SOUNDARYA LAHARI 15/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 15/103 – நங்கநல்லூர் J K SIVAN

15. பராசக்தி சுத்த ஸத்வ வடிவம்

शरज्ज्योत्स्नाशुद्धां शशियुतजटाजूटमकुटां वरत्रासत्राणस्फटिकघटिकापुस्तककराम् ।
सकृन्न त्वा नत्वा कथमिव सतां संन्निदधते मधुक्षीरद्राक्षामधुरिमधुरीणाः भणितयः ॥ १५॥ var फणितयः

Saraj-jyotsna-shuddham sasi-yuta-jata-juta-makutam Vara-traasa-traana-sphatika-ghutika-pustaka karaam;
Sakrn na thva nathva katham iva sathaam sannidadhate Madhu-kshira-drakhsa-madhurima-dhurinah phanitayah.

ஶரஜ் ஜ்யோத்ஸ்னா ஶுத்தாம் ஶஶியுத கடாஜூடமகுடாம் வரத்ராஸ த்ராண ஸ்படிக குடிகா புஸ்தக கராம்
ஸக்ருந்ந த்வா நத்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததே மது க்ஷீர த்ராக்ஷா மதுரிம துரீணா: பணிதய

அம்பாளை ஆதி சங்கர வர்ணிப்பது போல் தோன்றினாலும் உள்ளர்த்தம் ஆழமானது.
அம்பா பராசக்தி, லோக மாதா, உன் திவ்ய வதனத்தை தரிசிக்கும்போது சரத்கால பூர்ண நிலா போல் நிர்மலமாக ஒளி வீசுகிறது. உன் சிரத்தில் அழகிய பிறைச் சந்திரன். ஜடா முடி கிரீடம். வரம், அபயம் அளிக்கும் கரங்கள்.கழுத்தில் ஸ்படிகமாலை, கையில் புஸ்தகம் . ஆனந்த ஸ்வரூபம். அம்மா ஒரே ஒரு முறை உன்னை தரிசித்து நமஸ்கரித்துவிட்டால், வாக் தேவி உன்னருளால் பக்தனுக்கு வாக்கில் கவி பாடும் சக்தி தானாகவே வந்து பேசுவதெல்லாம் பாடுவதெல்லாம் தேனும், பாலும், திராக்ஷையும் சேர்ந்தது போல் இனிக்காமலாக போகும்?
அம்பாள் அருள் தான் ஸரஸ்வதி கடாக்ஷம். தேவியைத் தியானம் செய்யும் முறைக்கு “ஸாரஸ்வதப் பிரயோஹம்” எனப் பெயர். அம்பாள் சந்திரகலையை முடியில் தரித்த பராசக்தியின் வடிவம் மட்டுமல்ல, அவளே தான் ஆதி மஹா ஸரஸ்வதி. ப்ரம்மாவின் பத்னி கலைமகள் ஸரஸ்வதியாக அப்புறம் தோன்றியவள்.
ஸரஸ்வதி அஷ்டோத்தரத்தில் “ப்ரஹ்மா -விஷ்ணு-சிவாத்மிகாயை நம:” என்ற நாமம் வரும். லக்ஷ்மி அஷ்டோத்தரத்திலும் அதே போல். அம்பாளே “பிரம்ம ஸ்வரூபமாக சிரிஷ்டி கர்த்ரி, கோவிந்தரூபிணியாக கோப்த்ரி, ருத்ர ரூபமாக ஸம்ஹாரரூபிணி என்று அழகான ஒரு ஸ்லோகம் லலிதா ஸஹஸ்ர நாமத்திலும் உண்டு. அவள் ஒருத்திதான் சகலமும் என்பார் மஹா பெரியவா.
ஸ்ரீ சக்ர உபாசனையில் ஷோடசி மந்திரத்தில் அம்பாள் கையில் புஸ்தகம், மணிமாலை வைத்துக் கொண்டி ருக்கிறாள் என்று வரும். அபய ஹஸ்தம் பயத்தை, முக்கியமாக பக்தனின் மரண பயத்தை போக்கும். வரம் தரும் ஹஸ்தம் வேண்டியதை அளிக்கும். முக்கியமாக மோக்ஷம் தரும். ஜெபமாலையில் 51 ஸ்படிக மணிகள் ஸமஸ்க்ரித 51 அக்ஷரங்களை குறிக்கும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *