SOUNDARYA LAHARI 5/103 J K SIVAN

ஸௌந்தர்ய /சிவானந்த லஹரி 5/103
நங்கநல்லூர் J K SIVAN

எத்தனையோ சக்தி மந்த்ரங்களை, ரஹஸ்யங்களை கொண்ட அற்புத ஸ்தோத்ரம் ஸௌந்தர்ய லஹரி. பக்தியோடு பாராயணம் செய்து கைமேல் பலன் கண்டவர்கள் பல தலைமுறையாக இருக்கிறார்கள்.

हरिस्त्वामाराध्य प्रणतजनसौभाग्यजननीं पुरा नारी भूत्वा पुररिपुमपि क्षोभमनयत् ।
स्मरोऽपि त्वां नत्वा रतिनयनलेह्येन वपुषा मुनीनामप्यन्तः प्रभवति हि मोहाय महताम् ॥ ५॥

haristvāmārādhya praṇatajanasaubhāgyajananīṃ purā nārī bhūtvā puraripumapi kṣobhamanayat .
smaro’pi tvāṃ natvā ratinayanalehyena vapuṣā munīnāmapyantaḥ prabhavati hi mohāya mahatām .. 5..

ஹரிஸ் த்வா மாராத்த்ய ப்ரணத ஜன ஸௌபாக்ய ஜனனீம் புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப மனயத்
ஸ்மரோ(அ)பி த்வாம் நத்வா ரதி நயன லேஹ்யேன வபுஷா முனீனா மப்யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம் 5

சாம்பவி, உன்னை வணங்கும் ஜனங்களுக்கு ஸகல ஸௌபாக்கியத்தையும் தோற்றுவிப்பவளே. உன் மஹிமை அறிந்தல்லவோ மஹா விஷ்ணு உன்னை பூஜிபவர். மஹா விஷ்ணு உன்போல் உருவம் கொண்டு முப்புரம் எரித்த பரமசிவன் மனம் கவர்ந்தார். உலகத்தில் உயிரினமும் உன் சக்தி இன்றி அசையமுடியாதே.
உன் திருப்பாத தூளியின் சக்தி மன்மதனும் உன்னை வணங்கி உன் உரு பெற்று அவனது ரதிதேவியே மயங்கி கண்கொண்டு பருகும் அமுதம் போன்று தோன்றினான். முனிவர்களுக்கும் கூட அந்தரத்தில் மதிமயக்கம் உண்டாகும்படி சக்தியுள்ளவன் ஆனான் என்பது தெரிந்த விஷயம் தானே. தாயே, நீயின்றி வேறு உயிர் ஏது?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *