SOUNDARYA LAHARI 28/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 28/103 – நங்கநல்லூர் J K SIVAN

28. தேவியின் தாடங்க மஹிமை

सुधामप्यास्वाद्य प्रतिभयजरामृत्युहरिणीं विपद्यन्ते विश्वे विधिशतमखाद्या दिविषदः ।
करालं यत्क्ष्वेलं कबलितवतः कालकलना न शम्भोस्तन्मूलं तव जननि ताटङ्कमहिमा ॥ २८॥

sudhāmapyāsvādya pratibhayajarāmṛtyuhariṇīṃ vipadyantē viśvē vidhiśatamakhādyā diviṣadaḥ ।
karālaṃ yatkṣvēlaṃ kabalitavataḥ kālakalanā na śambhōstanmūlaṃ tava janani tāṭaṅkamahimā ॥ 28 ॥

ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராம்ருத்யு ஹரிணீம் விபத்யந்தே விஶ்வே விதி ஶதமகாத்யா திவிஷத:
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனா ந ஶம்போஸ் தன்மூலம் தவ ஜனனி தாடங்க மஹிமா 28

மனித, மிருக, பறவை, மற்ற ஜந்துக்கள் எல்லாமே பிறப்பு இறப்பு வளையத்தில் மாட்டிக்கொண்டவை. வியாதி,மூப்பு, பயம் இதிலிருந்து தப்ப இயலாது. இந்திராதி தேவர்கள், சாகாவரம் பெற்று, அம்ருதம் அருந்தியும் மூப்பு வியாதி மரணம் தவிர்க்க முடியாதது என்று தெரிகிறது. ப்ரளய காலத்தில் எல்லோரும் மறைய வேண்டிய நிலையில் உள்ளார்கள். மிகக் கொடிய ஹாலஹால விஷத்தை வாசுகி கக்கியபோது பாற்கடலில் அதை மற்றவர்களைக் காப்பதற்காக பரமேஸ்வரன் அப்படியே எடுத்து விழுங்கி மரணாவஸ்தையில் இருந்தபோது அவனையும் காப்பாற்றியது எது?
அம்பிகே, பராசக்தி, சிவன் உயிர் தப்பி விஷம் அவன் கழுத்தில் தங்கி அவன் நீலகண்டனாக என்றும் திகழ காரணம் உன் செவிகளில் நீ அணிந்துள்ள தாடங்கத்தின் மஹிமை தானே தாயே!

தாடங்கம் என்றாலே திருவானைக்காவில் நீ அகிலாண்டேஸ்வரி யாக காட்சி தருவது நினைவுக்கு வருகிறது. ஆதி சங்கரர் சக்ர பிரதிஷ்டை, மஹா பெரியவா உனக்கு அளித்த தாடங்க பிரதிஷ்டை வைபவம் நினைவுக்கு வருகிறதம்மா.
தேவியின் காதில் அணிந்துள்ள தாடங்கம் ஸ்ரீசக்ரம். லலிதா ஸஹஸ்ரநாமம் அம்பிகே நீ காதில் அணிந்துள்ள தாடங்கம் சந்திர சூரியர்கள் என்கிறதே. ஸ்லோகம் : 22., tāṭaṅka-yugalī-bhūta-tapanoḍupa-maṇḍalā, தாடங்க யுகலீ பூத தபனோதுப மண்டலா…

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *