VIVEKA CHOODAMANI SLOKAS 96-102 – J K SIVAN

விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

ஸ்லோகங்கள் 96-102

96 विकृतेर्भेदात्सुवर्णसलिलमिव वागादि पञ्च श्रवणादि पञ्च प्राणादि पञ्चाभ्रमुखानि पञ्च । बुद्ध्याद्यविद्यापि च कामकर्मणी पुर्यष्टकं सूक्ष्मशरीरमाहुः ॥ 96॥

vikrudher bedhath suvarnasilamiva vāgādi pañcha śravaṇādi pañcha prāṇādi pañchābhramukhāni pañcha । buddhyādyavidyāpi cha kāmakarmaṇī puryaṣṭakaṃ sūkṣmaśarīramāhuḥ ॥ 96॥

விக்ரு’தேர்பே⁴தா³த்ஸுவர்ணஸலிலமிவ வாகா³தி³ பஞ்ச ஶ்ரவணாதி³ பஞ்ச ப்ராணாதி³ பஞ்சாப்⁴ரமுகா²நி பஞ்ச । பு³த்³த்⁴யாத்³யவித்³யாபி ச காமகர்மணீ புர்யஷ்டகம் ஸூக்ஷ்மஶரீரமாஹு: ॥ 96॥

ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் என்று ஐந்து ஐந்து புலன்களும், அவற்றின் செயல்பாடுகளும் நமக்கு தெரியும். அங்கங்களின் மூலம் தான் நமது இயக்கமெல்லாமே. அவற்றில் ஞானேந்திரியம் மூலம் தான் பேசுகிறோம், கேட்கிறோம், ருசிக்கிறோம், வாசம் அறிகிறோம், காண்கிறோம். இன்னொரு ஐந்து இருக்கிறது.அது காற்று ஸ்வரூபம். பஞ்ச பிராணன் என்று அதற்குப் பெயர். ஆச்சர்யமாக இன்னொரு ஐந்து ஏற்கனவே நமக்கு தெரிந்த இந்த பிரபஞ்ச காரணமான ‘பஞ்ச பூதங்கள்;, இதைத் தவிர இன்னும் நமக்குள் நமக்கு தெரியாமலேயே இருப்பவை சூக்ஷ் மமானவை. புத்தி, அஹங்காரம், அவித்யா, பஞ்ச மஹா பாவங்களை புரிய வைக்கும் காம மோஹ, க்ரோத, மத மாச்சர்யங்கள். இதெல்லாம் சேர்ந்த ஸ்தூல சரீரம் தாம். அதற்கு தான் உலகில் பெயர் அடையாளம் போட்டோ வீடியோ,வாட்ஸாப்ப் எல்லாம். அதனுள் ஆத்மா.

इदं शरीरं शृणु सूक्ष्मसंज्ञितं लिङ्गं त्वपञ्चीकृतभूतसम्भवम् । सवासनं कर्मफलानुभावकं स्वाज्ञानतोऽनादिरुपाधिरात्मनः ॥ 97॥ स्वप्नो भवत्यस्य विभक्त्यवस्था स्वमात्रशेषेण विभाति यत्र । स्वप्नेतुबुद्धिः स्वयमेव जाग्रत् कालीननानाविधवासनाभिः ॥ 97॥

idaṃ śarīraṃ śa‍ṛṇu sūkṣmasañjñitaṃ liṅgaṃ tvapañchīkṛtabhūtasambhavam । savāsanaṃ karmaphalānubhāvakaṃ svājñānatō’nā dirupādhirātmanaḥ ॥ 97॥

இத³ம் ஶரீரம் ஶ்ரு’ணு ஸூக்ஷ்மஸம்ஜ்ஞிதம் லிங்க³ம் த்வபஞ்சீக்ரு’தபூ⁴தஸம்ப⁴வம் । ஸவாஸநம் கர்மப²லாநுபா⁴வகம் ஸ்வாஜ்ஞாநதோ ऽநாதி³ருபாதி⁴ராத்மந: ॥ 97॥

கேளப்பா .ஸ்தூல சரீரமாக ‘ ராமன் குப்பன், மோஹனா, ஸரஸா’ என்ற பெயரோடு நாம் உலவுகிறோமே, அந்த ஸ்தூல சரீரத்துக்குள் உறையும் ஸூக்ஷ்ம சரீரம் இன்னொரு பெயரோடு பகுத்து அறியப்படுகிறது . லிங்க சரீரம் என்று சொல்வார்கள். நம் உடம்பு மொத்தத்தில் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. அதால் உருவாகிறது என்று சொல்லும்போது நாம் ஏன் ஒருவர் போல் மற்றொருவர் இல்லை, உருவம், குணம், எல்லாமே மாறுகிறதா. காரணம் என்ன தெரியுமா? சாம்பாரில் எத்தனை ஸ்பூன் காரம், எத்தனை ஸ்பூன் உப்பு, எவ்வளவு பெருங்காயம்,எத்தனை எவ்வளவு கொத்தமல்லி கருவேப்பிலை, கடுகு மிளகு, பருப்பு, தண்ணீர், நெய், காய்கறிகள், எண்ணெய் ….தனியா. இதன் அளவுகள் மாறி மாறி இருப்பதால் வித விதமாக சாம்பார் ருசிக்கிறது. சிலது நன்றாக இருக்கிறது, சிலது வாயில் வைக்க முடியவே இல்லை சாப்பிடவே முடிய வில்லை. ஆனால் முக்யமான விஷயம், எல்லாமே உப்பு, புளி , பருப்பு போல் எல்லாம் சேர்ந்தது தான்.

அப்படித் தான்,நமது உடம்பு, குணம் எல்லாம் நமக்குள் எத்தனை ஜலம் , காற்று, ஆகாசம், மண் ,அக்னி, புத்தி, அஹங்காரம், மனதில் உடம்பில் கலந்திருக்கிறது என்பதை பொறுத்தது.

பஞ்ச பூதங்கள் தனித் தனியாக பிரிக்கப்பட்டு, பல பிரிவுகளாக, ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவில் மாறு பட்டு (தன்மாத்திரைகள்) பல ஜீவன்களாக ஸ்தூல சரீரமாக நாம் வேறுபட்டு காணப்படுகிறோம். ஒவ்வொன்றின் உள்ளேயும் பழைய ஞாபக, எண்ண மலைகள் அடுக்கடுக்காக மனம் என்ற ஒன்றில் திணிக்கப்பட்டு அனுப்பப்படுகிறோம். வாஸனா என்று சமஸ்க்ரிதத்தில் சொல்லப்படுபவை. ஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்த செயல்களின் பலன் அவை. கர்மா எனப்படுவது. ஆத்மாவை சுற்றி ஆடையாக இவை மறைப்பவை. அஞ்ஞான இருளில் உழல்பவை.

स्वप्नो भवत्यस्य विभक्त्यवस्था स्वमात्रशेषेण विभाति यत्र । स्वप्ने तु बुद्धिः स्वयमेव जाग्र- त्कालीननानाविधवासनाभिः ॥98||
svapnō bhavatyasya vibhaktyavasthā svamātraśēṣēṇa vibhāti yatra । svapnē tu buddhiḥ svayamēva jāgrat kālīnanānāvidhavāsanābhiḥ ॥ 98॥

ஸ்வப்நோ ப⁴வத்யஸ்ய விப⁴க்த்யவஸ்தா² ஸ்வமாத்ரஶேஷேண விபா⁴தி யத்ர । ஸ்வப்நே து பு³த்³தி:⁴ ஸ்வயமேவ ஜாக்³ரத் காலீந நாநா வித⁴ வாஸநாபி:⁴ ॥ 98॥

कर्त्रादिभावं प्रतिपद्य राजते यत्र स्वयं भाति ह्ययं परात्मा। धीमात्रकोपाधिरशेषसाक्षी न लिप्यते तत्कृतकर्मलेशैः । यस्मादसङ्गस्तत एव कर्मभि- र्न लिप्यते किञ्चिदुपाधिना कृतैः ॥९९॥

kartrādibhāvaṃ pratipadya rājatē yatra svayaṃ bhāti hyayaṃ parātmā । (pāṭhabhēdaḥ – svayañjyōtirayaṃ) dhīmātrakōp ādhiraśēṣasākṣī na lipyatē tatkṛtakarmalēśaiḥ । karmalēpaiḥ yasmādasaṅgastata ēva karmabhiḥ na lipyatē kiñchidupādhinā kṛtaiḥ ॥ 99॥

கர்த்ராதி³பா⁴வம் ப்ரதிபத்³ய ராஜதே யத்ர ஸ்வயம் பா⁴தி ஹ்யயம் பராத்மா । ஸ்வயஞ்ஜ்யோதிரயம் தீ⁴மாத்ரகோபாதி ⁴ரஶேஷஸாக்ஷீ ந லிப்யதே தத்க்ரு’தகர்மலேஶை: । கர்மலேபை: யஸ்மாத³ஸங்க³ஸ்தத ஏவ கர்மபி:⁴ மணி: ந லிப்யதே கிஞ்சிது³பாதி⁴நா க்ரு’தை: ॥ 99॥

98-99. மேலே சொன்ன ரெண்டு ஸ்லோகங்களுக்கும் இது ஒரு சின்ன விளக்கம். நமக்கு மூன்று நிலைகள் இருக்கிறது. நமது வாழ்வே இந்த மூன்றின் மூலம் தான். விழிப்பு, கனவு, .ஆழ்ந்த உறக்கம். இது தான் மனித வாழ்க்கை. ஒவ்வொன்றும் தனித்தனி. ஒவ்வொன் றுக்கும் வெவ்வேறு தன்மை உண்டு. கனவில் புத்தி தான் ஹீரோ. விழிப்பு நிலையின் எப்போதோ நடந்த சில அனுபவங்களை படமாக்கிக் காட்டி, நிஜம் போல் நம்பவைக்கும் சினிமா டைரக்டர். ஆத்மா ஜோதி மயமாக இதில் சம்பந்தப்படாமல் தனித்திருக்கிறது., புத்தியின் சேஷ்டைகளை வெறுமே, சாட்சியாக ,பார்த்துக் கொண்டிருக்கிறது. அதனால் தான் கர்மாவுக்கும் ஆத்மாவுக்கும் சம்பந்தமே இல்லை.

सर्वव्यापृतिकरणं लिङ्गमिदं स्याच्चिदात्मनः पुंसः । वास्यादिकमिव तक्ष्णस्तेनैवात्मा भवत्यसङ्गोऽयम्॥100॥

sarvavyāpṛtikaraṇaṃ liṅgamidaṃ syāchchidātmanaḥ puṃsaḥ । vāsyādikamiva takṣṇastēnaivātmā bhavatyasaṅgō’yam ॥ 100॥

ஸர்வவ்யாப்ரு’திகரணம் லிங்க³மித³ம் ஸ்யாச்சி தா³த்மந: பும்ஸ: । வாஸ்யாதி³கமிவ தக்ஷ்ணஸ்தே நைவாத்மா ப⁴வத்யஸங்கோ³ऽயம் ॥ 100॥

100. சூக்ஷ்ம சரீரம் தான் ஆத்மாவின் எடுபிடி ஆள். ஞானம் அறிவு இவற்றின் பலனை புத்தி மூலம் பெறுகிறது. ஒரு தச்சர் சரியாக வேலை செய்யும் இழைப்புளி,கொட்றாப்புளி, உளி, வாள் , ஆணிகள், மூலம் மரங்களிலிருந்து வீட்டு சாமான்களை உருவாக்குபவது போல நமது இந்திரியங்கள் நம்மை இயக்குகிறது.

अन्धत्वमन्दत्वपटुत्वधर्माः सौगुण्यवैगुण्यवशाद्धि चक्षुषः । बाधिर्यमूकत्वमुखास्तथैव श्रोत्रादिधर्मान तुवेत्तुरात्मनः ॥ 101॥

andhatvamandatvapaṭutvadharmāḥ sauguṇyavaiguṇyavaśāddhi chakṣuṣaḥ । bādhiryamūkatvamukhāstathaiva śrōtrādidharmā na tu vētturātmanaḥ ॥ 101॥

அந்த⁴த்வமந்த³த்வபடுத்வத⁴ர்மா: ஸௌகு³ண்ய வைகு³ண்யவஶாத்³தி⁴ சக்ஷுஷ: । பா³தி⁴ர்ய மூகத்வமுகா²ஸ்ததை²வ ஶ்ரோத்ராதி³த⁴ர்மா ந து வேத்துராத்மந: ॥ 101॥

101. கண் எனும் அங்கத்தை, இந்திரியத்தை உதாரண மாக எடுத்துக் கொண்டால், அதற்கு குருடு, நோய்கள், களைப்பு, கூர்மையாக கவனிப்பது, போன்ற செயல்பாடுகள் உள்ளன. அது சரியாக வேலை செய்வதும், குறைபாடுடன் சரியாக செயல்படாமல் இருப்பதற்கும் இந்த குறுக்கீடுகள் தான் காரணம். அதே போல் காது செவிடாவதும், வாய் ஊமையாவதும் இந்த சூக்ஷ்ம சரீரத்தின் வேலை. அதற்கும் ஆத்மா வுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

उच्छ्वासनिःश्वासविजृम्भणक्षुत्प्रस्यन्दनाद्युत्क्रमणादिकाः क्रियाः । प्रस्पन्दनाद्य् प्राणादिकर्माणि वदन्ति तज्ञाः var तज्ज्ञाः प्राणस्य धर्मावशनापिपासे ॥102॥

uchChvāsaniḥśvāsavijṛmbhaṇakṣu-tprasyandanādyutkramaṇādikāḥ kriyāḥ । (pāṭhabhēdaḥ – praspandanādy) prāṇādikarmāṇi
vadanti tajñāḥ (pāṭhabhēdaḥ – tajjñāḥ) prāṇasya dharmāvaśanāpipāsē ॥ 102॥

உச்ச்²வாஸநி:ஶ்வாஸவிஜ்ரு’ம்ப⁴ணக்ஷுத்ப்ரஸ்யந்த³நாத்³யுத்க்ரமணாதி³கா: க்ரியா: । ப்ரஸ்பந்த³நாத்³ய் ப்ராணாதி³கர்மாணி வத³ந்தி தஜ்ஞா: var தஜ்ஜ்ஞா: ப்ராணஸ்ய த⁴ர்மாவஶநாபிபாஸே ॥ 102॥

மூச்சு எனும் காற்று தான் ஸார் ரொம்ப ரொம்ப அவசியம் நமக்கு. நம் உடம்பு ஒரு ஆச்சர்யமான காற்றடைத்த பை . பொய் . மூச்சை இழுத்து வெளியே உள்ள பிராணவாயுவை உள்ளே அனுப்புவதும். அதை வாங்கிக்கொண்டு கரியமிலவாயுவை வெளியே அனுப்புவதும் நம்முள் நடக்கும் அற்புத லீலை. உடம்பு என்பதே பகவான் கொடுத்த ஒரு அற்புத மெஷின். மூச்சை இழுத்து வெளியே அனுப்புவது தான் பிராணாயாமம். என் நண்பர் ஆத்ம ஞான யோகி ராஜாராமன் அற்புதமாக சொல்லிக் கொடுத்தார்.. அவசியம் தினமும் ரெண்டு மூன்று வேளை பண்ண வேண்டும் என்பதற்காக தான் சந்தியா வந்தனம் என்ற வழக்கம் முன்னோர்கள் நமக்கு வைத்திருப்பது.
அதன்மதிப்பு தெரியவில்லை என்றால் அது நமது துர்பாக்கியம். கொட்டாவி விடுகிறோம், அதிக பக்ஷ தேவையற்ற காற்று வெளியே அனுப்பப்படுகிறது. தும்மல் காற்றோடு சில தேவையற்ற சமாசாரங்களை மூக்கின் வழியாக வெளியே தள்ளுகிறது. சுரப்பிகள் பிரமாதமாக வேலை செய்கிறது. உணவு செரிமானம் செய்யப்பட்டு, சத்துக்கள் ரத்தத்துக்கு, குழாய்கள் மூலம் மெஷின் மாதிரி இதயத்துக்கு விடாமல் உயிருள்ளவரை அனுப்பப்படுகிறது. கழிவு, சக்கை வெளியே தள்ளப்படுகிறது. பாவம் இவை யெல்லாம் நம்மிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் நாம் செய்யும் தீங்குகளை பொறுத்துக்கொண்டு தானே வேலை செய்கிறது. . பசி தாகம் எல்லாம் அதால் தான் உண்டாகிறது. அதன் மதிப்பு தெரியாமல் நாம் அதை கெடுத்துக் கொண்டு அது மீண்டும் சரியாக வேலை செய்ய பல வெள்ளை கோட்டுகளிடம் போய் காசை கொட்டுகிறோம் . ஆனால் பகவான் போல் காசு வேலை செய்யாதே. அந்த மூச்சுக்காற்று, இந்த உடம்புக்கு நன்றாக துரோகமில்லாமல் உழைத்துவிட்டு ஒருநாள் ‘ இனி உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை, என் வேலை முடிந்துவிட்டது’ என்று போனபோது நமக்கு கிடைக்கும் பெயர் ‘பிணம்’.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;