
‘நான் யார்?”எனும் ஆத்ம விசாரம். நங்கநல்லூர் J K SIVAN
பகவான் ரமண மஹரிஷியிடம் நெருக்கமான ஒரு பக்தர் சிவப்பிரகாசம் பிள்ளை. வெள்ளைக்காரன் காலத்தில் கலெக்டர் ஆபிசில் ஒரு அதிகாரி. ஆன்மீகத்தில் பற்று கொண்டவர். அவர் வேலை நிமித்தமாக திருவண்ணாமலைக்கு 1912ல் சென்ற போது அங்கே 22 வயது பாலகனாக ஒரு ப்ராமண சந்நியாசி ரமணர் என்று அழைக்கப் பட்டு விரூபாக்ஷ குகையில் இருப்பதை அறிந்து அவரி டம் சென்று தனது மனதில் உறு த்திக் கொண்டி ருந்த 13 கேள்விகளைக் கேட்டு பகவா னின் பதிலை எதிர்பார்த்தார். ரமணர்
அப்போது மௌன விரதம் இருந்ததால் சில சைகைகள் காட்டி விளக்கினார். அது பிள்ளைக்கு புரியவில்லை. ரமணர் தரையில் மண்ணில் எழுதி காட்டினார், அங்கே இருந்த ஒரு கரும்பலகையில் 13 வது கேள்விக்கு பதில் எழுதினார். பிள்ளை அதை குறித்து எழுதிக் கொண் டார். பின்னர் பிள்ளை பகவானிடம் கேட்ட 13 கேள்விகளை குட்டி குட்டியாக பிரித்து கொஞ்சம் கேள்விகளை அதிகமாக்கி ரமண மஹரிஷி அளித்த பதில்கள் தான் ரமணரின் ”நான் யார்” எனும் சின்ன புஸ்தகம்: அதைத்தான் என்னால் முடிந்தவரை புரியும்படி செய்து பதிவிடுகிறேன். எனக்கு புரிந்தால் தானே உங்களுக்கு புரிய வைக்க முடியும்?
1.சுவாமி சொல்லுங்கள்: ”நான் யார்?’
”’நான்” என்பது இந்த உடம்பு இல்லை. வாக்கு, கைகள், கால்கள், மலம் சிறுநீர் கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் (குதம் மற்றும் சிறுநீர் குழாய்), மற்றும் பிறப்புறுப்புக்கள் ஆகிய ஐந்து கர்மேந்திரியங்கள் இல்லை. வெளி உலக விஷயங்களை அறியும், அதாவது பார்க்க, பேச, ருசிக்க, தொட, முகர, கேட்க, உடல் உறுப்புகளான கண், காது, மூக்கு, நாக்கு, மற்றும் தோல்எனப்படும் ஞானேந்திரியங்கள் ‘நான்’ இல்லை ; பஞ்ச ப்ராணன்களும் ”நான்” இல்லை. அலைபாயும் மனம் ‘நான்’ அல்ல. உலக விஷயங்கள் மட்டுமே கொண்ட அஞ்ஞானமும், அறியாமையும், ‘நான்’ அல்ல.
2. மேலே சொன்னது எதுவுமே ‘நான்’ இல்லையென் றால் ‘நான்’ யாராக இருக்கமுடியும்?
நான் ”இது இல்லை” ”இது இல்லை ” ஒவ்வொன்றாக பகுத்து அறிந்து விலக்கும் உணர்வு தான் ‘நான்”.
3. சுவாமி, அறிவு என்கிறோமே, ஞானம், அதன் ஸ்வரூபம் எது?’
‘சச்சிதானாந்தம்” என்பது தான் பதில். அங்கே தான் எண்ணங்கள், மனம் எதற்கும் இடமில்லை. ஆத்மா ஒன்றே அங்கே பரிமளிப்பதால் ,ஆத்மாவின் இயற்கை ஸ்வரூபமான ஆனந்தம் நிலைத்து காணப்படும்.
4. ”ஆத்மாவை உணர்வது எப்போது ?” ஸ்வரூப தர்சனம் எப்போது கிட்டும்?’
‘ நாம் உலகத்தையே சதா பார்த்துக்கொண்டு அதன் சகல விஷயங்களையம் நம்பிக்கொண்டு இருக்கி றோம். அது தான் ”த்ருஷ்யம்”. எப்போது,அந்த உலகத் தை நாம் எப்போது நமது கவனத்திலிருந்து, பார்வை யிலிருந்து நீக்குகிறோமோ அப்போது காணும் ”த்ருக் ” எனும் கான்பவனுக்கு ஆத்மா வின் ஸ்வரூப தர்சனம் கிடைக்கும்.”
5.ஜகம் எனும் இந்த உலகம் அதன் செயல்பாடுகளைக் காணும்போதே, ஆத்மாவின் ஸ்வரூப தர்சனம் கிடைக் காதா?”உலகம் உடம்பு மனம் இவற்றின் மாயப் பிடி யில் இருக்கும் வரை ”ஆத்மாவின் ஸ்வரூப தர்சனம் வெளிப்படாது, உண்டாகாது”
6. ”ஏன் உண்டாகாது சுவாமி?”
”எப்படி அரை இருட்டில் காற்றில் அசையும் கயிறு பாம்பாக தோன்றி மனம் நம்பி, காண்பது, ப்ரதி பாஸிகம் என்று இதற்கு பெயர். காட்சி, காண்பவன், காண்பது, மூன்றிலும் பாம்பு த்ருஷ்யம் ஆகிறது. இல்லாத ஒன்று இருப்பது போல் இருக்கிறது. கல்பித சர்ப்ப ஞானம் இருக்கும் வரை உண்மை புலப்படாது. இதையே அதிஷ்டான ஸ்வரூப தர்சனம் உண்டாகாது என்கிறார் ரமணர்.
7.வெளியே தெரியும், புறத்தோற்றம், எப்போது மறையும்?”
”எப்படி கயிறு பாம்பாக தோன்றி உண்மையாக காட்சி தந்ததோ, அது போல் மாயையால் உண்டான உலகம் சாஸ்வதம் போல், சத்தியமானது போல் நம்ப வைக்கிறது.இதை தான் ” த்ருக், த்ருஷ்யம் எனப்படுப வை. ரஜ்ஜுவும் ஸர்ப்பமும் போன்றவை. மனதில் கல்பிதமான ஸர்ப்ப ஞானம் உண்மை போலவே தோன்றியது. தற்காலிக ஸத்யமாக தோன்றியது. ஆகவே இதெல்லாம் உண்டாக்கும் மனது மறைய வேண்டும். அது போனால் ஜகத், உலகம் எனும் மாயம் இல்லமே தானாக மறையும், சத்யம் புலப்படும். என்கிறார் ரமணர்.
8. மனதின் இயற்கையான ஸ்வரூபம் என்ன?
”மனது ஆத்மாவின் ஒரு சக்தி. எண்ணங்கள் நிறைந்தது. நினைவுகள் தான் ஜீவனை ஆட்டுவிக்கிறது. மனதும் உடம்பும் ஆழ்ந்த உறக்கத்தில், சுஷுப்தி நிலையில் இல்லை. எனவே சுகம் கிட்டுகிறது. சிலந்தி எப்படி தானே வாயில் ஒரு நூலை உண்டாக்கி வலை கட்டி, அதை தனக்குள் பின்னால் அந்த நூல் வேலியை இழுத்துக் கொள்கிறதோ, அது போல் மனம் உலகத்தை ஸ்ரிஷ்டிக்கிறது. மனம் மறைந்தால் ஜகத் எனும் உலகம் இல்லாமல் போகிறது. அப்போது தான் ஆத்மம் உணரப்படுகிறது. மனத்தை தான் ஸூக்ஷ்ம சரீரம், ஜீவன் என்கிறோம். ரொம்ப சக்தி வாய்ந்தது மனம்.
9. மனதின் ஸ்வரூபத்தை விசாரித்து அறிவதற்கு என்ன வழி ?மனது தேகத்தை ”நான்” என்று நம்ப வைக்கிறது. இந்த எண்ணம் ஆரம்பமானது ஹ்ருதயத்தில். மனதில் தோன்றும் எண்ணற்ற எண்ணங்களுக்கு ஆதாரமானது ”நான்” என்ற உடம்பைப் பற்றியதாக இருக்கிறது. உண்மையான ”நான்” ஆன ஆத்மா அதன் காரணமாக உணரப்படாமல் இருக்கிறது. உலகத்தை தோற்று வித்து மாயத்தால் நிரப்புகிறது. எல்லாமே தற்காலிகம். ஸாஸ்வதமில்லை. மனது அதை ஸாஸ்வதம் என நம்பவைக்கிறது. .
10.மனம் அடங்குவது எப்படி?
”நான்” என்பது உண்மையில் யார்? மனமா, வேறு ஏதாவதா ? என்று விடாமல் மனதை ஆராய்ந்து கொண்டே வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மனதின் செயல்பாடுகள் குறையும்.அழியும்.மனதின் எண்ணங் களை அழித்துக் கொண்டே வந்தால் மனம் காலியாகி தானும் அழியும். சுடுகாட்டில் பிணத்தை எரிக்கும் பிணம் சுடுபவன் அதை ஒரு கொம்பினால் அடித்து எரித்து விட்டு அந்த கொம்பையும் கடைசியில் நெருப் பில் போட்டுவிடுவது போல் மனத்தின் எண்ணங் களை மனத்தாலேயே அழித்துவிட்டு மனத்தையும் கடைசி யில் அழிப்பது தான் வழி. பிறகு தான் ஆத்ம ஸ்வரூப தர்சனம் கிடைக்கும்.
தொடரும்
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



