
ஸூர் ஸாகரம் – நங்கநல்லூர் J K SIVAN
எங்கே போனான் அவன்?
ஹே, ப்ருந்தாவனமே எங்குமே எதிலுமே உயிர் சத்தைக் காணோமே, வெறிச்சோடி விட்டதே ஒரே நாளில். துரதிர்ஷ்டமான வனமே . ஆம் வனம் காடு ரெண்டும் ஒரே அர்த்தம் தான். ஆனால் வனம் என்று சொல்லும்போது அதில் ஒரு உயிர் துடிப்பு, பசுமை, வளமை, இனிமை இருக்கிறது, செடியும், கொடியும், மலரும் அகக்கண்ணில் படுகிறது. ஆனால் காடு என்று சொல்லும்போது முள்ளும், அடர்ந்த மரங்களும் மட்டுமே இருளாக தெரிகிறது. ஏன் அப்படி நீ ஆகி விட்டாய்? அந்த சிறு பயல் கிருஷ்ணன் ஒருவன் இத்தனை மாற்றங்களை ஒரே நாளில் பண்ணிவிட்டு இங்கிருந்து போய்விட்டானே . இன்னுமா உன்னிடம் பசுமை இருக்கிறது?. மெதுவாக நீயும் காய்ந்து உலர்ந்து காடாகிவிடவில்லையா? உன்மனம் கல்லா? ஆஹா கடம்ப மரமே, நறுமணம் மிக்க மலரை சொறியும் உன்னடியில் உட்கார்ந்து புல்லாங்குழலில் இனிய கீதம் காற்றோடு கலந்து எங்கும் இன்பமூட்டும் அந்த கண்ணன் எங்கே? உன்மேல் அவன் சாய்ந்து அமரும் அழகே ஒரு அலாதி கிளுகிளுப்பை உண்டாக்குமே . நான் இசைத்தால் அசையும் அகிலமெல்லாம் என்று அவன் சொல்லாமல் சொல்லி அவன் குழலோசையில் சகல உயிர்களையும், தாவர ஜங்கம வஸ்துக்கள் அனைத்தையும் மயக்கத்தில் கட்டிப்போடுவானே, எங்கே அவனைக் காணோம்? முனிவர்கள் ரிஷிகள் தவத்தை நிறுத்தி அவன் இசையில் மனதைப் பறி கொடுப்பார்களே , அந்த மோஹனன் எங்கே போனான்? அந்த காந்த கருவிழிகள் உருண்டு திரண்டு விழித்து காணும் யாவற்றையும் கவர்ந்து இழுக்கும், அவற்றை மறந்து போய்விட்டர்களா எல்லோருமே? மரமே நீ மீண்டும் பூத்துக் குலுங்குவாயா? அப்படி செய்ய உனக்கு மனதுண்டா? கிருஷ்ணனின் பிரிவு எனும் காட்டுத் தீயில் அனைத்தும் எரிந்து,கருகி சாம்பலாகி விடுகி றதே.. நீயும் எரிந்து போவாயா மரமே?
கருப்பா, வாடா, ஓடி வாடா, தவறுகள் எங்களுடையது தானடா…உன்னை விட்டிருக்கவே கூடாது. ராதையைப் பார், தன்னையே இழந்து மரக்கட்டையாகிவிட்டாள் . நினைவு, மனமிழந்து பிச்சியாகிவிட்டாள் .
” கிருஷ்ணா, எங்கே போனாய் வா” என்ற அவள் கூக்குரல் ப்ருந்தாவனம் முழுதும் எதிரொலிக்கிறதே. உன்னைக்காணாத ஒவ்வொரு வினாடியும் ஒரு யுகமாக நீள்கிறதே. யமுனையின் வெள்ளத்தை விட அதிக கண்ணீர் வடித்து தரையில் விழுந்து கிடக்கிறாள், புரள்கிறாளே.
பழைய நினைவுகளில் சில நேரங்கள் குதூகலிக் கிறாள். அடுத்த கணம் சோர்ந்து வாடி கதறுகிறாள். அவள் பேச்சும் மூச்சும் கிருஷ்ணா கிருஷ்ணா என்று உன் நாமம் ஒன்றே. என்னையும் உன்னோடு அழைத்துக்கொண்டு போய்விடு என்று கேட்கிறாளே உன் காதில் விழுகிறதா கண்ணா? உன் பிரிவின் கொடுமை எல்லோருக்குமே அதிகமாக இருந்தாலும் ராதைக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ஜாஸ்தியாக இருக்காதா?
O wretched forest
how is it that you are still green?
In the deep agony of separation
from beautiful Shyam, why haven’t you
withered away? Mohan used to play his flute under your shade
O treel leaning against your branches.
With that flute he charmed movable and immovable.
Sages lost their deep concentration.
And you have forgotten those eyes!
You flower again and again, shamelessly.
Surdas says, in the fierce forest fire
of the separation from our Lord
why have you not burnt from top to bottom?
’Come, meet me O Dark One! the mistake had been mine.’
Radha has lost all awareness of her body, her mind.
She cries out his name all the time.
She calls out, ‘Krishna, O Krishna!’
A moment seems like a decade
Having fallen on the earth, agitated, listless, she moans
The stream of tears runs from her eyes.
Sometimes she becomes joyous, sometimes she recalls the
meeting ‘Take me, O take me,’ says the woman
burning in separation. The other women of Braj,
seeing this state of Radha Stand still, amazed.
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



