KRISHNANUBAVAM – J K SIVAN

கிருஷ்ணானுபவம். – நங்கநல்லூர் J K SIVAN

ஸ்ரீமத் பாகவதத்தில் தசம ஸ்கந்தத்தில் மூன்றே மூன்று ஸ்லோகம் மட்டும் ரசிப்போம்,ருசிப்போமா?

गोपीभि: स्तोभितोऽनृत्यद् भगवान्बालवत्‍क्‍वचित् ।उद्गायति क्‍वचिन्मुग्धस्तद्वशो दारुयन्त्रवत् ॥ ७ ॥
gopibhih stobhito ‘nrtyad bhagavan balavat kvacit udgayati kvacin mugdhas tad-vaso daru-yantravat 10-11.7

ஆனந்த மயம் என்றால் என்ன என்று கேட்பவர்கள்,தெரியாதவர்கள் பிருந்தாவனத்தை நினைத்தாலோ, அதைப் பற்றி கேள்விப்பட்டாலோ உடனே புரிந்து விடும்,தெரிந்து விடும். ஆமாம் சகல ஆனந்தத்துக்கு, சதா ஆனந்தத்துக்கும் ஒரே காரணம் கிருஷ்ணன் என்ற சிறுவன் தான். ஆள் மயக்கி அவன். பத்து வயதுக்குட்பட்ட அந்த சிறுவனிடம் ஆண் , பெண், குழந்தைகள், சகல உயிரினங்கள், தாவரம் சகலமும் மயங்கின. அவனைத் தேடின. அவன் ஆட்டம் ,பாட்டம், கேளிக்கைகளில் தம்மை மறந்தன.

கோபியர்கள் அடேய் கிருஷ்ணா இங்கே வாடா, இந்தா உனக்காக நான் விசேஷமாக பண்ணிக்கொண்டு வந்திருக்கும் இனிப்பு, சாப்பிட்டுப்பார்த்துவிட்டு சொல்லு. நிறைய தருகிறேன். நீ ஆடினால், புல்லாங்குழல் வாசித்தால் டபுள், DOUBLE பங்கு உனக்கு. அவன் சிரிப்பான். அவன் புன்னகையில் உலகமே சுழலும். அவர்கள் விரும்பியபடியே நடனமாடுவான், வாசிப்பான், ‘ ஆடாது அடங்காது வா கண்ணா’ ,, பாட்டு இப்படித்தான் மனதளவில் அவன் பாடலைக் கேட்டு விட்டு ஊத்துக்காடு பாடி இருக்கிறார். நாம் கேட்டு மயங்குகிறோம். என்றும் மகிழ்கிறோம்.

8 बिभर्ति क्‍वचिदाज्ञप्त: पीठकोन्मानपादुकम् । बाहुक्षेपं च कुरुते स्वानां च प्रीतिमावहन् ॥ ८ ॥
bibharti kvacid ajnaptah pithakonmana-padukam bahu-ksepam ca kurute svanam ca pritim avahan 10.11.8

”அடேய் கிருஷ்ணா, அதோ பார், ஓடிப்போய் அதோ சுவற்றில் சாத்தி இருக்கிறதே, அந்த பலகையை எடுத்துக் கொண்டு வா, என்று யசோதை சொல்வாள். அவன் உடனே ஓடுவான் அதை எடுத்துக் கொண்டு வர. அவன் ஓடுவதைப் பார்த்து ரசித்த யசோதா, ”வேண்டாம்டா கிருஷ்ணா, வேண்டாம். நீ எடுத்துக் கொண்டு வரவேண்டாம், நீ சின்ன குழந்தை, அந்த மரப்பலகை கொஞ்சம் கனம் . உன் கால்மேல் மேல் விழுந்துவிடும். கால் விரல் நசுங்கும். நானே வந்து எடுத்துக் கொள்கிறேன்”
”எனக்கா பலம் இல்லை, இதோ பார்” என்று முஷ்டியை காட்டுவான் கண்ணன். மூவுலகும் ஈரடியால் அளந்தவன், கோவர்தன கிரியை இடது கை சுண்டுவிரலால் ஏழுநாள் தூக்கி தாங்கியவன் ஆயிற்றே…..
அவளுக்கு தெரியுமா அவன் பலம்..!

9 दर्शयंस्तद्विदां लोक आत्मनो भृत्यवश्यताम् । व्रजस्योवाह वै हर्षं भगवान् बालचेष्टितै: ॥ ९ ॥
darśayaṁs tad-vidāṁ loka ātmano bhṛtya-vaśyatām vrajasyovāha vai harṣaṁ bhagavān bāla-ceṣṭitaiḥ 10.11.9

க்ரிஷ்ணாவதாரம் ஒரு தனி அலாதி ஜனனம். கிருஷ்ணன் தனது பக்தர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்பவன். அவனைப் புரிந்து கொண்டவர்கள் அவன் சக்தியை அறிந்தவர்கள். ப்ரேமைக்கும் பாசத்துக்கும் கட்டுண்டு காட்டியவன். பக்தர்களின் அன்பு, பக்தியில் கட்டுப்படுபவன். அவன் பக்தர்களுக்கு அவன் மேல் அளவற்ற பாசமும் நேசமும் ஆனந்தமும் அதனால் தான். ஆகவே தான் வ்ரஜ பூமி வாசிகள், கண்ணன் காலத்தில் வாழ்ந்த பிருந்தாவன வாசிகள் அதிர்ஷ்டக்காரர்கள். எப்போதும் ஆனந்தத்தில் திளைத்தவர்கள் அல்லவா. நாமும் சளைத்தவர்கள் இல்லை. இப்போதும் பிரிந்தாவனத்தில் அவனை உணர முடிகிறது. அவன் வாழ்ந்த இடம், அவன் விளையாடிய இடம், யமுனைக்கரை, அவன் வீடு, எல்லாம் இருக்கிறதே… நான் நேரில் கண்டு வணங்கி அனுபவித்தவன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *