
ஸ்ரீ ராம அனுக்ரஹம் – நங்கநல்லூர் J K SIVAN
ரெட்டைபல்லவி தோடி சீதாராம பாகவதர்.
என் தாய் வழி முன்னோர் பல தலைமுறைகளாக, சங்கீத வித்வான்களாகவோ அல்லது சாஹித்ய கர்த்தாக்களாகவோ இருந்தவர்கள். கடைசியாக என் தாத்தா ராமாயண இதிஹாச உபன்யாசகராக
இருந்தவர்.
இந்த கட்டுரையில் வரும் என் எள்ளுத் தாத்தா தோடி ராக சக்ரவர்த்தி. ரெட்டைப்பல்லவியில் அதை பாடுவது பல ராக தாள பேதங்களை கவனத்தில் கொண்டு அசாத்திய நெரவல்களோடு ஜனரஞ்சகமாக பாட வேண்டியது. எளிதில் பாட முடியாதது. அவரை பல பிரபுக்கள் ஜமீன்தார்கள், சமஸ்தானங்கள் அழைத்து கௌரவித்து சன்மானம் பரிசுகள் பெற்று குடும்பம் நடந்தது 250 வருஷங்கள் முன்பு இருந்த தமிழக கிராமங்கள் நினைத்துப்பார்க்க முடியாதவை. இப்போது எல்லாம் மாறிவிட்டது. மாறுதல் என்பது காலப்போக்கில் தானாகவே நேர்வது. தவிர்க்க முடியாதது. பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையின் செயல். ” Old order changes yielding place to new”என்று வெள்ளைக்காரன் ஒப்புக்கொண்டது.
இறைவன் நமக்கு அளித்த ஒரு சிறந்த பரிசு ஞாபக சக்தி. பழைய விஷயங்களை அசை போடும்போது ஏற்படுகிற பிரம்மானந்தம் எதிர் கால சிந்தனையில் ஆழ்ந்து நாம் கட்டும் சீட்டுக்கட்டு மாளிகைகளை விட எத்தனையோ மடங்கு சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் எதிர்காலம் நிகழ் காலமாக மாறி அதுவும் ”நிகழ்ந்தால்” மட்டுமே அந்த சுகம் அநுபவத்தில் சேரும்.
கடந்த காலம் என்பது அசைக்க முடியாத பெரும் பாறை களால் கட்டப்பட்ட கோபுரங்கள். அவற்றின் நிழலில் நாம் காணும் இன்பம் ஈடிணையற்றது. என்றும் பசுமை கொண்டவை அவை. மாற்றம் என்பது அவற்றின் அருகே செல்ல முடியாது. அவை ”நடந்து முடிந்தவை” இனி அவற்றை எதுவும் எவரும் தொடக்கூட முடியாது. மாற்ற முயல்வதோ அவற்றை சிதைப்பதற்கோ வழி கிடை யாது.
என்னே இறைவன் கருணை” எதிர்கால கனவுகள் ஏமாற்றத்தைத் தரலாம். பழைமை நினைவுகளில் எதிர்பார்ப்பு இல்லை. ”ஆஹா இது இப்படி நடந்திருக் கலாமே” என்று அங்கலாய்க்க அங்கு வசதி இல்லையே. இப்படித்தான் இருந்தார்கள் நம் முன்னோர், இப்படித் தான் வாழ்ந்தார்கள் என்று அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள உதவும் கருவூலம். இதிஹாஸம் என்றாலே இப்படித்தான் நடந்தது என்று தானே அர்த்தம். ”சரித் திரத்தில் ஒருவேளை, ஒருக்கால், என்ற ஹேஷ்ய வார்த்தைகள் இடம்பெற முடியாது. There are no ifs and buts in history. It thus happened and so unalterable .
ரெட்டைப்பல்லவி தோடி சீதாராமய்யர் தனது சீமந்த செலவுக்காக ஒரு வராஹனுக்கு (அப்போது ரூபாய் பதிமூன்று) உடையார் பாளையம் ஜமீன்தார் யுவரங்க பூபதியிடம் அடகு வைத்த தோடி ராகம் தஞ்சாவூர் மஹாராஜா வால் மீட்கப்பட்டது அறிந்தோம். ராஜா வுக்கு நன்றி. கலெக்டருக்கு ஒரு ஜே. அவர்களால் அல்லவோ ஐயரிடம் மீண்டும் அவரது பிரத்யேக, பிரதான ” சொத்து” தோடி ராகம் திரும்ப வந்து அடைக்கலமானது.
சீதாராமய்யர் மனைவி வழி குடும்பம் (வேட்டகம் – என்பது வேற்றகம் ) திருவையாற்றுக்கு கிழக்கே ரெண்டு மைல் (கி.மீ. நடைமுறையில் வராத காலம்) தூரத்தில் இருக்கும் கார்குடியில் இருந்ததால் நடந்து போகும்போது வழியில் சங்கீத த்ரி மூர்த்திகளில் ஒருவரான திருவையாறு ஸ்ரீ தியாகப்ரம்மம் — தியாகராஜ சுவாமிகள்– வாழ்ந்த வீட்டை கடந்து தான் போகவேண்டும்.
அவர் வீட்டைக் கடக்கும்போது எப்போதும் தியாகையர் வாள் வீட்டில் அவர் பாடும் குரல் கேட்டுக்கொண்டே இருக்குமே. அவர் அருமை தெரியாதோர் அவரைப் பரிகசிப்பதும் உண்டு. இது ஒன்றும் அறியாதவர்களின் மனித ஸ்வபாவம் அல்லவா? தியாகராஜ சுவாமிகளுக்கு சீதாராமய்யரை நன்றாக பரிச்சயம் உண்டு. நல்ல நண்பர்கள். ஓரிரு சமயங்களில் தான் இயற்றிய கீர்த்தனைகளை தானே நேரில் அவர் வீட்டுக்கு வந்து பாடிக் காட்டுவார்.
தஞ்சாவூர் கருத்தட்டாங்குடி பரசுராம அப்பா அக்ரஹா ரத்தில் இருந்த தோடி சீதாராமய்யர் கிரஹத்துக்கு தியாகராஜ சுவாமிகள் ஒரு தரம் வந்தார். தியாகராஜ சுவாமிகள் தெலுங்கு பேசும் பிராமணர். அவர் கிருதிகள் தெலுங்கு மொழி சங்கீத உலகத்துக்கு அளித்த பொக்கி ஷம் என்றால் மிகையாகாது. சீதாராமய்யரும் தெலுங்கு பேசுவார். அய்யர் வீட்டுக்கு வந்த சுவாமிகள் தான் இயற்றிய கீர்த்தனைகளை பாடிக்காட்டினார்.
”அண்ணா காரு, மீரு பெத்தலு, இதி ஏமி பாட? ஈ கீர்த்த னமுலு அந்த ஆடவாள்ளு பாடேதி; நாக்கு எந்துகு? நா செவிக்கு பட்டது போண்டி” .
தியாகையர்வாள், நீர் போங்காணும் உம்முடைய பண்டார கீர்த்தனங்கள் எனக்கு எதுக்கு? எல்லாம் பெண்கள் பாடறது. என் காதுக்குள் ஏறாது.” என்று விளையாட்டாக கூட தியாகராஜ ஸ்வாமிகளிடம் கூறி இருக்கிறார் பாகவதர்.
தியாகையர் ” அய்யர்வாள், நீர் ஒரு மஹா வித்வான். ரெட்டைபல்லவி பாடறவர். சொல்றது சரிதான். உம்முடைய தோடி ராகத்தில் நான் சொக்கிப் போனது உண்டு. உமது தோடி ராகத்தைக் கேட்டே நான் அநேக கீர்த்தனங்கள் பண்ணியிருக்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே சொல்வாராம்.
ஒரு முறை இவ்வாறு சீதாராம பாகவதர் கார்குடி நடந்து செல்லும்போது வழியில் தியாகையர்வாள் வீட்டு வாசலில் சிலையாக நின்று விட்டார். காலை நேரம் அப்போது. சுவாமிகள் உள்ளே ஏகாந்தமாய் காலை 6 மணி நேர அளவில் சுகமாக பிலஹரி ராகத் தை அனுபவித்து ஆலாபனை பண்ணிக் கொண்டி ருந்தார். சுவாமிகளின் கல்பனா ஸ்வரங்கள் அவரை ஈர்த்து வாசலிலேயே நின்று விட்டார். உள்ளே ”கனு கொண்டினே ஸ்ரீ ராமுடு …” என்ற பிலஹரி ராக பல்லவி எடுப்பு பஹு விஸ்தாரமாக ஸ்வரத்துடன் சௌக மத்யம காலத்தில் நிரவல் உத்சாகமாக தேனின் சுவைக்கும் மேலாக காற்றில் கலந்து அய்யர் செவிகள் நிரம்பி இனித்தன. தாங்க முடியவில்லை சீதாராமய் யருக்கு. ஆச்சர்யமும் பக்தியும் போட்டி போட்டுக் கொண்டு அவரை ஆட்டிப் படைத்தன. ராம பக்தி என்பது என் தாய் வழி குடும்ப சொத்தல்லவா?
விடுவிடுவென்று திறந்திருந்த தியாகராஜஸ்வாமிகள் வீட்டுக்குள் புகுந்தார். சுவாமிகள் வீட்டுக்கதவு வழக் கம்போல் தாள் போடாமல் திறந்து தான் இருந்தது.
உள்ளே பூஜா க்ரஹத்தில் தீபம் எரிந்தது. ஸ்ரீ சீதா சமேத ராம லக்ஷ்மண விக்ரஹம். அதற்கு முன்னால் அமர்ந்து கொண்டு கையில் தம்புரா சுருதி மீட்ட கண்களை மூடிக் கொண்டு தலையை ஆட்டி ஆலாபனம் பண்ணி அதைத் தானே ரசித்தவாறு ஆனந்த லோகத்தில் ” ராம குடும்பத்தோடு” லயித்து பக்தி பரவசத்தில் ஆழ்ந்தி ருந்தார் தியாகராஜ சுவாமிகள். அவருக்கு முன்னால் சென்று சீதாராம பாகவதர் இடுப்பின் மேல் அங்க வஸ்த்ரத்தை வரிந்து கட்டிக்கொண்டு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினார். ”
”அண்ணா ஸ்ரீ அண்ணா” ஸ்ரீ ராம சரணம், ராம சரணம் ” நான் வேடிக்கைக்கு அன்னிக்கி சொன்னேன். அபராதம் பண்ணிட்டேன். மன்னிக்கணும் என்று அவர் கால்க ளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார்.
ஸ்வாமிகள் உருகிவிட்டார். தம்பூரைக் கீழே வைத்து விட்டு குனிந்து சீதாராமய்யரை த்தூக்கித் தழுவி கொண்டு ” ”சீதாராமா, உன் ஞானம் உன் பாட்டுக்கு முன்னாலே என் ஞானம், பாட்டு எம்மாத்ரம். நீ கனம் கணபதி சாஸ்திரி பிள்ளை. ரெட்டைப் பல்லவி தோடி சீதாராமன்” என்று எளிமையாக பதிலளித்தார்.
”சுவாமி, அந்த எண்ணம் இன்னியோடு போயாச்சு. முதல்லே அலக்ஷியமா இருந்துட்டேன். அகம்பாவம் என்னை தின்னுடுத்து. என்னமோ கிருதி பாடுறீர் என்று தப்பா எடை போட்டுட்டேன். அப்பாப்பா, இன்னிக்கு நான் கேட்ட அந்த பிலஹரி ராக விஸ்தாரம், ஸ்வரம், பல்லவி எடுப்பு முடிப்பு, இதெல்லாம் என்னை கிடு கிடுக்க வச்சிடுத்து ராமன் காலடியில கொண்டு தள்ளிடுத்து. . என் கர்வத்தை இன்னியோடு பறி கொடுத்துட்டேன்”
”சீதாராமா, ராகம், பல்லவி பாடரதெல்லாம் உசந்தது தான். அப்படி தான், அது தான் சம்பிரதாயமாக நம்மு டைய முன்னோர்கள் பாடினார்கள். என்னமோ ஸ்ரீ ராமன் பெயரையும், கதையையும் பின்னி அதை வச்சு பல கிருதிகளாக பல பல ராகங்களில் பாடி வைத்தால் பின்னாலே வருபவர்களுக்கு அடையாளம் காட்டும். ராகங்களுடைய உருவம் மாறாமல் இருக்க இடமுண்டே” என்று எனக்கு தோணித்து . அதனாலே இப்படி கிருதி கள் பண்ணி ராகம் போட்டு வச்சிண்டு நானே பாடிண்டு வரேன்.”
என்று பவ்யமாக சொன்னார் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்.
”சுவாமி, இது சத்யம். நீங்க சொன்னது பரம சத்யம். ராகம் பல்லவி எல்லாம் எங்களோடு போய்விடும். ஆனால் நீங்க பண்ணின கிருதிகள், கீர்த்தனங்கள் தான் என்னிக்கும் சாஸ்வதமாக நிற்கும். எனக்கும் அந்த ஸ்ரீராமன் அனுக்ரஹத்தில் சிறிது கொடுங்கள்.இனிமே நானும் அதெல்லாம் பாடணும்”
‘தியாகராஜ சுவாமிகள் சிரித்தார். ”அப்பா சீதாராமா, நீயே அந்த ராமன். உனக்கு அந்த ராமன் அனுக்ரஹிப் பார். இந்தா இட்டுக்கோ ” தியாகராஜ சுவாமிகள் கொடுத்த விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டார் சீதாராமய்யர்.
உடனே பக்கத்தில் காவேரிக்குச் சென்று மீண்டும் ஸ்நானம் முடிந்து திருவையாறு பிரணதார்த்தி ஹரனை தரிசித்துவிட்டு தியாகராஜ சுவாமிகள் இல்லத்தில் அன்று சுவாமிகளோடு சேர்ந்து ஸ்ரீ ராமப்ரசாதத்தை போஜனம் பண்ணி மகிழ்ந்து இருந்தார்கள். அன்றே தோடி சீதாராம பாகவதருக்கு சுவாமிகள் கீர்த்தனங்கள் உபதேசமாயிற்று. அதையே ஆனந்தமாக பாடிக் கொண்டே இருப்பார்.
இவர்களையெல்லாம் இனி இந்த ஜென்மத்தில் நாம் பார்க்கப்போவதில்லை.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



