SIVAPARAADHA KSHAMAAPANA STHOTHRAM – J K SIVAN

சிவாபராத க்ஷமாபணஸ்தோத்ரம்-
நங்கநல்லூர் J K SIVAN

ஆதி சங்கரர் – ஸ்லோகம்.6

நின்னை நினைக்காத என்னை மன்னித்து விடு.

6. दुग्धैर्मध्वाज्ययुक्तैर्दधिसितसहितैः स्नापितं नैव लिङ्गं नो लिप्तं चन्दनाद्यैः कनकविरचितैः पूजितं न प्रसूनैः ।
धूपैः कर्पूरदीपैर्विविधरसयुतैर्नैव भक्ष्योपहारैः क्षन्तव्यो मेऽपराधः शिव शिव शिव भो श्रीमहादेव शम्भो ॥ ६॥

துக்தைர்மத்வாஜ்யயுக்தை:ததிகுடஸஹிதை:ஸ்நாபிதம் நைவலிங்கம் நோலிப்தம் சந்தனாத்யை:கனக விரசிதை:பூஜிதம் நப்ரஸ¨னை:!தூபை: கர்பூரதீபை:
விவத ரஸயுதை:நைவ பக்ஷ்யோபஹாரை: க்ஷந்தவ்யோ மேsபராத:சிவ சிவ சிவ போ:ஸ்ரீமஹாதேவ சம்போ!!

நான் உனக்கு அபிஷேகம் செய்தேனா என்று கேட்காதே. நிச்சயம். இல்லை. தேன், நெய், தயிர், வெல்லம்,பால் அபிஷேகம் கிடக்கட்டும். ஒரு உத்ரணி ஜலம் கூட உன் மேல் விட்டதில்லை. அப்புறம் எங்கே சந்தனம் சாத்துவது, புஷ்பாலங்காரம் செய்வது? . சாதாரண புஷ்பத்தாலேயே ரெண்டு பூவையாவது எடுத்து உன் மேல் போடாதவன் எங்கே தங்க காசுகளால் ஸ்வர்ணாபிஷேகம் செயதிருக்க முடியும்?. கிணு கிணு வென்று மணி அடித்து கர்ப்பூரம் சாம்ப்ராணனி,தசாங்கம், ஊதுபத்தி, காட்டாதவன் சாதாரண தீபத்தை கூட உனக்கு காட்டவில்லை. பல்சுவை பக்ஷ்யங்கள் நிவேதனம் எப்போது செய்திருக்கிறேன்?. எல்லா பக்ஷணங்களையும் வயிறு புடைக்க தின் றவன் ஒரு கணம் கூட அவை உனக்கே அர்ப்பணம் என்று சொல்லி வாயில் போட்டுக் கொண்டது கூட இல்லையே. மஹா தேவா, சம்போ, பரமேவாரா, இவ்வாறெல்லாம் தொடர்ந்து பல வருஷங்கள் இந்த வாழ்க்கையில் நான் செய்த அபராதங்களை எல்லாம் பொருட்படுத்தாது எனக்கு உன் அருளைத் தருவாயா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *