
திருமந்திரம் -2 – நங்கநல்லூர் J.K. SIVAN
திருமூலர்
ஆரம்ப காலத்தில் மருந்து மாத்திரை மருத்துவர் கிடையாது. எல்லாவற்றுக்கும் மந்திரம். தாயத்து, பரிகாரம் இது தான். தலைவலித்தால் ஒரு மந்திரம், ஊருக்கு போகுமுன் சொல்ல ஒரு மந்திரம், போகும் வழியில் வழித்துணைக்கு, பாதுகாப்பாக ஒரு மந்திரம், குளிக்கும் முன், குளிக்கும் போது, குளித்தபின், படுக்கு முன், படுக்கையை விட்டு எழுந்த பின் என்றெல்லாம் எத்தனை எத்தனையோ, ஸ்லோகங்கள் மந்திரங்கள் சொல்லும் வழக்கம் இருந்தது. இன்னமும் சிலர் பின் பற்றி வருகிறார்கள். பகவான் காப்பாற்றுவார். அவன் தான் வைத்யநாதன், அவன் தான் தன்வந்திரி, என்று தீவிரமாக நம்பி வாழ்ந்த காலம் மாரி , இன்னும் சிலர் ”பகவான் மேலே பாரத்தை போட்டுவிட்டு அவனை நம்பி வாழ்கிறார்கள்” முற்காலத்தில் மக்கள் நீண்ட காலம் வாழ்ந்தவர்கள் என்பதே சரியான உதாரணம். இதிலெல்லாம் அவர்களுக்கு பலன் கிடைத்தது என்பதற்கு சான்று.
நாளாக நாளாக பழைய வழக்கங்கள் எல்லாம் குறைந்து வந்து கொண்டே வருகிறது. நாம் மந்திரங்கள் பூஜை செய்வதில்லை, நமக்கு பதிலாக யாரோ எப்போதோ சொல்லிய, பேசிய, மந்திரங்களை ஒரு பட்டனைத் தட்டி ஒலிக்கிறோம் . பக்தியின் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி இது.
”ஹர் ஹர் மஹா தேவ் ” என்று சிவாஜி மகாராஜாவின் படைகள் வீரமாகச் சொல்லிக்கொண்டே தான் எதிரியின் சேனைக்குள் நுழைவர். உயிரைத் திரணமாக மதித்து போரிட்டு வெற்றி பெற்றனர்.
சிவாலயங்களில் கோவிலுக்குள் சென்று சிவன் சந்நிதியில் ”ஓம் நமச்சிவாயா” என்றும் ”ஹர ஹர மகாதேவா” என்றும் அடிவயிற்றிலிருந்து உணர்ச்சி பூர்வமாக சொல்லும் போது கிடைக்கும் ஆனந்தம் எழுத முடியாது. அந்த அனுபவம் அலாதியானது. ஹர ஹர என்றால் கிடைக்காதது ஏதாவது உண்டா? ஏன் இது தெரியவில்லை பலருக்கு? ஹர ஹர என்று சொல்பவன் உண்மையிலேயே உணர்ந்து போற்றி வணங்கி சொல்வானேயானால் அவன் மனிதனல்ல தேவன்.
இன்னொரு அருமையான ரகசியம். ஹர ஹர என்று மனமும் நாவும் உவந்து சொல்வார்க்கு பிறப்பே இனி கிடையாது. இந்த ரகசியம் ஏதோ நான் சொன்னதாக நினைக்கவேண்டாம். திருமூலர் தனது திருமந்திரத்தில் அப்படி சொல்லியிருகிறாரே:
அரகர என்ன அரியதொன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப்பு அன்றே
ஹர ஹரா என்று சொல்லிவிடு. அதைவிட சிறந்த உயர்ந்த மந்திரம் எதுவும் இல்லை. இப்படிப்பட்ட எளிய உயர்ந்த மந்திரத்தை ஏனோ யாரும் அறியாமல் இருக்கிறார்களே! ஹரஹர என்று சொல்லிவிட்டு கண்ணாடியில் உன்னைப் பார்.உனக்கே உன்னை அடையாளம் தெரியாது. நீ மனிதனாக இல்லாமல் தேவனாக மாறி விட்டதால் உனக்கே உன்னை எப்படி அடையாளம் புரியும்? எல்லாவற்றையும் விட மேலான ஒரு லாபம் ஹரஹர என்று எவன் சொல்கிறானோ அவனுக்கு அடுத்த பிறவியே கிடையாது. இனிமேல் ரேஷன் கடையில்நிற்கவேண்டாம். வருமான வரி கட்டவேண்டாம், ஒட்டு போட்டு எவனையோ தேர்ந்தெடுத்து தலைவனாக்கி அவஸ்தை படவேண்டாம். என்கிறார் திருமூலர்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



