SOUNDHARYA LAHARI 40/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 40/103 — நங்கநல்லூர் J K SIVAN

40. மணிபூரகத்தில் அம்பாளின் சிவ தர்சனம்.

तटित्त्वन्तं शक्त्या तिमिरपरिपन्थिफुरणया स्फुरन्नानारत्नाभरणपरिणद्धेन्द्रधनुषम् ।
तव श्यामं मेघं कमपि मणिपूरैकशरणं निषेवे वर्षन्तं हरमिहिरतप्तं त्रिभुवनम्

taṭittvantaṃ śaktyā timiraparipanthiphuraṇayā sphurannānāratnābharaṇapariṇaddhēndradhanuṣam ।
tava śyāmaṃ mēghaṃ kamapi maṇipūraikaśaraṇaṃ niṣēvē varṣantaṃ haramihirataptaṃ tribhuvanam ॥ 40 ॥

தடித்வந்தம் ஶக்த்யா திமிர பரிபந்த்தி ஸ்புரணயா ஸ்புரந் நானாரத்னாபரண பரிணத்தேந்த்ர தனுஷம்
தவ ஶ்யாமம் ம்கம் கமபி மணிபூரைக ஶரணம் நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர தப்தம் த்ரிபுவனம் 40

அம்பிகே, பராசக்தி, மணிபூரக சக்ரத்தில் உறைபவளே, இருட்டுக்குச் சத்துருவாக ஜ்வலித்து ஒளிவீசும் மின்னல் கொடி போன்றவளே, உனது சதாசிவ தத்வம் எப்படிப்பட்டது என்று சொல்கிறேன். கண்ணைப்பறிக்கும் பலவிதமான பிரகாசம் கொண்ட ரத்ன ஆபரணங்களாகிய இந்திரவில்லுடன் கூடியதும், கறுத்ததும், ருத்ரனாகிய பிரளயகால சூரியனால் எரிக்கப்பட்ட மூவுலகையும் மழை பொழிந்து குளிரச் செய்வதும், ஆகிய அதிசயமான மேகம் போன்றதான் உனது சதாசிவ தத்துவத்தை தலைவணங்கி நமஸ்கரிக்கிறேன்.

“அநாஹத சக்கரத்தில் உள்ள சூரியகிரணம் கீழே பரவி, ஸ்வாதிஷ்டான அக்கினியுடன் கூடி மணிபூரகத்தில் புகுந்து மேகத்தை உண்டாக்கி மழை பொழிந்து தாபத்ரயத்தால் தவிக்கும் உலகைக் குளிரச் செய்கிறது” என்று பழைய தத்வ ஸாஸ்த்ர நூல் ”அருணாமோதினீ” கூறுகிறது.

அக்னியிலிருந்து ஜலம் தோன்றுகிறது. ஜலத்திற்கு இருப்பிடமானது மணிபூரக சக்ரம் . பத்து தள தாமரை மலர்கள் கொண்டது. இங்கே மஹேஸ்வரன் – ஸ்திரஸௌதாமினி என்ற நாமத்தில் சிவனும் சக்தியும் உபாசிக்கப்படுகிறார்கள். அவர்களது இன்னொரு பெயர் அம்ருதேஸ்வரன் – அம்ருதேஸ்வரி என்ற பொருத்தமான பெயர். ஸத்யோஜாதம், வாமதேவம் முதலிய 52 ஜல மயூகங்களால் சூழப்பெற்றவர்கள் . இன்றும் இதற்கு ஏற்ற ஸ்தலம் திருவானைக்காவல்.
ஜம்புகேஸ்வரம்.

இருள் நிறைந்த மணிபூரகத்தில் நீருண்டமேகம் போன்ற சிவனிடம் சாதாரண மின்னல்கொடிபோல் தேவி காட்சி அளிக்கிறாள் என்பது சுருக்கமான பொருள். பரமேஸ்வரனின் ஞான, கருணை ஒளியை பிரகாசமாக அருள்பவள் அம்பாள். சிவை மூலம் சிவன் தெரிகிறான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *