைக் கொடுவினைநோய்   காவாய் உடையாய் கொடுவினையேன்
உழைத்தா லுறுதியுண்டோ தான்  உமையாள் கணவா எனை ஆள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ   பிறைசேர் சடையாய் முறையோவென்
றழைத்தால் அருளா தொழிவதே  அம்மானே உன்னடியேற்கே.

திருப்பெருந்துறை ஆத்மநாதா, என்னுடைய கொடிய வினையால் வந்த துன்பங்கள் என்னைக் குழைக்கும்போது   நீ  தானே  என்னைக் காப்பாற்றவேண்டும். என்னை உடையவனே என்னை ஆள்பவனே தனயன்  நான் பிழை செய்தால்  தந்தையாகிய நீ  பொறுத்துக்கொள்ள வேண்டாமா?

‘2.’ அடியேன் அல்லல் எல்லாம்முன   அகலஆண்டாய் என்றிருந்தேன்
கொடியே ரிடையாள் கூறாஎங்கோவே   ஆவா என்றருளிச்
செடிசேர் உடலைச் சிதையாத தெத்துக்   கெங்கள் சிவலோகா
உடையாய் கூவிப் பணிகொள்ளா தொறுத்தால்   ஒன்றும் போதுமே.  

சிவ பெருமானே, என் அல்லல் எல்லாம் அகல நீ ஆண்டாய் என்று எண்ணுபவன்  நான். என்னைக் கூவி அழைத்து, என்னை உன் அடிமையாக, சேவகனாக, பணியாளாக கொள்ளாமல் தண்டித்தால் கூட எனக்குப் போதுமப்பா.  

3. ஒன்றும் போதா நாயேனை உய்யக்   கொண்ட நின்கருணை
இன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை   பங்கா எங்கோவே
குன்றே அனைய குற்றங்கள் குணமா   மென்றே நீகொண்டால்
என்றான் கெட்ட திரங்கிடாய் எண்தோள்  முக்கண் எம்மானே.
அப்பா, ஆத்மநாதா, நான் ஒன்றுக்கும் உதவாதவன். மலைபோல  பாபங்கள் புரிந்தவன். என்னையும் ஏற்றுக்கொண்ட உன் தயாள குணத்தை எப்படி போற்றுவேன். என் குற்றங்களையே குணமாக எடுத்துக்கொள்.
4 மானேர் நோக்கி மணவாளா மன்னே   நின்சீர் மறப்பித்திவ்
வூனே புகஎன்தனைநூக்கி உழலப்   பண்ணு வித்திட்டாய்
ஆனால் அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள்செய்து
கோனே கூவிக் கொள்ளுநாள் என்றென்  றுன்னைக் கூறுவதே.
பகவானே, உன் பெருமை, மஹிமையை மறந்து போய்,  என் சாண்  உடம்பு ஒன்றில் என்னை உள்ளே தள்ளி பிறக்க வைத்து அல்லல்பட  ஒரு உடம்புக்குள் என்னைத் தள்ளி.உழலும்படிச் செய்திருக்கிறாய்.என் அஞானத்தை அறிந்து  நீயே எனக்கு அருள் செய்திருக்கிறாயே . எப்போது அப்பா என்னை உன்னிடம் அழைத்துக் கொள்ளப் போகிறாய்?

5  கூறும் நாவே முதலாகக் கூறுங்  கரணம் எல்லாம்நீ
தேறும் வகைநீ திகைப்புநீ தீமை  நன்மை முழுதும்நீ
வேறோர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை   உன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால்  தேற்ற வேண்டாவோ.
என் தெய்வமே, நான் அனுபவிக்கும் ஐம்புலன்கள் எல்லாமே நீ தான்.  நான் புரியும் நல்லது கெட்டது எல்லாமே நீ தான். நான் செய்வதறியாமல்  திகைத்து  தவிக்கும்போது என்னைத்தேற்றி ஆறுதல்  தருவேண்டாமா? 

6.வேண்டத்தக்க தறிவோய்நீ வேண்ட  முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி  என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய் யானும்   அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும்   உன்றன் விருப்பன்றே.
”என் அப்பனே, எனக்கு என்ன வேண்டும் என்று கூட வேண்ட தெரியாதே. அதை தெரிந்தவன் நீ  தான் எனக்கு வேண்டியதை தந்து  அருள்பவன். எனக்கு எது வேண்டும் வேண்டாம்  என்பது எல்லாமே உன் முடிவு தானே? 

7. அன்றே என்றன் ஆவியும் உடலும்   உடைமை எல்லாமுங்
குன்றே அனையாய் என்னைஆட் கொண்ட   போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள்   முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ  இதற்கு நாயகமே.
என்னை முழுவதுமாக  ஆட்கொண்டவன் நீயே.  எனக்கு நல்லது செய்பவன் நீ இருக்க எனக்கு இடையூறு எங்கிருந்து வரும்? நல்லது செய்பவன் நீ. கெட்டதையெல்லாம்  செய்பவன் நான்….
8. நாயிற் கடையாம் நாயேனை நயந்து  நீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன்வசமே  வைத்திட்டிருக்கும் அதுவன்றி
ஆயக்கடவேன் நானோதான்   என்ன தோஇங் கதிகாரங்
காயத் திடுவாய் உன்னுடைய   கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே.
ஆத்மநாதா, நான் நாயினும் இழிந்தவன், மோசமானவன். என்னை ஆட்கொண்டருள். நான் உன் அடிமை. எனக்கு எந்த அதிகாரமும் விருப்பு வெறுப்பும் இல்லை. உன் திருவடியில் என்னை தூசியாக வைத்தருள் .
9. கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர
எண்ணா திரவும் பகலும்நான் அவையே  எண்ணும் அதுவல்லால்
மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன்  கழற்கே புகுமாறும்
அண்ணா எண்ணக் கடவேனோ அடிமை  சால அழகுடைத்தே.
சிவபெருமானே, உன் திருவடி கழலிணை  கண்டு இன்புற்றேனய்யா.மண்ணில் என் உடம்பை விட்டுவிட்டு உன்திருவடி நிழல் புக  எண்ணம் என்னுள் வளர வைப்பாய்.
10. அழகே புரிந்திட் டடிநாயேன்  அரற்று கின்றேன் உடையானே
திகழா நின்ற திருமேனி காட்டி  என்னைப் பணிகொண்டாய்
புகழே பெரிய பதம்எனக்குப் புராண  நீதந் தருளாதே
குழகா கோல மறையோனே கோனே  என்னைக் குழைத்தாயே.  

திருப்பெருந்துறை ஈஸா, என் மனதை குழைய வைத்தாய். நான் பாசத்தோடு நேசத்தோடு பக்தியோடு மன்றாடுகிறேன்.  உன் திருப்பதம் தந்து எனக்கருள் புரிவாயா?

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;