ASHTAPATHI DASAVATHARA SLOKAM – J K SIVAN

ஜெயதேவர் – நங்கநல்லூர் J K SIVAN
கீதகோவிந்தம் – அஷ்டபதி

ஸ்லோகம் 4 -5

4.तव करकमलवरे नखमद्भुतशृङ्गम् । दलितहिरण्यकशिपुतनुभृङ्गम्॥ केशव धृतनरहरिरूप जयजगदीशहरे॥ अ प १-४

tava kara-kamala-vare nakham adbhuta-çåìgam dalita-hiraëyakaçipu-tanu-bhåìgam keçava dhåta-narahari-rüpa jaya jagadéça hare (4)

தவ கர-கமல-வரே நக-மத்புத-ஸ்ருங்கம் தலித-ஹிரண்யகஸிபு-தநு-ப்ருங்கம் கேஸவ த்ருத-நரஹரி-ரூப ஜய ஜகதீஸ ஹரே!

ஜெகதீஸ்வரா, ஹரி நாராயணா, கேசவா, எப்படி உனக்கு இப்படி ஒரு அவதாரம் எடுக்க தோன்றியது. ஒருவன் இதுவரை எவரும் கேட்காத வரத்தை கேட்டு பெற்றான். அவன் கொடிய ராக்ஷஸன், உன்னை அடியோடு வெறுப்பவன். அவன் கேட்ட வரத்தை மீறாமல் அவனை அழிக்க வேண்டும் என்ற நிலை தோன்றியதும், உனக்கு இந்த பிரச்னைக்கு விடை உடனே கிடைத்து விட்டது. ராக்ஷஸன் ஒருவனுக்கு இவ்வளவு சாமர்த்தியம் இருந்தால் அவனையும் படைத்த உனக்கு சமயோசிதத்தில் குறைவு இருக்குமா? மனிதனாகவும் இல்லமால் மிருகமாகவும் இல்லமால் நரன் உடம்பில் சிங்கத்தின் தலையோடு ஒரு உருவம் எடுத்தாய். எந்த ஆயுதமும் உபயோகிக்கக்கூடாது என்ற நிலையில் உன் நகங்களையே கூரிய கத்திகளாக்கி க் கொண்டாய். ஹிரண்ய கசிபுவை பூமியிலும் இல்லாமல் ஆகாயத்திலும் இல்லாமல் உன் மடியிலேயே கிடத்திக்கொண்டாய். வீட்டுக்கு உள்ளேயும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல் வாசல்படியிலேயே மடக்கினாய். இரவிலும் இல்லாமல் பகலிலும் இல்லாமல் ரெண்டுக்கும் நடுவே அந்திவேளையில் அவன் முடிவு என்று தீர்மானித்தாய். ஒரு சொட்டு ரத்தம் கீழே சிந்தாமல் சிங்கமாய் அவன் மார்பை வயிற்றை நகங்களால் கீறி குடலை மாலையாக போட்டுக் கொண்டு ஒரு துளி ரத்தமும் கீழே சிந்தாமல் சிங்கம் குடித்ததா? என்னே உன் ஆற்றல், சீற்றம்? பக்தர்கள் துயர் தீர்க்க எப்படியெல்லாம் நீ அவதரித்து காப்பாற் றுகிறாய்.உன் கருணையை என்னென்பேன்? எங்கே இருக்கிறான் உன் நாராயணன், இந்த தூணிலேயா என்று சிறுவன் பிரஹலாதனிடம் கேட்க ஆமாம் என்று அவனும் காட்ட, ஹிரண்யகசிபு தாக்கிய அரண் மனைத் தூணில் தயாராக நின்றாயே! ஜெய விஜயீ பவா நரசிம்மா என்று பாடுகிறார் ஜெயதேவர்.

5. छलयसि विक्रमणे बलिमद्भुतवामन । पदनखनीरजनितजनपावन॥केशव धृतवामनरूप जयजगदीशहरे॥ अ प १-५

chalayasi vikramane , balimadbhuta-vamana pada-nakha-nira-janita-jana-pavana | kesava dhruta-vamana-rupa jaya jagadisa hare ||5||
சலயஸி விக்ரமணே பலிமத்புதவாமன பத-நக-நீர-ஜனித-ஜன-பாவன கேஸவ த்ருத-வாமன-ரூப ஜய ஜகதீஸ

முந்தைய அவதாரத்தில் எவ்வளவுக்கெவ்வளவு ரௌத்ராகாரமாக நரசிங்கமாக நீ காட்சி அளித் தாயோ, அவ்வளவுக்கவ்வளவு எளிமையான ஒரு குள்ள பிராமணனாக , வாமனனாக, நீ எடுத்த அடுத்த அவதாரம் ஆச்சர்யமானது.இதிலும் உன் சாமர்த்தியத் துக்கு ஈடு இணை இல்லையே. இந்த அவதாரத்தில் நீ எந்த ராக்ஷஸனையும் கொல்லவில்லை, மஹாபலி எனும் பலம் மிகுந்த ராக்ஷஸ அரசனின் செறுக்கு , கர்வம் அதிகார போதை, அதனால் அவன் தேவாதி தேவர்களை அடக்கியாள முற்பட்டது போன்ற கொடு மை களை ஒழிக்க, தேவர்கள் குறை தீர்க்க நீ எடுத்த ஒரு அற்புத அவதாரம். மஹாபலி சிறந்த அரசன். அவன் தனது தவ,யாக வலிமையால் மூன்று லோகங்களுக்கும் சக்ரவர்த்தியாகி, தேவர்களை அடக்கி ஆண்டான். அவனது சக்தியை குறைக்க அவனை வென்று பாதாளத்தில் அவன் ஒரு ராஜாவாக இருக்க வழி வகுத்து கொடுக்க நீ செய்த தந்திரத்தை நினைவு கொள்கிறேன். மஹாபலி ஒரு பெரிய யாகம் வளர்த்தான். அதை வெற்றி கரமாக செய்து முடித்தான். யாகத்தின் நிறைவில் அநேக பிராமணர்களுக்கு தானம் கொடுத் தான். அப்போது கடைசியாக ஒரு குள்ள பிராமணனாக நீ மஹாபலி யாகசாலைக்கு வந்தாய். உனக்கு என்ன வேண்டும் கேள் என்று மஹாபலி கேட்டபோது நீ கேட்டது உன் சிறிய குள்ளமான காலடியால் மூன்றடி மண் மட்டுமே. அசுரகுரு சுக்ரன் தடுத்தும் கேளாமல் மஹாபலி நீ கேட்ட வரம் தந்தான். அடுத்த கணமே நீ விஸ்வரூபம் எடுத்து ஓரடியால் மண்ணுலகை, ரெண்டாம் அடியால் விண்ணுலகை அளந்தாய். மஹாபலி மூன்றாம் அடிக்கு இடம் எங்கே ? என்று கேட்டபோது மஹாபலி தன் தவறி உணர்ந்தான். என் சிரமே உன் மூன்றாம் அடி வைக்க சரியான இடம் என்று தலையைக் குனிந்து நீட்டினான். அவனை பாதாளத்தில் அழுத்தி அவன் சிரஞ்சீவியாக இன்றும் அங்கே ஆள்கிறான்.வருஷத்துக்கு ஒருமுறை கேரளத்துக்கு அவன் பழைய ராஜ்யத்துக்கு வருகிறான் என்ற ஐதீகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடு கிறோம். உனது கால் விண்ணை அளக்கும்போது, ப்ரம்ம லோகத்தில் ப்ரம்மா உன் திருவடியைக் கண்டு வணங்கி உன் பாதத்துக்கு அர்க்கியம் விட்டார் அல்லவா. அப்போது அந்த அர்க்ய ஜலம் உன் கால் கட்டை விரல் நகத்தில் பட்டு அதிலிருந்து கங்கா நதி உற்பத்தியானது என்கிறார் ஜெயதேவர் இந்த ஸ்லோகத்தில்.

தொடரும்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *