SOUNDARYA LAHARI 4/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி/சிவானந்த லஹரி 4/103
நங்கநல்லூர் J K SIVAN

இந்த ஸ்லோகத்தில் அம்பாளின் பாத கமலங்களின் நிகரற்ற சக்தி, ஈடற்ற கருணையை விளக்குகிறார். அவள் பாத தோழியின் சக்தி நமது எல்லா பயங்களிலும் இருந்து நிவ்ருத்தி அடையச் செய்கிறது. சகல ரோகமும் நம்மை அடையாமல் பாது காக்கிறது. அப்படி ரோகம் இருந்தாலும் உடனே அதிலிருந்து விடுதலை பெறவும் உதவுகிறது.

त्वदन्यः पाणिभ्यामभयवरदो दैवतगणः त्वमेका नैवासि प्रकटितवराभीत्यभिनया ।
भयात् त्रातुं दातुं फलमपि च वाञ्छासमधिकं शरण्ये लोकानां तव हि चरणावेव निपुणौ ॥ ४॥

tvadanyaḥ pāṇibhyāmabhayavarado daivatagaṇaḥ tvamekā naivāsi prakaṭitavarābhītyabhinayā .
bhayāt trātuṃ dātuṃ phalamapi ca vāñchāsamadhikaṃ śaraṇye lokānāṃ tava hi caraṇāveva nipuṇau .. 4..

த்வதந்ய: பாணிப்ப்யா: மபயவரதோ தைவதகண: த்வேகா நைவாஸி ப்ரகடித வராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சா ஸமதிகம் ஶரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ 4

பரமேஸ்வரி நீ தான் இந்த உலகிற்குப் புகலிடமே ! மற்ற தெய்வங்கள் அனைத்தும் தமது கைகளால் அபயத்தையும் வரத்தையும் அளிப்பதாகத் தான் சிலைகளில் காண்கிறோம். தாயே, நீ ஒருத்தி மட்டும் தான் அபயத்திற்கு பதிலாக அபிநயத்தால் வரத்தையும் அ-பயத்தையும் அதாவது எம்மை பயத்தினின்று காப்பாற்றவும், வேண்டியதற்கு அதிகமாகவே பலனை அளிப்பதற்கும்கூட உன்னுடைய திருவடிகளின் பாத தூளி ஒன்றே போதும் என்று உணர்த்துகிறாய்.

கோயில்களில் நாம் காணும் சகல தெய்வங்களும் நமது ஸம்ஸார பயத்தைப் பயத்தைப் போக்கி மோக்ஷமளிக்க தூக்கிய வலது கரத்தில் அபய முத்திரை காட்டுகிறார்கள். உலக இன்பங்களை அளிக்கும் முத்திரை இடது கரத்திலும் அவர்களின் சிலா மூர்த்தங்களில் காண்கிறோம். ஆனால் த்ரிபுரஸுந்தரி தனது கரங்களில் பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்புவில் ஆகியவற்றை தரித்திருப்பதால் அவளது திருப்பதங்களால் அபயவரத சக்திகளை அருள்கிறாள் என்று இந்த தியான ஸ்லோகம் அபூர்வமாக விளக்குகிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *