ARUPATHTHU MOOVAR – KALIKKAMBA NAYANAR – J K SIVAN

அறுபத்து மூவர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN
கலிக்கம்ப நாயனார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில்   இதுவரை  நாற்பதுக்கு   மேல் நாம்  சிவனடியார்களை, நாயன்மார்களை தெரிந்து கொண்டு விட்டோம். மொத்தத்தில்  அநேக நாயன்மார்களுக்கு இயற்பெயர்  இல்லாமல் சிறப்புப் பெயர் மட்டும் தான் நமக்குத் தெரிகிறது. எல்லோருமே  ஜீவ காருண்ய எண்ணம் கொண்ட சிவ பக்தர்கள். சிவனடியார்களை உபசரித்து ஆதரித்தவர்கள்.  எல்லோருக்கும் சிவன் முன்னே தோன்றி அவர்களை
 கைலாச பதவிக்கு அழைத்துச் சென்றதும் நமக்கு தெரிகிறது.   ஒரு ஒற்றுமை அவர்கள் அனைவர் சரித்திரத்திலும் நாம் உணர்கிறோம்.  உயிரைத் திரணமாக மதித்து  சிவனுக்கும், சிவனடியார்களுக்கும்  தொண்டு புரிந்த  சிறந்த  பக்தி மனம் கொண்டவர்கள் அவர்கள் எல்லோருமே. அதனால் தான் அவர்களால் கோயிலில்  இடம்  பிடித்து என்றும்  தெய்வங்களாக இடம் பிடிக்க முடிந்தது. நாமும் அவர்களை அறியமுடிந்தது.    இவர்களிலே  யாருக்கும் உருவ  அடையாளம் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. சிவாலயங்களில் வரிசையாக  63 சிலைகள்  எல்லாம் ஒன்று போலவே  செய்து  தலைக்கு மேலே பேர் எழுதி வரிசையாக ஒரே உயரத்தில் நிற்க வைத்திருக்கிறார்கள். எல்லா சிவாலயங்களிலும்  இந்த  63  நாயன்மார்கள் எல்லோர் கழுத்திலும் எப்போதும் மாலை கிடையாது. இடையில் வஸ்திரமும் கிடையாது. விளக்குகள் தனித்தனியாக கிடையாது என்பதும் விசேஷம். பக்தர்களும் ஒவ்வொருவராக அவர்கள் பெயர் படித்து அவர்களை பற்றி அறிந்து கொள்வதும் இல்லை.  பிரகாரத்தில் அந்த  இடத்தில் மட்டும்  கால்கள் வேகமாக  நடந்து திரும்பும். ஒவ்வொருவருக்கும்  குரு பூஜை வருஷாவருஷம்  உண்டு.
 சிவனடியார்கள் யாராக இருந்தாலும் எத்தகைய குலத்தைக் கொண்டவராக இருந்தாலும் அவர்கள் சிவனடியார்கள். அவர்களை உபசரிப்பதில் எத்தகைய குறையும் நேர்ந்துவிடக் கூடாது என்று நினைப்ப வர்களே உண்மையான சிவத்தொண்டர்கள்.
இன்று நாம் அறிபவர் திருப்பெண்ணாகடம் என்னும் ஸ்தலத்தில் அவதரித்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான   கலிக்கம்ப  நாயனார். தமிழகம் பல நாடுகளாக பிரிக்கப்பட்டு அறியப்படுகிறது. அதில் ஒன்று நடுநாடு என்ற ஒரு பகுதியைச் சேர்ந்த  சிவஸ்தலம்  தூங்கானை மாடம் (எல்லோரும் அறிந்த பெயர் பெண்ணாகடம்)  அங்கே  சிவனின் பெயர்  சுடர்கொழுந்தீசர்,  ப்ரளய காலேஸ்வரர், கடந்தை நாதர்.அம்பாள் ஆமோதனாம்பிகை, கடந்தை நாயகி. பாபல்  பெற்ற ஸ்தலம்.  ஸ்தல புராணம்:  இந்திரனின் பூஜிக்க தேவகன்னியர்  புஷ்பம் பறிக்க  இங்கே வந்தபோது  ப்ரளய  காலேஸ்வரரை தரிசித்து மகிழ்ந்து  வழிபட்டு  வந்த காரியம் மறந்து போய் விட்டது.  இந்திரன்  தனக்கு பூஜை பூஜைக்கு புஷ்பம் வந்துசேரவில்லையே  என்ன காரணம் போய் பார்த்துவா என்று காமதேனுவை அனுப்ப அதுவும் சிவனழகில் மயங்கி  வழிபட்டு  அப்படியே  நின்றுவிட்டது. என்னநடக்கிறது அங்கே  நீ போ உடனே என்று இந்திரன்  ஐராவதம் எனும் வெள்ளையானையை அனுப்பினான். ஐராவதமம்  அப்படியே  சிவன் சந்நிதியில் தன்னைமறந்து நின்றுவிட்டது.  ‘ சே. புஷ்பம் கொண்டுவா என்றால் போனவர்கள்  அத்தனை பேரும்  எங்கே  தொலைந்தவர்கள்?  என்ன காரணம் என்று தானே புறப்பட்டு வந்த  இந்திரன்  ஈசனை தானும் வழிபட்டு  நின்றான். தூங்கானை மாடம் என்ற இந்த ஊருக்கு  இதனால் ஒரு புது பெயர் கிடைத்தது:  தேவ கன்னிகை காரணமாக  ”பெண்”  காமதேனு என்னும்  ஆ,  பசு, சம்பந்தமாக  ”ஆ”.அதோடு  யானைக்கு ”கடம்” என்று ஒரு பெயர் என்பதால்  எல்லாம் சேர்ந்து  பெண்  + ஆ + கடம்= பெண்ணாகடம் என்ற பெயர் இன்று கொஞ்சம் மாறி  பெண்ணாடம் என்ற பெயரோடு  நிலைத்து நிற்கிறது.  விருத்தாசலத்துக்கு தென்மேற்கே 18 கி.மி.  சென்னையில் இருந்து போவதானால் 235 கி.மி. போகவேண்டும்.  அப்பர்  இங்கே வந்து  பாடிய பாடல் ஒன்று:
”பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்
என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இருங்கூற்று அகல
மின்னாரு மூவிலைச் சூலம் என் மேல் பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே”.-  அப்பர்  எனும் திருநாவுக்கரசர். 

”மேகங்கள் ஆசையோடு  வானில் தங்கும்  பெண்ணாகடத்தில்  திருக்கோயிலாகிய தூங்கானை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே! உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று  இருக்கிறதப்பா.  அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், நான் சமண சமயத்தில்  என்  வாழ்க்கையின் பெரும் பகுதியை நாசமாக்கியவன் என்ற பழிச்சொல்  நீங்க வேண்டும்.  என்னை  நீ உன்  அடிமையாக ஏற்றுக்கொள் . அதற்கு அடையாளமாக உனது திரிசூல  உருவத்தை  என் உடம்பில் பொறித்து விடு”.
கடலூர் மாவட்டத்தை  சேர்ந்த  பெண்ணாகடத்தில்   மெய் கண்டார்  எனும் ஞானியும்  கலிக்கம்ப நாயனாரும்  அவதரித்தார்கள்.   தேவகன்னியர்  வந்து தரிசித்ததால் ‘பெண்’ ,   காமதேனு என்ற  பசு வந்ததால்,  ‘ஆ’ ,இந்திரனின் பட்டத்து யானை ஐராவதம் வந்ததால்  ‘கடம்’  (யானைக்கு இப்படியும் ஒரு பெயர்).இது மூன்றும் சேர்ந்து   பெண் +ஆ+கடம் = பெண்ணாகடம் ஆகிவிட்டது. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
அந்நகரில் உள்ள தூங்கானை மடம் சிவன் கோவிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைத் துதித்து வாழ்ந்து வந்தவர் கலிக்கம்பர்.    சிவனுக்குத்  தொண்டு செய்வதோடு  சிவனே எல்லாம் என்று நினைத்து உருகும்  சிவனடியார்களுக்கும் தொண்டு செய்பவர். சிவனை வழிபடும் சிவனடியார்களை வழி படாவிட்டால் வாழ்க்கையால் எந்த   பயனுமில்லை  என்று  நம்பியவர் கலிக்கம்பர்.
தம்மை நாடி வரும் சிவனடியார்களுக்கு வீட்டில் அமுது அளித்து அவர்களுக்கு வேண்டிய பொருளையும் பொன்னையும் அவர்கள் வேண்டுவன வற்றையும் மனமுவந்து அளித்து மகிழ்வோடு வழியனுப்பி வைப்பார்.

ஒருமுறை அவர் வீட்டுக்கு ஒரு  சிவனடியார் வந்தார். அவருக்கு மகிழ்வோடு பாதபூஜை செய்தார் கலிக்கம்பர்.அவரது மனைவி சிவனடியாருக்கு மனையைச் சுத்தமாக்கி அறுசுவை விருந்து படைக்க கணவரு டன் கலயத்தில் நீர் எடுத்து வந்தார்.   எதிரே  அமர்ந்திருந்த சிவனடியாரைக் கண்டதும் நொடியில் அந்த பெண்மணியின் முகத்தில் அருவறுப்பு  தோன்றியது.  காரணம்  வந்திருந்தவர்  ஏற்கனவே  கலிக்கம்பரிடம் பணியாளாக  இருந்தவர்.   ஒரு வெள்ளைக்காரனுக்கு  எஜமானியின் மனைவி பாதத்தில் ஜலம்  வார்க்க வேண்டுமா? தயங்கிய மனைவியின் தயக்கத்தைப் புரிந்து கொண்ட கலிக்கம்பர் அவரது முகத்தில் தெரிந்த அருவறுப்பைக் கண்டதும் கோபம்கொண்டு அருகில் இருந்த வாளை எடுத்து வந்து  மனைவியின் கரத்தைப் பிடித்து  ரெண்டு துண்டாக  வெட்டினார்.  ரத்தப்பெருக்கில்  வலியோடு, மயக்கமுற்று சிவனைத் துதித்தப்படி கலிக்கம்பர் மனைவி மயங்கி கீழே விழுந்தார். நடந்ததை எல்லாம் பார்த்த வீட்டுக்கு வந்திருந்த  சிவனடியார் மனம் பதைத்து எழுந்தார்.  அப்போது அந்த இடத்தில் ஒரு கண்ணைப்பறிக்கும்  ஜோதி,  ஒளிமயம்  உண்டானது.  எங்கும் ஒளி வெள்ளம்.  கலிக்கம்பரின் அன்பை உலகுக்கு உணர்த்தவே இத்தகைய நாடகத்தை அரங்கேற்றிய சிவபெருமான் அவர்கள் முன் தோன்றினார். உறக்கத்திலிருந்து எழுந்தது போல் எழுந்து நின்றாள் கலிக்  கம்பரின் மனைவி. வெட்டுண்ட அவள் கை  முன்போல் ஆனது. மூவரும் இறைவனின் பாதம் பணிந்து மனமுருகி நின்றார்கள். எம்பெருமானின் அருளால் இயன்றவரை  தமது மனைவியுடன் இணைந்து சிவத்தொண்டுகள் செய்து இறைவனடி சேர்ந்தார் கலிக்கம்ப நாயனார்.என்று அவர் வரலாறு கூறுகிறது. கலிக்கம்ப நாயனாரின் குருபூஜை தைமாதம் ரேவதி நட்சத்திரத்தில் எல்லா சிவாலயங்களிலும் கொண்டாடப்படுகிறது.
“கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் (கலியன் கழற்சத்தி வரிஞ்சையர்கோன்) அடியார்க்கும் அடியேன்” – என்கிறார் சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகையில்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;