
ஸ்ரீ ராம தரிசனம் – 3. நங்கநல்லூர் J K SIVAN
துளசி தாசர்
மனைவியின் பேச்சு ஒரு தூண்டுகோலாக அவரை மாற்ற , துளசி தாசர் நேராக காசிக்கு சென்றார்.
அநேகருக்கு தெரியாத ஒரு அற்புத பெயர் காசி க்ஷேத்ரத்துக்கு உண்டு. ”ஆனந்தவனம்”, தினமும் பாகீரதியில் அமிழ்ந்து ஸ்னானம் செய்தார். அவரது உணவு வெறும் பழங்கள், காய்கள் , மரத்திலிருந்து உதிர்ந்த இலைகள். நாள் முழுதும் ஸ்ரீராம த்யானம். ”ஜானகி ரமணா, உன்னை எனக்கு காட்டு ” ஜபம் செய்து விட்டு தினமும் செம்பில் மீந்த ஜலத்தை மரத்தடியிலும் அருகே செடிகளுக்கும் கொட்டுவார். வருஷங்கள் பன்னிரண்டு இப்படியே ஓடிவிட்டன.
வழக்கம் போல் காட்டில் ஸ்நானம் செய்ய சென்ற துளசிதாசர் . வழக்கமாக மீந்து போன ஜலத்தை மரத்தின் வேரில் ஊற்றும் இடத்தில் ஒரு ராக்ஷஸன். கை கட்டி நிற்கிறான். துளசி தாசர் அவனைப் பார்த்ததும் அசந்து போய்விட்டார். . தனக்கு எதிரே ஆஜானுபாகுவாக ராக்ஷஸன் கை கட்டி நிற்கிறானே . என்ன விஷயம்? துளசிதாசருக்கு அவனிடம் எந்த பயமுமில்லை.
”அப்பா, நீ யார், எதற்கு முன் நிற்கிறாய் இங்கு? என்ன வேண்டும் உனக்கு?”
”சுவாமி, எனக்கு உங்களிடம் அபார பக்தி . உங்கள் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும். நீங்கள் ஒரு மஹான். உங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று விருப்பமாக இருக்கிறதே. உங்களுக்கு என்ன வேண்டும் சொல் லுங்கள். அதை என்னால் செய்ய முடியும்?” என்றான் அந்த ராக்ஷஸ உருவமுள்ளவன்.
”அப்பனே நீ யார்? எதற்காக உனக்கு என்னைப் பிடித்தது? எதற்கு எனக்கு உதவி செய்ய வேண்டும் என நினைக்கிறாய்? எனக்கு ஒன்றும் புரியவில்லை, விளக்கமாக சொல்” –துளசிதாசர்.
”சுவாமி, நான் ஒரு ராக்ஷஸன். வெகுகாலம் இந்த மரத்தில் வசிப்பவன். ஒவ்வொரு நாளும் நீங்கள் இந்த மரத்தின் வேரில் கொட்டும் மந்திர ஜலத்தை குடித்து வளர்ந்தவன். எங்களுக்கு கிணறு, குளம் ஆறு, ஏரி, கடல் இதிலிருந்தெல்லாம் நீர் பருக அனுமதி கிடையாது. பலகாலம் தாகமாக இருந்த எனக்கு பன்னிரண்டு வருஷங்களாக நீங்கள் தான் தினமும் குடிக்க நீர் வழங்கிய தர்ம பிரபு. அந்த நன்றிக் கடன் தீர்க்கவே தான் உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள், செய்கிறேன்” என்று சொன்னேன்.
”அப்பனே, ரொம்ப சந்தோஷம். எனக்கு என் ராமனை நேரில் தரிசனம் செய்ய ஆசை. அதை உன்னால் எப்படியப்பா நிறைவேற்றி தர முடியும்?”
”முடியும்” என்று சொன்னான் அந்த ராக்ஷஸன்.
”ஒரு காலத்தில் சிறு மாங்கன்று நட்டேன். அது விருக்ஷமாகி மாங்கனியாகவா உருவானவன் இந்த ராக்ஷஸன். காமதேனு தேடியவனுக்கு பன்றியா கிடைத்தது?. என் ராமனின் தரிசனம் தேடிய எனக்கு ஒரு ராக்ஷஸன் தரிசனமா? என் தவம், சாத்வீகம், எல்லாமே ஒரு ராக்ஷஸனுக்கு தான் பிடித்திருக்கிறது. நான் என்ன செய்ய? ராஜ ஹம்சத்தை நோக்கி தவமிருந்தவன் ஒரு காகத்தை தான் தரிசித்தேன். இருக்கட்டும். தாமிரத்தை உபயோகித்து தான் தங்கத்தை பளிச்சிட செய்யமுடியும். இவனையும் தான் கேட்டுப் பார்ப்போமே என்று தான் துளசிதாசருக்கு தோன்றியது.
”சுவாமி, என்னை தாங்கள் சந்தேகிக்கிறது போல் தோன்றுகிறது. உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் நான் முயற்சி செய்கிறேன் என்றான் அந்த ராக்ஷசன்.
நூல் இல்லாமல் மாலை தொடுக்க முடியாது. ஊசியில்லாமல் துணியை தைக்கமுடியாது. துடைப்பம் இருந்தால் தான் அழகான மாளிகையும் பெருக்கப்பட்டு சுத்தமாகும். சாதாரணனிடம் கூட சிறந்த சக்தி இருக்கலாம். தப்பாக இந்த ராக்ஷஸனை நாம் எடை போடக்கூடாது என்று நினைத்தார் துளசிதாசர்.
”அப்பா உன்னை பற்றி சற்று யோசித்தேன். அவ்வளவு தான். எனக்கு தேவை ஸ்ரீ ராமன் தரிசனம் வேறொன் றும் இல்லை.
ராமன் என்ற பெயரை கேட்டதும் ராக்ஷஸன் திடுக்கிட்டான். பின் வாங்கினான்.
”அந்த பெயரை சொன்னால் நான் மரணமடைவேன். ராக்ஷஸர்களை அழிக்கும் நாமம் அது. நீங்கள் ஹநுமானிடம் வேண்டிக் கொள்ளுங் கள் அவர் உங்கள் ஆசையை பூர்த்தி செய்வார். ராமனின் தூதன் ஹனுமான். நான் ஹனுமனை உங்களுக்காக போய் வேண்டிக் கொள்கிறேன்” என்றான் ராக்ஷஸன்.
”ஆஹா. உனக்கு ஹனுமனை தெரியுமா? அடடா. எங்கேயப்பா இருக்கிறான் மாருதி. உனக்கு தெரியுமானால் எனக்குச் சொல். காட்ட முடியுமானால் அவனை எனக்கு காட்டு ” – துளசிதாசர்.
”சுவாமி, நீங்கள் ஓரிடத்தில் போய் தினமும் புராணங்கள் கேட்பீர்களே. ராமநாம த்யானம் பஜனை நடக்குமே அந்த இடத்தில் தினமும் ஒரு வயதான பிராமணர் அங்கே வந்து கேட்கி றாரே. அவர் தான் ஹனுமான். அவருக்கு உங்களை தெரியும். எல்லோருக்கும் முதலாக வந்து உட்காருவார். எல்லோரும் சென்ற பின் தான் அவர் திரும்பி செல்வார். அவர் கையில் ஒரு தடி. தலையில் ஒரு குல்லா இருக்கும். பழைய கந்தல் மேலாடை உடுத்தி இருப்பார். கோவணம் தரித்திருப்பார். அவர் வேறு யாருமில்லை, வானர வீரன். ஸ்ரீ ராம தூதன். வாயு புத்ரன். அங்கு வருபவர்களில் உங்களுக்கு அவர் யார் என்று தெரியாவிட்டால் நான் சொன்னது கைத்தடி, குல்லா மேலே கந்தல் துணி தான் அவர் அடையாளம்.”
இதைச் சொல்லிவிட்டு அந்த ராக்ஷஸன் மறைந்துவிட்டான். துளசிதாசர் தனது ஆஸ்ரமத்துக்கு திரும்பினார்.
மறுநாள் காலை ஸ்னானம் முடித்து ராமநாம த்யானத்துடன் வழக்கமாக புராணங்கள் பாராயணம் பண்ணும் இடத்துக்கு சென்றார். எல்லோரையும் கவனித்தார். ஒரு வயதான பிராமணன் ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். அவரை உற்றுப்பார்த்த துளசிதாஸ் அவர் அப்படியே ராக்ஷஸன் சொன்னது போலவேதலையில் குல்லா, கையில் கைத்தடி யோடு இருந்தார். ராக்ஷஸன் சொல்லிய அடையாளங்கள் இருக்கிறதே.
புராண பாராயணம் முடிந்தது. எல்லோரும் எழுந்து சென்றார்கள். முதிய பிராமணன் மெதுவாக எழுந்தார். துளசிதாசர் அவர் பின்னாலேயே சென்றார். வெளியே சென்றதும் ஹனுமான் வேகமாகச் செல்ல ஆரம்பித்தார்.
ஓடிச்சென்று துளசிதாசர் அவர் காலை பிடித்துக் கொண்டார் ” சுவாமி, மஹா புருஷரே என் மேல் இரக்கம் காட்டவேண்டும் .
”யாரப்பா நீ ? எதற்கு என் கால்களை பிடிக்கிறாய்? நான் ஒரு ஏழை பிராமணன்” என்கிறார் முதியவர்.
”வானர யூத முக்கியரே, ஸாக்ஷாத் ஹனுமாரே , ஸ்ரீ ராம பக்தரே,” என்பதற்கு மேல் துளசிதாசரால் பேச முடியவில்லை. நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் கால்களில் விழுந்தார்.
ஹனுமாருக்குத் தெரியாதா எதிரே இருப்பது வால்மீகி மகரிஷி என்று. அவர் தான் துளசிதாஸ் எனும் மனிதனாக பிறந்தவர் என்று. அவரை மகிழ்ச்சியோடு வாரி அணைத்துக் கொள்கிறார்.
”உன்னை எனக்கு பிடிக்கிறது அப்பா என்கிறார் முதியவர்.
”சுவாமி, உங்களிடம் எனக்கு ஒரு விண்ணப்பம். என் நெடுநாள் ஆசையை பூர்த்தி செய்வீர்களா?’
”என்ன அது.சொல்லப்பா. என்னால் முடிந்தால் செய்கிறேன் ”
”என் மீது கருணை கொண்டு ஒரு கணம் ஸ்ரீ ராமனின் தரிசனம் எனக்கு செய்து வைப்பீர்களா?
”ஆஹா முயல்கிறேன்” என்று சொன்ன முதியவர் மறைந்து போகிறார்.
ஸ்ரீ ராமனிடம் ஆஞ்சநேயர் ”சுவாமி, என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். பூமியில் வால்மீகி மகரிஷி துளசி தாசர் என்ற பெயருடைய மகானாக அவதரித்திருக்கிறார். அவருக்கு உங்கள் தரிசனம் தரவேண்டும் என்று ஏங்குகிறார்” என்கிறார்.
புன்னைகைத்த ஸ்ரீ ராமர் ”அதற்கென்ன செய்கிறேனே” என்கிறார். தொடரும்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



