SOUNDARYA LAHARI 26/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 26/103 – நங்கநல்லூர் J K SIVAN

26. ஸர்வ சிவ சக்தி மஹிமை

विरिञ्चिः पञ्चत्वं व्रजति हरिराप्नोति विरतिं विनाशं कीनाशो भजति धनदो याति निधनम् ।
वितन्द्री माहेन्द्री विततिरपि संमीलितदृशा महासंहारेऽस्मिन् विहरति सति त्वत्पतिरसौ ॥ २६॥

viriñchiḥ pañchatvaṃ vrajati harirāpnōti viratiṃ vināśaṃ kīnāśō bhajati dhanadō yāti nidhanam ।
vitandrī māhēndrī vitatirapi sammīlitadṛśā mahāsaṃhārē’smin viharati sati tvatpatirasau ॥ 26 ॥

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்நோதி விரதிம் விநாஶம் கீநாஶோ பஜதி தநதோ யாதி நிதனம்
விதந்த்ரீ மாஹேந்த்ரி விததிரபி ஸம்மீலித த்ருஶாம் மஹாஸம்ஹாரே (அ)ஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ 26

ஒவ்வொரு யுகமும் முடியும், மற்றொன்று புதிதாக உருவாகும். தோன்றியதெல்லாம் மறைய வேண்டியது நியதி. இப்படி சகலமும் மறைவது தான் பிரளயம். பிரம்மத்தைத் தவிர, அம்பாளைத் தவிர, சக்திஸ்வரூபத்தை தவிர மற்றதெல்லாம் மீண்டும் மீண்டும் தோன்றி மறைவன . இப்படி தோன்றி மறைவதற்கு இடைப்பட்ட காலம் மஹா கல்பம்.
சிருஷ்டி கர்த்தா ப்ரம்மா மீண்டும் தோன்றுவார், விஷ்ணு மறுபடியும் உருவெடுப்பார், ருத்ரன் சகலத்தையும் பிரளயத்தில் அழியச்செயது தானும் மறைவான. அப்படியேதான் இந்திராதி தேவர்களும்,குபேரனும் மற்ற எல்லோரும் தோன்றி மறைவார்கள்.

அம்பாள் பிரளய காலத்தில் இப்படி அனைத்தும் அனைவரும் இல்லாமல் போகும்போது தான் மட்டும் ஆதி அந்தமில்லாத சதாசிவன் சகலத்தையும் அழித்து தாண்டவமாடுவதை ரசித்து மகிழ்ந்து விளையாடுகிறாள் என்கிறார் இந்த பிரளய ஸ்லோகத்தில் ஆதி சங்கரர். லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு நாமம் ”மஹேச்வர மஹாகல்ப மஹாதாண்டவ சாக்ஷிணீ” மஹா கல்பம் எனும் பிரளய சமயத்தில் மகேஸ்வரன் மஹா தாண்டவமாடுவதற்கு சாக்ஷியானவள் ” என்ற அர்த்தம்.
சிவனே சக்தி, சக்தியே சிவம். அவள் ஆனந்த சக்தி. சித் சக்தியும் ஆனந்த சக்தியும் இணை பிரியாதவை. ஆத்மானந்தத்தில், ப்ரம்மானந்தத்தில் தான் சிவனை உணரமுடியும், சிவனோடு இணைய முடியும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *