SOUNDARYA LAHARI 16/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 16/103 – நங்கநல்லூர் J K SIVAN

16. அம்பாளின் வர்ணம்.

कवीन्द्राणां चेतःकमलवनबालातपरुचिं भजन्ते ये सन्तः कतिचिदरुणामेव भवतीम् ।
विरिञ्चिप्रेयस्यास्तरुणतरश‍ृङ्गारलहरी- गभीराभिर्वाग्भिर्विदधति सतां रञ्जनममी ॥ १६॥

kavīndrāṇāṃ chētaḥkamalavanabālātaparuchiṃ bhajantē yē santaḥ katichidaruṇāmēva bhavatīm ।
viriñchiprēyasyāstaruṇataraśa‍ṛṅgāralaharī- gabhīrābhirvāgbhirvidadhati satāṃ rañjanamamī ॥ 16 ॥

கவீந்த்ராணாஞ் சேத: கமலவன பாலாதப ருசிம் பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம்
விரிஞ்சி ப்ரேயஸ்வாஸ் தருணதர ச்ருங்காரலஹரீ பீராபிர் வாக்பிர் விதததி ஸதாம் ரஞ்ஜனமமீ 16

SOUNஇந்த ஸ்லோகத்தில் அம்பாளை விடியற்காலை சூரியன் உதிக்கும் முன் அருணோதய சிவப்பு போல் அழகாக ஒளிவீசுபவள் என்று வர்ணிக்கிறது. அம்பாளுக்கு அருணா என்று பெயர். ”ஸிந்தூராருண விக் ரஹம்” என்று ஸ்தோத்ரம் அவளை வர்ணிக்கிறது. சிவப்பு இரக்க குணத்தை காட்டும் என்பார்கள்.

அருணன் ஒளியில் தான் தாமரை மொட்டவிழ்வது போல உன்னைப் பூஜிக்கும், பஜிக்கும், புண்ணியம் புரிந்த ஞானிகள், பக்தர்கள், பிரம்மபத்னியான ஸரஸ்வதியின் சிருங்கார ரசத்தின் பிரவாஹம் போன்ற கம்பீரமான வாக்குகளால் ஸாதுக்களுக்கும் மற்றவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியை அளிக்கிறார்கள்.

தேவியைச் சிவப்பானவள், எட்டுக் கைகளுடன் இருதயத்தில் வீற்றிருப்பவள். பாசம், ஈட்டி, கரும்புவில், புஷ்பபாணங்கள், புஸ்தகம், ஸ்படிகமாலை ஆகியவற்றை ஏந்தியவள் , அபயம், வரம் என்ற முத்திரைகளையும் தரித்து, மொத்தம் எட்டுக்கைகளோடும் மூன்று கண்களுடனும் திகழ்கிறாள். இந்த உருவம் ஸத்வத்தில் ரஜோகுணப் பிரதானமான ஸரஸ்வதியின் ஸ்வரூபம். ப்ராஹ்மி முதலான மாத்ருகா ரூபங்கள் எல்லாம் லலிதாம்பாவின் உருவங்களே. இந்த ரூபத்தை உபாசிப்பவர்கள், சிருங்கார ரஸம் மிகுந்த கவித்திறன் பெறுவார்கள். அப்படித்தானே காளிதாசன், காளமேகம் போன்றவர்கள் சரஸ்வதி கடாக்ஷம் பெற்றவர்களாக பெருமை பெற்றவர்கள்.

சிவன் ஸ்படிகம் போன்ற நிறமற்ற, தனக்கென்ற தனி ஒளியற்ற வர்ணன். அம்பாள் உமா மஹேஸ்வரியாக இணைந்த போது அவளது சிவந்த, மாதுளம்பூ, செம்பருத்தி, சிந்தூர வர்ணம் பரம சிவனின் வர்ணமாக ஒளிர்கிறது என்று ஒரு ஸ்லோகம் இருக்கிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *