SURDAS – J K SIVAN

ஸூர் தாஸ் –  நங்கநல்லூர்  J K  SIVAN
கண்ணன் சாப்பிடுகிறான்
சமீபத்தில் ஒரு கல்யாணத்தில்  ஒரு   ஐந்து ஆறு வயது வெள்ளைக்கார பையன் ரெண்டு கைகளிலும்  சாதத்தை ஒருவாறு சமாளித்து  கொஞ்சம் கொஞ்சமாக  பத்து விரல்களாலும்   எடுத்து  முகமெல்லாம்  பூசிக்கொண்டு  சந்தோஷமாக  சாப்பிட முயல்வதை பார்த்தேன்.  ஒரு அப்பளத்தை முழுதுமாக உடைக்காமல் தின்பதற்கு எவ்வளவோ முயன்று அது பல துண்டுகளாக  ஒடிந்ததும்   அவன் முகம் வாடியது.  அப்புறம் ஒவ்வொரு துண்டு அப்பளத்தால்  சாதத்தை ஸ்பூன் போல எடுத்து சாப்பிட அந்த முயற்சியும் தோற்றது. ஸ்பூன் போல்  அப்பளத்துண்டு  ஸ்ட்ராங்காக இல்லாமல்  சாதத்தின் மேல் பட்டதும்  இன்னும் நொறுங்கிய  தால் பத்து விரல்கள்  மீண்டும்  சாப்பிடுவதில் ஈடுபட்டன. ஒருவாறு முழு அப்பளத்தையும்  காலி பண்ணிவிட்டு இன்னொன்று கேட்டான்.   எதிரே உட்கார்ந்து இதை ரசித்தவாறு நான் சாப்பிட்டேன். 

கண்ணன்  மூன்று நான்கு வயதில் கோகுலத்தில் சாப்பிடும் அழகு இதைவிட  அருமை.  அம்மா யசோதையின் மடியில் உட்கார்ந்திருந்தான். அப்போது டேபிள் சேர்கள்  இல்லையே.   யசோதையின் ஒரு கையிலே  தங்கக்கிண்ணம்,  வானத்தில் முழு  நிலவைக்  காட்டி  ஊட்டவேண்டும்.  அரண்மனை முற்றம் சலவைக்கல்லில் வழவழவென்று தரையில் வண்ணச் சித்திர   கோலங்களோடு காற்று வீசிக்கொண்டு கண்ணைப் பறிக்கிறது. கூடவே  நந்தகோபன், தோழிமார்கள், கோபர்கள்  சூழ்ந்து உட்கார்ந்து கொண்டு கண்ணன் சாப்பிடும் அழகைப் பார்க்கிறார்கள்.  துளியாவது   கண்ணன் வாய்க்குள் போக  வேண்டுமே  என்று யசோதை படாத பாடு படுகிறாள். ஆடவேண்டும், பாடவேண்டும்,  அவனை எப்படியாவது தாஜா பண்ணி சாப்பிட வைக்கவேண்டும்.. சில பருக்கைகளை விழுங்குவான், பலதை துப்புவான், யசோதையின்  புடவையெல்லாம் சாத அபிஷேகம்.  திடீரென்று கையை நீட்டி  பிசைந்த சாதத்தை வாங்கிக்  கொள்வான்,அதை அப்படியே  நந்தகோபன் வாயைத்  திறக்கச் சொல்லி உள்ளே  போடுவான். சிரிப்பான்.  சிலது   ”உனக்கு கொடுக்கமாட்டேன் எனக்கு தான்”   என்று ஏமாற்றி தானே  சாப்பிடுவான். கூட இருக்கும் கோபர்களை தலையசைத்து வா என்று அருகே அழைத்து அவர்கள் கையில் கொடுப்பான்.  ”அம்மா  உனக்கு இந்தா”   என்று திரும்பி யசோதையின் வாயில்  சின்னக் கையால் கொஞ்சம் சாதம்  போடுவான்.  யசோதை மூன்று உலகையும் வென்ற சந்தோஷத்தில்  ஆனந்தமாக  ரசித்து   உண்டு  சிரிப்பாள்.  அவன் உடம்பெல்லாம் அன்னாபிஷேகம். வெண்ணை பால் தயிர் எல்லாம் எப்போதும் அவன் உடலிலும் ஆடையிலும் கமகமவென்று மணக்கும். குறைந்தது   ஒன்றரை ரெண்டு  மணி  நேரமாவது  சிறிது உணவு அவன் வயிற்றுக்குள் போக   பிரயாசைப்  படவேண்டும்.  இதை நேர இருந்து பார்த்தது போல்  விவரிக்கும் ஸூர்  தாஸ்  இந்த பாடலை முடிக்கும்போது அபூர்வமாக ஒரு வரி சேர்த்திருக்கிறார்.
”கண்ணா, நீ உண்டது போக, மற்றவர்களுக்கு தந்தது போக,  கையலம்புவதற்கு முன்  கொஞ்சூண்டு மீதி இருந்தால் இதோ இந்த கிழவன் ஸூர் தாசுக்கும் கொடேண்டா. எத்தனையோ ஜென்ம  பாபங்கள் என்னைவிட்டு அகலுமே  கிருஷ்ணா.”.. என்கிறார். 

Kanha eats in Yasoda’s lap.
some he eats, some he drops,
as the ladies of Nandgaon watch,
some he eats and some he puts
in Nanda’s mouth,
this joy is beyound recount.
some he eats, some gives to gopas,
butter in his hands, curd in doniyas.
The joy of Yasoda
the three worlds cannot account.
the meal is over, Kanha washes,
for Sur the left-overs count.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2563

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;