PURUSHA SUKTHAM J K SIVAN

புருஷ ஸூக்தம்‌ — நங்கநல்லூர் J K SIVAN
வீட்டில் எந்த விசேஷத்திலும், சுப கார்யங்கள் நடக்கும்போதும் வாத்யார் புருஷ ஸுக்தம் சொல்வது நமக்குத் தெரிந்தது. அநேக லௌகீகர்கள் விடாமல் கோவில்களுக்குச் சென்று அங்கே அமர்ந்து ருத்ரம் சமகம், புருஷ ஸுக்தம் எல்லாம் சொல்லும் வழக்கம் உண்டு. பல வருஷங்கள் சொல்லி இருக்கிறேன். அதன் சப்தமே கேட்க செவிக்கினிமையானது.
புருஷ ஸூக்தம் என்றால் என்ன?
ரிக் வேதத்தில் 10வது மண்டலத்தில் 90வது ஸ்லோகம்
ஸஹஸ்ரஶீர்ஷேதி ஷோளஶர்சஸ்ய ஸூக்தஸ்ய னாராயண றுஷிஃ | அனுஷ்டுப்‌ சம்தஃ | அம்த்யா த்ரிஷ்டுப்‌ | பரமபுருஷோ தேவதா ||
सहस्रशीर्षा पुरुषः सहस्राक्षः सहस्रपात् । स भूमिं विश्वतो वृत्वात्यतिष्ठद्दशाङुलम् ॥१॥
Sahasra-Shiirssaa Purussah Sahasra-Akssah Sahasra-Paat |Sa Bhuumim Vishvato Vrtva-Atya[i]-Tisstthad-Dasha-Angulam ||1||
ஓம் ஸஹஸ்ரஶீர்ஷா புருஷஃ | ஸஹஸ்ராக்ஷஃ ஸஹஸ்ரபாத்‌ |ஸ பூமிம் விஶ்வதோ வ்றுத்வா | அத்யதிஷ்டத்தஶாம்குலம்‌ || ௧
புருஷன் என்றால் இங்கே கணவன் என்று அர்த்தம் இல்லை. ஆண் என்றும் சாதாரணமானவனாக என்ன வேண்டாம். இந்த புருஷன் ஜகத்துக்கே அதிபதி. பிரபஞ்ச நாயகன். விராட் புருஷன். ஆயிரம் சிரங்கள் , ஆயிரம் கண்கள், ஆயிரம் திருவடிகள் கொண்டவன் என்று வர்ணிக்கப்படுபவன். ஆயிரம் என்றால் பத்து நூறு என்ற எண்ணிக்கையே இல்லை. ”நீ ஏன் வேலைக்கு வரலை நேத்திக்கு ன்னு கேட்டால் ஆயிரம் கதை, ஆயிரம் சப்பைக்கட்டு, காரணம் காட்டாதே… என்கிறோமே அந்த ”எண்ணிக்கை இல்லாத” என்ற அர்த்தத்தில் வரும் ”ஆயிரம்”. இந்த பிரபஞ்சத்தில் எல்லா உயிர்களும் சுகமாக, க்ஷேமமாக இருக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை துதிக்கும் ஸ்லோகம். ஸூக்தம் என்றால் போற்றி பாடி வணங்குவது. பிரார்த்தனை பாடல். சர்வ சக்தி நாயகனின் மஹிமை, அவனது தியாகம், ஜீவராசிகள் தோன்றியது, இறைவனின் அருளால் தான் அஞ்ஞானம் விலகும் என்று உணர்ந்து வேண்டுவது தான் புருஷ ஸூக்தம்
,
பகவான் சர்வவியாபி, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன். த்ரிகாலமும் உள்ளவன்.எட்டு திசை, மேல் கீழென்று பத்து பக்கங்களிலும் அவனே காணப்படுகிறான். இதை தான் தசாங்குலம் என்று வேதம் சொல்கிறது.
पुरुष एवेदं सर्वं यद्भूतं यच्च भव्यम् ।उतामृतत्वस्येशानो यदन्नेनातिरोहति ॥२॥
Purussa Evedam Sarvam Yad-Bhuutam Yacca Bhavyam |Uta-Amrtatvasye[a-I]shaano Yad-Annena-Ati-Rohati ||2||
புருஷ ஏவேதக்‌ம் ஸர்வம்”‌ | யத்பூதம் யச்ச பவ்யம்”‌ |உதாம்றுதத்வஸ்யேஶானஃ | யதன்னேன
கடந்த, நிகழ், எதிர் காலம் மூன்றும் அவனே. அழிவற்ற, சாசுவதமான, மாறுதல் இல்லாத அவனிடமிருந்து மாறும் சகலமும் பிரம்மாண்டமாக உருவாகி, தோன்றி அழியும் பலவும் உயிரானது. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது புரிகிறது.
एतावानस्य महिमातो ज्यायाँश्च पूरुषः ।पादोऽस्य विश्वा भूतानि त्रिपादस्यामृतं दिवि ॥३॥
Etaavaanasya Mahima-Ato Jyaayaash-Ca Puurussah |Paado-Asya Vishvaa Bhuutaani Tri-Paad-Asya-Amrtam Divi ||3||
ஏதாவானஸ்ய மஹிமா | அதோ ஜ்யாயாக்‌ஶ்ச பூருஷஃ |பாதோ”&ஸ்ய விஶ்வா பூதானி | த்ரிபாதஸ்யாம்றுதம் திவி || ௩ ||
விஸ்வம் என்பதற்கு அர்த்தமே சொல்ல முடியாது. அந்த பகிரண்டம் எல்லாம் அதில் அடக்கம், அதெல்லாம் அவனால் தோன்றியவை அவனாகவே, அவனிலுள்ளவை. அப்படி காணப்படுபவை எல்லாமுமே அவனில் கால் பாகம் என்றால் மீதி முக்கால் பாகத்தை எப்படி விவரிப்பது.முழுதாக அவனை எப்படி உணர்வது சாத்யம்?
त्रिपादूर्ध्व उदैत्पूरुषः पादोऽस्येहाभवत्पुनः ।ततो विष्वङ् व्यक्रामत्साशनानशने अभि ॥४॥
Tri-Paad-Uurdhva Udait-Puurussah Paado-Asye[a-I]ha-Abhavat-Punah |Tato Vissvang Vya[i-A]kraamat-Saashana-Anashane Abhi ||4||
த்ரிபாதூர்த்வ உதைத்புருஷஃ | பாதோ” ஸ்யேஹா பவாத்புனஃ |ததோ விஷ்வங்‌வ்யக்ராமத்‌ | ஸாஶனானஶனே அபி || ௪ ||
இப்படியாக கண்ணுக்கு புலனாகாத மூன்று பாகங்கள் எங்கோ பிரபஞ்ச விண்வெளியாக உள்ளது லந்துள்ளது. பிரபஞ்சம் நாலில் ஒரு பாகம். கால்பாகம். எல்லாமே அந்த மஹத் புருஷனின் தாவர சங்கம உயிருள்ள,உயிரற்ற ஜட பாகங்கள்.
तस्माद्विराळजायत विराजो अधि पूरुषः ।स जातो अत्यरिच्यत पश्चाद्भूमिमथो पुरः ॥५॥
Tasmaad-Viraadda-Jaayata Viraajo Adhi Puurussah |Sa Jaato Atya[i-A]ricyata Pashcaad-Bhuumim-Atho Purah ||5||
தஸ்மாத்விராடஜாயத விராஜோ அதி பூருஷ: ஸ ஜாதோஅத்யரிச்யத பச்சாத்பூமிமதோ புர: 5
மேலே சொன்ன எல்லையற்ற, விவரிக்கமுடியாத எங்கும் காணும் புருஷனிலிருந்து தோன்றியவன் விராட் புருஷன். அந்த விராட் புருஷன் தான் பிரபஞ்சத்தையே ஸ்ரிஷ்டித்தவன்.
यत्पुरुषेण हविषा देवा यज्ञमतन्वत ।वसन्तो अस्यासीदाज्यं ग्रीष्म इध्मः शरद्धविः ॥६॥
Yat-Purussenna Havissaa Devaa Yajnyam-Atanvata |Vasanto Asya-Asiida-Ajyam Griissma Idhmah Sharad-[d]Havih ||6||
யத்புருஷேண ஹவிஷா தேவா யஜ்ஞமதன்வத வஸந்தோ அஸ்யாஸீதாஜ்யம் க்ரீஷ்ம இத்ம: சரத்தவி: 6
பகவான் அனுக்ரஹம் பெற தேவர்கள் புரிந்த யாகத்தில் விராட் புருஷனுக்கு ப்ரீதியாக அளிக்கப்பட யாக ஆஹுதிப் பொருளாக வசந்த காலத்தை நெய்யாகவும், கோடைக்காலத்தை விறகு ஆகவும், சரத்காலத்தை நைவேத்தியமாகவும் அளித்தனர்.
तं यज्ञं बर्हिषि प्रौक्षन्पुरुषं जातमग्रतः ।तेन देवा अयजन्त साध्या ऋषयश्च ये ॥७॥
Tam Yajnyam Barhissi Pra-Ukssan-Purussam Jaatam-Agratah |Tena Devaa Ayajanta Saadhyaa Rssayash-Ca Ye ||7||
தம் யஜ்ஞம் பர்ஹிஷி ப்ரௌக்ஷன் புருஷம் ஜாதமக்ரத:தேன தேவா அயஜந்த ஸாத்யா ரிஷயச்ச யே8
இந்த வேள்விக்கு பஞ்ச பூதங்கள், இரவு, பகல், ஆகிய ஏழும் பரிதிகள் ஆயின. இருபத்தொரு தத்துவங்கள் விறகுகள் ஆயின. தேவர்கள் யாகத்தை ஆரம்பித்து, பிரம்மாவை ஹோமப் பசுவாகக் கட்டினார்கள்,
LISTEN TO PURUSHA SUKTHAM CHANTING https://youtu.be/AsBQHgH_Z3I?si=MODBcr_aG8PKzfEO
தொடர்கிறது

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *