KUNTHI – J K SIVAN

குந்தி தேவி – நங்கநல்லூர் J K SIVAN

ஸ்லோகங்கள் ஸ்ரீமத் பாகவதம் 1.8.28 to – 31

मन्ये त्वां कालमीशानमनादिनिधनं विभुम् । समं चरन्तं सर्वत्र भूतानां यन्मिथ: कलि: ॥११॥11 . 8.28
Manye thwaam kaala meesana manadhi nidhanam vibhum, Samam charantham sarvathra bhoothanaam yanmidha kali.

என்னை வழி நடத்திய கிருஷ்ணா, அழகிய நீல வண்ணா, நீ ஆதி அந்தமில்லாத அருட்பெருஞ்சோதி. காலகாலன். சர்வ வியாபி. ஓயாமல் ஒழியாமல் உதவும் ஏழை பங்காளன். நீ காலத்தால் மாறாத ஸாஸ்வதன். புருஷோத்தமன். ஆதி அந்தமில்லாதவன். சர்வவியாபி. காருண்ய மூர்த்தி. அஞ்சேல் என அடைக்கலம் கொடுப்பவன். எங்கும் எதிலும் நிறைந்தவன். எங்களைப் போன்று உணர்ச் சிக3ளால் உந்தப்படாதவன்.
குந்தி கடல் மடை திறந்தாற்போல கண்ணில் நன்றிக்கண்ணீரோடு கிருஷ்ணன் தேர் முன்னே இரு கரம் கூப்பி அவனைத் தொழுகிறாள். கிருஷ்ணன் குந்தியை பார்த்துக்கொண்டே நிற்கிறான். உணர்ச்சி வெள்ளத்தில் கண்ணன் செய்த உதவிகளை வரிசைப்படுத்தி சொல்லி பிரிய மனமில்லாமல் அரற்றுகிறாள். இனி ஹஸ்தினாபுரத்திற்கு கண்ணன் வரப்போவதில்லை. குந்தியும் இனி கண்ணனை காணப்போவதில்லை என்ற எண்ணம் அவளை வாட்டுகிறது.
கிருஷ்ணனுக்கும் அது தான் உண்மை எனத் தெரியும்.

29. न वेद कश्चिद्भगवंश्चिकीर्षितं तवेहमानस्य नृणां विडम्बनम् । न यस्य कश्चिद्दयितोऽस्ति कर्हिचिद् द्वेष्यश्च यस्मिन् विषमा मतिर्नृणाम् ॥ २९ ॥
na veda kaścid bhagavaṁś cikīrṣitaṁ tavehamānasya nṛṇāṁ viḍambanam na yasya kaścid dayito ’sti karhicid dveṣyaś ca yasmin viṣamā matir nṛṇām

கிருஷ்ணா நீ தெய்வம். மனிதர்களை போல எங்களோடு பழகுகிறாய் என்பதால் உன் தெய்வீக சேஷ்டிதங்களை , அமானுஷ்ய செயல்களை எல்லோராலும் அறியமுடியாது. ஒவ்வொருவருக்கும் அவர் தேவைக்கேற்ப உதவும் நீ யாரிடமும் பாரபக்ஷம் காட்டாதவன். எவர் தயவும் தேவையற்றவன். எதுவும் எவரிடமிருந்தும் உனக்கு வேண்டாம். உனக்கு எவரிடம் என்ன பொறாமை இருக்க முடியும்? ஆனால் உன்னை அறியாதவர்கள் நீ பாரபக்ஷமானவன் என்று தான் பேசுவார்கள்.
சுய ஆதாயம் தேடுபவர்கள் உன்னை அப்படித்தான் சொல்வார்கள். அன்றும் இன்றும் என்றும் இது தான் உலக நியதி.

30. जन्म कर्म च विश्वात्मन्नजस्याकर्तुरात्मन: । तिर्यङ्‍नृषिषु याद:सु तदत्यन्तविडम्बनम् ॥ ३० ॥
janma karma ca viśvātmann ajasyākartur ātmanaḥ tiryaṅ-nṝṣiṣu yādaḥsu tad atyanta-viḍambanam

நான் நினைக்கும்போதெல்லாம் எனக்கு மெய் சிலிர்க்கிறது கண்ணா. இந்த பிரபஞ்சத்தின் ஆத்மா. உன்னிலிருந்து தான் பிரபஞ்சமே வந்தது என்றாலும் அதில் நீ இருந்து இயக்குகிறாய். உனக்கு எந்த காரியமும் அவசியமே இல்லை. உனக்கு தான் எதுவுமே தேவை இல்லையே. இருந்தும் நீ இரவும் பகலுமாக எல்லா காரியங்களிலும் உன்னை இணைத்துக் கொண்டு கர்மாவை புரிகிறாய். நீ ஜனன மரணம் இல்லாதவன் இருந்து எங்கோ ஏதோ ஒரு உருவத்தில் அவதரிக்கிறாய்.
நீ தான் சகல ஜீவர்களுக்குள்ளும் இருந்து அவற்றை இயக்குகிறாய். நீ காக்கும் கடவுளல்லவா? நினைத்தாலே இது அபூர்வமாக,அதிசயமாக, ஆச்சர்யமாக இருக்காதா எனக்கு?

31. गोप्याददे त्वयि कृतागसि दाम तावद्या ते दशाश्रुकलिलाञ्जनासम्भ्रमाक्षम् । वक्रं निनीय भयभावनया स्थितस्य सा मां विमोहयति भीरपि यद्बभेति ॥१४॥ 8.31
gopy ādade tvayi kṛtāgasi dāma tāvad yā te daśāśru-kalilāñjana-sambhramākṣam vaktraṁ ninīya bhaya-bhāvanayā sthitasya
sā māṁ vimohayati bhīr api yad bibheti

ஒன்றன் பின் ஒன்றாக எனக்கு பழைய நினைவுகள் தொடர்ச்சியாக மனக்கண் முன் வருகிறதே. உன்னை ஒருநாள் யசோதை எப்படி தண்டித்தாள் என்று உனக்கு ஞாபகம் இருக்கிறதா? உன் விஷமத்தை அவளால் தாங்கமுடியாமல் போய் விட்டது. எப்போதும் உன்னைப்பற்றி எல்லோருமே அவளிடம் புகார்கள் கொடுத்த வண்ணம் இருந்தால் அவள் என்ன செய்வாள்?. எப்படி உன் விஷமத்தை குறைப்பது?. அவளுக்கு தோன்றிய ஒரே யோசனை. உன்னை வெளியே விடாமல் எப்படி நிறுத்துவது?. ஆம், ஒரே வழி உன்னை கட்டிப்போட வேண்டியது தான். ஒரு சிறு தாம்புக்கயிறு கண்ணில் பட்டது. .ஓஹோ. அதனால் தான் கண்ணினுள் சிறு தாம்போ!, ”வாடா இங்கே” என்று உன்னை இழுத்து பிடித்து வயிற்றில் அதை கட்டி அதன் மறுமுனையை எதோடு கட்டுவது? என்று பார்த்தபோது அவள் கண்ணில் ஒரு மர உரல் தென்பட்டது. உன் வயிறும் உரலின் வயிறும் கயிறோடு இணைந்தன.

”இப்போ எப்படி வெளியே ஓடுவாய், எப்படி ஒவ்வொருத்தர் வீட்டிலும் போய் வெண்ணெய் திருடுவாய் என்று பார்க்கி றேன்?” என்று உன்னைப்பார்த்த யசோதைக்கு நீ எப்படி தோன்றினாய்?

அழகிய மலர்ந்த கரு நிற காந்த முகம். அதில் பரந்த விரிந்த கண்கள். அவை இரண்டுமே முழுதும் கண்ணீரால் நிரம்பி பொங்கின. நீ வேதனையோடு செய்வதறியாது பரிதாபமாக அவளைப் பார்த்தாயே , உன்கண்களில் அவள் தீட்டிய மை கண்ணீரில் கரைந்து கலந்து கன்னத்தில் வழிந்ததே. பயம் உன் கண்களில் தெரிந்ததா? உனக்கு பயமா? இந்த காட்சியை அவள் கண்டாள் , நான் கேள்விப்பட்டேன். திகைத்தேன் . பிரேமையால் அவள் கட்ட நீ தானாகவே உட்பட்டவன். உண்மையான அன்புக்குக் ‘கட்டு’ ப்பட்டவன். நீ கட்டுண்ணப் பண்ணிய மாயன்.

தொடரும்

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2564

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;