KENOPANISHAD – J K SIVAN

கேனோபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN

கேனோபநிஷததை படித்தேன். அதை பல பகுதிகளாக பதிவு செய்தால் கவனம் குறையும். ஒரே பதிவாகிட்ட தொடர்ச்சியாக சொல்லவேண்டும் என்று தோன்றியது. கொஞ்சம் நீளமாக இருந்தாலும் ஒரு உபநிஷதத்தை முழுமையாக இன்று ஒரே பதிவில் படிப்போம், அறிவோம். உயர்வோம்.

கேன உபநிஷத் என்றால் ”யாரால் சொல்லப்பட்டது?” என்று பொருள். நாலு பாகங்களாக இருக்கிறது. முதல் ரெண்டு ஸ்லோகம். அடுத்த ரெண்டு உரைநடை. பிரம்மத்தை பற்றிய விஷயம். ஈஸ்வரனைப் பற்றிய சமாசாரம். உலக விஷயங்களிலிருந்து மனது உள்ளிழுக்கப்பட்டால் தான் ஈஸ்வரன் புரிவார்.

॥ अथ केनोपनिषत् ॥
ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुः श्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि । सर्वं ब्रह्मौपनिषदं माऽहं ब्रह्म निराकुर्यां मा मा ब्रह्म निराकरोदनिराकरणमस्त्वनिराकरणं मेऽस्तु ।
तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

.. atha kenopaniṣat . oṃ āpyāyantu mamāṅgāni vākprāṇaścakṣuḥ śrotramatho balamindriyāṇi ca sarvāṇi sarvaṃ brahmaupaniṣadaṃ
mā’haṃ brahma nirākuryāṃ mā mā brahma nirākarodanirākaraṇamastvanirākaraṇaṃ me’stu tadātmani nirate ya upaniṣatsu dharmāste mayi santu te mayi santu .
oṃ śāntiḥ śāntiḥ śāntiḥ ..
ப்ரம்மம் குருவையும் சிஷ்யனையும் காப்பாற்றட்டும். எங்களுக்கு ஞானம் அருளவேண்டும். ஞானத்தை அறிந்துகொள்ளும் சக்தி கிட்டட்டும். குருவும் சிஷ்யனும் சேர்ந்து ஒன்றாகவே சத்யத்தை அறிவோம். எவர் மீதும் தவறின்றி, குறையின்றி, ஞானம் பெற முன்னேற்றம் அடைவோம். சாந்தி சாந்தி சாந்தி.

ॐ केनेषितं पतति प्रेषितं मनः केन प्राणः प्रथमः प्रैति युक्तः । केनेषितां वाचमिमां वदन्ति चक्षुः श्रोत्रं क उ देवो युनक्ति ॥ १॥
oṃ keneṣitaṃ patati preṣitaṃ manaḥ kena prāṇaḥ prathamaḥ praiti yuktaḥ .keneṣitāṃ vācamimāṃ vadanti cakṣuḥ śrotraṃ ka u devo yunakti .. 1..
குருவே, யாரால் மனம் தனது லட்சியத்தை நோக்கி அசைகிறது? எவருடைய கட்டளைக்கு இணங்கி பிராணன் தனது கடமையை புரிகிறது?எந்த சக்தியால் மனிதன் நாக்கு பேசுகிறது? கண்ணையும் காதையும் இயக்கும் தெய்வம் யார்?

श्रोत्रस्य श्रोत्रं मनसो मनो यद् वाचो ह वाचं स उ प्राणस्य प्राणः । चक्षुषश्चक्षुरतिमुच्य धीराः प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति ॥ २॥
śrotrasya śrotraṃ manaso mano yad vāco ha vācaṃ sa u prāṇasya prāṇaḥ . cakṣuṣaścakṣuratimucya dhīrāḥ pretyāsmāllokādamṛtā bhavanti .. 2..
அடே , சிஷ்யா, சொல்கிறேன் கேள். நீ நினைக்கிறமாதிரி இல்லையடா. காதின் காது, மனதின் மனம்,,வாக்கின் வாக்கு, உயிரின் உயிர், கண்ணின் கண் என்று புரியாத ஒன்று உள்ளது. அப்படிப்பட்ட ஒட்டாத, எதனுடனும் சேராத, ஆத்மா வை புலன்களின் ஆக்கிரமிப்புக்கு இணங்காமல் தவிர்த்து தனித்து இயங்கச் செய்யும் ஞானிகள், புத்திசாலிகள் தான் அழியாத அமரத்வத்தை அடைபவர்கள்.

न तत्र चक्षुर्गच्छति न वाग्गच्छति नो मनः । न विद्मो न विजानीमो यथैतदनुशिष्यात् ॥ ३॥
na tatra cakṣurgacchati na vāggacchati no manaḥ .na vidmo na vijānīmo yathaitadanuśiṣyāt .. 3..
கண் எங்கும் அலைபாயாது. வாக்கு லட்சியத்தை விட்டு வேறு எண்ணாது , பேசாது, மனது ஒரே நோக்கோடு விலகாமல் இருக்கும் . நமக்கேஅதெல்லாம் தெரியாது. இதை எப்படி யார் எங்கே, எப்போது சொல்லித்தருவார்கள்? புரியவில்லையே.

अन्यदेव तद्विदितादथो अविदितादधि । इति शुश्रुम पूर्वेषां ये नस्तद्व्याचचक्षिरे ॥ ४॥
anyadeva tadviditādatho aviditādadhi . iti śuśruma pūrveṣāṃ ye nastadvyācacakṣire .. 4..
நமக்கு எதெல்லாம் தெரியுமோ, அதற்கு அப்பாற்பட்டது இது. நமது அறியும் சக்திக்கு அப்பாற்பட்ட, அப்புறமாக உள்ள ஏதோ ஒரு ஞானம். அறிவு.இப்படித்தான் நமது குருமார்கள், ரிஷிகள், ஞானிகள் அதை அறிந்து நமக்கு சொல்லித் தருகிறார்கள்.

यद्वाचाऽनभ्युदितं येन वागभ्युद्यते । तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ५॥
yadvācā’nabhyuditaṃ yena vāgabhyudyate .tadeva brahma tvaṃ viddhi nedaṃ yadidamupāsate .. 5..
அந்த பிரம்மத்தை வாக்கினால், சொல்லினால் அளந்து சொல்ல முடியாது. அது தானே பேசும். அதை தான் ப்ரம்மம் என்கிறார்கள். இங்கு எதையெல்லாமோ வழிபடுகிறார்களே அந்த மூர்த்திகள், தெய்வங்கள் அல்ல அந்த ப்ரம்மம்.

यन्मनसा न मनुते येनाहुर्मनो मतम् । तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ६॥
yanmanasā na manute yenāhurmano matam . tadeva brahma tvaṃ viddhi nedaṃ yadidamupāsate .. 6..
அந்த பிரம்மத்தை மனதால் உணரமுடியாது. அது தான் மனதை உணரச் செய்யக்கூடிய சக்தி படைத்தது. அது தாண்டா ப்ரம்மம். இங்கே எல்லோரும் வழிபடும் பலப் பல தெய்வம் இல்லை அது. .

यच्चक्षुषा न पश्यति येन चक्षूँषि पश्यति ।तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ७॥
yaccakṣuṣā na paśyati yena cakṣūm̐ṣi paśyati .tadeva brahma tvaṃ viddhi nedaṃ yadidamupāsate .. 7..
பிரம்மத்தை கண்ணால் எவனும் பார்க்க முடியாது. அது தான் கண்ணை பார்க்க செய்யக்கூடியது. அது தாண்டா ப்ரம்மம். இங்கே எல்லோரும் வழிபடும் பலப் பல தெய்வங்கள், மூர்த்திகள் அல்ல.

यच्छ्रोत्रेण न शृणोति येन श्रोत्रमिदं श्रुतम् । तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ८॥
yacchrotreṇa na śṛṇoti yena śrotramidaṃ śrutam .tadeva brahma tvaṃ viddhi nedaṃ yadidamupāsate .. 8..
காதால் கேட்கப்படும் சமாச்சாரம் அல்ல ப்ரம்மம். அது தான் செவியை இயக்கி கேட்கச்செய்கிறது. அது தாண்டா ப்ரம்மம். இங்கே எல்லோரும் வழிபடும் பலப்பல மூர்த்திகள் தெய்வச்சிலைகள் அல்ல.

यत्प्राणेन न प्राणिति येन प्राणः प्रणीयते ।तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ९॥ ॥ इति केनोपनिषदि प्रथमः खण्डः ॥
yatprāṇena na prāṇiti yena prāṇaḥ praṇīyate .tadeva brahma tvaṃ viddhi nedaṃ yadidamupāsate … iti kenopaniṣadi prathamaḥ khaṇḍaḥ ..
நாம் உயிர்வாழ மூச்சு விடுகிறோம், அந்த மூச்சுக்கு காற்றால் பிரம்மத்தை முகர்ந்து பார்க்க, புரிந்து கொள்ள, உணர முடியாது. அது தான் மூக்குக்கு மூச்சு விட உள்ளிழுக்க சொல்லித்தருகிறது. முகர வைக்கிறது. அது தாண்டா ப்ரம்மம். இங்கே பலப்பல வழிபடும் தெய்வங்களை பார்க்கிறோமே வழிபடுகிறோமே அதெல்லாம் இல்லை.

यदि मन्यसे सुवेदेति दहरमेवापि var दभ्रमेवापि नूनं त्वं वेत्थ ब्रह्मणो रूपम् । यदस्य त्वं यदस्य देवेष्वथ नु मीमाँस्यमेव ते मन्ये विदितम् ॥ १॥
yadi manyase suvedeti daharamevāpi var dabhramevāpi nūnaṃ tvaṃ vettha brahmaṇo rūpam . yadasya tvaṃ yadasya deveṣvatha nu mīmām̐syameva te manye viditam ..
அடேய், சிஷ்யா, ”குருவே எனக்கு ப்ரம்மம் என்றால் என்ன என்று நன்றாக புரிந்து விட்டது, தெரிந்து விட்டது என்று நீ சொல்வாயேயானால், நீ இன்னும் அறியாமையில் தான் உழல்கிறாய் என்று அர்த்தம். ஏதோ உனக்கு தெரிந்த, புரிந்த ஒரு எண்ணம், உருவத்தில், அப்படி சொல்கிறாய். அதை விடாமல் தொடர்ந்து தேடிக்கொண்டே இரு அப்போது தான் புலப்படும். அப்போது உன் நிலை வேறு மாதிரி இருக்கும். நீ தான் ஞானி ஆகிவிடுவாயே ‘

‘नाहं मन्ये सुवेदेति नो न वेदेति वेद च । यो नस्तद्वेद तद्वेद नो न वेदेति वेद च ॥ २॥
nāhaṃ manye suvedeti no na vedeti veda ca yo nastadveda tadveda no na vedeti veda ca .. 2..
”குருவே, எனக்கு பிரம்மத்தை பற்றி தெரியும், புரிந்து விட்டது என்று நினைக்கிறேன். அதே சமயம் எனக்கு எல்லாமே தெரியும் என்றும் தோன்றுகிறது சரியாக ஒன்றுமே தெரியவில்லை என்றும் தோன்றுகிறது. இப்படி சொல்வதற்கு அதாவது ”எனக்கு பிரம்மத்தை தெரியும் போலவும் தோன்றுகிறது தெரியாது என்றும் தோன்றுகிறது” என்று எவன் புரிந்துகொள்கிறானோ,அவன் தான் பிரம்மத்தை அறிந்தவன்.

यस्यामतं तस्य मतं मतं यस्य न वेद सः ।अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम् ॥ ३॥
yasyāmataṃ tasya mataṃ mataṃ yasya na veda saḥ , avijñātaṃ vijānatāṃ vijñātamavijānatām .. 3..
நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்; ”என்னால் பிரம்மத்தை தெரிந்து கொள்ள முடியாது’ என்று புரிந்தவன் பிரம்மத்தை உணர்ந்தவன். எனக்கு பிரம்மத்தை தெரியும், எனக்கு அது புரியும் என்று சொல்பவன் பிரம்மத்தை அறியாதவன்.

प्रतिबोधविदितं मतममृतत्वं हि विन्दते ।आत्मना विन्दते वीर्यं विद्यया विन्दतेऽमृतम् ॥ ४॥
pratibodhaviditaṃ matamamṛtatvaṃ hi vindate .ātmanā vindate vīryaṃ vidyayā vindate’mṛtam .. 4..
மனதுக்குள் பல பிரிவுகள் உண்டு. அவை ஒவ்வொன்றிலும் ப்ரம்மம் வெளிப்படுகிறது. எல்லாவற்றிலும் ஒன்றாகவே நிலைத்திருப்பது தான் ப்ரம்மம். இதை நன்றாக உணர்ந்தவன் முக்தி பெறுகிறான். ஆத்மா என்பது தான் ஒரே சக்தி. அதுவே ப்ரம்ம ஞானம்.

इह चेदवेदीदथ सत्यमस्ति न चेदिहावेदीन्महती विनष्टिः । भूतेषु भूतेषु विचित्य धीराः प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति ॥ ५॥ ॥ इति केनोपनिषदि द्वितीयः खण्डः ॥
iha cedavedīdatha satyamasti na cedihāvedīnmahatī vinaṣṭiḥ bhūteṣu bhūteṣu vicitya dhīrāḥ pretyāsmāllokādamṛtā bhavanti .. 5.. .. iti kenopaniṣadi dvitīyaḥ khaṇḍaḥ
ஆத்மாவை தெரிந்து கொண்டவன் வாழ்க்கையின் லக்ஷியத்தை அடைந்தவன். இதை அறியாதவனுக்கு அழிவு தான் பலன். எங்கும் எதிலும் எவரிலும் எவற்றிலும் ஆத்மாவை உணர்பவன் உலகை துறந்தவன்.ப்ரம்ம ஞானி. அழிவற்றவன்.

ब्रह्म ह देवेभ्यो विजिग्ये तस्य ह ब्रह्मणो विजये देवा अमहीयन्त ॥ १॥
brahma ha devebhyo vijigye tasya ha brahmaṇo vijaye devā amahīyanta .. 1..
ப்ரம்மம் விண்ணுலகில் தெய்வங்களுக்கு வெற்றி பெற்று தந்ததால் மகிழ்ந்த தெய்வங்கள் ”ஆஹா, இந்த ப்ரம்மம் அல்லவோ நமக்கு பெரிய வெற்றி பெற்று தந்தது. பிரம்மத்தால் தான் நமது வெற்றி என்று மகிழ்ந்தனர்.

”त ऐक्षन्तास्माकमेवायं विजयोऽस्माकमेवायं महिमेति । तद्धैषां विजज्ञौ तेभ्यो ह प्रादुर्बभूव तन्न व्यजानत किमिदं यक्षमिति ॥ २॥
ta aikṣantāsmākamevāyaṃ vijayo’smākamevāyaṃ mahimeti . taddhaiṣāṃ vijajñau tebhyo ha prādurbabhūva tanna vyajānata kimidaṃ yakṣamiti .. 2..
ப்ரம்மம் அதை புரிந்துகொண்டு தெய்வங்கள் முன்னே நின்றபோது அவர்களால் அதை அறிய, தெரிந்து கொள்ள முடியவில்லை.

तेऽग्निमब्रुवञ्जातवेद एतद्विजानीहि किमिदं यक्षमिति तथेति ॥ ३॥
te’gnimabruvañjātaveda etadvijānīhi kimidaṃ yakṣamiti tatheti .. 3..
அக்னி தேவன் ”ஓ ஜாதவேதா, யார் இந்த யக்ஷன் என்று பார்த்துச் சொல்” என்று கேட்டான்.

तदभ्यद्रवत्तमभ्यवदत्कोऽसीत्यग्निर्वा अहमस्मीत्यब्रवीज्जातवेदा वा अहमस्मीति ॥ ४॥
tadabhyadravattamabhyavadatko’sītyagnirvā ahamasmītyabravījjātavedā vā ahamasmīti .. 4..
அக்னி தேவன் அந்த உருவத்தை, யக்ஷனைப் பார்த்து ”யார் நீ?” என்று கேட்டான். ‘;’நான் அக்னி நான் தான் ஜாதவேதனும் கூட ”என்றது அந்த யக்ஷ உருவம் ”.

तस्मिꣳस्त्वयि किं वीर्यमित्यपीदꣳ सर्वं दहेयं यदिदं पृथिव्यामिति ॥ ५॥
tasmigͫstvayi kiṃ vīryamityapīdagͫ sarvaṃdaheyaṃ yadidaṃ pṛthivyāmiti .. 5..
”சொல், உனக்கு அப்படி என்ன சக்தி உள்ளது? உனக்கு எதனால் பெருமை?” என்று யக்ஷன் கேட்டபோது ?”
”நான் எதையும் எங்கும் எரிப்பவன், உலகத்தில் எல்லாவற்றையும் சாம்பலாக்குபவன்” என்றான் அக்னி.

.तस्मै तृणं निदधावेतद्दहेति । तदुपप्रेयाय सर्वजवेन तन्न शशाक दग्धुं स तत एव निववृते नैतदशकं विज्ञातुं यदेतद्यक्षमिति ॥ ६॥
tasmai tṛṇaṃ nidadhāvetaddaheti . tadupapreyāya sarvajavena tanna śaśāka dagdhuṃ sa tata eva nivavṛte naitadaśakaṃ vijñātuṃ yadetadyakṣamiti .. 6..
யக்ஷன் சிரித்துக்கொண்டே ஒரு தர்ப்பை புல்லை எடுத்து எதிரில் போட்டுவிட்டு ”எங்கே இதை எரித்து சாம்பலாக்கு பார்க்கலாம்”” என்று சொன்னான். பலத்த சக்தியோடு அக்னி அந்த புல்லை எதிர்கொண்டான். அவனால் அதை எரிக்க முடியவில்லை. தன்னுடைய இயலாமையை உணர்ந்த அக்னி தெய்வங்களை அடைந்தான். ”என்னால் அந்த யக்ஷன் யார் என்று அறிந்துகொள்ள முடியவில்லை”” என்றான்.

अथ वायुमब्रुवन्वायवेतद्विजानीहि किमेतद्यक्षमिति तथेति ॥ ७॥
atha vāyumabruvanvāyavetadvijānīhi kimetadyakṣamiti tatheti .. 7..
”வாயு தேவா, நீ போ, யார் அந்த யக்ஷன் என்று கண்டுபிடித்துக்கொண்டு வா” என்று தெய்வங்கள் அனுப்பின.

तदभ्यद्रवत्तमभ्यवदत्कोऽसीति वायुर्वा अहमस्मीत्यब्रवीन्मातरिश्वा वा अहमस्मीति ॥ ८॥
tadabhyadravattamabhyavadatko’sīti vāyurvā ahamasmītyabravīnmātariśvā vā ahamasmīti .. 8..
யக்ஷினிடம் சென்ற வாயுவை நீ யார் என்றது அது: ” நான் வாயு தேவன். பிரபஞ்சத்தை ஆசைப்பவன், மாதரிஷ்வா” என்றான் வாயு.

.तस्मिँस्त्वयि किं वीर्यमित्यपीदँ सर्वमाददीय यदिदं पृथिव्यामिति ॥ ९॥
tasmim̐stvayi kiṃ vīryamityapīdam̐ sarvamādadīya yadidaṃ pṛthivyāmiti .. 9..
”ஓஹோ அவ்வளவு புகழ் பெற்றவனா நீ. உன் சக்தி எப்படிப்பட்டது சொல்?
”உலகத்தில் எந்த பொருளையும் என்னால் அசைத்து உலுக்கி தூக்கி எறிய முடியும்” என்றான் வாயு.

स्मै तृणं निदधावेतदादत्स्वेति तदुपप्रेयाय सर्वजवेन तन्न शशाकादातुं स तत एव निववृते नैतदशकं विज्ञातुं यदेतद्यक्षमिति ॥ १०॥
tasmai tṛṇaṃ nidadhāvetadādatsveti tadupapreyāya sarvajavena tanna śaśākādātuṃ sa tata eva nivavṛte naitadaśakaṃ vijñātuṃ yadetadyakṣamiti .. 10..
ஒரு காய்ந்த புல்லை எதிரில் போட்டு ”எங்கே இதை உன் பலத்தால் காற்றில் தூக்கி எறிய முடியுமா பார்?” என்றான் யக்ஷன்.
ஹோ என்று பலத்த புயலாக மாறி வாயு அந்த புல்லை தூக்கி எறிய முயன்று தோற்று முகத்தை கவிழ்த்துக்கொண்டு தெய்வங்கள் முன்னே நின்றான்.”என்னால் யார் அந்த சக்தி வாய்ந்த யக்ஷன்” என்று கண்டுபிடிக்க முடியாமல் தோற்றுப்போனேன்’ என்றான்.

”अथेन्द्रमब्रुवन्मघवन्नेतद्विजानीहि किमेतद्यक्षमिति तथेति तदभ्यद्रवत्तस्मात्तिरोदधे ॥ ११॥
athendramabruvanmaghavannetadvijānīhi kimetadyakṣamiti tatheti tadabhyadravattasmāttirodadhe .. 11..
”தேவாதி தேவா, இந்திரா, மகவன் , நீ போய் யார் அந்த யக்ஷன் என்று தெரிந்து கொண்டுவா ” என்று தேவர்கள் அனுப்ப இந்திரன் கண்ணுக்கு யக்ஷன் தென்படவே இல்லை .

स तस्मिन्नेवाकाशे स्त्रियमाजगाम बहुशोभमानामुमाँ हैमवतीं ताँहोवाच किमेतद्यक्षमिति ॥ १२॥ ॥ इति केनोपनिषदि तृतीयः खण्डः ॥
sa tasminnevākāśe striyamājagāma bahuśobhamānāmumām̐ haimavatīṃ tām̐hovāca kimetadyakṣamiti .. 12…. iti kenopaniṣadi tṛtīyaḥ khaṇḍaḥ ..
இந்திரன் எதிரே ஒரு அழகிய பெண் தோன்றினாள் . அவள் ஹிமவான் புத்ரி வன் பெண் உமாதேவி . அவளிடம் ”யார் இங்கே இருந்த யக்ஷன் ?” என்று இந்திரன் கேட்டான்.

सा ब्रह्मेति होवाच ब्रह्मणो वा एतद्विजये महीयध्वमिति ततो हैव विदाञ्चकार ब्रह्मेति ॥ १॥
sā brahmeti hovāca brahmaṇo vā etadvijaye mahīyadhvamiti tato haiva vidāñcakāra brahmeti .. 1..
”இந்திரா, அது யக்ஷன் அல்ல, ப்ரம்மம்’ என்றாள் உமா தேவி. அந்த பிரம்மத்தின் வெற்றியால் தான் தேவர்கள் உங்களுக்கு பெருமை” என்று சொல்ல இந்திரன் உமா தேவி மூலம் யக்ஷன் தான் ப்ரம்மம் என்று புரிந்துகொண்டான்.

तस्माद्वा एते देवा अतितरामिवान्यान्देवान्यदग्निर्वायुरिन्द्रस्ते ह्येनन्नेदिष्ठं पस्पर्शुस्ते ह्येनत्प्रथमो विदाञ्चकार ब्रह्मेति ॥ २॥
tasmādvā ete devā atitarāmivānyāndevānyadagnirvāyurindraste hyenannediṣṭhaṃ pasparśuste hyenatprathamo vidāñcakāra brahmeti .. 2..
மொத்தத்தில் சக்தி வாய்ந்த தேவர்களான அக்னி, வாயு, இந்திரன் ஆகியோரால் ப்ரம்மம் முதலில் யக்ஷனாக அறியப்பட்டது.

तस्माद्वा इन्द्रोऽतितरामिवान्यान्देवान्स ह्येनन्नेदिष्ठं पस्पर्श स ह्येनत्प्रथमो विदाञ्चकार ब्रह्मेति ॥ ३॥
tasmādvā indro’titarāmivānyāndevānsa hyenannediṣṭhaṃ pasparśa sa hyenatprathamo vidāñcakāra brahmeti .. 3..
பிரம்மத்தின் வெகு அருகில் சென்று அது யக்ஷன் அல்ல என்று முதலில் அறிந்தவன் இந்திரன் மட்டுமே.

तस्यैष आदेशो यदेतद्विद्युतो व्यद्युतदा३ इतीन् न्यमीमिषदा३ इत्यधिदैवतम् ॥ ४॥
tasyaiṣa ādeśo yadetadvidyuto vyadyutadā itīn nyamīmiṣadā3 ityadhidaivatam .. 4..
மின்னல் ஒளிக்கற்றை மாதிரி க்ஷண காலத்தில் அறியப்பட்ட ப்ரம்மம். ஆதி தைவதம் எனப்படுவது.

अथाध्यात्मं यद्देतद्गच्छतीव च मनोऽनेन चैतदुपस्मरत्यभीक्ष्णँ सङ्कल्पः ॥ ५॥
athādhyātmaṃ yaddetadgacchatīva ca mano’nena caitadupasmaratyabhīkṣṇam̐ saṅkalpaḥ .. 5..
அத்யாத்மமாக மனதால் ஒருமிக்கப்பட்டு வெகு வேகமாக அறியப்படுத்துவது ப்ரம்மம். வெகு விரைவிலேயே, அருகிலேயே இருப்பது ப்ரம்மம் என்று உணரப்படுவது.

तद्ध तद्वनं नाम तद्वनमित्युपासितव्यं स य एतदेवं वेदाभि हैनꣳ सर्वाणि भूतानि संवाञ्छन्ति ॥ ६॥
taddha tadvanaṃ nāma tadvanamityupāsitavyaṃ sa ya etadevaṃ vedābhi hainagͫ sarvāṇi bhūtāni saṃvāñchanti .. 6..
தத்வன என்று அறியப்படுவது. தொழப்படுவது.

उपनिषदं भो ब्रूहीत्युक्ता त उपनिषद्ब्राह्मीं वाव त उपनिषदमब्रूमेति ॥ ७॥
upaniṣadaṃ bho brūhītyuktā ta upaniṣadbrāhmīṃ vāva ta upaniṣadamabrūmeti .. 7..
இந்த உபநிஷத் பிரம்மத்தை ஒருவாறு விளக்குகிறது.

”तसै तपो दमः कर्मेति प्रतिष्ठा वेदाः सर्वाङ्गानि सत्यमायतनम् ॥ ८॥
tasai tapo damaḥ karmeti pratiṣṭhā vedāḥ sarvāṅgāni satyamāyatanam .. 8..
உபனிஷதம் சொல்வது முக்யமாக தபஸ், சக்திகளை ஒருமைப்படுத்தி மனதை அதில் செலுத்தி புலன்களை விலக்குவது, பற்றியும், தமம் எனப்படும் சுய கட்டுப்பாடு பற்றியும் கர்மா எனப்படும் செய்வினை, தன்னலமற்ற செயல் பற்றியும் சம்பந்தப்பட்டவற்றை. வேதங்கள் ஞானத்தை பற்றி அதன் அங்கங்களாக உணரப்பப்படுவது . மொத்தத்தில் சத்தியத்தை உணர்வது.

यो वा एतामेवं वेदापहत्य पाप्मानमनन्ते स्वर्गे लोके ज्येये प्रतितिष्ठति प्रतितिष्ठति ॥ ९॥ ॥ इति केनोपनिषदि चतुर्थः खण्डः ॥
yo vā etāmevaṃ vedāpahatya pāpmānamanante svarge loke jyeye pratitiṣṭhati pratitiṣṭhati .. 9.. .. iti kenopaniṣadi caturthaḥ khaṇḍaḥ ..
இவ்வாறு பிரம்மத்தை அறிந்து கொண்டவன் பாபங்கள் நீங்கியவன். நிரந்தரமான, சாஸ்வத பிரம்மத்தில் மனதை ஈடுபடுத்தி ஆனந்தம் அடைபவன்.

.ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुः श्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि । सर्वं ब्रह्मौपनिषदं माऽहं ब्रह्म निराकुर्यां मा मा ब्रह्म निराकरोदनिराकरणमस्त्वनिराकरणं मेऽस्तु । तदात्मनि निरते य
उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु । ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
oṃ āpyāyantu mamāṅgāni vākprāṇaścakṣuḥ śrotramatho balamindriyāṇi ca sarvāṇi sarvaṃ brahmaupaniṣadaṃ mā’haṃ brahma nirākuryāṃ mā mā brahma
nirākarodanirākaraṇamastvanirākaraṇaṃ me’stu . tadātmani nirate ya upaniṣatsu dharmāste mayi santu te mayi santu oṃ śāntiḥ śāntiḥ śāntiḥ ..
ஓம். பிரம்மமே, குருவும் சிஷ்யனுமான எங்களை பாதுகாத்தருள்வாய். எங்களுக்கு என்றும் உயர்ந்ததாக ஞானத்தை அருள்வாய் . ஞான சக்தி எங்களால் பெறப்படவேண்டும். இருவருமாக சேர்ந்து நாங்கள் முயன்று சத்தியத்தை உணர்வோம். எவர் மீதும் வெறுப்புணர்ச்சி என்ற பேரன்பு நிலையை பெறுவோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *