
Month November 2025
INCOMPARABLE DEVOTION J K SIVAN
ஈடற்ற பக்தி — நங்கநல்லூர் J K SIVAN பாரத தேசத்தில் உதித்த எண்ணற்ற பக்தர்களில் சிவபக்தர்கள் பலர். அதிலும் பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று பக்தர்களை, நாயன்மார்கள் எள்று பெயரிட்டு பாடல்களாக சேக்கிழார் பெருமான் அளித்திருக்கிறார். அதில் கண்ணப்பர் கதை ரொம்ப பிரபலம். எல்லோரும் அறிந்த கதை என்றாலும் இன்று அதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.…
YOGA VAASISHTAM STORY J K SIVAN
@followers நிழல் தான் நிஜமா? – நங்கநல்லூர் J K SIVAN இப்போ நான் ஒரு கதை சொல்றேன். நான் இட்டு க்கட்டி, சொந்தமாக யோசித்து சொல்ற கதை இல்லை.ஏழாயிரம் வருஷ பழங்கதை. ராமருக்கு அவர் குரு வசிஷ்டர் சொன்ன கதை. வசிஷ்டர் ராமருக்கு சொன்ன விஷயம் எல்லாம் ”யோக வாசிஷ்டம்” அதில் வரும் சம்பவங்கள் நமக்கு பழசாக , …
SIKA GIRISWARAR CAVE TEMPLE J K SIVAN
குடுமீஸ்வரர், சிகாகிரி நாதர் – நங்கநல்லூர் J K SIVAN குடுமி வைத்துக் கொள்வது அநாகரீகம் என்று இப்போது கருதுபவர்கள் அநேகர். ஆனால் தற்காலிக வாலிபர்கள் உலகளவில் குடுமியோடு, ரிஷிமாதிரி தலையில் நாரதர் கொண்டையோடு காணப்படு கிறார்கள். பிராமணர்கள் தான் குடுமி வைத்துக் கொள்ப வர்கள் என்ற எண்ணம் மறந்து போய்விட்டது. அக்காலத்தில் ஆண்கள் எல்லாருமே…
SURDAS J K SIVAN
ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN 23. ஹரி தர்சனம் பாலும் கசந்ததடி, பஞ்சணை உறுத்துதடி, தூக்கம் மறந்ததடி, கண்ணீர் பார்வையை மறைத்ததடி, நெஞ்சம் பிளந்ததடி, இதயம் வெடித்ததடி, வாழ்க்கை வெறுத்ததடி, இன்னும் இது போன்ற எத்தனையோ ”தடி” க்களில் வருத்தங்கள். யாருக்கு? ஒருவராக இருந்தால் அடையாளம், பெயர் சொல்லலாம். ஊரே இப்படி ”தடி’…
WHAT ELSE IS GREATER THAN THIS? J K SIVAN
‘இன்னும் ஒஸ்தி என்ன இருக்கிறது? — நங்கநல்லூர் J K SIVAN ”இன்று ஒரு நல்ல கதை உங்களுக்கு சொல்ல வேண்டும் போல் இருந்தது. இதுதான் உங்களுக்கு பிடிக்கும் என்று மனதுக்குள் ஒரு சின்ன பக்ஷி சொல்லியது. கதையை ஆரம்பிக்கிறேன். படித்துவிட்டு உங்களுக்கு பிடித்ததா பக்ஷி சொன்னது சரியா என்று சொல்லுங்கள். பக்ஷிக்கு நன்றி சொல்கிறேன்.…
VATTAPPARAI AMMAN J K SIVAN
வட்டப்பாறை அம்மன் – நங்கநல்லூர் J K SIVAN இன்று வெள்ளி. சென்னையில் ஆதிபுரீசுவரர் கோயில் திருவொற்றியூரில் உள்ளது. ,மூலவர் ஸ்வயம்பு , புற்று லிங்கம் ஆதி புரீஸ்வரர், தியாகராஜா, திருவொற்றீஸ் வரர் என்றும் பெயர் கொண்டவர். அம்பாள் திரிபுர சுந்தரி. காளி , வட்டப்பாறை அம்மன். தொண்டை நாட்டில் முக்கியமான பாடல் பெற்ற ஸ்தலம்.…
ANNABISHEKAM J K SIVAN
அன்னாபிஷேகம் – நங்கநல்லூர் J K SIVAN 5.11.2025 இன்று ஐப்பசி பௌர்ணமி ஒரு அற்புதநாள். முக்யமாக ஸ்வயம்பு லிங்க ஆலயங்களில் அன்னா பிஷேகம் நடக்கும். சந்த்ரன் கார்த்திகை நக்ஷத்திரத் தோடு சேர்ந்த நாள் என்பதால் ஐயப்ப பக்தர்களுக் கும் குதூகலம். ஒருமுறை பின்னிரவில் கங்கை கொண்ட சோழபு ரத் தில் பிரகதீஸ்வரரை அன்னாபிஷே கத்தில்…
RAMANANUBHAVAM J K SIVAN
தூரம் கிடையாது. – நங்கநல்லூர் J K SIVAN ரமணாஸ்ரமத்தில் எண்ணற்ற பக்தர்கள் பகவான் தரிசனத்துக்கு காத்திருப்பார்கள். சங்கர்லால் பேங்கர் என்ற மஹாத்மா காந்தியின் நண்பர் ஒருவர் 1934 ல் ஒரு ஜெர்மன் விமானப்படை அதிகாரியை சந்தித்தார். அவரோடு பேசிக் கொண்டிருந்த போது அந்த ஜெர்மன் அதிகாரி சங்கர்லாளிடம் ”உங்கள் தேசத்தில் ரமண மஹரிஷி என்று…
PUBLIC COMMENT J K SIVAN
விமர்சனம் – நங்கநல்லூர் J K SIVAN இந்த உலகத்தில் எல்லோரையும் திருப்தி படுத்துவது என்பது நாய் வாலை நிமிர்த்தும் முயற்சி. எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையைச் சொல்லி ஆரம்பிக்கிறேன். ஒரு வயதான அப்பா ஒரு சின்ன பையன் ஒரு கழுதை. மூவரும் நடந்து போகிறார்கள். பார்ப்பவர்களில் சிலர் ”இப்படி முட்டாள்களை எங்காவது…
NAMA DEV J K SIVAN
நாம தேவர் – நங்கநல்லூர் J K SIVAN கடவுளோடு பேச முடியுமா? கடவுளைப் பார்க்க முடியுமா? இந்த கேள்வி ஆதி காலம் முதல் இன்று மாலை வரை கேட்கப்பட்டாலும் இதற்கு விடை. ‘ஓ’ முடியுமே’ என்பது தான். நீ பார்த்திருக்கிறாயா? என்று கேட்டால். ”பார்த்திருக்கிறேன் என்று பொய் தான் சொல்ல வேண்டும். ஆனால் கடவுளை நேரில் பார்த்து…
