SOUNDARYA LAHARI 6/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 6/103 நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

धनुः पौष्पं मौर्वी मधुकरमयी पञ्च विशिखाःवसन्तः सामन्तो मलयमरुदायोधनरथः ।
तथाप्येकः सर्वं हिमगिरिसुते कामपि कृपाम् अपाङ्गात्ते लब्ध्वा जगदिद-मनङ्गो विजयते ॥ ६॥

dhanuḥ pauṣpaṃ maurvī madhukaramayī pañcha viśikhāḥ vasantaḥ sāmantō malayamarudāyōdhanarathaḥ ।
tathāpyēkaḥ sarvaṃ himagirisutē kāmapi kṛpām apāṅgāttē labdhvā jagadida-manaṅgō vijayatē ॥ 6 ॥

தனு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விஶிகா: வஸந்த: ஸாமந்தோ மலயமரு தாயோதன ரத:
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம் அபாங்காத்தே லப்த்வா ஜகதித மனங்கோ விஜயதே

பச்சைப் பெண் பார்வதிக்கு ஹைமவதி, ஹேமாவதி என்று பெயர். காரணம் அவள் தந்தை ஹிமவான் , பனிமலை ராஜா, அம்பா, எனக்கு உன் அழகைப் பார்க்கும்போது மன்மதன் நினைவு வருகிறது. அவன் கையில் தரித்திருக்கும் தனுசு, வில் மலர்களால் ஆனது. அந்த வில்லின் நாண் இருக்கிறதே அது தேன் உண்ணும் வண்டுகளால் ஆனது. அந்த வில்லில் அவன் தொடுக்கும் அம்புகள், சரங்கள் இருக்கிறதே . அவை ஐந்து, பஞ்ச பாணங்கள் என்று அதற்கு பெயர். அது அத்தனையும் வண்ண வண்ண நறுமண மலர்கள். வசந்த காலம் அவன் மந்திரி. அவன் ஏறி வரும் தேர் எது என்றால் மலய மாருத தென்றல் காற்று. மன்மதன் உடலை உன் புருஷன் சிவன் நெற்றிக்கண் தீயினால் எரித்த பிறகு மன்மனதுக்கு உடம்பே இல்லை. அங்கம் இல்லாத அவனை அநங்கன் என்கிறோம். அம்பிகே, உன் கடைக்கண் பார்வை ஒன்றின் அழகால் மன்மதன் இந்த உலகையே வெல்பவன். எல்லாம் உன் கிருபை தாயே, கரும்பு வில்லை ஏந்தியவளே.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *