SOUNDHARYA LAHARI 50/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி – 50/103 நங்கநல்லூர் J K SIVAN

50. அமுதும் தேனும் எதற்கு நீ அருகில் இருக்கையிலே..

कवीनां संदर्भस्तबकमकरन्दैकरसिकं कटाक्षव्याक्षेपभ्रमरकलभौ कर्णयुगलम् ।
अमुञ्चन्तौ दृष्ट्वा तव नवरसास्वादतरला- वसूयासंसर्गादलिकनयनं किंचिदरुणम् ॥ ५०॥

Kavinam sandharbha-sthabaka-makarandh’aika-rasikam Kataksha-vyakshepa-bhramara-kalabhau-karna-yugalam;
Amunchantau drshtva tava nava-ras’asvada tharalau-Asuya-samsargadhalika-nayanam kinchid arunam.

கவீனாம் ஸன்தர்ப-ஸ்தபக-மகரன்தைக-ரஸிகம் கடாக்ஷ-வ்யாக்ஷேப-ப்ரமரகலபௌ கர்ணயுகலம் |
அமுஞ்ச்ன்தௌ த்றுஷ்ட்வா தவ னவரஸாஸ்வாத-தரலௌ அஸூயா-ஸம்ஸர்கா-தலிகனயனம் கிஞ்சிதருணம் || 50 ||

ஆதி சங்கரரின் கற்பனையும் மனதில் தோன்றும் அம்பாளின் உருவ வர்ணனனிக்கும் ஈடு சொல்லவே முடியாது. இறைவனே கவிஞனனாக பிறந்து இயற்றிய ஸ்தோத்திரங்கள்.

அம்மா லோக நாயகி, விசாலாக்ஷி, உன்னுடைய காதுவரை நீண்ட அழகிய கருணை மிக்க கண்கள், இல்லை இல்லை, இரு கருவண்டுகள். இந்த வண்டுகள் பருகும் பூந்தேன் எது தெரியுமா? கவிகளின் எண்ணற்ற அபூர்வ ஸ்தோத்திரங்கள். அந்த கண்கள் நெருங்கி இருக்கும் இரு காதுகளும் கவிகளின் ஸ்தோத்ரங்களில் உள்ள நவரஸங்களையும் அநுபவிப்பவை. . ஆகவே இந்த இரு கருவண்டுகள் போன்ற கண்களின் அதிர்ஷ்டத்தை கவனித்து உனது நெற்றியில் உள்ள மூன்றாவது கண் அவற்றின் மேல் பொறாமை கொள்வதால் சிவந்து காணப்படுகிறதோ?
மூன்றாவது கண் தான் இங்கே ஆஞா சக்ரம். நெற்றிக்கண் தான் காலாக்னியை வெளிப்படுத்துவது. சிவை தான் சிவன்.
லலிதா ஸஹஸ்ரநாமத்தில் 106 நாமம் சுதா சாரபிவர்ஷினி सुधासारभि-वर्षिणी – சஹஸ்ராரத்தின் மத்தியில் சோம சக்ரம் உள்ளது. திகு திகு வென்று குண்டலினி இந்த சோமசக்ரத்தை அடையும்போது அதி உஷ்ணத்தில் சோமசக்ரத்தில் உள்ள அம்ருதம் பொங்கி வழியும். தொண்டை வழியாக, சொட்டு சொட்டாக நரம்புமண்டலத்தில் அம்ருதம் ப்ரவேசிக்கும் நாடி நரம்பெல்லாம் ஆனந்தத்தில் திளைக்கும் நிலை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *