SOUNDARYA LAHARI 22/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி – 22/103 – நங்கநல்லூர் J K SIVAN

22. பவானித்வம் மஹிமை

भवानि त्वं दासे मयि वितर दृष्टिं सकरुणा- मिति स्तोतुं वाञ्छन् कथयति भवानि त्वमिति यः ।
तदैव त्वं तस्मै दिशसि निजसायुज्यपदवीं मुकुन्दब्रह्मेन्द्रस्फुटमकुटनीराजितपदाम् ॥ २२॥

bhavāni tvaṃ dāsē mayi vitara dṛṣṭiṃ sakaruṇā-miti stōtuṃ vāñChan kathayati bhavāni tvamiti yaḥ ।
tadaiva tvaṃ tasmai diśasi nijasāyujyapadavīṃ mukundabrahmēndrasphuṭamakuṭanīrājitapadām ॥ 22 ॥

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டீம் ஸகருணாம் இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி ய:
ததைவ த்வம் தஸ்மை திஶஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம் முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித பதாம் 22

பரமேஸ்வரன் பவான். அம்பாள் பவானி. உன் அடிமையான என் மேல் கருணை கொண்டு அருள் நிறைந்த பார்வையை தருவாய் தாயே.
அம்பா பவானி என்று சொன்னாலே போதும். அப்படிச் சொல்லும் பக்தனுக்கு விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியவர்களின் கிரீட ஒளியால் நீராஜனம் செய்யப்பெற்ற திருவடிகளையுடைய உனது ஸாயுஜ்ய பதவியை அளிக்கிறாய்.
ரொம்ப சுலபமான வழி, அம்பாளை மனதார துதிப்பது மட்டுமே .
வேறே பூஜை, ஹோமம், விரதம், ஹோமம், எதுவும் வேண்டாம் என்று உணர்த்துகிறது ஆதி சங்கரரின் இந்த ஸ்லோகம்.
இதை அறிந்து தான் சிவாஜி மஹாராஜாவும் அவரது மராத்திய வீரர்களும் ‘ஜெய் பவானி’ என்ற வார்த்தையை மறக்கவில்லை. உயிரைத் திரணமாக மதித்து அம்பாள் அருளைப் பெற்று வெற்றி பெற்றவர்கள். எல்லா தெய்வங்களும் அம்பாளின் திருவடியைத் தொழுவதால் அம்பிகையின் திருவடி அழகாக அவர்கள் க்ரீடங்களில் பிரதிபலிக்கிறது. உபாசகன் தன்னை முழுமையாக மறந்து அம்பாளின் திருநாமத்தோடு ஒன்றி, அவளையே தானாக உணரும்போது அவனுக்கு உலக ஈர்ப்புகளில் இச்சை எப்படி வரும்? உபாசகன் ஜோதியில் கற்பூரம் கரைவது போல் அம்பாளுடன் ஐக்கியமாகி விடுகிறானே. அது தான் உச்ச கட்ட சரணாகதி.

லலிதா ஸஹஸ்ரநாமத்தில் பவானி பற்றிய ஒரு ஸ்லோகம் நினைவுக்கு வருகிறதா?

aruṇāṃkaruṇā-taraṃgitākṣīṃ dhṛta-pāśāṅkuśa-puṣpa-bāṇa-cāpām|
aṇimādibirāvṛtām mayūkhai-rahamityeva vibhāvaye bhavānīm||

अरुणां करुणा-तरंगिताक्षीं धृत-पाशांकुश-पुष्प-बाण-चापाम्।
अणिमादिबिरावृताम् मयूखै-रहमित्येव विभावये भवानीम्॥

அதிகாலை ஸூர்யனான அருணோதய சிவந்த நிறம், அம்பாள் பவானியின் கருணா கடாக்ஷத்தை குறிக்கிறது. கருணைக்கு நிறம் சிவப்பு.
சதுர் புஜத்தில் பாசம் அங்குசம் கரும்பு, புஷ்ப பாணம் ஏந்தியவ ளைச்சுற்றி அஷ்ட மா சித்திகள் உள்ளன. ஒவ்வொரு சித்திக்கும் ஒரு அதிபதி, கடவுள் அம்பாள் ஸ்ரீ சக்ரத்தில் உண்டு.
ஆதி சங்கரர் பவானி புஜங்கம் 17 ஸ்லோகங்களும் எழுதியுள்ளார். அதை நேரம் கிடைத்த போது ரசிப்போம் ருசிப்போம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *