SOUNDARYA LAHARI 14/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 14/103 – நங்கநல்லூர் J K SIVAN

ஸ்ரீ சக்ர அமைப்பு

क्षितौ षट्पञ्चाशद् द्विसमधिकपञ्चाशदुदके हुताशे द्वाषष्टिश्चतुरधिकपञ्चाशदनिले ।
दिवि द्विष्षट्त्रिंशन्मनसि च चतुष्षष्टिरिति ये मयूखास्तेषामप्युपरि तव पादाम्बुजयुगम् ॥ १४॥

kṣitau ṣaṭpañchāśad dvisamadhikapañchāśadudakē hutāśē dvāṣaṣṭiśchaturadhikapañchāśadanilē ।
divi dviṣṣaṭtriṃśanmanasi cha chatuṣṣaṣṭiriti yē mayūkhāstēṣāmapyupari tava pādāmbujayugam ॥ 14 ॥

க்ஷிதௌ ஷட்பஞ்சாஶத் த்விஸமதிக பஞ்சாஶ துதகே ஹுதாஶே த்வாஷஷ்டிஶ் சதுரதிக பஞ்சாச தநிலே
திவி த்வி: ஷட்த்ரிம்ஶன் மனஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே மயூகாஸ் தேஷா மப்யுபரிதவ பாதாம்புஜ யுகம்
ஸ்ரீ லலிதாம்பிகை திருவடிகளை வழிபடும் ஸ்ரீ சக்ர தத்வ அமைப்பைப் பற்றி இந்த ஸ்லோகம் சொல்கிறது. அவளது இரு தாமரைப் பாதங்களும் என்ன தத்துவத்தை குறிக்கிறது, அதன் ஆதார சக்ரங்கள் எவை, அதில் எத்தனை சக்தி கிரணங்கள் இருக்கிறது என்று இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் விவரிக்கிறார்.

லலிதாம்பிகையே மூன்று விதமாக வழிபடுகிறோம். ஸ்தூல, அர்ச்சவதாரமாக விக்ரஹ ஆராதனை. சூக்ஷ்ம சரீரியாக காமகலாவாக த்யானம் பண்ணுவது அடுத்தது. காரண சரீரியாக மனதை ஒடுக்கி குண்டலினி யோகவழிபாடு மூன்றாவது.

அம்பாள் தீவிர உபாசனை குண்டலினி தத்வம். பஞ்ச பூதங்களையும் மனதையும் சேர்த்து ஆறு ஆதார சக்கரமாக கொண்டது. இந்த ஆறுக்கும் மேலே தான் ஸஹஸ்ராரம் எனும் உச்சி. சிரசில் உள்ளது. அம்பாள் திருவடிகளிலிருந்து ஒளி வீசும் சக்தி கிரணங்களை இந்த சக்ரங்களில் பிரித்து காட்டப்படுகிறது. சூர்யமானம் சந்திரமானம் என்று வருஷத்தை 365.25நாளாகவும் 354.37 நாளாகவும் பிரிப்பது போல் தான் இதிலும் உட்பிரிவுகள். குண்டலினி யோகத்தில் அம்பாலின் திருவடி பிரகாச ஒளியை கிரணங்களாக பிரித்து காட்டப்படுகிறது. கிரணங்கள் தான் கலா எனப்படுவது.
சுலபமாக புரிந்து கொள்ள ஒரு மணி நேரத்தை எப்படி 60 நிமிஷமாக, ஒவ்வொரு நிமிஷத்தை 60 வினாடிகளாக பிரிக்கிறோமோ அப்படி தான் ஸ்ரீ சக்ரத்தின் பிரிவுகள் கலாக்கள். லலிதா சஹஸ்ரநாமத்தில் இவற்றை மாத்ருகா என்ற பெயரில் அறிகிறோம். லலிதாவுக்கு ‘மாத்ருகா வர்ண ரூபிணி’ என்று ஒரு நாமம்.
குண்டலினி சக்ர தத்வத்தின் பிரிவு:
பூமி தத்வம் தான் ப்ரித்வி தத்வம். அதற்கான சக்ரம் மூலாதாரம். அதில் ஐம்பத்தாறு சக்தி கிரணங்கள்., ஜல தத்வமான ஸ்வாதிஷ்டான சக்ரத்தில் ஐம்பத்திரண்டு கிரணங்கள்.
அக்னி தத்வமான ,மணி பூரக சக்ரத்தில் அறுபத்திரண்டு கிரணங்கள்.
வாயு தத்வமான அனாகத சக்ரத்தில் ஐம்பத்துநான்கு கிரணங்கள்,,
ஆகாச தத்வமான விசுத்தி சக்ரத்தில் எழுபத்திரண்டு கிரணங்கள்,
மனஸ் தத்வமான ஆக்ஞாசக்ரத்தில் அற்பத்துநான்கு கிரணங்கள்.
இந்த தத்துவங்கள், சக்கரங்கள் கிரணங்கள் கால கதிக்கு கட்டுப்பட்டவை. ஆனால் அம்பா பரமேஸ்வரியின் திருப்பாதங்கள் இவைகளுக்கு மேலானது. மேலே சொன்ன சக்திகளை விட பலமடங்கு அதிகம் கொண்டவை.
காலத்துக்கு அப்பாற்பட்டவை.
ஒரு வருஷத்துக்கு 360 நாள் என்பது போல் மூலாதார சக்ர கலாக்களை, 55 கிரணங்கள் வசந்த ருதுவாகவும்,
மணிபூரகம் 52 நாள்கொண்ட க்ரீஷ்மருதுவாகவும், ஸ்வாதிஷ்டானம் 62 கிரணங்கள் வர்ஷருதுவுக்கு ஒப்பாகவும். அனாஹதம் 54 கிரணங்கள் சரத்ருது என்றும் , விசுத்தி 72 கிரணங்கள் ஹேமந்த ருதுவாக வும், ஆக்ஞா சக்கர கிரணங்கள் 64ம் சிசிரருது வுக்கு ஒப்பாகவும் வைத்துக் கொள்ளலாம். மொத்தம் அத்தனையும் சேர்த்து பிரம்மாண்டத்தில் 360 நாள் போல் ஆகிறது.
வெளியே உள்ள அண்டம் போல்உள்ளே உள்ள பிண்டமும், இதில் ஆறு சக்ரங்களை மூன்று கண்டங்களாக பிரிக்கிறோம். மூன்று நாடிகள் தான் இடா, பிங்களா, சுஷும்னா.
360 நாளை கணக்கிடுவது 3 முடிச்சுகளாக: அதாவது கண்டங்களாக. அக்னி கண்டத்தில் 108, சூரிய கண்டத்தில் 116 . சந்திர கண்டத்தில் 136 என்று ஈடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு கண்டத்தையும் கட்டுப்படுத்துவது க்ரந்தி எனும் முடிச்சு. இந்த க்ரந்தி எனும் முடிச்சுகளை தாண்டி தான் அம்பாளின் சக்ர கிரணங்களை அடைய முடியும். ஆறு சக்ரங்கள் ஆகவே மூன்று முடிச்சுகள் கட்டுப்பாட்டில்:
மூலாதார சக்ரம், ஸ்வாதிஷ்டான சக்ரம் ரெண்டும் : ப்ரம்ம க்ரந்தி, ப்ரம்ம முடிச்சு .
மணி பூரகம், அனாகதம் ரெண்டும் விஷ்ணு க்ரந்தி: விஷ்ணு முடிச்சு.
விசுத்தி, ஆஞ்ஞா ரெண்டும் ருத்ர க்ரந்தி : ருத்ர முடிச்சு. இந்த முடிச்சுகளை தாண்டி தான் ஸஹஸ்ராரத்தை அடையமுடியும்.
பரமேஸ்வரன் சிவன் தான் எல்லாவற்றுக்கும் ஆதாரமான சஹஸ்ரார ஞான ஒளி.ஞானப்பிரகாசம் என்ற பெயர் இதனால்தான். அம்பாள் பரமேச்வரனோடு இணைந்தவள் என்பதால் அதை உள் வாங்கி ஆறு சக்ரங்களில் இவ்வாறு பிரித்தருள்கிறாள். அம்பாளின் சக்திமயமான ஒளி தான் பிரபஞ்சம் இயங்க காரணம்.
தேவி உபாசனையில் ஸ்ரீ சக்ரத்தில் இந்த ஆதார சக்ரங்கள் 6 முக்கோணம். அம்பாளின் சக்தி ஒளி சூரியன் சந்திரன் அக்னி என்று 3 நாடிகளாக உணரப்படுகிறது. சக்ரத்தின் பிரிவுகள் தாமரை இதழ்களாக காட்டப்பட்டுள்ளது.
இதெல்லாம் சட்டென்று படித்தால் மட்டும் புரியாது.கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கி அனுபவித்தால் தான் தேவி சக்ர க்ரந்தங்களின் ஒளி போல பளிச்சென்று புரியும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *