About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month April 2024

SPECIAL VISION J K SIVAN

திவ்ய திருஷ்டி  –   நங்கநல்லூர்  J K  SIVAN ஹஸ்தினாபுரத்தில்  எவர் மனத்திலும் நிம்மதி இல்லையே, ஏன்?  சீரும் சிறப்புமாக  சகல வளமையோடு  உள்ள  தேசம். எவருக்கும் எந்தக் குறையுமில்லாமல்  பீஷ்ம  கர்ண துரோணாதிகள்  துணையோடு  துரியோதனன் ஆண்டுவருகிறான். அரண்மனையில் உள்ளவர்களுக்கும்  ஏதோ ஒரு சஞ்சலம் மனதில் குடிகொண்டிருந்தது.  மக்கள் ஆங்காங்கே  கூடிக்  கூடி  பேசினார்கள்.”யுத்தம்…

HOME MEDICINES J K SIVAN

பாட்டி வைத்தியம் – நங்கநல்லூர் J K SIVAN படிக்காத டாக்டர் காமு பாட்டி. 88 வயசு. காமு பாட்டியை இஞ்சி பாட்டி என்று எல்லோரும் கேலி பண்ணுவார்கள். அவள் பள்ளிக்கூடமே போகாத டாக்டர். அவளுக்கு தெரியாத வைத்தியமே கிடையாது என்பது மொத்த குடும்பத்திலும் ஏகோபித்த அபிப்ராயம். சாப்பிட பிடிக்கலே, வயிறு என்னவோ பண்றது என்று…

DEVOTIONTO KRISHNA J K SIVAN

கிருஷ்ண பக்தி – நங்கநல்லூர் ஜே.கே. சிவன் யாருமே கிருஷ்ண பக்தியில் ராதைக்கு ஈடாக முடியாது. ராதைக்கு அப்படி ஒரு ஆழ்ந்த பரவசம், பக்தி கிருஷ்ணனிடம். தலைகீழாக நின்று தவம் செய்து என்ன ப்ரயத்தனப் பட்டாலும் எவ்வளவு படித்தாலும், எழுதினாலும், பேசினாலும், பாடினாலும் , கேட்டாலும், ராதா–கிருஷ்ணன் பிரேம பந்தம் விளக்க முடியாத ஒன்று .…

CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்ய நீதி.    நங்கநல்லூர்  J K  SIVAN  रूपयौवनसम्पन्ना विशालकुलसम्भवाः। विद्याहीना न शोभन्ते निर्गन्धाः किंशुका यथा॥ ०३-०८ rūpayauvanasampannā viśālakulasambhavāḥ। vidyāhīnā na śobhante nirgandhāḥ kiṃśukā yathā॥ 03-08குலத்தளவே ஆகுமாம்  குணம் என்று இப்போதெல்லாம்  சொல்வதற்கு வழியில்லை.  ஆகவே  தானாகவே  ஒவ்வொருவரிடமும் வெளிப்படும்.  மேற்கு மாம்பலத்தில்  பிராமின் தெரு  என்று…

home medicines j k sivan

பாட்டி வைத்தியம் –  நங்கநல்லூர்  J K  SIVAN எங்கு  திரும்பியினாலும்  வியாதி சொல்லாதவர்களே  இப்போது கிடையாது.  யாருக்குமே  பத்து இருபது ஐம்பது ரூபாய்க்குள் மருந்து வாங்கி  தீரும் வியாதி ஏனோ வருவதில்லை.  காலில் கடைசி சுண்டு விரல்  தெருவில் கல்லில் மோதி காயம்பட்டு  ரத்தம் வந்தாலே போதும்.  உடனே  அதற்கு  உச்சி மண்டையில்  ஒரு…

ULLADHU NAARPADHU 31 J K SIVAN

உள்ளது நாற்பது   – நங்கநல்லூர்   J K  SIVAN பகவான்  ரமண மஹரிஷி 31 . ப்ரம்ம ஞானி ”தன்னை யழித்தெழுந்த தன்மயா னந்தருக் கென்னை யுளதொன் றியற்றுதற்குத் – தன்னையலா தன்னிய மொன்று மறியா ரவர்நிலைமை யின்னதென் றுன்ன லெவன்பரமாப் – பன்னும் ”31 நமக்கு தெரிந்த நாம் அடிக்கடி உபயோகிக்கும் சில வார்த்தைகள் : ”தன்னை…

KOORATHAZHWAN 6 J K SIVAN

அருமையான குரு அபிமான சிஷ்யன்-6நங்கநல்லூர் J.K. SIVAN   சமீபத்தில் ஸ்ரீ ரங்கம் போனபோது ராமானுஜர் சந்நிதியின்  முகப்பில்  இடது வலது பக்கமாக ரெண்டு பேர் சிலை. அவர்கள் தான் கூரத்தாழ்வான்,  முதலியாண்டான் என்ற  ராமானுஜரின் ரெண்டு நிழல்கள்.  வலது இடது கரம் போன்றவர்கள்.  ஒரு சிலைக்கு தாடி இருக்கிறது. அவர் தான் கூரத்தாழ்வான்.  திருகோஷ்டியூர் நம்பியிடம்…

KOORATHAZHWAN J K SIVAN

அருமையான குரு அபிமான சிஷ்யன்-5 நங்கநல்லூர் J.K. SIVAN கூரேசனின் குறை நீங்கியது. குருநாதர் ஸ்ரீ ராமானுஜரை மீண்டும் சந்தித்தாகிவிட்டது. ஸ்ரீரங்கத்தில் மறுபடியும் குருநாதரோடு இணைந்து ஸ்ரீவைஷ்ணவ தொண்டு துவங்கியாச்சு. அநேக சிஷ்யர்கள் இப்போது அவருக்கு உதவ சேர்ந்து விட்டார்கள். தினமும் அரங்கன் முன் கண்ணால் அவனைக் காண முடியாவிட்டாலும் மனதால் கண்டு தரிசிப்பதும் ப்ரார்த்திப்பதும்…

KANCHI EKAMBARESWARAR TEMPLE J K SIVAN

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர்   ஆலயம்நங்கநல்லூர்   J K  SIVAN  மார்ச் 31, 2024 அன்று நண்பர்  வரதராஜனுடன் காஞ்சிபுரம் சென்றேன். கூரம், தூசி மாமண்டூர்  மற்றும் காஞ்சியில் சில கோவில்களை தரிசிக்க முடிந்தது. அதில் முக்கியமான  ஒன்று  காஞ்சியில் உள்ள அற்புதமான பெரிய  சிவாலயம்  காஞ்சி ஏகாம்ரேஸ்வரர் ஆலயம். காஞ்சிபுரம் ஏகாம்ரநாதர் கோயிலைத்தான் பழைய சமய நூல்கள்…

KOORATHAAZHWAN J K SIVAN

அருமையான குரு அபிமான சிஷ்யன்- 4நங்கநல்லூர் J.K. SIVAN நான்  பல மஹான்கள்  சரித்ரங்களை அறிந்திருக்கிறேன், படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். ராமானுஜர் வாழ்க்கை ரொம்ப வித்யாசமாக  தனித்து காண்கிறது. எத்தனை போட்டிகள், எதிர்ப்புகள், அனைத்தையும் தைரியமாக  எதிர்கொண்டு  தனது கோட்பாடுகளில், நம்பிக்கையில், சித்தாந்தத்தில் துளியும்  மாறுபடாது, ஞான தீபமாக அனைத்திலும் வெற்றி கண்டு, 120வருஷங்கள் வாழ்ந்து அதில்…