SOUNDHARYA LAHARI 42/103 – J. K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 42/103 – நங்கநல்லூர் J K SIVAN

गतैर्माणिक्यत्वं गगनमणिभिः सान्द्रघटितं किरीटं ते हैमं हिमगिरिसुते कीर्तयति यः ।
स नीडेयच्छायाच्छुरणशबलं चन्द्रशकलं धनुः शौनासीरं किमिति न निबध्नाति धिषणाम् ॥ ४२॥

Gathair manikyatvam gagana-manibhih-sandraghatitham. Kiritam te haimam himagiri-suthe kirthayathi yah;
Sa nideyascchaya-cchurana-sabalam chandra-sakalam Dhanuh saunasiram kim iti na nibadhnati dhishanam. 42

கதைர் மாணிக்யத்வம் ககனமணிபி: ஸாந்த்ர கடிதம் கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய:
ஸ நீடேயச்சாயா ச்சுரண ஶபலம் சந்த்ர ஶகலம் தனு: ஶௌனாஸீரம் கிமிதி ந நிபத்னாதி திஷணாம் 42

கவனித்தீர்களா, முதல் 41 ஸ்லோகங்கள் அம்பாளின் சக்தி, குண்டலினி வாசம், பீடம், ஸ்ரீ சக்ர உபாசனை, அவள் உதவியாளர்கள், மந்த்ர யந்த்ர சக்தி, பலம், பலன், பரமேஸ்வரனோடு இணைந்த தன்மை பற்றியே சொல்லிவிட்டு அடுத்த 59 ஸ்லோகங்கள் அம்பாளை கேசாதி பாதம் வரை ஆதி சங்கரர் அவளது ஸௌந்தர்யத்தை அற்புத ஸ்லோகங்களாக வர்ணிக்கிறார். முதல் 41 ஸ்ரீசக்ர உபாசகர்களுக்கு உகந்தது. ஜபிக்க முடிந்தது.

நம் போன்ற சாதாரண பக்தர்களுக்கு ஸௌந்தர்ய லஹரியே போதும் அதே பலன் தான் என்று பிரித்து வைத்திருக் கிறாரோ என்று தோன்றுகிறது. சமுத்திரத்தின் அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஓயாமல் ஒழியாமல் கம்பீரமாக அசைவது போல் அம்பாளின் திவ்ய சௌந்தர்யத்தை பாதம் முதல் கேசம் வரை அற்புதமாக ஒன்று விடாமல் அம்பாளின் அழகின் அலைகளாக ஸ்தோத்ரம் பண்ணிய விதம் அருமை.

அம்பாளின் சிரத்தில் உள்ள கிரீடம், நவரத்தினங்கள் அடுக்கடுக்காக இடைவெளி இல்லாமல் கெட்டியாக தங்கத்தில் பதித்தது . ஆஹா அவற்றின் ஜொலிப்பு பன்னிரண்டு சூரியன்கள் ஒன்றாக சேர்ந்தது போல். (பன்னிரண்டு மாதங்களை, பன்னிரண்டு ராசிகளில் சூரியனையும் குறிக்கிறதோ?) ஒருவேளை பன்னிரெண்டு சூரியனுமே அம்பாள் ஒளியில் தம் ஒளி இழந்து வெறும் நவரத்ன மணிகளாக ஒளி குன்றி விட்டதோ? ஸஹஸ்ராரத்திலிருந்து மூலாதாரம் வரை குண்டலினி சக்ரங்களில் அம்பாளின் சக்தி ஒளிக்கதிர்கள் ஏழாக முறிந்து பிரிந்து வானவில்லின் ஏழு வர்ணங்களாக தோன்றுகிறதோ?
ஆதி சங்கரர் அம்பாளின் கிரீட ஒளியை இப்படி வர்ணிக்கிறார்.
.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *